Thursday, June 30, 2011

மற்றவை - சிரிக்க., சிந்திக்க., ரசிக்க.

ருமை நண்பர்களே..நண்பிகளே..

( IE பிரவுசரில் என்னுடைய வலைப்பூ லேஅவுட் தவறாக டிஸ்பிளே ஆகிறது. விரைவில் சரி செய்து விடுவேன். எனவே நண்பர்கள்/நண்பிகள் அனைவரும், Firefox, chrome, safari Browsers- ஐ பயன்படுத்தவும்.)

ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் இனி இங்கேயே தமிழில் டைப் செய்து கமெண்ட்ஸ் அனுப்பலாம். வலது புறத்தில் உள்ள Side Bar-ல் நான் ஒரு தமிழ் எடிட்டரை இந்த ப்ளாக்குடன் இணைத்துள்ளேன். அதனைப் பயன்படுத்தி தமிழில் டைப் செய்து எனது பதிவிற்கு நீங்கள் கருத்துக்களை Post செய்யலாம்.

இந்த எடிட்டரில் உள்ள வசதிகள்:

* சாதரணமாக, தமிழ் வார்த்தைக்கு இங்கிலீஸ்-ல் S.M.S செய்வது போல இதில்
  டைப் பண்ணலாம்.

 * ஒரு Word-ன் மேல் மவுசை வைத்து ஒருதடவை Click செய்தால் அந்த 
    Word-க்கு தொடர்புடைய Word List வரும். உங்களுக்கு பிடித்த 
    Word - ஐ செலக்ட்   செய்யலாம்.

ஏதேனும் சிரமம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.

U.K-யிலிருந்து தோழி கவிதா விஜயகுமார், இந்தக் குறும் பட வீடியோவை ஃபேஸ்புக் வழியாக அனுப்பியிருந்தார். பார்த்தேன். மிகவும் ரசித்தேன். அதனை உங்களுடனும் பகிர்கிறேன்.

முதல் குறும் படம் - பண்ணையாரும், பத்மினியும் (சிரிக்க)

நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு பொருள் மேல் காதல் இருக்கும்.
அப்படி காதல் வரக் காரணம், அந்தப் பொருளினால் நிறைய நன்மைகள் நடந்திருக்கும்.
For eg. சிலருக்கு, தன்னிடம் உள்ள ஒரு பேனா மீது காதல் இருக்கும். காரணம் அதனைப் பயன்படுத்தும் போதெல்லாம் நிறைய நன்மைகள் நடந்திருக்கும். ( நிறைய மார்க்குகள் வாங்கியிருக்கலாம்.லவ் லெட்டர் எழுதி காதலியிடன் க்ரீன் சிக்னல் வாங்கியிருக்கலாம்).
ஒரு பர்ஸ்-ன் மேல் காதல் இருக்கும். காரணம் அதனை பயன்படுத்தும் போது பணம் நிறைய சேர்ந்திருக்கும்.
சிலருக்கு தன்னிடமுள்ள ஒரு பேக் - ன் மேல் காதல் இருக்கும். அந்த பேக்கை பயன்படுத்தும் போது நிறைய நன்மைகள் நடந்திருக்கும்.இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்.
அப்படி, நமக்கு பிடித்த ஒரு பொருளை எக்காரணம் கொண்டும் நாம் மற்றவர்க்கு விட்டுத் தர மாட்டோம்.

இந்தக் குறும்படத்தின் கதையும் இந்த கான்செப்ட்தான்.

கிராமத்தில் வாழும் ஒரு பண்ணையாருக்கும், அவரின் பிரிமியர் பத்மினி காருக்கும் உள்ள காதலை படத்தின் இயக்குனர் அருமையான விதத்தில்
சொல்லியிருக்கிறார்.

பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:

* படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும். குறிப்பாக பண்ணையார், 
 முருகேஷ் இருவரின் நடிப்பு பலே..பலே.
* கிராமத்து ஸ்லாங் டயலாக்ஸ் அருமை. தேனி மாவட்டத்து ஸ்லாங் என்று 
  நினைக்கிறேன்.
* நகைச்சுவை அங்கங்கே தெறிக்கிறது.
* படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை, BGM அருமை.

வீடியோ :


இரண்டாவது குறும்படம் - மா ( சிந்திக்க)

தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. படத்தைப் பார்த்தவுடன்தான்  தெரிந்தது,  அனைவருக்கும் தெரிந்த விசயத்தை வித்தியாசமாக எடுத்திருக்கிறார். தாயின் கருவில் இருக்கும் குழந்தை நம்மிடம் மகிழ்ச்சியாக பேசுவது போல எடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் முடிவு சிலிர்க்கிறது.

வீடியோ :


மூன்றாவது குறும்படம் - மிட்டாய் வீடு (ரசிக்க) 
படத்தின் ஹீரோ , தன்னோட காதலியை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்க நினைக்கிறார். அதற்காக ஹீரோயினியிடம்,  தனது பெற்றோர்களைப் பற்றி விளக்கி அதன் பின் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார். அதற்கு பின் நடப்பவை....நீங்களே பாருங்க.

பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:ஹீரோ, ஹீரோயின் செலக்சன் அருமை. நன்றாகவும் நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் ஜனனி சோ..க்யூட்..

படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை அருமை.

வீடியோ :


*********************************************************************

Wednesday, June 29, 2011

மற்றவை - First Kiss

**முதல் முத்தம் (First Kiss)**து என்னங்க.. First Kiss?.. குழந்தையா இருக்கும் போது, எத்தனை பேருக்கு முத்தங்களை கொடுத்திருப்போம்...வாங்கியிருப்போம்..(ஆண்,பெண் பேதம் பார்க்காம). தினமும் அட் லீஸ்ட் ஒரு முத்தம் கூட கொடுக்காம இருக்க முடியாது. குழந்தையிடமிருந்து நிறைய முத்தம் வாங்கியது அல்லது கொடுத்தது யார்?அப்பாவா?அம்மாவா? என்று ஒரு பட்டிமன்றம் கூட வைக்கலாம். பட்டிமன்றத்தில் பேசுபவர் நிச்சயம் ஒரு திருமணமானவராக இருக்கவேண்டும். அப்பதான் நியாயமா பேசமுடியும்.
இப்படி பிறந்தது முதல்.. , நிறைய முத்தங்களை கொடுத்து, வாங்கியிருப்போம்.  அப்படின்னா First Kiss  அனுபவம் எப்போ கிடைச்சது என்று ஒரு கேள்வி கேட்டால்,  பெரும்பான்மையானவர்களின் பதில் "காதலிக்கும் போது தான் கிடைச்சது". இந்த பதில் எப்படி வந்தது?.

குழந்தையாக இருக்கும் போது கிடைத்த உம்மா first kiss  கிடையாதா? காரணம் என்ன? தெரிந்தவர்கள் சொல்லவும்.என்னடா இன்னிக்கு கொஞ்சம் இப்படியொரு தலைப்புல பதிவு எழுதியிருக்க? என்று நண்பர்களும்/நண்பிகளும் யோசிக்கலாம்.

என் நண்பன் ஹரிஸ் அனுப்பிய  இந்தக் குறும் பட வீடியோவைப் பார்த்த பின் "அட இதப்பத்தி கொஞ்சம் எழுதலாமே?" என்று நினைத்து, பதிவை எழுதியுள்ளேன். இப்படியொரு வீடியோவை அனுப்பிய என் நண்பனுக்கு மனமார்ந்த நன்றி. (உன் மேல கொஞ்சம் வருத்தம். "ஏன் எப்போதுமே என் பதிவிற்கு நெகட்டிவ்வான கமெண்ட்ஸ் அனுப்பற?". பட் உன்னோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்குடா?)


 
கீழே உள்ள குறும் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்தது.

ஹீரோ - நம்ம மாதவன் மாதிரி இருக்கார். நடிப்பு அருமை. அதிலும் பார்க்கில்
                  கேர்ள்ஃபிரண்டுக்கு முத்தம் கொடுக்க முயலும் காட்சியில் நடிப்பு 
                 சூப்பர். (ஹீரோ, " நீங்க சினிமாவில் ட்ரை பண்ணுங்க. மாதவனுக்கு 
                 போட்டியா வரலாம்).
ஹீரோயின் - பார்க்- சீனில் வரும் பொண்ணு..நைஸ்..
                    ( நடிப்பிலும், சிரிப்பிலும்..ஹீரோவைப் பார்க்கும் பார்வையிலும்).
                   மத்த ஹீரோயின்ஸ் ஓகே ரகம்.

நீங்களும் பாருங்க..ஒரு காட்சியில் கன்னடத்தில் பேசுகின்றனர் அதன் உரையாடல் இதுதான்

Girl: This part is very tough right? (repeats again)
Girl: What are you thinking?
Guy: Nothing. Girl: Hey, tell me.
Guy: Nothing.
Girl: Ok.
Guy: Wouldn't some one disturb us here?
Girl: No.
Guy: Suddenly parents giving a visit?
Girl: No.
Guy: No?
Guy: (smiles) Thanks.
Guy: Actually, I want to say something, but it's secret. Can I say it in your ear?
Girl: What secret here? Say it just like that.
Guy: It's a secret. It has to be told in your ear.
Girl: Hmmm, ok.
(Guy kisses) (continued)...

ஒரு கேள்வி :
அப்பா டக்கர்-னா என்ன?

பதில்(உண்மையான) : இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகால இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :).

நன்றி - அருண்மொழித்தேவன் (ரோமியோ)


*****************************************************************


Tuesday, June 28, 2011

மற்றவை- மகிழ்ச்சியான செய்தி


*தமிழக மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி*


மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் இன்று போட்ட உத்தரவு நிச்சயம் ஒவ்வொரு குடும்பஸ்தர்களின் வயிற்றில் பாலை வார்க்கும். அம்மாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். காரணம் தி.மு.க ஆட்சியில் செய்யாத விசயத்தை இப்போது செய்திருக்கிறார்.

இன்றைய நாளின் முக்கியமான செய்தி இது.

" காஸ் சிலிண்டர் விலையில் ரூ.15 குறைப்பு: "வாட்' வரியை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா.

" அண்மையில் டீஸல் லிட்டருக்கு ரூ 3-ம், கேஸ் சிலிண்டருக்கு ரூ 50ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ 2-ம் உயர்த்தப்பட்டது.

மத்திய அரசின் இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதித்துவிட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஜிவ்வென்று உயர்ந்தன. விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டன.

ஆனால் விலை உயர்வை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றும், மாநில அரசுகள் தங்கள் வரிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு நேற்று கடிதம் எழுதியது, அனைத்து மாநில அரசுகளுக்கும்.

இதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட 6 மாநில அரசுகள் வரிகளைக் குறைத்தன. டெல்லி அதிகபட்சமாக ரூ 40 வரை குறைத்தது சமையல் கேஸ் சிலிண்டருக்கு. "

" சமையல் காஸ் மீது, தமிழக அரசு விதிக்கும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை முற்றிலும் நீக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில், 14 ரூபாய், 73 காசு குறையும். இனி வருங்காலங்களிலும் சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். "

" தமிழகத்தில் தற்போது விற்கப்படும் ஒரு சிலிண்டர் காஸ் விலை, 404 ரூபாய், 40 பைசா என்ற அளவில் இருந்து, 389 ரூபாய், 67 பைசா என்ற அளவுக்கு குறையும். அதாவது, ஒரு சிலிண்டர் விலை, 14 ரூபாய், 73 காசு அளவுக்கு குறையும். இனி வருங்காலங்களிலும், சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது.சமீபத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட, 50 ரூபாய் விலை உயர்வுக்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி, மாநில அரசுக்கு, ஆண்டுக்கு, 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கனவே சமையல் காஸ் மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டுக்கு கிடைத்து வந்த, 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம், 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். "


*நடிகர் சங்க பாராட்டு விழா : முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுப்பு!


கலைஞரைப் போல் இது போன்ற பாராட்டு விழாக்களில் பங்கேற்பதை விட்டு மக்களுக்கு சேவை செய்தாலே போதும். நிச்சயம் அம்மாதான் நிரந்தர முதல்வர். பார்க்கலாம் என்னென்ன செய்வார் என்று.


*******************************************************************

Monday, June 27, 2011

மற்றவை - பாரதி கண்ட புதுமைப்பெண் யார்?இவர்களா?

பாரதி கண்ட புதுமைப்பெண் யார்?இவர்களா?

ன் நண்பர் அனுப்பிய இந்த படங்களைப் பார்த்தவுடன் எனக்குள் ஏராளமான கேள்விகள். உங்களிடம் பகிர்கிறேன்.

 
 

 

"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" என்ற வரிகளை பள்ளியில் பாடப்புத்தகத்தில் படித்த போது, நம் நாட்டில் பெண்ணடிமைத் தனம் எவ்வளவு தூரம் அவர்களை அடக்கி வைத்திருந்தது என்று நினைத்ததுண்டு.
காலப்போக்கில் ஆண்களின் மனம் , பெண்களையும் ஓரளவு தனக்கு சமமாக நினைத்து, அவர்களுக்கும் கல்வியறிவு தேவை என்று எண்ணி, பள்ளிக்குச் செல்ல அனுமதித்தது. அடுப்பங்கரை வாசத்திலும், படுக்கையறை சாபத்திலும் வாழ்க்கையை ஓட்டிய பெண்கள், படிக்க ஆரம்பித்ததும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அரசியல் சட்டங்களும், பெண்கள் சுதந்திரம், சொத்துரிமை, பெண் கொடுமை தடுப்புச் சட்டம்  போன்றவற்றை அளித்து பெண்களின் வளர்ச்சி என்னும் வாழ்க்கை வெளிச்சத்திற்கு திரியுடன் எண்ணையும் ஊற்றி வளர்த்தது.இத்தனை வருடங்களில் நம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பாராட்டும் அளவில் உள்ளது. " கல்வியறிவு " , நிறைய விசயங்களை  குறிப்பாக நாகரீகம், பண்பு, சுய முன்னேற்றம், சுய மரியாதை, பொருளாதர முன்னேற்றம் போன்றவற்றை  ஆணுக்கும், பெண்ணுக்கும் சரி சமமாக வழங்கியுள்ளது.

அதே சமயத்தில் அந்தக் " கல்வியறிவு " , பொறாமை, தலைக்கனம், நாகரீகமே இல்லாத ஒரு நாகரீகம் போன்றவற்றை சமூகத்திற்கு  அறிமுகப்படுத்தியுள்ளது.என்னதான் ஆண்கள் தவறு செய்தாலும், அதை விட்டு விலகும் தந்திரமும், தைரியமும் உடையவர்கள். கல்வி, கலை, தொழில் நுட்பம் என அனைத்து வித அறிவிலும் சிறப்பாக சாதிக்கும் பெண்களுக்கு, ஆண்களைப் போல், தவறிலிருந்து தப்பிக்கும் தந்திரமும் , தைரியமும் இன்னமும் பெறவில்லை. தவறு செய்து அதன் பின் வருந்தும் வழக்கம் தான் அவர்களிடம் இப்போது உள்ளது. அதுதான் பெண்களின் இயல்பு கூட. 


இந்தப் படங்களை எல்லாம் நான் பார்க்கும் போது சில கேள்விகளை பெண்களிடத்தில் வைக்கிறேன்.

நீங்கள் ஆண்களுக்கு நிகராக சாதிக்கிறீர்கள். சம்பாதிக்கிறீர்கள். அதற்காக ஆண்கள் செய்யும் இது போன்ற விசயங்களையெல்லாம் செய்ய என்ன காரணம்?

ஒரு பந்தாவுக்கா? தன்னை ஒரு மேல் மட்ட நாகரீகம் கொண்டவள் என மற்றவர்களுக்கு பகிங்கிரப்படுத்தவா? ஆண்களுக்கு,  தான் ஒன்றும்
சளைத்தவளல்ல என்று வெளிப்படுத்தவா?


இந்த அளவிற்கு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?

ஆண்கள் புகை பிடிப்பதும் , மது அருந்துவதும் சமூகத்தில் மிகப் பெரிய விசயமாக, மிகப்பெரிய தவறாக கருதப் படுவதில்லை (பட் தப்புத்தான்
 தப்புத்தான்.) ஏனென்றால ஆண்கள் செய்யும் பழக்கங்கள் அனைத்தும் யுகம் யுகமாக நடக்கும் நார்மல் விசயம்தான். ஆனால் நீங்கள் செய்யும் இத்தகைய செயல்கள்,  உங்களுக்கு அப் நார்மலாகத் தெரியவில்லையா?


நீங்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் உங்கள் பெற்றோருக்கு தெரியுமா? (நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை).

ஒன்று மட்டும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அளவிற்கு உங்களுக்கு கிடைத்த சுதந்திரம், உங்கள் பாட்டியோ, தாயோ நிச்சயம் பெற்றிருக்க முடியாது. அவர்கள்தான் பெண் குலத்திற்கு ஒரு பெருமை அளித்தவர்கள்.  ஏனெனில் அந்தக் கஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டு நல்லபடியாக குடும்பத்தை மேன்மைக்கு கொண்டு வந்தவர்கள். அப்படிப்பட்ட  பெண் குலத்திற்கு, நீங்கள் பெருமையையா இப்போது கொடுத்து வருகிறீர்கள்? மன சாட்சி இருந்தால் அதனிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

உங்களைப் பார்த்து மற்ற பெண்களும் இந்தக் கொடுமைகளை எல்லாம் கற்றுக் கொண்டால் அடுத்த தலைமுறைக்கு ஒழுக்கம் கற்பிப்பது யார்? தாயைத் விட தந்தையால் முடியுமா? ஆண்களே ஒத்துக் கொண்ட விசயம், தாய் இன்றி, தந்தையால் குழந்தையை வளர்க்க முடியாது. காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள் பெண் இனமே.


இத்தனை கேள்விகளை கேட்க எனக்குத் தகுதியிருக்கிறதா? பெண்களை வெறுப்பவனா? என்று கூட இந்தக் கட்டுரையை படிக்கும் நண்பிகள், சகோதரிகள் நினைக்கலாம்.

நான் பெண்களை வெறுப்பவன் தான். பெண் குலத்திற்கு பெருமை தரும் விசயங்களை செய்யாமல், புகை பிடித்தும், குடித்தும், சமூகத்தில் பெண்களின் மீது ஒரு இழிவான எண்ணத்தை ஏற்படுத்தி வரும் இது போன்ற பெண்களை
வெறுப்பவன் தான்.

மேற்கண்ட படங்கள் எல்லாம் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் எடுக்கப்பட்டவை.

கை நிறைய சம்பளம் தரும் ஐ.டி. துறைகளில் பணி புரியும் சில பெண்களிடம்தான் இது போன்ற சகிக்க முடியாத வெளி நாட்டு பழக்கங்கள்
பெருகி வருகிறது.
நல்ல வேளை. தமிழ் நாட்டில் உள்ள பெண்கள் இந்தளவிற்கு இறங்குவதில்லை.(அப்படிப்பட்ட குமரிகள் யாராவது இருக்காங்களா?). அதற்கு காரணம், நம் தமிழ் நாட்டுப் பெற்றோர்கள் பெண்களை   நன்றாகவே வளர்த்தியுள்ளனர். ஆனால் தமிழ் நாட்டுப் பெண்களும் ஒரு விசயத்தில் போதை கொண்டு ஆழ்ந்து உள்ளனர்.அந்த மாநிலத்தில் வாழும் பெண்கள் அப்படி என்றால், இங்கு இருக்கும் பெண்கள் செய்யும் ஒரே விசயம். செல்ஃபோன் பேசுவது தான். அந்தப் பெண்களுக்கு புகையும், மதுவும் தான் போதையை தருகிறது. நம் பெண்களுக்கு செல்ஃபோனில் அந்த போதை கிடைக்கிறது. அத கம்பேர் செய்யும் போது, செல்ஃபோன் ஓக்கே.


 எனெனில், சினிமா, செல்போன் தவிர, வேற எதுவும் தமிழ் குமரி பெண்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் இல்லீங்க. அத நானும் ஒத்துக்கறேன்.

மேலும், இன்றைய தலைமுறை பெண்களை பாராட்டத்தான் வேண்டும்.
அப்பாவிடமோ அல்லது சகோதரனிடமோ பணம் வாங்கி தன் தேவையான பொருட்களை வாங்கி வாழ்க்கையை ஓட்டிய பெண்கள், இன்று தன் அப்பாவுக்கு பணம் தரும் அளவிற்கு சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். பெற்றவர்களும் தன் மகள் சம்பாதித்து கொடுப்பதால் மகளை அதிகமாக கட்டுப்படுத்துவது இல்லை. இது ஒரு இயலாமைதான். கட்டுப்படுத்தினாலும், இந்த தலைமுறை பெண்கள் அவர்களுக்கு கட்டுப்படுவதில்லை. காரணம் கல்வியறிவு. அதன் வெகுமதியாய் கிடைத்த வேலை+கை நிறைய சம்பாத்யம்.


 


"சாதிப்பதிலும், சம்பாதிப்பதிலும் பெண்கள், ஆண்களை பின்னுக்குத் தள்ளும் காலம் நிச்சயம் வர இருக்கிறது. ஆனால் ஒழுக்கமின்றி வாழ்வதிலும், ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி, நீங்கள் முன்னுக்கு வந்து விடாதீர்கள். பூமி தாங்காது."

டிஸ்கி :
இந்தக் கட்டுரை முதலில் கண்ட படங்களைப் பார்த்த பின்பு, ஆதங்கப்பட்டு, என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன். இது அனைத்துப் பெண்களையும் குறித்து எழுதவில்லை. படத்தில் உள்ள வகை பெண்களைக் குறித்து மட்டும்தான் எழுதியிருக்கிறேன். தயவு செய்து இந்த பதிவைப் படிக்கும் பெண்கள் சாபம் ஏதும் விட்டு விடாதீர்கள். புண்ணியமாப் போகும்.ஆணா இருந்தாலும் சரி. பெண்ணா இருந்தாலும் சரி., நம்ம தலைமுறை நல்லா இருக்கனும்ங்க. அப்பதான் அடுத்த தலைமுறை நம்மைப் பார்த்து வளரும். அதுதான் என்னோட விருப்பமும்.

**********************************************************************

Sunday, June 26, 2011

கேள்வி-பதில் : 51. கேள்வி:  குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன்? பாழாய்போன இந்த உலகத்தில் வந்து பிறந்துவிட்டோமே என்பதாலாலா?
[சுரேஷ் கிரிம், ஜப்பான்]


பதில் : ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள்  கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில்  பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்கும். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றன. அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை  மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது.
அனில் அம்பானியின் மனைவிக்கு பிறக்கும் குழந்தை " பாழாய்போன இந்த உலகத்தில் வந்து பிறந்துவிட்டோமே?" என்று நினைக்குமா?!

2. கேள்வி: அடிமைக்கும்,கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
 [ராஜன், கோவை]


பதில் : ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை...அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை...

3. கேள்வி: தாஜ் மஹால் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
  [செந்தில், கரூர்]பதில் : முகலாய மன்னர் ஷா ஜஹான் தன் மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டிய கல்லைறைதான் தாஜ்மஹால். 1632-ல் ஆரம்பிக்கப்பட்டு 1648-ல் முடிக்கப்பட்டது. 22 ஆயிரம் மனிதர்களின் உழைப்பில் உருவானது தாஜ்மாஹால்.  அக்காலத்தில் 3.20 கோடி செலவு செய்யப்பட்டு தாஜ்மாஹல் கட்டப்பட்டது தாஜ்மாஹாலின் சுவர் முழுவதும் திருக்குரான் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  ஆண்டுக்கு 2 லட்சம் வெளிநாட்டினர் தாஜ்மாஹாலை காண வருகின்றனர்.

4. கேள்வி:திரையரங்குகள் இல்லாத நாடு ஏதும் இருக்கா?
 [அருள், பல்லடம்]


பதில் : இருக்கே..! பூட்டான்.

5. கேள்வி:ஒரு கடி ஜோக்.ப்ளீஸ்
 [ஆனந்த், திருச்சி]

பதில் :

பையன்: உனக்கு வயசு என்ன ஆவுது?

கேர்ள்: ஆடி வந்தா 18.

பையன்: அப்ப நடந்து வந்தா?...???

***************************************************************

Saturday, June 25, 2011

எனது படைப்புகள் - 9 : சிறுகதை

               ***காதல்னா சும்மா இல்ல...***
" டேய் மாப்ள என்னடா மொகத்துல களையே இல்ல. காலையில தானே சொல்லிட்டுப் போன இன்னிக்கு நீ உன் லவ்வர் கூட அவுட்டிங் போறேன்னு. என்னாச்சு? உன் லவ்வர் வரலையா? "

" இல்லடா மச்சி. வந்திருந்தா.."

" அப்புறம் என்னடா லவ்வர்கூட ஏதாச்சும் சண்ட போட்டியா?..."

" அப்படியெல்லாம் இல்லடா.."

" பின்ன என்னடா ஆச்சு. வாயைத் தொறந்து சொல்லேண்டா..!"

" இன்னிக்கு காலையில 10.30 க்கு Sky Walk PVR- ல ஏதாச்சும் படம் பார்க்கலாம்னு நானும் அவளும் ப்ளான் பண்ணியிருந்தோம். அப்புறம் லன்ச் அஞ்சப்பர்ல முடிச்சிட்டு, முட்டுக் காடு போலாம்னு ஒரு திட்டம் இருந்துச்சு..."

" ம்..ம்.. அப்புறம்.."

" உனக்கே தெரியும். நேத்து ராத்திரி 1 மணிக்குத் தான் நாம தூங்க போனோம். காலையில அவசர அவசரமா எந்திரிச்சு, குளிச்சிட்டு கெளம்பறதுக்குள்ள
9.30 ஆயிடுச்சு. அப்புறம் ஒரு ஆட்டோவைப் புடிச்சு 10.10-க்கெல்லாம் PVR போயிட்டேன்.."

" எப்டிடா..கிண்டில இருந்து ஆட்டோல போறதுக்கு 250 ரூபா வாய் கூசாம ஆட்டோக்காரங்க கேட்பாங்களே. சரி. அப்புறம்..."

" இப்படியெல்லாம் ஆட்டோ புடிச்சு PVR போனா, அவ 10.40-க்குத் தான் வந்தாடா. ஏன் லேட்டுன்னு கேட்டா பஸ்ல வந்ததா சொல்றா. ஆட்டோ புடிச்சு
வந்திருக்கலாமேன்னு கேட்டா, அவ சொல்றா ஆட்டோல வந்தா 50 ரூபா ஆகுமாம்..! "

" உன் ஆளு தங்கியிருக்கிற ஹாஸ்டல் அண்ணா நகர் பக்கத்துலதாண்டா இருக்கு. 20 மினிட்ஸ்-க்குள்ள Sky Walk வந்திடலாமே. லவ் பண்ற பொண்ணுங்கல்ல பாதிக்கு மேல சீக்கிறமா வந்ததா சரித்திரமே இல்லடா..!"

" கரெக்டு. அப்புறம் நானும், சரி காலையில அவளைத் திட்டி மூட் அவுட் பண்ண வேண்டாம்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு அமைதியாயிட்டேன்."

" சரி.அப்புறம் படத்துக்குப் போனீங்களா?.."

" ம்ம்.. PVR வாசல்ல வெயிட் பண்ணி, அவ வந்ததும் டிக்கெட் கவுண்டருக்குப் போனோம். அங்க மாவீரன் படத்துக்கு மட்டும்தான் டிக்கெட் இருக்கு மத்ததுக்கெல்லாம் ஹவுஸ்புல்-னு சொல்லிட்டான்.."

" அடப்பாவமே..போன வாரந்தான் நாம அந்தப் படத்த பார்த்தோம். உன் ஆள் கிட்டகூட காஜல் அகர்வாலப் பற்றி பத்தி பத்தியா வர்ணிச்சு, அவள வெறுப்பேத்தினியே!. சரி..  அப்புறம்.."" அவ மாவீரனுக்கே போகலாம்னு சொல்லிட்டா. அவ இன்னும் பார்க்கலயாம். நான் ஏதாவது இங்கிலீஸ் த்ரி-டி படம் பார்க்கலாம்னு சொன்னேன்.
மாவீரன் தான் பார்க்கனும்னு முடிவா சொல்லிட்டாடா.."

" மாப்ள உன் கதை இப்டி ஆயிடுச்சே.."

" ஆமா..வேற வழியில்லாம அந்தப் படத்துக்குத் தான் போனோம். பசி வேற..காஜல் அகர்வால் இருந்ததால படம் முடியற வரைக்கும் நான் ஒரு வழியா டைம் பாஸ் பண்ணிட்டேன். படம் பார்க்கும் போது அவ கிட்ட பேசலாம்னு நெனச்சா அவ ரொம்ப சீரியஸா படத்த பார்த்துட்டு இருந்தா..அவள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நெனச்சு நானும் ஸ்கிரின்ல காஜல் அகர்வால தேட ஆரம்பிச்சேன்.."" ம்..ம்..தென்.."

" ஒரு வழியா படம் முடிஞ்சதும் அஞ்சப்பர்ல சாப்பிட போனோம். ஒரே மழைடா...சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் , எங்க போறதுன்னு தெரியல.. மழையும் நிக்கல. அவள கேட்டா என் இஷ்டம்னு சொல்லிட்டா.."

" சரி இன்னிக்கு நாள் நல்லா இல்ல, இன்னொரு நாள் முட்டுக்காடு போகலாம்னு சொல்லிட்டு, அதுக்குப் பதில இப்ப எங்க போலாம் -னு யோசிச்சேன். அவ சொன்னா..பேசாம மறுபடியும் சினிமாவுக்கே போலாமா?-னு.."

" ஆஹா...அப்புறம்..."

" நானும் சரி..வேற வழியில்லைன்னு சத்யம் தியேட்டருக்கு ஆட்டோக்காரனை போகச் சொன்னேன். "

" ஆட்டோல போகும் போது என்ன படம் பார்க்கலாம்னு டிஸ்கஸ் பண்ணினோம்..அவ கோ படம் இன்னும் பார்க்கலன்னு சொன்னா.."

" அடப் பாவமே!.ரெண்டு வாரத்துக்கு முந்திதான் நாம கோ-படத்தையும் பார்த்தோமே!.. ரொம்பப் பாவம்டா நீ.."

" காலையிலதான் பார்த்த படத்தையே பார்க்கற சூழ்நிலை...இப்ப வேற படத்துக்கு போலாம்னு நான் முடிவா சொல்லிட்டேன். அப்புறம் தியேட்டருக்குப் போனா, கண்டேன் படத்துக்கு ஒரு டிக்கெட் மட்டும் இருக்கு. இங்கிலீஸ் த்ரி-டி படத்துக்கு டிக்கெட் இல்லை... சல்மான்கானோட ரெடி படத்துக்கும் , கோ படத்துக்கும் மட்டும் தான் டிக்கெட் இருக்குன்னு பாவி பய புள்ளக சொல்லிட்டானுக.."" இன்னிக்கு முழிச்ச நேரமே சரியில்லைன்னு நெனச்சுட்டு, ரெண்டு டிக்கெட் கோ-வுக்கு எடுத்துட்டு. திரும்பவும் அந்தப் படத்தை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.
படம் முடிஞ்சதும் அவளுக்கு இரட்டை சந்தோசம். ஒரே நாள்ல ரெண்டு நல்ல படம் அதுவும் அவ பார்க்கத் துடிச்ச படம் பார்த்ததால மொகமெல்லாம் திருப்திடா. ஒரு வழியா அவளை ஆட்டோ வச்சி ஹாஸ்டல்ல விட்டுட்டு இப்படி வந்திருக்கேன். இப்ப புரியுதா...மச்சி...என்னோட ஃஃபீலிங்ஸ்.!, பார்த்த படத்தையே பார்க்கறது, அதுவும் ரெண்டு படத்தைப் ஒரே நாள்ல பார்க்கிறது எவ்ளோ கஷ்டம்னு..! "

" ரொம்ப...ரொம்ம்ப்ப.. நல்லாவே புரியுதுடா மாப்ள.. கவலைப் படாதடா... காதல்னா சும்மா இல்லடா...லவ் பண்ணினா சில சமயங்கள்ல இப்படித்தான் சோதனை வரும் டோண்ட்-ஒரி..கூல்டா..ஆனா ஒன்னு மட்டும் உண்மை..அவளுக்காக இத்தனை கஷ்டத்தையும் தாங்கியிருக்க..நீ ரொம்ப ரொம்ப நல்லவண்டா... வாடா ஆளுக்கு ஒரு பியர் அடிக்கலாம். அப்பதான்  உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் கெடைக்கும். டேய்..சதீஸ் வர்றப்ப ரெண்டு பியர் வாங்கிட்டு வாடா..."

" என்னடா மாப்ள இன்னுமா ஃபீல் பண்ற..! விடுறா... அடுத்த வாரம் வீக் எண்ட்ல உன் லவ்வர் கூட முட்டுக் காடு போ..ரிலாக்ஸ் பண்ணிக்கோ.."

" நோ..டா மச்சி.. அவ காலேஜ்-ல அடுத்த வாரம் சனிக்கிழமையிலிருந்து ஒரு வாரம் ஆல் இந்தியா டூர் போறாங்கலாம். நான் ரூமுக்கு வர்றப்பவே அவ ஃபோன்ல சொல்லிட்டாடா.."

" (கடுப்பில்)டேய் மனுசனாடா நீ...அப்பவே நான் சொன்ன...லவ் பண்ணாத லவ் பண்ணாத-னு...கேட்டியா நீ..!. போய் வேலையப் பாருடா..அத விட்டுட்டு படம்...டூர்னு டயலாக் அடிச்சுட்டு...உன் கிட்ட கேட்டது தப்பா போச்சு... டேய்.. டேய் சதிஸ்.. நில்றா... ம்... எக்ஸ்ட்றா ஒரு பியர் வாங்கிக்கோ... பாவி மக்க என்னை இவன் ரெண்டு பியர் அடிக்க வச்சுட்டாண்டா..."

சிறிது நேரம் கழித்து...பியரை அடித்தவாறே...

" டேய்...மாப்ல..சார்றிடா.. இன்னிக்கு நளந்த உன் கதையைக் கேட்டதும் எனக்கே  உன் ளவ்வர் மேல அவ்ளோ கோவம் வந்திடுச்சு... நீ எப்டிடா எல்லாத்தையும் தாங்கிக்கிற.."

" மச்சி...காதல்னா சும்மா இல்லடா..! "


டிஸ்கி : எனது முதல் சிறுகதை இது. படங்களை உங்களுக்காகத்தான் கதையின் இடையில் இணைத்தேன். எப்படி இருக்கு என்னோட சிறுகதை          (இது வெறும் கற்பனைங்கோ).இனி உங்க கருத்தைச் சொல்லுங்க...

******************************************************************

Friday, June 24, 2011

தெரிஞ்சுக்கோங்க - மினரல் வாட்டர் பாட்டில்


*** மினரல் வாட்டர் பாட்டில்***பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் ஒரு வீட்டை நிச்சயம் இந்த யுகத்தில் பார்க்க முடியாது. வீட்டின் வாசற்படியிலிருந்து ஆரம்பித்து, அனைத்து ரூம்களிலும் அதன் ஆதிக்கம் மிகவும் அதிகம். அந்த அளவிற்கு அதன் தேவை பல மடங்கு பெருக காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்தால், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைத்திருப்பதால்தான் நாமும் அதனை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் நிறைய பயன்கள் ஏற்படுகிறது என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால் அதே சமயம் அதனால் கடுமையான  விளைவுகளும் ஏற்படுகிறது என்பதையும் நிச்சயம் மறுக்க இயலாது.


சரி. விசயத்திற்கு வருகிறேன்.

சாதரண வாட்டரை விட மினரல் வாட்டர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை.
ஆனால் அந்த மினரல் வாட்டரை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் பாட்டிலால் எத்தனை விளைவுகள் ஏற்படுகிறது தெரியுமா?மினரல் வாட்டர் விற்பனையில் அதிகம் விற்பது, Aqua fina, Kinley & Bislery தான். எங்கேனும் ஊருக்குச் செல்ல நேர்ந்தால் நமது டிராவல் பேக்-கில் நிச்சயம்
இந்த மூன்றில் ஏதேனும் ஒரு வாட்டர் பாட்டில் இருக்கும். நம்மில் பலர், இந்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை காலி பண்ணியவுடன், அந்தக் காலி பாட்டிலை  திரும்ப தண்ணிரையோ, பாலையோ அல்லது இதர பழச்சாறு வகைகளையோ ஊற்றி வைக்கப் பயன் படுத்துகிறோம். அந்தக் காலி பாட்டிலை திரும்ப திரும்ப பயன்படுத்துவதால் என்ன விளைவுகள் உண்டாகும் தெரியுமா?

ஒரு நிஜ சம்பவம் , துபாயில் பள்ளிக்குச் செல்லும் ஒரு 12 வயது சிறுமி, Safa  என்ற பிராண்டெட் வகை மினரல் வாட்டர் பாட்டிலை (ஒரே பாட்டிலை) 
சுமார் 16 மாதங்கள் பயன்படுத்தினாள். அதன் விளைவாக அவள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு முடிவில் இறந்து விட்டாள்.

உண்மையிலேயே மினரல் வாட்டர்+பாட்டில் தயாரிக்கும் கம்பெனிகள் இந்த விசயத்தில் விழிப்போடு இருக்கிறது (நமக்குத்தான் அதைப் பற்றி அறிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ). ஒவ்வொரு மினரல் வாட்டர் பாட்டில் தயாரிக்கும் போதும் அதன் அடிப்பாகத்தில், முக்கோண வடிவில் ஒரு குறியீட்டை வெளியிட்டு , அந்தக் குறியீட்டில் 1 முதல் 7 வரையிலான எண்களையும் பதித்து வெளியிடுகிறது.அதன் அர்த்தம் என்னவெனில், ஒவ்வொரு நம்பருக்கும் அதற்கு ஈடாக சில பிளாஸ்டிக் கெமிக்கல் பொருட்கள் பெயர்கள் உள்ளது. ஒரு பாட்டிலில் எந்த எண் பதித்திருக்கிறதோ, அந்த எண்ணுக்கு ஈடான கெமிக்கல் பொருட்களால் அது தயாரிக்கப் பட்டது.


நான் அறிந்த வரை , பொதுவாக அனைத்து மினரல் வாட்டர் பாட்டில்களிலும், முக்கோண குறியீட்டிற்குள் 1 என்ற எண்தான் பதிக்கப்பட்டிருக்கும். அந்த எண் கொண்ட வாட்டர் பாட்டில்கள் PET(Poly Ethylene Terephthalate) என்ற வகை கெமிக்கலால் தயாரிக்கடுகிறது. அப்படித் தயாரிக்கப் பட்ட பாட்டில்கள் ஒரே ஒருமுறைதான் பயன் படுத்த வேண்டும். திரும்ப பயன் படுத்தக் கூடாது. தண்ணீர் காலியானவுடன் அதனை குப்பைத் தொட்டிக்குள் போடுவது தான் சிறந்தது. திரும்ப நீண்ட நாட்கள் பயன்படுத்த தொடங்கினால் நிச்சயம், அந்த பாட்டிலில் உள்ள கெமிக்கல் , பாட்டிலுக்குள் உள்ள நீரிலோ அல்லது திரவத்திலோ கலந்து நச்சுத் தன்மையானதாக மாற்றி விடும். அப்புறம் கேன்சர் போன்ற நோய்க்கு ஆளாகி வருந்தும் நிலைக்கு ஆளாகி விடுவோம். எனவே முடிந்த வரை, மினரல் வாட்டர் காலியானவுடன் பாட்டிலை குப்பைத் தொட்டியில் போடுவது உத்தமம். குழந்தைகளுக்கு மட்டும் திரும்ப பயன் படுத்தக் கொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் சீக்கிரம் பாதிப்பு வரும்.


இன்னொரு முக்கியமான தகவல்,

ஒரு பாட்டிலில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஏதேனும் ஒரு எண் (5,6 & 7) , முக்கோண குறியீட்டிற்குள் பதித்திருந்தால், அந்த பாட்டிலால் எந்தக் கேடும் 
வராது என்பது நிச்சயம். தைரியமாக பயன்படுத்தலாம். 5க்கு குறைவான (1,2,3,4) எதேனும் ஒரு எண் பதித்திருந்தால், அந்த பாட்டில் ஒரு முறை மட்டுமே பயன் படுத்த வேண்டும். " ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல! " என்ற எண்ணம் கொண்டவர்கள் வேண்டுமானால் திரும்ப பயன் படுத்திப் பாருங்கள் (பேங்க் அக்கவுண்டில் நிறைய பணம் வைத்திருங்கள். பின்னர் உதவும்).

திரும்பவும் சொல்கிறேன். குழந்தைகளிடம், அப்படிப்பட்ட வாட்டர் பாட்டிலை திரும்ப திரும்ப பயன்படுத்துவதை தவிர்க்கச் சொல்லுங்கள்.  இன்னமும் படிப்பறிவில்லாத ஏழைகள், கிராமத்து மக்கள் , தங்கள் குழந்தைகளின் ஸ்கூல் பேக்-கினுள் இப்படிப் பட்ட ( <5 எண் கொண்ட) பாட்டிலில்தான் தண்ணீரை நிரப்பிக் கொடுத்து அனுப்புகின்றனர் அதன் பின் விளைவுகளைப் பற்றித் தெரியாமல். எனவே உங்களால் முடிந்தால் அவர்களுக்கும் எடுத்துரையுங்கள். புண்ணியமாப் போகும்.அடுத்த முறை மினரல் வாட்டர் பாட்டில் வாங்கும் முன் , பிராண்டோடு இந்த முக்கோண குறியீட்டையும் பார்த்து வாங்குங்கள்.


டிஸ்கி - மினரல் வாட்டர் பாட்டில் பற்றி நிறைய இணையதளங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. மேலும் தகவல் பெற நினைப்பவர்கள்
முயற்சி செய்து பாருங்கள்.


 சர்தார்ஜி ஜோக்:

ஒரு சர்தார்ஜிக்கு முதன் முதலில் ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யும் வேலை கிடைக்கிறது. அலுவலகத்திற்கு வந்த முதல் நாள், கிளம்பும் நேரத்தையும் 
மறந்து விட்டு ரொம்ப நேரம் வேலை பார்க்கிறார் . அவரைப் பார்த்த பாஸுக்கு மிகுந்த சந்தோசம். மகிழ்ச்சியுடன் அவரிடம் கேட்கிறார்.

பாஸ் : இவ்ளோ நேரமாய் என்னென்ன வேலை பார்த்தீங்க?

சர்தார்ஜி : கீ போர்டுல ஆல்ஃபபெட்ஸ் சரியான ஆர்டரில் இல்லை. அதை 
                        இப்பதான் கரெக்டா அரேன்ஜ் பண்ணினேன்.

*********************************************************Wednesday, June 22, 2011

எ.பி.க - 5

                   ***நீ..நான்..மழை***
 

சித்தல் என்பது ஒரு அழகான ஒரு விசயம். இங்கு ஒரு நண்பர் தான் மழையை ரசிக்க ஆரம்பித்ததன் காரணத்தை எழுதியிருக்கிறார். படித்தவுடன்
நானும் ரசித்தேன். அவரது கவிதையையும்...கற்பனையையும்..ஒரு நாள்,
நீ உன் தங்கையின்
தோழிகளுடன்
" கண்ணாமூச்சி "
விளையாடிக்கொண்டிருந்தாய்,
அப்போது பெய்த
எதிர்பாராத மழையில்
உன் தோழிகள்
" ஐயோ மழை ! "
என்று சிதறி ஓடினார்கள்..,
நீ மட்டும்,
" அய் மழை! "
என்று மழையில்
நனைந்தாய்.
அன்றுதான் முதன்முதலில்
ரசிக்க ஆரம்பித்தேன்
மழையையும், உன்னையும்!


நன்றி: ராஜன், கோவை

*****************************************************

Tuesday, June 21, 2011

எனது படைப்புகள் - 8

                               ****பகிர்தல்****


நான் சாப்பிடாமல்,
இருக்கின்ற சோற்றை
நால்வருக்கும்
பகிர்ந்து கொடுத்து
வளர்த்ததாலோ
என்னவோ
இப்போது,
இருக்கின்ற ஒரு வீட்டையும்
பகிர்ந்து கொடுக்கச் சொல்கின்றனர்,
நான் வளர்த்த
செல்லங்கள்.
என்னையும் மறந்து விட்டு.


 **************************************************

Monday, June 20, 2011

தெரிஞ்சுக்கோங்க - இந்தியாவின் சாதனைகள்

               ***இந்தியாவின் சாதனைகள்***

மீபத்திய ஒரு வார இதழில் வெளி வந்த  கட்டுரை இது. படித்து, ஆச்சர்யப்பட்டேன். உங்கள் பார்வைக்காக படங்களையும் இதனுடன் இணைத்து வெளியிட்டுள்ளேன்.

நாம் " இந்தியன் " என்று பெருமை கொள்ளும் வகையில் நிறைய விசயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன.


* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது 
    இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.

  
* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், 
    உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.            
    உலகம்  முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு 
    பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.
* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் 
    கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும்   
        வழிகாட்டியாக அமைந்தது.
* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது,             இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய 
 மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, 
"போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.


* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.
 
 
இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.
 
இவை சிறு எடுத்துக்காட்டுதான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

[நன்றி - தினமலர்]

இத்தனை சாதனை படைத்த இந்தியாவில் இப்போது ஊழல் செய்வதில் மட்டுமே சாதனை நிறைய நடக்கிறது.

அப்துல் கலாம் சொன்னது போல, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்கள் ஊழல் செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு அதன் படி நடந்தால்
ஊழலை நிச்சயம் ஒழிக்க முடியும். நான் தயார். நீங்கள் தயாரா?


***********************************************************