Sunday, June 16, 2019

இந்தியாவின் சரித்திர களஞ்சியம்- ஒரு பார்வை

அக்பர்,  மராட்டிய சிவாஜி, திப்புசுல்தான், சேர, சோழன், பாண்டியன் என பல்வேறு மன்னர்களைப் பற்றி  நமது பள்ளி, கல்லூரிப்பருவத்தில் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் மட்டும் தான் படித்திருப்போம். அப்போதெல்லாம் அவர்களைப் பற்றி ஒரு வீரமுள்ள , மனிதநேயமுள்ள அரசர்களாக நாம் நினைத்திருப்போம்.

உண்மையில் அவர்களது வாழ்வியல் முறைகள், அரசாட்சி எப்படி இருந்தது என்பதை அறிய எனக்கு மிகுந்த ஆவல்.

அதற்கான சரியான தமிழ் புத்தகத்தை தேடும் போது திரு சிவனடி எழுதிய 8 அத்தியாயங்கள் அடங்கிய புத்தம் "இந்திய சரித்திர களஞ்சியம்" என் கண்ணில் பட்டது.  இந்தியாவின் சரித்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த புத்தகமே போதுமானது.


இந்த புத்தகத்தில் நிறைய சுவாரஸ்யங்களும், திகைப்பும், பயமும் வருமளவற்கு நமது இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசர்களின் ஆட்சிசெயல்பாடு இருந்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு அரசனைப் பற்றி,

அதில்:
பிரிட்டிஷ் அரசோடு நெருக்கமாக பழகி, அவர்களின் தயவில் ஏகபோக ஆட்சி நடத்திய, ராஜ பரம்பரைகளின் கடைசி வாழ்க்கை வினோதமானது. இதில், குறிப்பிடத்தக்கவர், ராஜஸ்தானின், ஆல்வார் பிரதேச அரசர், ஜெயசிங்.
ராஜஸ்தான் மாநில தலைநகரான, ஜெய்பூரிலிருந்து, வடமேற்கில், 63 கி.மீ., தொலைவில் உள்ளது, ஆல்வார். ராஜபுத்திர அரசான ஆல்வார், 1776ல் உருவானது. இது, இரும்பு மற்றும் செம்பு சுரங்கங்கள் அதிகம் உள்ள பகுதி.


புதிய அரசராக, 1903ல், தேர்வு செய்யப்பட்டார், ஜெயசிங்; ஆடம்பர பிரியர்; பக்திமான் போல, சிறந்த பேச்சாளர். ஆன்மிகமும் பேசுவார். அதேநேரம், முன்கோபக்காரரான இவரிடம், வேலைக்காரர்களை, புலிக்கு உணவாக துாக்கி போடும் குணமும் இருந்தது. 

பிரிட்டிஷ் அதிகாரிகளை கைக்குள் போட்டு, அவர்களுக்கு தேவையான உல்லாசங்களை செய்து தந்த காரணத்தால், இவர் மேல் எழுந்த எந்த குற்றச்சாட்டையும், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.யானைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆகவே, யானைக்கு தங்க முகப்பு அணிவித்து, சர்வ அலங்காரம் செய்து, அதில் ஏறி பவனி வருவார். 
அலங்காரமான உடை, சித்திர வேலைப்பாடுடைய சரிகை கோட்டு அணிவார். இளஞ்சிவப்பு ரோஜா மலர்களால் பின்னப்பட்டிருக்கும். அதற்கு பொருத்தமான தொப்பியும் போட்டு, வேட்டைக்கு செல்லும்போது, தங்க செருப்பு அணிவார். இவரிடம், 4,000 'கோட் சூட்'டுகள், 2,000 கைத்தடிகள், 1,300 ஜோடி செருப்புகள் இருந்தன.புலி வேட்டையில் ஆர்வம் மிகுந்தவர், ஜெயசிங். வேட்டைக்கு கிளம்பும்போது, உடன் செல்ல, 5,000 வீரர்கள் தயாராக இருப்பர். இவர், வேட்டைக்கு செல்வது, ஒரு கோலாகலமான விழா போல இருக்கும்.

மற்றவர்களை துன்புறுத்தி இன்பம் காண்பதில், ஆர்வம் கொண்டவர். அரண்மனையில் உள்ள புலி கூண்டுக்குள், சிறுவர்களை எறிந்து, அவர்களை, புலி துரத்தி துரத்தி கொல்வதை வேடிக்கை பார்க்கும் மனநிலை கொண்டவர்.


பசு மீது மட்டும், அதிக கருணை கொண்டவர். நுகத்தடியில் பெண்களை, மாடுகளை போல, ஏர் பூட்டி உழ செய்திருக்கிறார். வரி கொடுக்காதவர்களின் முதுகு தோலை உரிப்பது, அண்ணன், தங்கையை கட்டாய பாலுறவு கொள்ள செய்வது என்று, இவரது மன விகாரங்கள், விசித்திரமானவை.

இன்னொரு பக்கம், சமய நுால்களை ஆழ்ந்து படித்து, அதுபற்றி இனிக்க இனிக்க பேசுவார். 

ராஜஸ்தான் அரசர்களுக்கு, 'போலோ' விளையாட்டில் ஆர்வம் அதிகம். 'போலோ' விளையாட்டிற்கென ஐந்து குதிரைகளை வைத்திருந்தார். விளையாட்டு மைதானத்தில், பந்துகளை எடுத்து போட, பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்திருப்பார். விளையாட்டில் வெற்றி பெற்றால், விருந்து கொடுப்பார்.

மன்னர் அந்தஸ்து இல்லாத மற்றவர்களுடன் இணைந்து, ஒருபோதும் உணவு அருந்த மாட்டார். விருந்தில் மற்றவர்கள் சாப்பிட, இவர் வேடிக்கை பார்ப்பார். 

லண்டனில் உள்ள சூதாட்ட விடுதிகளுக்கு போகும்போது, தன்னுடன் ஓர் ஆமையை எடுத்து செல்வார். அது, அதிர்ஷ்டம் தரக்கூடியது என்ற நம்பிக்கை இருந்தது. ஆமையின் மேல், ரத்தினங்களும், முத்துகளும் உள்ள மேலுறை அணிவிக்கப்பட்டிருக்கும்.இவர், புகை பிடிக்கும், 'சிகரெட் ஹோல்டரில்' கூட, சிவப்பு மற்றும் நீல கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. சூதாட்டத்தில் தோற்று விட்டால், அன்று அணிந்திருந்த உடை மற்றும் நகைகள் அனைத்தையும், தீயில் போட்டு எரித்து விடுவார்.

ஒருமுறை, இவரின் எதிர்காலத்தை பற்றி அறிந்துகொள்ள, காசியிலிருந்து ஜோதிடரை வரவழைத்தார். ஆல்வார் வந்து சேர்ந்த ஜோதிடரை கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார். 10 நாட்கள் சிறையில் அடைபட்டிருந்த ஜோதிடர், ஜெயசிங்கின் காலில் விழுந்து, தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினார்.

'ஆல்வாருக்கு வந்தால், சிறையில் அடைக்கப்படுவோம் என, ஜோதிடனான நீ முன்கூட்டியே கணித்து, இங்கே வராமல் இருந்திருக்கலாமே, ஏன் வந்தாய்... உன் ஜோதிடம் வெறும் புரட்டுதானா...' என்று கூறி, அவரை அடித்து, துரத்தி விட்டார், ஜெயசிங்.

இதுபோலவே, ஒருமுறை, வைஸ்ராயின் மனைவி, ஒரு விருந்தில், இவர் அணிந்திருந்த வைர மோதிரத்தின் மீது ஆசை கொண்டார். அதை, அவர் அணிந்து பார்க்கும்படி தந்தார், ஜெயசிங். திரும்பி வாங்கும்போது, அதை தண்ணீரில் போடச் சொல்லி, பட்டு துணியால் துடைத்து, 'வெள்ளைக்கார பெண் அணிந்த காரணத்தால், வைரம் தீட்டு பட்டு விட்டது...' என்று, அவரை அவமானப்படுத்தி இருக்கிறார். 
பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவியரை, தனியே விருந்துக்கு அழைத்து, காதல் மொழி பேசி, அவர்களை தனதாக்கிக் கொள்வதும், ஜெயசிங்கின் வழக்கம். அதற்காக, விசேஷமான வைர நகைகள், மோதிரங்களை செய்து வைத்திருப்பார். அதே நேரம், அப்பெண்களை மிக கொடூரமான முறையில், சாட்டையால் அடித்து துன்புறுத்துவதும் நடந்திருக்கிறது.

இவர் மேல் புகார் கூறப்படும்போதெல்லாம், இங்கிலாந்து சென்று, இந்திய துறை அமைச்சர், எட்வின் மாண்டேகுவை சந்திப்பார். அவரை சந்திக்க செல்லும்போது, விலை உயர்ந்த பரிசு பொருட்கள், நகைகள், உடைகள், பழங்கள் என்று தடபுடலாக எடுத்துச் செல்வார். 
மாண்டேகுவை சந்தித்து, புகழ்மாலை பாடுவார். இவரது புகழ்ச்சி, மாண்டேகுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், ஜெயசிங் மீது சுமத்தப்பட்ட புகார்களை கண்டுகொள்ளாமல், இவருக்கு சாதகமாகவே நடந்து கொண்டார்.

ஒருமுறை இவர் இலண்டனில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது, ரோல்ஸ்ராய்ஸ் கார் விற்பனை செய்யும் ஷோ-ரூமுக்கு சாதாரண உடையை அணிந்து சென்றிருந்தார். அந்த ஷோ-ரூமின் செக்யூரிட்டி, இவரைப் பார்த்து சாதாரன வசதியில்லாத இந்திய பிரஜை என்று நினைத்து, உள்ளே விட வில்லை.

அதனால் அவமானமடைந்த ராஜா ஜெய்சிங், பின்னர் ஹோட்டலுக்கு வந்து அரச உடை உடுத்தி, ஹோட்டல் சிப்பந்தி மூலம் , ரோல்ஸ்ராய்ஸ் சேல்ஸ்மேனுக்கு தகவல் தெரிவித்து, ரெட் கார்ப்பெட் மரியாதையோடு, அங்கு சென்று சுமார் 6 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்க்கினார். ஒரே பேமெண்டில் அனைத்து கார்களுக்கும் இறக்குமதி வரியோடு சேர்த்து பணம் செலுத்தினார்.பின்னர் ஆல்வார்-க்கு வந்தவுடன், அந்த கார்களின் முகப்பில் தெருவை சுத்தம் செய்யும் துடைப்பத்தை கட்டி, ஆல்வார் நகர் முழுவதும், காரின் மூலம் தெருவை சுத்தம் செய்ய வைத்தார். இதனை அறிந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தனது இலண்டனில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பைக் கோரியது. 

இவ்வளவு செல்வம் படைத்த இந்த ராஜாவின் ஈகோ அளவிட முடியாதது.

உண்மையில் இவரின் அட்டகாசங்களை தாங்க முடியாமல், ஆல்வார் தேச மக்கள், கடும் அவதிப்பட்டனர். 1933ல், ஜெயசிங்கை நாடு கடத்தியது, பிரிட்டிஷ் அரசு. 

சில பணியாளர்களுடன், பாரீஸ் நகரில் வாழ துவங்கினார். அங்கே, நாள் முழுவதும் மதுவில் மூழ்கி கிடந்த, ஜெயசிங், மே 20, 1937ல் இறந்தார். 

தங்க தகடு வேய்ந்த காரில், இவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. இறந்த நிலையிலும், 'கூலிங் கிளாஸ்' மற்றும் கையுறைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.                                                        current image of palace

ஜெயசிங் போன்ற மன்னர்களின் நெறியற்ற வாழ்வு, சுவாரஸ்யமாக பேசபட்ட போதும், மக்களுக்கு தாங்க முடியாத இடர்பாடுகளையும், நெருக்கடிகளையும் உருவாக்கியிருக்கும்.

                                                 New Modern Age Rajput Princesss

                                             New Modern Age Rajput Princesss

                                          New Modern Age Rajput Royal Wedding Ceremony

                                               Padmavati movie about Rajput dynasity

வரலாற்றின் பாய்ச்சலில் இதுபோன்ற மன்னர்கள் காணாமல் போய் விட்டனர். ஆனால், அவர்களின் முட்டாள்தனமான செயல்களும், துதிபாடி ஆட்சியை பிடிப்பதும், மக்கள் விரோத நடவடிக்கைகளும் இன்றும் மாறாமல் உள்ளது. மன்னர் ஆட்சியின் மிச்சங்கள், இன்னும் அழியாமல் இருப்பதையே இது காட்டுகிறது.

Thursday, June 13, 2019

நண்பரோடு ஒரு அறிவுபூர்வமான உரையாடல்( சிரிக்க மட்டும்தான்..சிந்திக்க இல்ல..)


இன்னிக்கு என்ன எழுதலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்ப நண்பர்கள் கிட்ட கேக்கலாம்னு வாட்ஸ்சப்புல ஒரு மெசேஜை நண்பருக்கு போட்டேன். அந்த உரையாடல் இதோ...

நான்: ஹாய்..இன்னிக்கு என்ன எழுதலாம்னு யோசனை பண்ணிக்கிட்டு 
             இருக்கேன். ஏதாவது ஒரு டாபிக் சொல்லுங்களேன்..?

நண்பர்:  அதிமுகவில் இவ்வளவு பதற்றமான சூழல் இருந்தும் 
                     திமுக-வால் ஏன்   ஆட்சியில் உட்கார முடியவில்லை..?

நான்:  ஓ..!!! அரசியல் டாபிக்கா..! பலே..! நல்லாத்தான் இருக்கு. இன்னும்
             வேற ஏதாவது???

நண்பர்:  அரசியல்..சினிமா..ஸ்போர்ட்ஸ்...?

நான்: சூப்பர்...சூப்பர்...இன்னும் வேற ஏதாவது...?

நண்பர்:  உனக்கு என்ன ஏரியால எழுத ஆசை...

நான்: கொஞ்சம் இன் ட்ரஸ்டிங்கா-வும் இருக்கனும். 
             எண்டெர்டெயின்மெயின்டா-வும் இருக்கனும்.

நண்பர்:                        அப்படியா..!
                   "வாயில வடையை சுடறது எப்படி..?"

நான்: ??????????????

நண்பரின் யோசனைக்கேற்ப , வாயில் வடையை சுடுவது எப்படி? என்ற தலைப்பில் நிறைய ஆராய்ச்சி செய்து கீழ்கண்ட ஆராய்ச்சி முடிவை போட்டிருக்கேன்.

படிச்சுட்டு கமெண்ட்ல சொல்லுங்க..

                                   வாயில் வடையை சுடுவது எப்படி? - 1


                                   வாயில் வடையை சுடுவது எப்படி? - 2


                                   
                                     வாயில் வடையை சுடுவது எப்படி? - 3


                                   வாயில் வடையை சுடுவது எப்படி? - 4

                                   
                                  வாயில் வடையை சுடுவது எப்படி? - 5


                                   வாயில் வடையை சுடுவது எப்படி? - 6


                                   வாயில் வடையை சுடுவது எப்படி? - 7

                                   
                                    வாயில் வடையை சுடுவது எப்படி? - 8

                                   
                                    வாயில் வடையை சுடுவது எப்படி? - 9


                                     வாயில் வடையை சுடுவது எப்படி? - 10                                      வாயில் வடையை சுடுவது எப்படி? - 11


பா.இரஞ்சித் பேச்சும் ராஜராஜ சோழன்ஆட்சி உண்மையும்:திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், ராஜராஜ சோழன் ஆட்சியை விமர்சித்துப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான எதிர்வினையும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக, பா.இரஞ்சித் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.தஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.இரஞ்சித் பேசினார். அப்போது, ``தனித் தொகுதிகளைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள், சாதி அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். அதை வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை. திராவிடத்திலிருந்தும், தமிழ் தேசியத்திலிருந்தும் பட்டியலின மக்களைத் தனிமைப்படுத்துகிறீர்கள் என்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத்தானே இருக்கிறார்கள். ஊரிலிருந்து சேரி தனித்துவிடப்பட்டுள்ளது. அந்தச் சேரியிலிருந்து சேரிப் பிரச்னையைப் பேச வந்திருக்கிறேன்” என்று பேசினார்.

மேலும் அவர், ``ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்று சொல்கிறார்கள். ஆனால், ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்று நான் சொல்கிறேன். ராஜராஜசோழன் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று நிறைய பேர் போட்டி போடுகிறார்கள். ஆனால், என் மக்களுடைய நிலம் ராஜராஜன் ஆட்சியில்தான் பறிக்கப்பட்டது. சாதிய ரீதியில் மிகப்பெரிய ஒடுக்குமுறை அவருடைய ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அவரின் ஆட்சியில்தான், 400 பெண்கள் விலைமாதர்களாக மாற்றப்பட்டனர். தேவதாசி முறை அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் அமல்படுத்தப்பட்டது” என்று பேசியது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும்விதமாகப் பேசியதாக பா.இரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


சோழர் ஆட்சி முறை குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டு புத்தகங்கள் எழுதியிருக்கும் பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.


``சாம்ராஜ்ய காலத்தில் நிலக்குவியல் இருந்தது. நிலம் முழுவதும் மன்னருக்குச் சொந்தம். அந்த நிலங்களை, குறுநில மன்னர்களுக்கும் நிலப் பிரபுக்களுக்கும் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் மன்னருக்குக் கப்பம் கட்டுவார்கள். பஞ்சமர்களிடம் இருந்த நிலத்தைப் பறித்து குறுநில மன்னர்களிடம் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. அன்றைக்கு இருந்த அமைப்பு முறையே, நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைதான். அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் வெளிப்பாடாகச் சாதியமும், ஆணாதிக்கமும் இருந்தன. அதில்தான், தேவதாசி முறை உருவானது. இவர்களுக்கு முன்பாகவே, சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர். களப்பிரர் காலத்தில் பரத்தையர், கணிகையர் இருந்தனர்.
பெண்களைப் பொது மகளிராகப் பாவிப்பது சங்க காலத்தில் இருந்தது; அடுத்ததாகக் களப்பிரர் காலத்திலும் இருந்தது. அதற்கடுத்தாக, சாம்ராஜ்ய காலத்திலும் வந்தது. சோழர்கள் காலத்தில் பெரும் கோயில்களை நிர்மாணம் செய்து, அதனுடன் தேவதாசிகளை இணைத்துவிட்டனர். தேவதாசிகள், கடவுளுக்குச் சொந்தம் என்றார்கள். உண்மையில், அவர்களை மன்னரும், குறுநில மன்னர்களும், நிலப்பிரபுக்களும் கோயில் பூசாரிகளும்தான் அனுபவித்தார்கள். ஆகவேதான், கோயிலைச் சுற்றி ஒருபுறம் பூசாரிகள் தெருவும், மறுபுறம் தேவதாசிகள் தெருவும் இருந்தன. இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளன.
படையெடுப்பில் வெற்றிகொள்ளப்பட்டவர்களைப் பிடித்துக்கொண்டுவந்து பஞ்சமர்கள் என்று ஆக்கினார்கள். அந்தப் பெண்களை, தேவதாசிகள் என்று ஆக்கினார்கள். அப்படித்தான் அந்த முறை உருவானது. போர்க்கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களை வைத்துத்தான், பெரிய, பெரிய கோயில்களை நிர்மாணித்தார்கள். தஞ்சையில் ராஜராஜ சோழன் பெரிய கோயிலை அப்படித்தான் கட்டினான். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலைக் கட்டினான். அந்தக் கோயில்களில் பிராமணப் பூசாரிகள் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டனர். அந்த பிராமண பூசாரிகளுக்கு இலவசமாக நிலங்கள் வழங்கப்பட்டன. அதுவும் முழுமுழு கிராமங்களாகக் கொடுக்கப்பட்டன. அவைதான் பிரமம் தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள். இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில்தான் சாதிய அமைப்பு முறை நிலைநிறுத்தப்பட்டது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.அதே நேரத்தில், சோழர்கள் ஆட்சியில் நீர்ப்பாசன முறை ஒழுங்குபடுத்தப்பட்டு, விவசாயம் செழித்தோங்கியது. அதனால்தான், ராஜராஜ சோழனால் அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டியாள முடிந்தது. தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் அற்புதமான ஓவியங்கள் எல்லாம் இருந்தன. எல்லாம் இன்று அழிந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இப்படியொரு பிரமாண்டமான கோயிலைக் கட்டியிருப்பது மிகப்பெரிய அதிசயம். அந்த அதிசயத்தைக் கொடுத்ததில் ராஜராஜனுக்கு ஒரு பெருமை உண்டு. அதேநேரத்தில் அவன் ஒரு ராஜாதான். நிலப்பிரபுத்துவ ராஜாதான். அவன்தான், இங்கு வர்ணாசிரமத்தை நிலைநிறுத்தியவன். வர்ணாசிரமம் என்பது சாதியமும், ஆணாதிக்கமும் கொண்டது. ஆணாதிக்கம் என்பது தேவதாசி முறை மூலம் வெளிப்பட்டது. நான்கு வர்ணங்கள், அந்த நான்கு வர்ணங்களுக்குக் கீழ் பஞ்சமர்கள், தீண்டாமை எல்லாம் சாம்ராஜ்ய காலத்துக்குக் கொஞ்சம் முன்பாகவே வந்துவிட்டன. அதையெல்லாம் ராஜராஜ சோழன் நிலைநிறுத்தினான் என்பது உண்மை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மன்னராட்சி முறை அப்படித்தான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், மன்னர்கள் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களைப்போய், இன்றைக்கு நாம் விமர்சனம் செய்துகொண்டிருப்பது தேவையில்லை என்றே நினைக்கிறேன். அதே நேரத்தில், அந்த ஆட்சி முறையை  விமர்சனம் செய்தால், ‘ராஜராஜ சோழனை இழிவுபடுத்திவிட்டார்கள்’ என்று சொல்வதும் நியாயமல்ல.

பா.இரஞ்சித் போன்றவர்கள் ராஜராஜ சோழன் ஆட்சியின் இன்னொரு பகுதியையும் பார்க்க வேண்டும். பாசன வசதிகளை உருவாக்கியது, கட்டடக் கலைகளை வளர்த்தது, கலைநுட்பம் வாய்ந்த பிரமாண்டமான கோயில்களைக் கட்டியது என்பதையெல்லாம் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து” என்றார் அருணன்.

பற்ற வைத்து விட்டார் பா.இரஞ்சித். அது இப்போதைக்கு அணையுமென்று தோன்றவில்லை.

நன்றி: ஆனந்த விகடன்

Wednesday, June 12, 2019

Review: Goodbye Madame Butterfly written by an intelligent Japanese Woman Reporter Sumie Kawakami


முன்பெல்லாம் ஜப்பானிய மக்களைப் பார்க்கும் போது, அவர்களின் மேல் ஒரு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் இப்போது இவர்களும் நம் இந்திய மக்களைப் போலத்தான் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
காரணம் என்னவென்றால்,  சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானிய பத்திரிக்கையாளர் எழுதிய ஒரு புத்தகம் ஆங்கில வடிவில் எனக்கு கிடைத்தது.

சுமியே கவாகமி( Sumie Kawakami ) என்பவர் எழுதிய "Goodbye Madame Butterfly" தான் அது.

 இந்த புத்தகம் படித்து முடித்தவுடன்,  இளைய வயது முதல் முதிய வயது வரை நவ நாகரீக உடையில் நகர் முழுவது வலம் வரும்  இந்த ஜப்பானிய பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்வியல் முறையில் இவ்வளவு சிக்கல்களாக என்று நினைக்காமல் இல்லை.இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த விசயம். எழுத்தாளர் இந்த புத்தகத்தை,  இன்றைய ஜப்பான் நாட்டு நாகரீக கலாச்சாரத்தில் தற்போது வாழ்ந்து வரும் சில ஆண்கள் மற்றும் நிறையபெண்கள் 100 பேரிடம் பழகி , பேட்டி எடுத்து அவர்களின் வெவ்வேறு வகையான வாழ்க்கை நிகழ்வுகளை அத்தியாயங்களாக தொகுத்து வழங்கியதுதான்.

எழுத்தாளர் சொல்ல வந்த விசயம் என்னவென்றால்,
 "மனிதனின் இயல்பான வாழ்வியல் விசயங்களான  இளமை , காதல் , அலுவலகம், வேலை, திருமணம், தாம்பத்யம், விவாகரத்து, வேறொரு நபருடனான அன்பு, காமம், பிரிவு, துக்கம், தனிமை இவை அனைத்தும் ஜப்பான் நாட்டின் பெண்கள் மற்றும் ஆண்கள் சமுதாயத்திலும் உண்டு. பெரிதாக சொல்லும்படி அவர்களின் வாழ்க்கை மேன்மையானது இல்லை, அவர்களின் மனதிலும் நிறைய சோகமும் உள்ளது", என்பதுதான்.  

குழந்தை பிறந்த பின்பு, கணவன் மனைவியை பார்க்கும் விதம்("தாய்") கொஞ்சம் இயல்பானதாக இல்லை என்றும் எனக்குத் தோன்றியது.

பெரும்பான்மையான ஜப்பானிய குடும்ப பெண்கள் சந்தோசமாகவே இல்லையா? என்றும் நினைக்கத் தோன்றியது.


மேலும் இந்த புத்தகத்தைப் படித்த பின்பு ஜப்பான் நாட்டு பெண்கள் மற்றும் ஆண்களின் மேல் கொஞ்சம் பரிதாப உணர்வு வரும். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அது நமது தமிழ் கலாச்சாரம்.  தனி மனித ஒழுக்கம், பெற்றோரின் பேரன்பு, பிள்ளைகளின் மீதான அரவணைப்பு(திருமணத்திற்கு முன்/பின்),  எதிர்கால வாழ்க்கை அமைக்க உதவி செய்தல், பேரன் பேத்தி வளர்ப்பு, இறை பக்தி, தியானம் இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.!

தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்ததாலோ என்னவோ, ஜப்பான் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்களின் "அடுல்டரி சம்பந்தமான அவர்களின் விளக்கம் ( "உடல் வேறு , மனம் வேறு" )", எனக்கு மிகவும் விசித்திரமாகப் படுகிறது. 
மேலும் 40 வயதிலும் கூட கன்னித்தன்மையுடன் வாழும் சில ஆண் மற்றும் பெண் வாழ்வியல் முறை எனக்கு மனித வாழ்க்கையின் சோகமான விசயமாகத்தான் நினைக்கமுடிகிறது.


நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். நிச்சயம் நிறைய தெரிந்து கொள்வீர்கள்.

இப்போதெல்லாம் , சாலைகளில் நடக்கும் போது, ஜப்பான் நாட்டு பெண்கள் மற்றும் ஆண்களைப் பார்க்கும் போது, இவர்களின் ஒவ்வொருவருக்குள்ளும் " இரட்டை முகங்கள்..!" தான் இருக்கின்றன என்று அனு தினமும் எண்ணி வருகிறேன். நாமும் அப்படித்தானே..!


!------------------------------------------------------------------------------------------------------------------------!

Tuesday, June 11, 2019

எனது புகைப்பட உலகம்:


ஃபோட்டோகிராஃபி(Photography) எனக்கு மிகவும் பிடிக்க காரணமானவர்கள், இயக்குனர் மணிரத்தினமும் மற்றும் பி.சி. ஶ்ரீராமும் தான். அவர்களின் படைப்பில் வெளிவந்த “அலைபாயுதே” படத்தின் ஒவ்வொரு போஸ்டரும் என்னை “ஒளி ஓவியத்தின் அழகியல் எவ்வளவு போற்றுதலுக்குரியது”, என எண்ண வைத்துவிட்டது. அதற்கப்புறம் நான் பார்க்கும் ஒவ்வொரு சினிமாவிலும் கேமராமேனின் கைவண்ணத்தைப் கவனிப்பது வழக்கமாகிவிட்டது. பிரமாண்டத்தை விட , இயற்கையின் அழகியலை படமெடுப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

7 வருடங்களுக்கு முன்பு ஜப்பானுக்கு வந்த சமயத்தில், சில மாதங்களில் ஒரு அழகிய நிகான் டி.எஸ்.எல்.ஆர்(Nikon DSLR) D-7100 வாங்கினேன். அதில் எடுத்த படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: