Tuesday, June 07, 2011

கேள்வி-பதில் - 2

1. கேள்வி: 'போலியோ நோய் கைகளை விட கால்களையே                         அதிகம் தாக்கும்' என்று வானொலி மருத்துவ நிகழ்ச்சியில்                         கேட்டேன்.காரணத்தை அவர்கள் சொல்ல வில்லை.நீங்கள்                         சொல்ல முடியுமா?

                                 

பதில்:போலியோமைலைடிஸ்(சுருக்கமாக போலியோ) வைரஸ்               கிருமியால் ஏற்படுவது. மூளையின் நரம்புகளைத் தாக்கி, உடலில்              எங்கு வேண்டுமானாலும்,தசைகளைச் செயலிழக்கச் செய்யும்               கிருமி இது. குறிப்பாக முதுகுத் தண்டு பாதிக்கப்படுவதால்,               இடுப்புக்குக் கீழே அதிகம் பராலிஸிஸ் ஏற்படுகிறது. பொதுவாக               எந்த வைரஸுக்கும்  சிகிச்சை கிடையாது. ஆனால், தடுப்பு மருந்து                உண்டு. போலியோ   அநேகமாக அழிக்கப்பட்டுவிட்டது.இனிமேல்              ஒரு குழந்தைக்கு  போலியோ வந்தால், அதற்கு பெற்றோரின்             அறியாமையும்,    அலட்சியமும்தான் காரணமாக இருக்க முடியும்.

2.கேள்வி:நீந்தக் கற்றுக்கொண்ட மனிதனால், ஏன்   பறக்கக்                       கற்றுக்கொள்ள  முடியவில்லை?

                     

பதில்:காரணம், நாம் தண்ணீரிலிருந்துதான் வந்தோம்.           கர்ப்பப்பையிலிலும் தணிணீரில்தான் வாழ்ந்தோம்! உயிரினம்          தொடங்கியது தண்ணீரில்தான். பறவைகள் வேறு. அவை 'ஊர்வன' பிரிவில் இருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தவை! பறவையின் இறக்கை விமான இறக்கையைவிட அற்புதமானது, நுணுக்கமானது. உதாரணமாக, ஒரு பருந்தின் இறக்கையில் சுமார் முப்பதாயிரம் இறகுகள்(Feathers) உண்டு.

3.கேள்வி: டாக்டர்கள் மருந்து மாத்திரைகளின் பெயரை எப்படி ஞாபகம்           வைத்துக்   கொள்கிறார்கள்?

                       

பதில்:உங்கள் வீட்டில் மனைவி அல்லது அம்மா கிச்சனில் உள்ள அத்தனை சாமான்களையும் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்கிறார்? அதே மாதிரிதான்! டாக்டருக்கு மருந்துக் கடைதான் கிச்சன்.

4. கேள்வி: மருமகளுக்கு ' மாட்டுப் பெண் ' என்ற பெயர் ஏன் வந்தது?

                     
               
பதில்: மாற்று ( வீட்டிலிருந்து வந்த ) பெண் ' மாட்டுப்பெண் ' ஆகிவிட்டது! மாட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இருந்திருந்தால், மாமனார் வீட்டுக்கு மாப்பிள்ளை போகும் போது,  அவங்க 'காளைப் புள்ள வந்திருக்காருடி ' என்று குரல் கொடுத்திருப்பார்களோ!

5. கேள்வி: ஒரு சர்தார்ஜி ஜோக்,ப்ளீஸ்?

          


பதில்:சர்தார்ஜி இளைஞன், ஒரு அழகிய இளம்பெண்ணை ஒரு ஷாப்பிங் மாலில் பார்க்கிறான். உடனே அவளை கட்டிக்கொண்டு முத்தமிடுகிறான். அதற்கு அவள், சொல்கிறாள்.

இளம்பெண் : ஸ்டுப்பிட். என்ன பண்ற  நீ?

சர்தார்ஜி : பி.காம் ஃபைனல் இயர்.

இளம்பெண் : ????????????


*********************************************************

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேள்வி பதில் முதல் நான்கும் மிகவும் பயனுள்ள தகவல். கடைசி ஜோக் நல்லாயிருக்கு. சர்தாஜீக்களின் ஒருவர்பின் ஒருவர் ஓடிவருவது போன்ற படமும் அருமை. பாராட்டுக்கள்.

உங்கள் பதிவின் Follower ஆக நான் விரும்புகிறேன்.
அதற்கான Provisions எங்கே உள்ளது? என்று ஒன்றும் எனக்குப் புரியாமல் உள்ளது. விள்க்கவும்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...