Thursday, June 30, 2011

மற்றவை - சிரிக்க., சிந்திக்க., ரசிக்க.

ருமை நண்பர்களே..நண்பிகளே..

( IE பிரவுசரில் என்னுடைய வலைப்பூ லேஅவுட் தவறாக டிஸ்பிளே ஆகிறது. விரைவில் சரி செய்து விடுவேன். எனவே நண்பர்கள்/நண்பிகள் அனைவரும், Firefox, chrome, safari Browsers- ஐ பயன்படுத்தவும்.)

ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் இனி இங்கேயே தமிழில் டைப் செய்து கமெண்ட்ஸ் அனுப்பலாம். வலது புறத்தில் உள்ள Side Bar-ல் நான் ஒரு தமிழ் எடிட்டரை இந்த ப்ளாக்குடன் இணைத்துள்ளேன். அதனைப் பயன்படுத்தி தமிழில் டைப் செய்து எனது பதிவிற்கு நீங்கள் கருத்துக்களை Post செய்யலாம்.

இந்த எடிட்டரில் உள்ள வசதிகள்:

* சாதரணமாக, தமிழ் வார்த்தைக்கு இங்கிலீஸ்-ல் S.M.S செய்வது போல இதில்
  டைப் பண்ணலாம்.

 * ஒரு Word-ன் மேல் மவுசை வைத்து ஒருதடவை Click செய்தால் அந்த 
    Word-க்கு தொடர்புடைய Word List வரும். உங்களுக்கு பிடித்த 
    Word - ஐ செலக்ட்   செய்யலாம்.

ஏதேனும் சிரமம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.

U.K-யிலிருந்து தோழி கவிதா விஜயகுமார், இந்தக் குறும் பட வீடியோவை ஃபேஸ்புக் வழியாக அனுப்பியிருந்தார். பார்த்தேன். மிகவும் ரசித்தேன். அதனை உங்களுடனும் பகிர்கிறேன்.

முதல் குறும் படம் - பண்ணையாரும், பத்மினியும் (சிரிக்க)

நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு பொருள் மேல் காதல் இருக்கும்.
அப்படி காதல் வரக் காரணம், அந்தப் பொருளினால் நிறைய நன்மைகள் நடந்திருக்கும்.
For eg. சிலருக்கு, தன்னிடம் உள்ள ஒரு பேனா மீது காதல் இருக்கும். காரணம் அதனைப் பயன்படுத்தும் போதெல்லாம் நிறைய நன்மைகள் நடந்திருக்கும். ( நிறைய மார்க்குகள் வாங்கியிருக்கலாம்.லவ் லெட்டர் எழுதி காதலியிடன் க்ரீன் சிக்னல் வாங்கியிருக்கலாம்).
ஒரு பர்ஸ்-ன் மேல் காதல் இருக்கும். காரணம் அதனை பயன்படுத்தும் போது பணம் நிறைய சேர்ந்திருக்கும்.
சிலருக்கு தன்னிடமுள்ள ஒரு பேக் - ன் மேல் காதல் இருக்கும். அந்த பேக்கை பயன்படுத்தும் போது நிறைய நன்மைகள் நடந்திருக்கும்.இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்.
அப்படி, நமக்கு பிடித்த ஒரு பொருளை எக்காரணம் கொண்டும் நாம் மற்றவர்க்கு விட்டுத் தர மாட்டோம்.

இந்தக் குறும்படத்தின் கதையும் இந்த கான்செப்ட்தான்.

கிராமத்தில் வாழும் ஒரு பண்ணையாருக்கும், அவரின் பிரிமியர் பத்மினி காருக்கும் உள்ள காதலை படத்தின் இயக்குனர் அருமையான விதத்தில்
சொல்லியிருக்கிறார்.

பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:

* படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும். குறிப்பாக பண்ணையார், 
 முருகேஷ் இருவரின் நடிப்பு பலே..பலே.
* கிராமத்து ஸ்லாங் டயலாக்ஸ் அருமை. தேனி மாவட்டத்து ஸ்லாங் என்று 
  நினைக்கிறேன்.
* நகைச்சுவை அங்கங்கே தெறிக்கிறது.
* படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை, BGM அருமை.

வீடியோ :


இரண்டாவது குறும்படம் - மா ( சிந்திக்க)

தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. படத்தைப் பார்த்தவுடன்தான்  தெரிந்தது,  அனைவருக்கும் தெரிந்த விசயத்தை வித்தியாசமாக எடுத்திருக்கிறார். தாயின் கருவில் இருக்கும் குழந்தை நம்மிடம் மகிழ்ச்சியாக பேசுவது போல எடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் முடிவு சிலிர்க்கிறது.

வீடியோ :


மூன்றாவது குறும்படம் - மிட்டாய் வீடு (ரசிக்க)



 
படத்தின் ஹீரோ , தன்னோட காதலியை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்க நினைக்கிறார். அதற்காக ஹீரோயினியிடம்,  தனது பெற்றோர்களைப் பற்றி விளக்கி அதன் பின் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார். அதற்கு பின் நடப்பவை....நீங்களே பாருங்க.

பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:



ஹீரோ, ஹீரோயின் செலக்சன் அருமை. நன்றாகவும் நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் ஜனனி சோ..க்யூட்..

படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை அருமை.

வீடியோ :


*********************************************************************

7 comments:

Angel said...

மூன்றுமே முத்தான குறும்படங்கள் .பார்த்தேன் ரசித்தேன் .Thanks for sharing.

சிவகுமாரன் said...

அனைத்து குறும்படங்களும் அருமை.
பண்ணையாரும் பத்மினியும் என்னைக் கவர்ந்தது.

பத்மநாபன் said...

குறும்படங்கள் இழுத்து ரசிக்க வைத்தது.... அருமை..

முனைவர் இரா.குணசீலன் said...

:)

இராஜராஜேஸ்வரி said...

குறும்படங்களுக்குப் பாராட்டுக்கள்

RAMA RAVI (RAMVI) said...

குணா 3 குறும்படங்களுமே அருமை.. ’மா’ மனதை உலுக்கிவிட்டது....

கார்த்தி said...

குறும்படங்களை இணைத்தமைக்கு நன்றி

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...