நான் மிகவும் ரசித்துப் படித்த சில கவிதை & ஹைகூ -க்களை வெளியுடுகிறேன். படித்துப் பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.
எ.பி.ஹை - 1
எ.பி.ஹை - 1
குறும்படம்
மனைவியிடம் சொன்னேன்.
" நானும் குறும்படம்
எடுக்கப் போகிறேன் "
பதிலுக்கு முறைத்தாள்.
உன்னைவைத்துதான் என்றேன்.
முறைத்தவள் சிரித்தாள்.
நன்றி - பாலா,பொள்ளாச்சி
எ.பி.ஹை - 2
சேமிப்பு
கீரை விற்ற கிழவியிடம்
பேரம் பேசி சேமித்தேன்
ஒரு ருபாய் பணமும்
ஒரு மூட்டை பாவமும்!
நன்றி - சபீதா இப்ராஹிம்
எ.பி.க
விலை
உயரம் கம்மி
மாநிறம்
வருமானம் போதாது
சொந்த வீடில்லை
செவ்வாய் தோஷம்
இப்படியாக
எல்லாவற்றையும்
தவிர்த்தபின்
கடைசியாக மகள் சொன்னாள்:
இப்ப வந்த வரன்
விலை கம்மி
முடிச்சுடுங்கப்பா.
நன்றி - லீலாவிஜய்,மதுரை.
***************************************************************
9 comments:
மூன்றும் அருமை.
கலக்கல் அனைத்தும் கலக்கல்..
அசத்தல் கவிதைகள்...
மூன்று தலைப்பிலும் ஜொலிக்கிறது...
வாழ்த்துக்கள்..
நல்லாய் இருக்கு பாஸ் ....
மூன்று முத்துக்கள்!
இரண்டாவதும் மூன்றாவதும் வாழ்வில் கடக்கும் அனுபவம் !
அருமையாய் மனம் தொட்டன. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நல்ல கவிதைகள். 3ம் முன்றுவிதமான பெண்களை வைத்து. ரொம்ப வித்தியாசமாய் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறீர்கள்.நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
நானும் என்ர கைகூவையும் அனுப்புறன். பெயர போட்டு பிரசுரிக்கிக்கிறீங்களா???? ஹிஹிஹி
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...