Sunday, July 31, 2011

மற்றவை - சீரியஸான ஒரு பதிவு

       * சீரியஸான ஒரு பதிவு *
 

ன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமான பதிவு எழுதியிருக்கேன்... ஒரு மகா நடிகன் பற்றி சீரியஸா எழுதியிருக்கேன். தயவு செய்து யாரும் சிரிக்காதீங்க. ஏன்னா இந்த பதிவு வெரி..வெரி..சீரியஸ். இனி மேட்டருக்கு வாங்க...

அவர் தமிழகத்தின் தலை சிறந்த நடிகர் . நடிகர் மட்டும்மல்ல .ஒரு தலை சிறந்த தயாரிப்பாளர். வருங்கால அரசியல்வாதி. இவர் நடிச்ச படத்தைப் பார்க்க தமிழகமே ஆசைப்படுகிறது. அவர் யார் தெரியுமா?கீழே பாருங்க...அவர் கிட்ட பேட்டிக்கு போனப்ப அவரோட சில ஸ்டில்களை கொடுத்தாரு. பதிலை அதிலேயே சொல்லிட்டாரு..

 

ஹலோ...ஃப்ரண்ட்ஸ்...பதிவு நல்லா இருந்துச்சா?

***********************************************

Saturday, July 30, 2011

மற்றவை - ரசித்தவை...மறந்தவை..

       *  ரசித்தவை...மறந்தவை.. *

ம் அனைவரின் யதார்த்த வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன..நடந்திருக்கின்றன..இன்னும் நடக்கும். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் சிலது நம் மனதை விட்டு இன்னும் அகலாமல் இருக்கும். டி.வி.யில் வரும் விளம்பரங்களும் ஒரு சிலது அப்படித்தான் நம்மை மிகவும் கவர்ந்திருக்கும். ஆனால் ஞாபகத்தில் இருக்காது. ஒரு காலத்தில் இந்த விளம்பரங்கள் அனைவரின் மனதைக் கொள்ளை கொண்டது. ஆனால் காலம் அதனை மறக்கடிக்க வைத்து விட்டது. என்னைக் கவர்ந்த அந்த விளம்பரங்கள் இப்போது உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறேன். நான் எனது பால்ய பருவத்தில் மிகவும் ரசித்த விளம்பரங்கள் இவை.. நீங்களும் ரசித்திருப்பீர்கள்...பாருங்க..என்ஜாய் பண்ணுங்க..!

நிர்மா வாஷிங்  பவுடர் விளம்பரம்: 
இதன் கடைசியில் வரும் காட்சியில் ஒரு சின்ன பெண் சுற்றிக் கொண்டு வருவாள். அந்த கால கட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தது.

ரஸ்னா விளம்பரம்:

ரஸ்னா பேபி அவ்வளவு அழகு..மழலைப் பேச்சும் அழகு.


 

லிரில் சோப்  விளம்பரம்:

ப்ரீத்தி ஜிந்தாவின் முதல் விளம்பரம் இது. மிகவும் ரசித்தேன்.
 


காம்ப்ளான் விளம்பரம். இதுவும் எனது ஃபேவரைட்.
 

கோல்ட் ஸ்பாட் விளம்பரம். கொஞ்சம்தான் பிடித்தது.உட்வார்ட்ஸ் விளம்பரம். அனைத்து மக்களின் அபிமானத்தை பெற்ற
விளம்பரம்.டைட்டன்  விளம்பரம். நான் மிகவும் ரசித்த மியூசிக் இது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்தது.
ஜான்சன் விளம்பரம்.குழந்தை அவ்வளவு அழகு.

லியோ காபி விளம்பரம். இதுவும் எனக்குப் பிடித்த ஒன்று.
********************************************

Friday, July 29, 2011

மற்றவை - புத்தரின் வாசகம்

           * புத்தரின் வாசகம் *
 
சென்ற வருடம் ஊரெங்கும் சுவாமி நித்யானந்தாவின் லீலைகளைப் தமிழகமும், அண்டை மாநிலங்களும் கிழி கிழியென்று கிழித்தன. பல வகையில் நித்யானந்தாவின் செயலுக்கு கண்டனங்கள் வந்தன. ஜாமினில் வெளி வந்த நித்து, இப்போது அப்படி ஒரு தவறே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டு, அதை மறைக்கும் வகையில் சில சித்து பித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
 
 


இந்நிலையில் நக்கீரனில் தங்க பாண்டியன் என்பவர் இது போன்ற சாமியார்கள் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார். நான் எழுத நினைத்த விசயங்களை அவர் அந்தக் கட்டுரையிலேயே எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை உங்கள் பார்வைக்கு.

" நம்மவர்களுக்கு எதைக்கண்டாலும் ஒரு மயக்கம் தான். ஒரு நடிகர் நல்லவர் வேடத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராகவே இருப்பார் என்று மயக்கம் கொள்வது. ஒருவர் ஏதோ ஒரு துறையில் திறமையானவராக இருந்தால், அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நன்றாகத் தெரியும் என மயக்கம் கொள்வது, ஒரு கிரிக்கெட் வீரரை, நாட்டின் சகலப்பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய சூப்பர்மேன் போல பார்த்து மயங்குவது என மயக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சுவாமி நித்யானந்தா அதுபோல் மயக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். எழுத்தாளர்கள், நடிகர்கள், மெத்தப்படித்தவர்கள், அதிகாரிகள் என எல்லா சூப்பர்மேன்களும் சுவாமி நித்துவின் கால்களில் விழுந்துள்ளனர். அது மட்டுமா? கட்டுக்கட்டாக பணமும் செக்-புக்கில் கையெழுத்துப் போட்டும் கொடுத்துள்ளனர். பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன், கதைகளைப் பார்த்துக் கொண்டும் அது பற்றி பேசிக்கொண்டும் இருந்தவர்கள் தானே இவர்கள். பிறகேன் விழிப்படையவில்லை?

மயக்கங்கள் இரண்டு விதத்தில் பிடித்துக் கொள்கின்றன. ஒன்று ஆராயாமல் நம்புவது, மற்றொன்று தான் நம்புவதைத் தவிர மற்றது எல்லாம் தவறு என நினைப்பது, ஆகவே ஒவ்வொருவரும் தான் அனுபவப்படும் வரை சிந்திப்பதில்லை.

தங்களின் அறிவு, வயது பற்றிய எந்த நினைப்புமின்றி, நித்யானந்தா என்ற 30 வயது இளைஞனிடம் விழுந்து சரணாகதி அடைந்ததை எண்ணி யாரும் வெட்கப்படவில்லை. சுவாமி நித்யானந்தா ஆன்மீகப் புத்தகங்களை அதிகமாகப் படித்து அதை எளிமையாக கதை கதையாகச் சொல்வதில் தனித்திறமை பெற்றவர் அவ்வளவுதான். ஆனால் அவரை ஏதோ அவதாரமாகவும் சகலஜாலங்களும் செய்யக்கூடிய சக்திபடைத்தவர் என்றும் இன்னும் ஒருபடி மேலே போய் அவரைக் கடவுள் என்றே எண்ணினர்.

காவி, விபூதி, கொஞ்சம் மதத் தத்துவ தத்துப்பித்துகள் தெரிந்தால் போதும் ஆயிரக்கணக்கில் இளிச்சவாயர்கள் கிடைப்பார்கள் என்பது எல்லா ஆனந்தாக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதுதான் தனது செயலை நியாயப்படுத்தி நடிகையுடன் ஆத்மபரிசோதனை செய்ததாகச் சொல்லும் தைரியத்தை நித்யானந்தாவுக்குக் கொடுக்கிறது. ஆத்ம பரிசோதனை செய்ததை ஏன் வீடியோ வெளியான பின் சொல்கிறார். அதை அவரே சி.டி போட்டு பக்தர்களுக்கு காட்டவேண்டியது தானே. அந்த ஆத்மபரிசோதனையை படம் பிடித்து வெளியிட்ட சீடர் ஏன் இன்னும் தலைமறைவாக ஓடிக்கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் யாருக்கும் இன்னும் எழாது என நம்புகிறார் சுவாமி நித்து. அவரது சீட கோடிகளோ கோடிகளோடு வரிசையில் நிற்கின்றனர்.

சுவாமி நித்து, நடிகையை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் அவர் மனசாட்சிக்காவது அஞ்சுபவர் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாமியார் அடுத்தடுத்து சித்துவேலைகளில் இறங்குகிறார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் மனிதன் கூட இல்லை. பிறகெப்படி மாமனிதன் ஆவது? உண்மையச் சொன்னா அவர் ஒரு நித்திய ஃபிராடு.

அவர் மட்டுமில்லை அவரைப் போல் பலர் ஆடம்பரம், படோபடம், வெளிநாடுகளில் கணக்கிலடங்கா சொத்துக்கள், அடியாட்கள் சகிதம் வலம் வருவதை அருவருப்பாக நினைப்பதில்லை. நாம் தான் இவர்களிடம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறிகொடுத்துவிட்டு அசடு வழிந்து நிற்கிறோம்.
"
 யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும்..,

 நானே சொன்னாலும்..,

உனது புத்திக்கும் பொது அறிவுக்கும்

பொருந்தாத எதையும் நம்பாதே
” –  புத்தர்.

டிஸ்கி : ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் நிறைய படித்ததனால் எனக்கு ஆன்மீகத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. கல்லூரியில் படிக்கும் போது கொஞ்சம் அதன் மீது பற்றாகவும் இருந்தேன். அதனால் வாழ்வியல் சம்பந்தமான ஆன்மீக சொற்பொழிவு எங்கேனும் நடைபெற்றால் அங்கு சென்று, அதனைக் கேட்க முயற்சிப்பேன். அப்படித்தான் சென்ற வருடம், நித்யானந்தாவின் சொற்பொழிவு சென்னையில் பச்சையப்பா கல்லூரி திடலில் நடைபெற்ற போது நானும் சென்று சொற்பொழிவைக் கேட்டேன். இதற்கு முன் விஜய்  டிவியில் நித்யானந்தாவின் சொற்பொழிவைப் பார்த்திருக்கிறேன். ஆனந்தவிகடனில் வெளியான கதவை திற..காற்று வரட்டும் ஆன்மீகத் தொடரை தொடர்ச்சியாகப் படித்தும் வந்தேன். முதன்முதலில் நித்யானந்தாவின் சொற்பொழிவில் கலந்து கொண்டதும் அப்போதுதான். (அதுதான் முதலும், கடைசியும் கூட). சொற்பொழிவு எனக்குப் பிடித்துப் போனதன் விளைவாக அவரின் விளக்கத்தில் வெளியிட்ட அருணாச்சலேஸ்வரர் பற்றிய இரண்டு வீடியோ சி.டி.க்களையும் நான் வாங்கிக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து நடிகை ரஞ்சிதாவுடனான அவரின் நிகழ்வுகளை சன் தொலைக்காட்சியில் நான் பார்த்த போது கொஞ்சம் வெட்கித்தலைகுனிந்தேன் (சுவாமி நித்யாவின் இரண்டு சி.டி வேறு வாங்கித் தொலைத்துவிட்டேன்). அதற்கப்புறம் அந்த இரண்டையும் நான்காக உடைத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேன்(என்ன செய்வது. வீட்டில் ஒரே கிண்டல்). இப்போது கொஞ்சம் சுதாரித்து விட்டேன்.

மேற்கண்ட புத்தரின் வாசகங்களைத்தான் இப்போது ஒவ்வொரு முறையும் நான் நினைத்துக் கொள்கிறேன்.

நித்யானந்தாவின் லேட்டஸ்ட் பேட்டியை', நம் இளைஞர்கள் அழகாக எடிட்டிங் செய்து சிறப்பான காமெடி ஷோவாக மாற்றியிருக்கிறார்கள். ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்கு இதை வெளியிட்டிருக்கிறேன். அட்டகாச காமெடி. நிச்சயம் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும்ங்க..!***********************************************

Thursday, July 28, 2011

மற்றவை - முத்துக்கள் மூன்று

ஜெர்மனியில் வசிக்கும் சந்திரகெளரி(http://kowsy2010.blogspot.com) முத்தான மூன்று விசயங்களை எழுதும் தொடர் பதிவு என்னை எழுத அழைத்திருக்கிறார். அவர் விடுத்த அழைப்பினை ஏற்று இந்த தொடர் பதிவை எழுதுகிறேன். வலைப்பதிவு உலகத்தில் இந்த மாதிரியான தொடர் பதிவு விசயங்கள் ஆச்சர்யமாக உள்ளது. இது மாதிரியான தொடர்பதிவு , வலைப்பூ நட்புகளைப் பலப்படுத்தும் பாலங்கள்  என்று நினைக்கிறேன்.

முத்துக்கள் மூன்று:

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

1. நட்பு
2. புத்தகங்கள் படிப்பது.
3. நல்ல சினிமா

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

1. குடிப்பழக்கம், புகைபிடித்தல்
2. மிகவும் சத்தமான இடம்
3. ஏமாற்றுதல்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

1. ஏமாற்றுவதற்கு பயம் அதிகம். ஏன்னா முற்பகல் செயின் பிற்பகல் விளையும்.
2. உடல்நலக்குறைவு.(மருத்துவ மனைக்கு போகாமல் இருக்க முடியாதே அதனால் )
3. அதிகப்படியான ஆடம்பர செலவு(ஆடாத ஆட்டமெல்லாம்..)

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

1. பெண்ணின் மனது
2. ஷேர் மார்க்கெட்
3. நல்ல மனிதர்கள் வாழ்க்கையின் வறுமை

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1. என்னுடைய செல்போன்.
2. நோட்பேட்
3. கம்யூட்டர் அல்லது லேப்டாப்

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

1. குழந்தைகளின் மழலை பேச்சை கேட்டால் மனம் விட்டு சிரிப்பேன்.
2. தொலைக்காட்சியில் வரும் நகைசுவை காட்சிகள்.
3. அரசியல் நிலவரம். குறிப்பாக நாட்டிற்கு நல்லது செய்வதாக சொல்லும் அவர்களது பேட்டிகள்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு  இருக்கும் மூன்று காரியங்கள்?

1. கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு பதிலை பல புத்தகங்களில் தேடிக் கொண்டிருக்கிறேன். எனது கட்டுரையை முடிக்க வேண்டுமே?
2. ஒரு குறும் படம் எடுப்பது பற்றி யோசித்து வருகிறேன்.
3. பல்வேறு டெக்னாலஜியின் புதுமைகளை பற்றி படித்து வருகிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

1. ஒரு நாவல் எழுத வேண்டும்.
2. உலக நாடுகளுக்கு சுற்று பயணம். பயணக் கட்டுரை எழுத ஆசை.
3. கடமைகளை முடித்துவிட்டு ஆன்மீகத் தேடல்.என்னதான் இருக்குன்னு பார்ப்போமே..!

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?

    மேலே குறிப்பிட்டுள்ள மூன்றும்..

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

 1. மிக சத்தமாக வைக்கப்படும் தொலைக்காட்சி (அ) வானொலி (அ) டேப் ரிக்கார்டர்.
 2. தம்பட்டம் அடித்துக் கொள்வது
 3. வம்பு பேசுவது

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

 1. Time Management
 2. French அல்லது Spanish
 3. மரபுக் கவிதைகளின் இலக்கணத்தை

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

 1. மீன் வறுவல்
 2. பிரியாணி
 3. சிக்கன் 65 (அ) காஷ்மீரி நான்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

 1. “விழிகளில் ஒரு வானவில்” என தொடங்கும் தெய்வத் திருமகள் பாடல்
 2. " கடவுள் தந்த அழகிய வாழ்வு " என்ற மாயாவி பட பாடல்.
 3. " அன்பென்ற மழையிலே " என்ற மின்சாரக் கனவு பட பாடல்.

14) பிடித்த மூன்று படங்கள்?

  1. ஆங்கிலம்--Persuit of Happiness
  2. ஹிந்தி ---   ரங் தே பஸந்தி.
  3. தமிழ்--- நிறைய இருக்கிறது,எழுதுவதற்க்கு இடம் போதாது. latest தெய்வத் திருமகள்

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

  1. பணம்
  2. புத்தகங்கள் படிப்பது
  3. சந்தோஷம்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

 1. ஜீ - http://umajee.blogspot.com (வானம் தாண்டிய சிறகுகள்..)

 2. சத்ரியன் - http://manavili.blogspot.com (மனவிழி)

 3. கயல்விழி - http://kayalvizhi-enkavithaigal.blogspot.com (என் க"விதை"கள்)


உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பாருங்க:

Ticket Restaurant Coupon வைத்திருப்பவரா நீங்கள்? இந்த மாத கூப்பன் வைத்திருக்கிறீர்களா? அதில் ஒரு ஆச்சர்யமான விசயம் உள்ளது. அதன் முன் பகுதியை பாருங்கள். அதில் "Celebrating 1 year of Edenred and 50 years of Leadership" என்ற வாசகம் எழுதியிருக்கும். அதன் பின்பகுதியைப் பார்த்தால்
கீழே உள்ள படத்தைப் போன்று இருக்கும்.

Ticket Restaurant Gift voucher:


Ticket Restaurant Meal voucher:

கட்டத்திற்குள் இருக்கும் அந்த 8 digits நம்பரை கீழே தரப்பட்டுள்ள வெப் சைட்டிற்குள் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள My E Day code என்ற Text Box-ல்
டைப் செய்து உங்களது மற்ற விவரங்களையும் டெப் செய்து submit பண்ணுங்கள். சில நொடிகளில் உங்களது அதிர்ஷ்டம் தெரிந்து விடும். மிக்சி, ஃபிலிப்ஸ் ஹோம் தியேட்டர், பென் டிரை இன்னமும் சில கிப்ட் தருகிறார்கள். எனது நண்பர் செந்தில்-க்கு பென் டிரைவ் கிடைத்திருக்கிறது. நானும் ஃபார்ம் சப்மிட் செய்தேன். ஆனால் எனக்கு அதிர்ஷ்டமில்லை. மறக்காமல் இதனை முயற்சி செய்து பாருங்கள். ஒரு வேளை அதிர்ஷ்டமிருப்பின் ஹோம் தியேட்டர் கூட உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அரிய வாய்ப்பு ஜூலை 31,2011 வரை மட்டுமே.

*************************************************

Wednesday, July 27, 2011

தெரிஞ்சுக்கோங்க - மனதைத் தொட்டவர்கள்


லவசம் என்றாலே கொஞ்சம் சிரிப்புடன் "அப்டியா..! என்ன? எது இலவசமா தர்றாங்க.? எங்க தர்றாங்க?" என்று அடுத்தடுத்த கேள்வி கேட்கின்ற இந்த காலத்தில், பி. விஷ்வநாதன் (B. Viswanathan, Founder of Azhaki.com,tamil editing software) என்பவர் எழுதிய ஒரு அனுபவக் கட்டுரையைப் படித்ததும் ஆச்சர்யப்பட்டேன்.

கீழே வரும் கட்டுரை அவரைப் பற்றியதுதான்.

நேற்றைய பதிவில் ஒரு கட்டுரையை வெளியிட்டு, அந்தக் கட்டுரையை எழுதியவரை இன்று சொல்வதாக எழுதியிருந்தேன். அதற்கும் பதில் இதுதான்.

ஆங்கிலத்தில் எழுதிய அவரின் கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறேன். படியுங்கள்.

நவம்பர் 2007, 13ந் தேதியன்று, இரவு 10 மணியளவில் எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. ஒரு இனிய மென்மையான குரல் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான Azhaki என்னும் தமிழ் மென்பொருளின்(Software) பெய்டு வெர்ஷனைப் (Paid version ) பற்றிய விவரங்களைக் கேட்டது. நானும் கட்டண விவரங்களை எடுத்துச் சொன்னேன். அப்போதைய கால கட்டத்தில் அழகி தமிழ் சாப்ட்வேரை ஃப்ரிவேராகவும்(Freeware) , பெய்டு வெர்ஷனாகவும் வெளியிட்டிருந்தோம். இப்போது முழுவதும் ஃப்ரீவேர்தான்.

அப்புறம் அவரிடம் பேமெண்ட் மோட்(Payment modes) கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங்க், கேஷ், காசோலை பற்றிய விவரங்களைச் சொன்னேன். அவர் கேஷாக தருவதாகச் சொன்னார். சரி, எனது ஆபிஸுக்கு வந்து பணம் செலுத்தி பின் சாப்ட்வேரை வாங்கிச் செல்லுங்கள். "எப்பொழுது வருகிறீர்கள்", என்று கேட்டேன். அதற்கு அவர் "என்னால் வர இயலாது, கொஞ்சம் பிஸி", என்றார்.

  " சரி  உங்கள் நண்பர்களை அனுப்பி பணம் கட்டச் சொல்லுங்கள்" என்றேன் நான். அதற்கு அவர் "நான் இருக்கும் இடம் ரெட் ஹில்ஸ், இங்கிருந்து உங்கள் அலுவலகம்(டி.நகர்) ரொம்ப தொலைவு. மேலும் அவ்வளவு தூரம் சென்று வர எனக்கு நண்பர்கள் இல்லை", என்றார்.

பின்னர் நான் "நல்லது. நேரமிருக்கும் போது, நீங்களே நேரில் வாங்க" என்று பதிலளித்தேன்.

அதற்கும் அவர் "என்னால் வர முடியாது, உடம்பு பிரச்சனை" என்று தன்னைப் பற்றின விவரங்களை எடுத்துரைத்தார்.

தான் பாரலஸிஸ் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அதனால் உடம்பில் நெஞ்சுக்கு கீழே உள்ள பகுதிகள் மரத்துப் போய் செயலிழந்துவிட்டதாகவும் கூறினார்.
 
அவரின் முழுவிவரத்தையும் கேட்ட பின்னர் என் இதயம் கனத்தது. சில விநாடிகளில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "உங்களுக்கு இந்த சாப்ட்வேரை நான் இலவசமாகத் தருகிறேன்", என்றேன். அதற்கு அவர் "இலவசமாகத் தருவதாக இருந்தால் எனக்கு வேண்டாம்.பணம் செலுத்தி நான் வாங்கிக் கொள்கிறேன்." என்று பதில் சொன்னார்.
 
அவரின் பதிலைக் கேட்டு, நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். உடம்பில் எந்தக் குறையும் இல்லாத மனிதர்கள் எல்லாம் என்னிடம் பார்கெய்ன்(Bargain) செய்து ஒரு பொருளை விலைக்கு வாங்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதனா? அவரைப் பற்றி மேலும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும், அவருடன் நட்பு கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமானது. அன்று முதல் அவருடன் நான் பழக ஆரம்பித்தேன்."

மேற்கண்ட கட்டுரையை அவர் தனது இணைய தளத்தில் எழுதியிருந்தார். அவரை இன்ஸ்பயர்(Inspire) செய்தவர் வெறும் 5ம் வகுப்பு படித்தவர்தான். ஆனால் எல்லா துறையைப் பற்றி விரிவாக விவாதிப்பார். குறிப்பாக மிகவும் கஷ்டமான துறையான "குவாண்டம் ஃபிசிக்ஸ்" (Quantum Physics) பற்றிகூட நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். அவர்தான் அந்தோனி முத்து என்பவர், செல்லமாக +Ve அந்தோனி என்று நண்பர்களால் அழைக்கப் படுபவர்.. ஒரே ஒரு இடது கையை வைத்துக் கொண்டு(இடது கை மட்டும் செயலிழக்கவில்லை) அவரே  வலைதளம் (Blogg) ஆரம்பித்து அனைவருக்கும் தன் எண்ணங்களையும் கதைகளையும் சொல்லி, தன்னம்பிக்கையை வளர்ப்பவர்.  நேற்று எழுதியக் கட்டுரை கூட அவர் எழுதியதுதான்.


அவரின் வலைதளம் பார்க்க இந்த லிங்கை க்ளிக்கவும்.

http://mindpower1983.blogspot.com/

http://positiveanthonytamil.blogspot.com/

அவரைப் பற்றிய விவரங்கள்

வீடியோ:
டிஸ்கி : 2010, ஆகஸ்டு மாதம் 23ந் தேதி அவரை இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டார். மிகவும் சிரமப்படுவர்களை இறைவன் ரொம்பவும் கஷ்டப்படுத்துவதில்லை  என்று எனக்கு எண்ணத் தோன்றியது.
.

*********************************************************Tuesday, July 26, 2011

மற்றவை - Misunderstanding

                  * Misunderstanding *

ஒரு ஆச்சர்யமான விசயத்தை பதிவில் எழுதப்போகிறேன். அதற்கு முன், இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். முடிந்தால் இந்தக் கட்டுரை யார் எழுதினது என்ற  விடையைச் சொல்லவும். உங்களுக்குத் தெரியவில்லையெனில் அதற்கான விடையை நாளைய பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் நாளைய பதிவைப் படித்து ஆச்சர்யப்படுவீர்கள். 
இது அவர் எழுதிய கட்டுரை...


 " சமீபத்தில் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. எனவே.........


உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன.

பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன.

பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!
"

கட்டுரையைப் படிச்சிட்டீங்களா? கட்டுரையை நல்லா எழுதியிருக்காரா? எழுதியவரைப் பற்றிய சில விசயங்களை நாளைய பதிவில் பாருங்க.. கோவிச்சுக்காம வெயிட் பண்ணுங்க..!

********************************************************

Saturday, July 23, 2011

தெரிஞ்சுக்கோங்க : எந்திர பறவை-Smart Bird

         * எந்திர பறவை-Smart Bird *

னிதனின் சிந்தனைக்கு எல்லையே இல்லை. இரண்டு கற்கள் மோதிக் கொண்ட போது அவனுக்குள் விளைந்த சிந்தனைதான் நெருப்பைக் கண்டுபிடிக்கச் செய்தது. அதற்கப்புறம் எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள் இதுவரை நிகழ்ந்திருக்கிறது. ரோபோடிக்ஸ்(Robotics) துறையில் நிகழும் கண்டுபிடிப்புகள் கூட மனிதனின் விஞ்ஞான அறிவுப் புலமையை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. இயற்கையான விசயங்களைக்கூட  தங்களின் சிந்தனையாலும், அறிவுப்புலமையாலும் எந்திர வடிவில் கொண்டுவருகின்றனர். தற்போது கூட ஒரு ஆச்சர்யப்படக்கூடிய சிறப்பானதொரு கண்டுபிடிப்பை ஃபெஸ்டோ (festo) என்னும் ஒரு ஆட்டோமேஷன்(Automation) சார்ந்த கார்ப்பரேட் நிறுவனம்(ஜெர்மனி) நிகழ்த்தியிருக்கிறது.மார்கஸ் ஃபிஸ்சர்(Markus Fischer) என்பவர் தலைமையில் கடல் பகுதிகளில் வாழும் சீகல்(seagull) பறவையை மாதிரியாகக் கொண்டு ஒரு எந்திர பறவையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் எடை வெறும் 450 கிராம்தான். கார்பன் ஃபைபரைக் பயன்படுத்தி அதன் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர். 
வடிவமைப்பில் எந்திர பறவைப் போலத் தோன்றினாலும் அது பறக்கும் போது, நிஜப் பறவை கூட சந்தேகப்படும் "இது நம் இனம்தானா?" என்று. அந்த அளவிற்கு அச்சு அசல் சீகல் பறவைப் போலவே பறக்கிறது அந்த எந்திரப் பறவை. அதன் பெயர்  "ஸ்மார்ட் பேர்ட்(Smart Bird)".

முந்தைய அரசர் காலத்தில் செய்திகளைச் கொண்டு செல்ல புறாவை தூதுவனாக பயன்படுத்தினார்கள். இனி எதிர்காலத்தில் இந்த எந்திரப் பறவையும் அப்படி மாறுமா? ஆனால் நிச்சயம் உளவு சம்பந்தமான விசயங்களுக்கு இது பயன்படும்.

எந்திரப் பறவையைப் பற்றிய விளக்கமான வீடியோவைப் கீழே பாருங்கள். அறிவியலறிஞர்கள் மத்தியில் எவ்வளவு அழகாகப் பறக்கிறது. பார்த்துவிட்டு நான் ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.


 
மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தைப் பாருங்கள்.

http://www.festo.com


**************************************************

மற்றவை - நிகழ்வுகள்

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பதிவுகள் எழுத முடியவில்லை. இப்போது ஓ.கே. இனி பதிவுகள் தினமும் எழுதப்படும். எனது உடல் நிலையை விசாரித்த அனைத்து இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி...!

சமீபத்தில் நிகழ்ந்து வரும்  பரபரப்பான விசயங்கள் இவைதான்..

தமிழகத்தில் குழந்தைகள் மாயம்:
Eg. படங்கள்

மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 250க்கும் மேற்பட்டோர் மாயமாவதாக காவல் துறைக்கு தகவல்கள் வந்திருக்கிறது. குழந்தைகளைக் கடத்துபர்களுக்கு அனாதை ஆசிரமங்கள் தான் முதல் குறியாக உள்ளது. அப்புறம் அரசு மருத்துவமனைகள். அதற்கப்புறம் தெருக்களில் விளையாடும் குழந்தைகள். சென்னை, மதுரை, பாண்டிச்சேரி போன்ற மாவட்டங்களில் குழந்தை கடத்தல் அதிகமாக நடைபெறுவதாக காவல்துறையினர் சொல்கின்றனர்.
 

சிறுவர்களை கடத்தி வெளிமாநிலத்தின் கம்பெனிகளுக்கு கொத்தடிமைகளாக அனுப்பப்படுவது அதிகரித்துள்ளதாம். அதனால் புரோக்கர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் வரை கமிஷன் கிடைக்கிறது என்ற விவரம் கிடைத்துள்ளது.
எனவே பெற்றோர்களே இந்த விசயத்தில் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருங்கள்.
மேலும் போலி காப்பக அமைப்புகளை உருவாக்கியும் நூதன முறையில் குழந்தைக்கடத்தல்  நடைபெறுகிறது. சமீபத்தில் மெரினா பீச்சில், கூட்டம் அதிகமாகக் காணப்படும் மாலை நேரத்தில் ஒரு சிறுமி காணாமல் போய், பிறகு போலிசார் மீட்ட சம்பவம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? பெண்களுக்கும் இந்தக் கடத்தலில் பங்கு இருக்கிறது. எனவே பயணம் செய்யும் போது, முன் பின் அறிமுகமில்லாத பெண்களிடம் உங்கள் குழந்தைகளை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

IRCTC இணையதளம்  ஹேக்(Hack) செய்யப்பட்டு விட்டது:

த்தனை நாளாக காலை 8 மணிக்கு கூட IRCTC-ல் தட்கல் டிக்கெட் புக் பண்ண இயலாமல் போனதன் காரணம் சமீபத்தில்தான் கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் IRCTC வெப் சைட்டை ஒரு சாப்ட்வேர் மூலம் ஹேக்(Hack) செய்து அதன் சர்வீசை மற்றவர்கள் பெறுவதை சில நேரங்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பின் அனைத்து இ-டிக்கெட்டுகளையும் புக் பண்ணி, வேலை முடிந்த பிறகுதான் மற்றவர்களுக்கு இணையதளத்தை ஆக்செஸ்(access) பண்ண வழி செய்திருக்கிறார்கள். அப்படி புக் பண்ணிய அந்த டிக்கெட்  ஒவ்வொன்றையும் அதிக விலைக்கு விற்று நூதன முறையில் பணம் சம்பாதித்த சப்-ஏஜண்ட் சூரஜ் ஹரிபிரசாத் யாதவ் என்பவனை அவனது லாப்டாப் மற்றும் மொபைல்போன் உடன் கையும் களவுமாக பிடித்திருக்கின்றனர்.

ஒருவேளை Internet Banking மூலம் பணம் Transaction செய்வதையும் ஹேக் செய்வாங்களோ? பயமாகத்தான் இருக்கிறது.

எண்ணைய் சப்ளைக்கு ஆப்பு- ஈரான் எச்சரிக்கை:

 
ரான் நாட்டில் இருந்து அதிக கச்சா எண்ணைய் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது. ஒவ்வொரு மாதமும் ஈரானில் இருந்து 1 கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணைய் இந்தியா பெறுகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா எண்ணைய் தேவையில் 12 சதவீதத்தை ஈரான்தான் பூர்த்தி செய்கிறது.

இந்த கச்சா எண்ணைய்க்காக ஈரானுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய கடன் 5 பில்லியன் டாலர் ( ரூ.22,500 கோடி ). இந்தக் கடனை அடைக்காமல் இழுத்தடிப்பதால் கடுப்பான ஈரான், இனி இந்தியாவுக்கு எண்ணெய் கிடையாது என அறிவித்துள்ளது.


 
ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தத் தொகை வந்தாகவேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆகஸ்டிலிருந்து எண்ணெய் சப்ளை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

பெட்ரோலின் உண்மையான விலையைக் காட்டிலும் அதன் மீது அரசு விதித்துள்ள வரி இரண்டு மடங்கு அதிகம். அந்த வரியையும் மக்களாகிய நாம்தான் கொடுத்து வருகிறோம். இதனைப் பற்றி விளக்கமாக பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் பெட்ரோல் - சில தகவல்கள்
அந்த வரியோடு கூடிய ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் நாம் கொடுக்கும் அனைத்துப் பணமும் எங்குதான் போகிறது? ஒரு வேளை ஈரான் எண்ணெய் சப்ளை நிறுத்தினால், அதை காரணம் காட்டியும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் ஆகஸ்ட் மாதம் என்ன நடக்கிறதென்று?

ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி; கலைஞர் குடும்பத்திற்குள் பூசல் ஆரம்பம்:

 
சிறையில் இருக்கும் கனிமொழியைச் சந்தித்த அழகிரி அவருக்கு ஆறுதல் சொன்ன போது, சட்டப் பிரிவு 164-ன் கீழ், 2G-பணம் கலைஞர் டி.விக்கு கைமாறிய விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு என்று வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி வலியுறித்தியுள்ளார். இந்த விசயம் ஸ்டாலின் காதுக்கு எட்டியதும் தந்தை கலைஞரிடம் அழகிரியின் செயலை கோபத்தோடு முறையிற்றிருக்கிறார். "என்னை உள்ளே அனுப்பி விட்டு, கட்சியைக் கைப்பற்ற மூத்த பிள்ளை திட்டமிடுகிறாரோ?" என்று கலைஞரிடமும், தயாளு அம்மாளிடமும் சொல்லியிருக்கிறார். 2G-பணம் கலைஞர் டி.விக்கு கைமாறிய விவகாரத்தில் பாவ்லாவை 2 முறை சந்தித்து, பரிவர்த்தனை மேற்கொண்டது ஸ்டாலின்தான். அதனால்தான் அவர் பயப்படுகிறார்.

என்னைப் பொறுத்தவரை நிர்வாகத்திறமையில் சிறப்பாக பணியாற்றும் வல்லமை அனுபவசாலியான ஸ்டாலினுக்குத் தான் உண்டு என்று நினைக்கிறேன். அழகிரிக்கு நிர்வாக விசயத்தில் அனுபவம் ரொம்ப ரொம்பக் கம்மி.

எது எப்படியோ, அளவின்றி ஆட்டம் போட்ட கலைஞர் குடும்பத்தில் இப்போது பூசல் ஆரம்பமாகியிருக்கிறது. அமைதியாக நாட்களைக் கழிக்கும் வயதில்,  நாற்காலி ஆசையால் கிடைத்த வெகுமதிகளை கலைஞர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.


********************************************************

Tuesday, July 19, 2011

தெரிஞ்சுக்கோங்க - பப்பாளியின் பயன்கள்

           * பப்பாளியின் பயன்கள் *

 
ப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பப்பாளி தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புச் சத்து குறைகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.


சில பெண்களின் முகம் கரடு முரடாகத் தெரியும். இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு. பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள் இந்தக் கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

பப்பாளி குடல் புழுக்களுக்குண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வாய்வு, நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை  கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து. விலை மதிப்பு ஆப்பிளைக் காட்டிலும் பப்பாளியில் அதிக அளவிலான வைட்டமின் இருக்கிறது.

 இதிலுள்ள மருத்துவ குணங்களைக் காண்போமானால், மேலும் வியப்பும் உண்டாகும்.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூல நோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை(டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்று நோய் மற்றும் தோல் நோய்களை இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது.

பப்பாளி பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைஸ் சிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்று நோய் சிகிச்சையின் போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோயகளுக்கும் கூட உதவும்.

பப்பாளியின் பயன்களை மனதில் பதிய வைத்துக் கொள்ள சுருக்கமாக;

பல் சம்பந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும்,  ஆண்மைத் தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபகச் சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப் பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணையா புரியும் பப்பாளிப் பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும் அது அவர்களைத் தாக்காது.

பப்பாளிப் பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளிப் பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய்க் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.


***************************************************

Monday, July 18, 2011

தெரிஞ்சுக்கோங்க - அணிகலன்


ரு கட்டுரையை எழுத நினைத்தேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நேற்றும், இன்றும் என்னால் பதிவு எழுத முடியவில்லை. மன்னிக்கவும். அதனால் நான் இணையத்தில் படிச்ச ஒரு விசயத்த இன்னிக்கு வெளியிட்டிருக்கிறேன். அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய விசயம்தான்.

அரைநாண் கொடி அணிவது ஏன்?

உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்கொடி உதவுகிறது.
 
மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது

மெட்டி அணிவது ஏன்?

 

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்.

கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு அணிவது ஏன்?


கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம். பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. சில விவாகரமான விஷயங்கள் "இலை மறை கனியாக" இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.

மூக்குத்தி அணிவது ஏன்?

 


மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
 
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
 
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
 
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

மோதிரம் அணிவது ஏன்?

 


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதயநோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

நன்றி - ஆன்மிகம், Sasithara Sarma (Swiss)
 

********************************************************

Sunday, July 17, 2011

எ.பி.க - 9

Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers. 


ன்னை மிகவும் யோசிக்க வைத்த கவிதை இது. சதை ஒன்றுதான். நிறம் தான் வேறு, கருப்பாகவும்; சிவப்பாகவும் இருக்கிறது. கருப்பும், சிவப்பும் இரண்டுமென இந்த உலகத்தில் உலவும் போது, இந்த மானிடம் சிவப்பான சதையை மட்டும் ஏன் தேடிப் போகிறது. கருத்த சதையைக் கண்டாலே ஏன் புறந்தள்ளுகிறது. உளவியலுக்கும் இதில் ஏதேனும் சம்பந்தம் உண்டா?. பதில் இன்னமும் தெரியவில்லை. ஒரு கருத்த சதை கொண்ட பெண்ணின் உணர்வுகள் இந்தக் கவிதையில் ஆதங்கமாக வெளிப்படுகிறது. கவிதை எழுதியவருக்கு என் வணக்கங்கள்! பாராட்டுக்கள்!


* கருத்த பெண் *


 
வெளுத்ததோல் போர்த்திய
பெண்மைகளை துரத்தி துரத்தி
உனக்கு வசியமாக்குகிறாய்...

கூந்தலின் நிறம் போர்த்திய
பாவப் பெண்மைகளை
ஓரப்பார்வை காட்டவும்
தயங்கி நிற்கிறாய்...

காதலியை தேர்ந்தேடுப்பதிலும்
மனைவியை அமைத்துக்கொள்வதிலும்
கருமையை புறம் தள்ளுகிறாய்...

உன்னை பெற்றதாயும்
நீ பெற்ற மகளும்
எம்நிறம்மென்றால் என்செய்வாய்?

பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்று தன்மைவேறு
ஆழ்நிலத்தில் புதைந்திருக்கும்
கருத்த கல்லில் தான்
வைரம் ஒழிந்திருக்கும்...

வெண்மை உடலுக்குள்
உணர்வையும் உணர்ச்சியையும்
தேடி அலைகிறாய்...

அவைகள் எமக்குள்ளும்
இருப்பதை மறந்துவிடுகிறாய்..
என்னவனே ...
பெண்மையின்
குணங்களை நேசி.,
வண்ணங்களை அல்ல.


நன்றி - செய்தாலி கிறுக்கல்.

*********************************************************

Friday, July 15, 2011

மற்றவை - விமர்சனம்

* விமர்சனம் - தெய்வத் திருமகள்  *

 

கிருஷ்ணா(விக்ரம்) உருவத்தில் சராசரி மனிதனாகவும், மன நிலையில் ஆறு வயதுடைய குழந்தையாகவும் இருப்பவர். ஊட்டியில் " அவலாஞ்சி  " என்னும் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு மன நிலை காப்பகத்தில் வாழ்ந்து வருகிறார். சாக்லேட் தயாரிக்கும் வேலையை செய்து கொண்டிருப்பவர். அவரை கோடீஷ்வர பெண் ஒருவர் காதலித்து , அப்பாவின் சம்மதம் கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியேறி , திருமணம் செய்து கொள்கிறார். பிரசவத்தின் போது கிருஷ்ணாவின் மனைவி , ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டு இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை மிகவும் அக்கறையுடனும், அளவுக்கதிகமான பாசத்துடனும் அந்த காப்பகத்தில் வளர்த்து வருகிறார். அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கு கிருஷ்ணாவுடன் வேலை செய்யும் மூர்த்தியின்(எம்.எஸ்.பாஸ்கர்) மனைவி ராஜி உதவி செய்கிறார். இருவரின் உறவையும் சந்தேகத்தோடு பார்க்கும் மூர்த்திக்கு இதனால் கிருஷ்ணாவின் மேல் கோபம் வருகிறது.

குழந்தை நிலா(சாரா) வளர்ந்து 5 வயது ஆனதும் பள்ளியில் சேர்ந்து படிக்கிறாள். இந்நிலையில் நிலாவிற்கு அந்தப் பள்ளியின் கரெஸ்பாண்டென்ட் ஸ்வேதா(அமலா பால்) படிப்பதற்கு உதவி செய்கிறார். இருவரின் நட்பும் தொடர்கிறது.

ஒரு சமயத்தில் நிலா தனது அக்காவின் குழந்தைதான் என்பது ஸ்வேதாவிற்கு தெரிய வருகிறது. அக்கா இறந்து போனதும் தெரிய வருகிறது. அப்போது மூர்த்தி ஸ்வேதாவிடம் கிருஷ்ணா குழந்தையை வளர்க்கத் தெரியாமல், கொடுமை படுத்துவதாக சொல்லி விடுகிறார். அதனால் ஸ்வேதா நிலாவை, தனது அப்பாவின் உதவியுடன் கிருஷ்ணாவிடமிருந்து பிரித்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார்.நிலாவைப் பிரிந்து கிருஷ்ணா வருந்துகிறார். நிலா அப்பாவை பார்க்க வேண்டுமென்று ஸ்வேதாவை வற்புறுத்துகிறாள். இருவரும் ஒருவரையொருவர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சமயத்தில், வக்கீல்களான அனு(அனுஷ்கா ஷெட்டி)-வும், அவரது நண்பர் சந்தானமும் வாதாடுவதற்கு ஒரு கேஸ் கூட இல்லாமல், எதாவது ஒரு கேஸ் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணா அவர்களை நாடி, நிலாவைப் மீட்டுத் தர வேண்டுகிறார். கிருஷ்ணாவின் மன நிலை சரியில்லாத இயல்பை பற்றி அறிந்ததும், அனுவும் சந்தானமும் அவரை விட்டு விலக முயற்சிக்கின்றனர். பின்பு கிருஷ்ணாவின் முழுக்கதையும் இருவருக்கும் தெரியவருகிறது.

அனு கிருஷ்ணாவிற்கு, நிலாவை மீட்டுத் தருவதாக உறுதி கூறி அவரை தன் வீட்டில் தங்க வைத்துக் கொள்கிறார். நிலாவை அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஸ்வேதாவின் தந்தை மீது அனு கேஸ் போடுகிறார். தொழிலதிபரான ஸ்வேதாவின் தந்தை அவரை எதிர்த்து வாதாட அனுபவமிக்க மிகப் பெரிய செல்வாக்கு பெற்ற வக்கீலான பாஷிர்(நாசர்)-ஐ அமர்த்துகிறார்.

 

நிலாவை கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கும் கேஸில் வெற்றி பெற, அனு, சந்தானம் மற்றும் அவர்களது நண்பர்கள் ஏகப்பட்ட தகிடுதத்தம் வேலைகளை செய்கின்றனர். இறுதியில் அனு தனது கேஸில் வெற்றி பெற்றாரா? கிருஷ்ணாவும் நிலாவும் இணைந்தார்களா? என்பதற்கான பதிலை வெண் திரையில் காண்க..!

விக்ரமின் நடிப்பு :
பாராட்ட வார்த்தைகளில்லை. மனிதர் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். கிருஷ்ணா என்ற கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். 6 வயதுடைய குழந்தையாகத்தான் திரையில் தெரிகிறார். குழந்தை தன்னை முதன் முதலில் அப்பா என்று அழைக்கும் போது அவர் படும் சந்தோசமாகட்டும், குழந்தையை பிரிந்து ஏங்குவதாகட்டும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவரது நடிப்பு எக்ஸெலன்ட்(excellent). கடைசி காட்சியில் அவருக்கும் ,  நிலாவிற்கும் இடையே நிகழும் அந்த உணர்ச்சிப் பூர்வமான காட்சியைக் கண்டு அழாதவர்கள் நிச்சயம் தியேட்டரில் இருக்க முடியாது. விக்ரமிற்கு நேசனல் அவார்ட் நிச்சயம் கிடைக்கும். மொத்தத்தில் இந்தப் படம் அவரது கேரியரில் ஒரு மைல்ஸ்டோன்(Milestone) .

சாராவின் நடிப்பு : நிலாவாக வரும் குழந்தை சாரா அம்சமாக நடித்திருக்கிறார். விக்ரமிற்கும் அவருக்கும் இடையே நிகழும் பாசப் பிணைப்பைக் கண்டு ரசிக்கலாம்.


அனுஷ்கா  : கிளாமர் ஹீரோயினாக வலம் வந்த அனுஷ்கா இந்தப் படத்தில் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். " விழிகளில் ஒரு வானவில் " பாடலில் அனுஷ்கா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார்.

அமலா பால் : அழகான குடும்ப பாங்கான முகம். மைனாவில் இயல்பான பெண்ணாக இருந்த இவர்,  இதில்  ஒவ்வொரு ஃப்ரேமிலும் சோ க்யூட். நடிப்பும் சிறப்பு.

சந்தானம் : இயல்பான காமெடியில் கலக்கி இருக்கிறார். படம் முழுவதும் வருகிறார். நெகிழ்வான நடிப்பிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

நாசர், அமலா பால் தந்தை, எம்.எஸ்.பாஸ்கர், அவரின் மனைவி ராஜி, அனுஷ்காவின் தோழி, அவரது காதலன் , அனுஷ்காவின் அப்பா ஒய்.ஜி.மகேந்திரன், விக்ரமின் கார்டியன் அனைவரின் நடிப்பும் அவ்வளவு யதார்த்தம்.


விஜய்  இயக்கம் :
மதராசப் பட்டிணம் என்ற ஒரு அழகான படத்தை கொடுத்த இயக்குனர் விஜய்-க்கு இந்தப் படம் மேலும் ஒரு வெற்றி மகுடம். நேர்த்தியான திரைக்கதையில் , யதார்த்தமான மற்றும் உணர்ச்சிப் பூர்வமான படத்தை தந்திருக்கிறார். படம் கொஞ்சம் நீளம்தான். அமைதியாக ஒவ்வொரு காட்சியும் செல்கிறது. ஆனாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவையோடு கொண்டு சென்று, இறுதியில் உணர்ச்சிப் பூர்வமாக முடித்திருக்கிறார். எனவே படம் நீளமென்றாலும் போரடிக்கவில்லை.

 ஒளிப்பதிவு : நீரவ்ஷாவின் ஓளிப்பதிவு படம் முழுவதும் அவ்வளவு தெளிவு. ஊட்டியில் வரும் காட்சிகள் அவ்வளவு குளிர்ச்சி. " விழிகளில் ஒரு வானவில் " பாடலை எடுத்த விதம் கவிதை.

 
இசை : ஜீ.வி.பிரகாஷ்-ன் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். BGM -ல் கலக்கி எடுத்திருக்கிறார். சில காட்சிகளில் BGM இல்லாமல் காட்சிகள் நகர்கின்றது. அதனைப் பார்க்கும் போது அவ்வளவு இதம். தேவைப்படும் காட்சிகளிலெல்லாம் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். விக்ரமிற்கும் , சாராவிற்கும் இடையே நிகழும் அந்த உணர்ச்சிப் பூர்வமான கடைசி காட்சியில் வரும் பிண்ணனி இசை கண்ணீரை வரவழைத்து விடும். ஹேட்ஸ் ஆப் பிரகாஷ்.

சந்தானத்தின் ஆர்ட் கன கச்சிதம் . கோர்ட் செட் ரியலான கோர்ட்டாகத் தெரிகிறது. ஆண்டனியின் எடிட்டிங் மிகவும் நேர்த்தி.


தெய்வத் திருமகள் - நகைச் சுவையாலும், உணர்ச்சிப்பூர்வமாலும் அனைவரையும் கவருவாள். Must watch.

டிஸ்கிஹாலிவுட்டில் வெளிவந்த I am Sam  என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்தப் படமும்.

**********************************************************