*** மினரல் வாட்டர் பாட்டில்***
பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் ஒரு வீட்டை நிச்சயம் இந்த யுகத்தில் பார்க்க முடியாது. வீட்டின் வாசற்படியிலிருந்து ஆரம்பித்து, அனைத்து ரூம்களிலும் அதன் ஆதிக்கம் மிகவும் அதிகம். அந்த அளவிற்கு அதன் தேவை பல மடங்கு பெருக காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்தால், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைத்திருப்பதால்தான் நாமும் அதனை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் நிறைய பயன்கள் ஏற்படுகிறது என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால் அதே சமயம் அதனால் கடுமையான விளைவுகளும் ஏற்படுகிறது என்பதையும் நிச்சயம் மறுக்க இயலாது.
சரி. விசயத்திற்கு வருகிறேன்.
சாதரண வாட்டரை விட மினரல் வாட்டர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை.
ஆனால் அந்த மினரல் வாட்டரை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் பாட்டிலால் எத்தனை விளைவுகள் ஏற்படுகிறது தெரியுமா?
மினரல் வாட்டர் விற்பனையில் அதிகம் விற்பது, Aqua fina, Kinley & Bislery தான். எங்கேனும் ஊருக்குச் செல்ல நேர்ந்தால் நமது டிராவல் பேக்-கில் நிச்சயம்
இந்த மூன்றில் ஏதேனும் ஒரு வாட்டர் பாட்டில் இருக்கும். நம்மில் பலர், இந்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை காலி பண்ணியவுடன், அந்தக் காலி பாட்டிலை திரும்ப தண்ணிரையோ, பாலையோ அல்லது இதர பழச்சாறு வகைகளையோ ஊற்றி வைக்கப் பயன் படுத்துகிறோம். அந்தக் காலி பாட்டிலை திரும்ப திரும்ப பயன்படுத்துவதால் என்ன விளைவுகள் உண்டாகும் தெரியுமா?
ஒரு நிஜ சம்பவம் , துபாயில் பள்ளிக்குச் செல்லும் ஒரு 12 வயது சிறுமி, Safa என்ற பிராண்டெட் வகை மினரல் வாட்டர் பாட்டிலை (ஒரே பாட்டிலை)
சுமார் 16 மாதங்கள் பயன்படுத்தினாள். அதன் விளைவாக அவள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு முடிவில் இறந்து விட்டாள்.
உண்மையிலேயே மினரல் வாட்டர்+பாட்டில் தயாரிக்கும் கம்பெனிகள் இந்த விசயத்தில் விழிப்போடு இருக்கிறது (நமக்குத்தான் அதைப் பற்றி அறிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ). ஒவ்வொரு மினரல் வாட்டர் பாட்டில் தயாரிக்கும் போதும் அதன் அடிப்பாகத்தில், முக்கோண வடிவில் ஒரு குறியீட்டை வெளியிட்டு , அந்தக் குறியீட்டில் 1 முதல் 7 வரையிலான எண்களையும் பதித்து வெளியிடுகிறது.
அதன் அர்த்தம் என்னவெனில், ஒவ்வொரு நம்பருக்கும் அதற்கு ஈடாக சில பிளாஸ்டிக் கெமிக்கல் பொருட்கள் பெயர்கள் உள்ளது. ஒரு பாட்டிலில் எந்த எண் பதித்திருக்கிறதோ, அந்த எண்ணுக்கு ஈடான கெமிக்கல் பொருட்களால் அது தயாரிக்கப் பட்டது.
நான் அறிந்த வரை , பொதுவாக அனைத்து மினரல் வாட்டர் பாட்டில்களிலும், முக்கோண குறியீட்டிற்குள் 1 என்ற எண்தான் பதிக்கப்பட்டிருக்கும். அந்த எண் கொண்ட வாட்டர் பாட்டில்கள் PET(Poly Ethylene Terephthalate) என்ற வகை கெமிக்கலால் தயாரிக்கடுகிறது. அப்படித் தயாரிக்கப் பட்ட பாட்டில்கள் ஒரே ஒருமுறைதான் பயன் படுத்த வேண்டும். திரும்ப பயன் படுத்தக் கூடாது. தண்ணீர் காலியானவுடன் அதனை குப்பைத் தொட்டிக்குள் போடுவது தான் சிறந்தது. திரும்ப நீண்ட நாட்கள் பயன்படுத்த தொடங்கினால் நிச்சயம், அந்த பாட்டிலில் உள்ள கெமிக்கல் , பாட்டிலுக்குள் உள்ள நீரிலோ அல்லது திரவத்திலோ கலந்து நச்சுத் தன்மையானதாக மாற்றி விடும். அப்புறம் கேன்சர் போன்ற நோய்க்கு ஆளாகி வருந்தும் நிலைக்கு ஆளாகி விடுவோம். எனவே முடிந்த வரை, மினரல் வாட்டர் காலியானவுடன் பாட்டிலை குப்பைத் தொட்டியில் போடுவது உத்தமம். குழந்தைகளுக்கு மட்டும் திரும்ப பயன் படுத்தக் கொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் சீக்கிரம் பாதிப்பு வரும்.
இன்னொரு முக்கியமான தகவல்,
ஒரு பாட்டிலில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஏதேனும் ஒரு எண் (5,6 & 7) , முக்கோண குறியீட்டிற்குள் பதித்திருந்தால், அந்த பாட்டிலால் எந்தக் கேடும்
வராது என்பது நிச்சயம். தைரியமாக பயன்படுத்தலாம். 5க்கு குறைவான (1,2,3,4) எதேனும் ஒரு எண் பதித்திருந்தால், அந்த பாட்டில் ஒரு முறை மட்டுமே பயன் படுத்த வேண்டும். " ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல! " என்ற எண்ணம் கொண்டவர்கள் வேண்டுமானால் திரும்ப பயன் படுத்திப் பாருங்கள் (பேங்க் அக்கவுண்டில் நிறைய பணம் வைத்திருங்கள். பின்னர் உதவும்).
திரும்பவும் சொல்கிறேன். குழந்தைகளிடம், அப்படிப்பட்ட வாட்டர் பாட்டிலை திரும்ப திரும்ப பயன்படுத்துவதை தவிர்க்கச் சொல்லுங்கள். இன்னமும் படிப்பறிவில்லாத ஏழைகள், கிராமத்து மக்கள் , தங்கள் குழந்தைகளின் ஸ்கூல் பேக்-கினுள் இப்படிப் பட்ட ( <5 எண் கொண்ட) பாட்டிலில்தான் தண்ணீரை நிரப்பிக் கொடுத்து அனுப்புகின்றனர் அதன் பின் விளைவுகளைப் பற்றித் தெரியாமல். எனவே உங்களால் முடிந்தால் அவர்களுக்கும் எடுத்துரையுங்கள். புண்ணியமாப் போகும்.
அடுத்த முறை மினரல் வாட்டர் பாட்டில் வாங்கும் முன் , பிராண்டோடு இந்த முக்கோண குறியீட்டையும் பார்த்து வாங்குங்கள்.
டிஸ்கி - மினரல் வாட்டர் பாட்டில் பற்றி நிறைய இணையதளங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. மேலும் தகவல் பெற நினைப்பவர்கள்
முயற்சி செய்து பாருங்கள்.
சர்தார்ஜி ஜோக்:
ஒரு சர்தார்ஜிக்கு முதன் முதலில் ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யும் வேலை கிடைக்கிறது. அலுவலகத்திற்கு வந்த முதல் நாள், கிளம்பும் நேரத்தையும்
மறந்து விட்டு ரொம்ப நேரம் வேலை பார்க்கிறார் . அவரைப் பார்த்த பாஸுக்கு மிகுந்த சந்தோசம். மகிழ்ச்சியுடன் அவரிடம் கேட்கிறார்.
பாஸ் : இவ்ளோ நேரமாய் என்னென்ன வேலை பார்த்தீங்க?
சர்தார்ஜி : கீ போர்டுல ஆல்ஃபபெட்ஸ் சரியான ஆர்டரில் இல்லை. அதை
இப்பதான் கரெக்டா அரேன்ஜ் பண்ணினேன்.
*********************************************************
16 comments:
தற்போதைக்கு தேவையான அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு...
உண்மையில் பிளாஸ்ட்டிக் பொருட்களை ஒழிக்காவிட்டால் அவ்வளவுதான் நம் எதிர்காலம்...
நகைச்சுவையும் அருமை..
அவசியமான பதிவு!
தேவையான பதிவு..
மிகவும் பயன்மிக்க விழிப்புணர்வு பதிவு! அதுசரி திரட்டிகள் எதிலும் இணைக்கவில்லையா?
good your news very useful.
vidya
nalla pathivu
thodarunkal
valththukkal
தற்போதைக்கு தேவையான அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு...
மிகவும் பயனுள்ளதொரு பதிவு.
மிக்க நன்றி.
மாப்ள கலக்கலா சொல்லி இருக்கீங்க நன்றி!
மிகவும் பயனுள்ள பதிவு!!
I READ THIS POST TODAY .ITS REALLY SHOCKING.I'VE GOT TO TELL MY MOM ABOUT THIS .உங்க பதிவு நிச்சயம் எல்லாரும் படிக்கணும் ஏன் என்றால் நிறைய பேர் இப்படிதான் RE USE செய்றாங்க விபரீதம் தெரியாமல்
Nice informative post.. must read category... thanks...
BTW,Sardarji rocks...:))
அருமை. பயனுள்ள பதிவு..
Good News Guna
Keep it up
Good article dude... keep it up....
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...