Saturday, June 25, 2011

எனது படைப்புகள் - 9 : சிறுகதை

               ***காதல்னா சும்மா இல்ல...***
" டேய் மாப்ள என்னடா மொகத்துல களையே இல்ல. காலையில தானே சொல்லிட்டுப் போன இன்னிக்கு நீ உன் லவ்வர் கூட அவுட்டிங் போறேன்னு. என்னாச்சு? உன் லவ்வர் வரலையா? "

" இல்லடா மச்சி. வந்திருந்தா.."

" அப்புறம் என்னடா லவ்வர்கூட ஏதாச்சும் சண்ட போட்டியா?..."

" அப்படியெல்லாம் இல்லடா.."

" பின்ன என்னடா ஆச்சு. வாயைத் தொறந்து சொல்லேண்டா..!"

" இன்னிக்கு காலையில 10.30 க்கு Sky Walk PVR- ல ஏதாச்சும் படம் பார்க்கலாம்னு நானும் அவளும் ப்ளான் பண்ணியிருந்தோம். அப்புறம் லன்ச் அஞ்சப்பர்ல முடிச்சிட்டு, முட்டுக் காடு போலாம்னு ஒரு திட்டம் இருந்துச்சு..."

" ம்..ம்.. அப்புறம்.."

" உனக்கே தெரியும். நேத்து ராத்திரி 1 மணிக்குத் தான் நாம தூங்க போனோம். காலையில அவசர அவசரமா எந்திரிச்சு, குளிச்சிட்டு கெளம்பறதுக்குள்ள
9.30 ஆயிடுச்சு. அப்புறம் ஒரு ஆட்டோவைப் புடிச்சு 10.10-க்கெல்லாம் PVR போயிட்டேன்.."

" எப்டிடா..கிண்டில இருந்து ஆட்டோல போறதுக்கு 250 ரூபா வாய் கூசாம ஆட்டோக்காரங்க கேட்பாங்களே. சரி. அப்புறம்..."

" இப்படியெல்லாம் ஆட்டோ புடிச்சு PVR போனா, அவ 10.40-க்குத் தான் வந்தாடா. ஏன் லேட்டுன்னு கேட்டா பஸ்ல வந்ததா சொல்றா. ஆட்டோ புடிச்சு
வந்திருக்கலாமேன்னு கேட்டா, அவ சொல்றா ஆட்டோல வந்தா 50 ரூபா ஆகுமாம்..! "

" உன் ஆளு தங்கியிருக்கிற ஹாஸ்டல் அண்ணா நகர் பக்கத்துலதாண்டா இருக்கு. 20 மினிட்ஸ்-க்குள்ள Sky Walk வந்திடலாமே. லவ் பண்ற பொண்ணுங்கல்ல பாதிக்கு மேல சீக்கிறமா வந்ததா சரித்திரமே இல்லடா..!"

" கரெக்டு. அப்புறம் நானும், சரி காலையில அவளைத் திட்டி மூட் அவுட் பண்ண வேண்டாம்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு அமைதியாயிட்டேன்."

" சரி.அப்புறம் படத்துக்குப் போனீங்களா?.."

" ம்ம்.. PVR வாசல்ல வெயிட் பண்ணி, அவ வந்ததும் டிக்கெட் கவுண்டருக்குப் போனோம். அங்க மாவீரன் படத்துக்கு மட்டும்தான் டிக்கெட் இருக்கு மத்ததுக்கெல்லாம் ஹவுஸ்புல்-னு சொல்லிட்டான்.."

" அடப்பாவமே..போன வாரந்தான் நாம அந்தப் படத்த பார்த்தோம். உன் ஆள் கிட்டகூட காஜல் அகர்வாலப் பற்றி பத்தி பத்தியா வர்ணிச்சு, அவள வெறுப்பேத்தினியே!. சரி..  அப்புறம்.."" அவ மாவீரனுக்கே போகலாம்னு சொல்லிட்டா. அவ இன்னும் பார்க்கலயாம். நான் ஏதாவது இங்கிலீஸ் த்ரி-டி படம் பார்க்கலாம்னு சொன்னேன்.
மாவீரன் தான் பார்க்கனும்னு முடிவா சொல்லிட்டாடா.."

" மாப்ள உன் கதை இப்டி ஆயிடுச்சே.."

" ஆமா..வேற வழியில்லாம அந்தப் படத்துக்குத் தான் போனோம். பசி வேற..காஜல் அகர்வால் இருந்ததால படம் முடியற வரைக்கும் நான் ஒரு வழியா டைம் பாஸ் பண்ணிட்டேன். படம் பார்க்கும் போது அவ கிட்ட பேசலாம்னு நெனச்சா அவ ரொம்ப சீரியஸா படத்த பார்த்துட்டு இருந்தா..அவள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நெனச்சு நானும் ஸ்கிரின்ல காஜல் அகர்வால தேட ஆரம்பிச்சேன்.."" ம்..ம்..தென்.."

" ஒரு வழியா படம் முடிஞ்சதும் அஞ்சப்பர்ல சாப்பிட போனோம். ஒரே மழைடா...சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் , எங்க போறதுன்னு தெரியல.. மழையும் நிக்கல. அவள கேட்டா என் இஷ்டம்னு சொல்லிட்டா.."

" சரி இன்னிக்கு நாள் நல்லா இல்ல, இன்னொரு நாள் முட்டுக்காடு போகலாம்னு சொல்லிட்டு, அதுக்குப் பதில இப்ப எங்க போலாம் -னு யோசிச்சேன். அவ சொன்னா..பேசாம மறுபடியும் சினிமாவுக்கே போலாமா?-னு.."

" ஆஹா...அப்புறம்..."

" நானும் சரி..வேற வழியில்லைன்னு சத்யம் தியேட்டருக்கு ஆட்டோக்காரனை போகச் சொன்னேன். "

" ஆட்டோல போகும் போது என்ன படம் பார்க்கலாம்னு டிஸ்கஸ் பண்ணினோம்..அவ கோ படம் இன்னும் பார்க்கலன்னு சொன்னா.."

" அடப் பாவமே!.ரெண்டு வாரத்துக்கு முந்திதான் நாம கோ-படத்தையும் பார்த்தோமே!.. ரொம்பப் பாவம்டா நீ.."

" காலையிலதான் பார்த்த படத்தையே பார்க்கற சூழ்நிலை...இப்ப வேற படத்துக்கு போலாம்னு நான் முடிவா சொல்லிட்டேன். அப்புறம் தியேட்டருக்குப் போனா, கண்டேன் படத்துக்கு ஒரு டிக்கெட் மட்டும் இருக்கு. இங்கிலீஸ் த்ரி-டி படத்துக்கு டிக்கெட் இல்லை... சல்மான்கானோட ரெடி படத்துக்கும் , கோ படத்துக்கும் மட்டும் தான் டிக்கெட் இருக்குன்னு பாவி பய புள்ளக சொல்லிட்டானுக.."" இன்னிக்கு முழிச்ச நேரமே சரியில்லைன்னு நெனச்சுட்டு, ரெண்டு டிக்கெட் கோ-வுக்கு எடுத்துட்டு. திரும்பவும் அந்தப் படத்தை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.
படம் முடிஞ்சதும் அவளுக்கு இரட்டை சந்தோசம். ஒரே நாள்ல ரெண்டு நல்ல படம் அதுவும் அவ பார்க்கத் துடிச்ச படம் பார்த்ததால மொகமெல்லாம் திருப்திடா. ஒரு வழியா அவளை ஆட்டோ வச்சி ஹாஸ்டல்ல விட்டுட்டு இப்படி வந்திருக்கேன். இப்ப புரியுதா...மச்சி...என்னோட ஃஃபீலிங்ஸ்.!, பார்த்த படத்தையே பார்க்கறது, அதுவும் ரெண்டு படத்தைப் ஒரே நாள்ல பார்க்கிறது எவ்ளோ கஷ்டம்னு..! "

" ரொம்ப...ரொம்ம்ப்ப.. நல்லாவே புரியுதுடா மாப்ள.. கவலைப் படாதடா... காதல்னா சும்மா இல்லடா...லவ் பண்ணினா சில சமயங்கள்ல இப்படித்தான் சோதனை வரும் டோண்ட்-ஒரி..கூல்டா..ஆனா ஒன்னு மட்டும் உண்மை..அவளுக்காக இத்தனை கஷ்டத்தையும் தாங்கியிருக்க..நீ ரொம்ப ரொம்ப நல்லவண்டா... வாடா ஆளுக்கு ஒரு பியர் அடிக்கலாம். அப்பதான்  உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் கெடைக்கும். டேய்..சதீஸ் வர்றப்ப ரெண்டு பியர் வாங்கிட்டு வாடா..."

" என்னடா மாப்ள இன்னுமா ஃபீல் பண்ற..! விடுறா... அடுத்த வாரம் வீக் எண்ட்ல உன் லவ்வர் கூட முட்டுக் காடு போ..ரிலாக்ஸ் பண்ணிக்கோ.."

" நோ..டா மச்சி.. அவ காலேஜ்-ல அடுத்த வாரம் சனிக்கிழமையிலிருந்து ஒரு வாரம் ஆல் இந்தியா டூர் போறாங்கலாம். நான் ரூமுக்கு வர்றப்பவே அவ ஃபோன்ல சொல்லிட்டாடா.."

" (கடுப்பில்)டேய் மனுசனாடா நீ...அப்பவே நான் சொன்ன...லவ் பண்ணாத லவ் பண்ணாத-னு...கேட்டியா நீ..!. போய் வேலையப் பாருடா..அத விட்டுட்டு படம்...டூர்னு டயலாக் அடிச்சுட்டு...உன் கிட்ட கேட்டது தப்பா போச்சு... டேய்.. டேய் சதிஸ்.. நில்றா... ம்... எக்ஸ்ட்றா ஒரு பியர் வாங்கிக்கோ... பாவி மக்க என்னை இவன் ரெண்டு பியர் அடிக்க வச்சுட்டாண்டா..."

சிறிது நேரம் கழித்து...பியரை அடித்தவாறே...

" டேய்...மாப்ல..சார்றிடா.. இன்னிக்கு நளந்த உன் கதையைக் கேட்டதும் எனக்கே  உன் ளவ்வர் மேல அவ்ளோ கோவம் வந்திடுச்சு... நீ எப்டிடா எல்லாத்தையும் தாங்கிக்கிற.."

" மச்சி...காதல்னா சும்மா இல்லடா..! "


டிஸ்கி : எனது முதல் சிறுகதை இது. படங்களை உங்களுக்காகத்தான் கதையின் இடையில் இணைத்தேன். எப்படி இருக்கு என்னோட சிறுகதை          (இது வெறும் கற்பனைங்கோ).இனி உங்க கருத்தைச் சொல்லுங்க...

******************************************************************

10 comments:

கவி அழகன் said...

" இப்படியெல்லாம் ஆட்டோ புடிச்சு PVR போனா, அவ 10.40-க்குத் தான் வந்தாடா. ஏன் லேட்டுன்னு கேட்டா பஸ்ல வந்ததா சொல்றா. ஆட்டோ புடிச்சு
வந்திருக்கலாமேன்னு கேட்டா, அவ சொல்றா ஆட்டோல வந்தா 50 ரூபா ஆகுமாம்..! "

அது தான் பொண்ணுங்க

சந்திரகௌரி said...

முதல் சிறுகதைக்கு வாழ்த்துகள். சிறப்பாக எழுதுகின்றீர்கள். கதை நன்றாக இருக்கின்றது. தொடருங்கள்.

RAMVI said...

வணக்கம் குணா,இன்றுதான் உங்கள் பதிவிர்க்கு வந்தேன்.நீங்கள் முதல் சிறுகதை எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளிர்கள். மிகவும் நன்றக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

கன்னியுடன் காதலில் படும் பாட்டை சிறுகதையாக்கிய உங்கள் கன்னி முயற்சி பாராட்டுக்குரியது.. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

யதார்த்தமா இருந்தது உங்களின் ‘கன்னி’யைப் பற்றிய கன்னி முயற்சி.
’காதல்னா இதெல்லாம் சகஜமப்பா’ என்று சொல்லத் தோன்றுகிறது.
(எமது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.எமது பழைய்ய இடுகைகளையும் படிக்க நேரம் கிட்டும் போது முயற்சிக்கவும்)

cheena (சீனா) said...

அன்பின் குணா - நல்லாவே இருக்கு கதை - முதல் சிறுகதை நன்று. இயல்பான நடை - பிடிவாதம் பொண்னூக கிட்ட இருக்கத்தான் செய்யும். காதல்னா சும்மா இல்லடா ன்ன்னு அவன் சொன்னதத் திருப்பிச் சொல்லி - அதுவும் ஒரு பியருக்கு அப்புறம் - மூக்க உடசது நல்லாவே இருக்கு - ரெண்டு பீர் அடிச்சதுக்கு அப்புறம் உளறுவது " டேய்...மாப்ல..சார்றிடா.. இன்னிக்கு நளந்த உன் கதையைக் கேட்டதும் எனக்கே உன் ளவ்வர் மேல அவ்ளோ கோவம் வந்திடுச்சு... நீ எப்டிடா எல்லாத்தையும் தாங்கிக்கிற.." சூப்பர். நல்வாழ்த்துகள் குணா - நட்புடன் சீனா

சந்ரு said...

கதை நல்லா இருக்கு அதைவிட போட்டோக்கள்.... ம்.... போட்டோவ பலதடவை பாத்துக்கிட்டே இருந்தேன்.

R.Gopi said...

குணா...

என் வலைப்பதிவில் உங்கள் கமெண்ட் கண்டேன்... மிக்க மகிழ்ச்சி... ஃபாலோயர்ஸ் பட்டன் இருக்கிறதே!!

உங்களின் முதல் முயற்சியான இந்த சிறுகதை, கதை மாதிரி இல்லாமல், நடந்ததை எழுதின மாதிரியே இருக்கே...

எனிவே வாழ்த்துக்கள்... நேரமிருப்பின், என் மற்றொரு வலைப்பக்கத்தையும் பாருங்கள்...

www.jokkiri.blogspot.com

ரிஷபன் said...

கதை மாதிரி தெரியல.. நிஜ அவஸ்தை போல.. ரெண்டு தடவை உங்களை யாரு படத்தை பார்க்கச் சொன்னாங்க?!

அப்பாவி தங்கமணி said...

ha ha...super...:))

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...