*தமிழக மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி*
மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் இன்று போட்ட உத்தரவு நிச்சயம் ஒவ்வொரு குடும்பஸ்தர்களின் வயிற்றில் பாலை வார்க்கும். அம்மாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். காரணம் தி.மு.க ஆட்சியில் செய்யாத விசயத்தை இப்போது செய்திருக்கிறார்.
இன்றைய நாளின் முக்கியமான செய்தி இது.
" காஸ் சிலிண்டர் விலையில் ரூ.15 குறைப்பு: "வாட்' வரியை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
" அண்மையில் டீஸல் லிட்டருக்கு ரூ 3-ம், கேஸ் சிலிண்டருக்கு ரூ 50ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ 2-ம் உயர்த்தப்பட்டது.
மத்திய அரசின் இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதித்துவிட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஜிவ்வென்று உயர்ந்தன. விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டன.
ஆனால் விலை உயர்வை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றும், மாநில அரசுகள் தங்கள் வரிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு நேற்று கடிதம் எழுதியது, அனைத்து மாநில அரசுகளுக்கும்.
இதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட 6 மாநில அரசுகள் வரிகளைக் குறைத்தன. டெல்லி அதிகபட்சமாக ரூ 40 வரை குறைத்தது சமையல் கேஸ் சிலிண்டருக்கு. "
" சமையல் காஸ் மீது, தமிழக அரசு விதிக்கும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை முற்றிலும் நீக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில், 14 ரூபாய், 73 காசு குறையும். இனி வருங்காலங்களிலும் சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். "
" தமிழகத்தில் தற்போது விற்கப்படும் ஒரு சிலிண்டர் காஸ் விலை, 404 ரூபாய், 40 பைசா என்ற அளவில் இருந்து, 389 ரூபாய், 67 பைசா என்ற அளவுக்கு குறையும். அதாவது, ஒரு சிலிண்டர் விலை, 14 ரூபாய், 73 காசு அளவுக்கு குறையும். இனி வருங்காலங்களிலும், சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது.சமீபத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட, 50 ரூபாய் விலை உயர்வுக்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி, மாநில அரசுக்கு, ஆண்டுக்கு, 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கனவே சமையல் காஸ் மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டுக்கு கிடைத்து வந்த, 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம், 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். "
*நடிகர் சங்க பாராட்டு விழா : முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுப்பு!
கலைஞரைப் போல் இது போன்ற பாராட்டு விழாக்களில் பங்கேற்பதை விட்டு மக்களுக்கு சேவை செய்தாலே போதும். நிச்சயம் அம்மாதான் நிரந்தர முதல்வர். பார்க்கலாம் என்னென்ன செய்வார் என்று.

*******************************************************************
8 comments:
மங்களகரமா
மிக அருமையான விஷயம்...அதே சமயம், நம் நாட்டு மக்களை வாட்டி எடுக்கும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதில், அக்கறை காட்டும் போக்கு தொடர்ந்தால், நம் முதல்வரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...
nice job keep it up.i am expecting lot from u
சந்தோஷமான பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி
மிக நல்ல விஷயம் அதையும் தாண்டி
நடிகர் சங்க பாராட்டுவிழாவில் கலந்து கொள்ள மறுத்ததும் நல்ல முன்மாதிரி
கலக்குது பாஸ்
மிக அருமையான விஷயம்...நம் நாட்டு மக்களை வாட்டி எடுக்கும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதில், அக்கறை காட்டும் போக்கு தொடர்ந்தால், நம் முதல்வரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...சந்தோஷமான பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...