Friday, July 01, 2011

மற்றவை - Secret of My Success

**Secret of My Success**

 நேற்று இரவு எனக்கு ஒரு ஃபோன் வந்தது.  எதிர்முனையில் ஒரு பெண் குரல், குரலில் ஒரு குழந்தைதனம் இருந்தது. எனது பதிவுகளைப் படித்த ஒரு மலேசிய ஏர்வேசில் பணி புரியும் நண்பி  (அவரின் முகம் கூட பார்த்ததில்லை...), என்னுடன் பேசினார். இனி..."  ஹலோ..குணாவா..?!" 
 
"  ஆமா...சொல்லுங்க..."

"  இன்னிக்குதான் உங்க ப்ளாக்-ஐ பார்த்தேன். நேத்து கூட ஒபன் பண்ணினேன். ஆனா என்னோட க்ரோம் பிரவுசர்-ல தமிழ் ஃபான்ட்  சப்போர் பண்ணல. கட்டம் கட்டமா வந்தது. இன்னிக்குத் தான் ஃபயர் ஃபாக்ஸ் இன்ஸ்டால் பண்ணி உங்க ப்ளாக்-ஐ பார்த்தேன். 

நீங்க ஐ.டி கம்பெனியிலதான ஒர்க் பண்றீங்க.. உங்க புரஃபைலை 
பார்த்தேன். "

"  ஆமா...எதுக்கு கேட்கறீங்க?"

" உங்க ப்ளாக்-ஐ படிப்பதற்கு முன்பு வரை, ஐ.டி கம்பெனிகள்ல வேலை செய்யறவங்களைப் பத்தி நான் வேறு மாதிரி நினைச்சிருந்தேன். அவங்கெல்லாம் நிறைய சம்பாதிக்கிறதால, கிடைச்ச சுதந்திரத்தை அளவுக்கதிகமா யூஸ் பண்ணுவார்கள். மாடர்ன் திங்கிங் நிறைய இருக்கும். இப்பிடி இன்னும் நிறைய விதத்தில நெனச்சிருந்தேன். ஆனா உங்க ப்ளாக்-ஐ படிச்சதற்கப்புறம் ஐ.டி கம்பெனிகள்ல வேலை செய்யறவங்க எல்லோரும் அப்படிப்பட்ட வகையைச் சேர்ந்தவங்க இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். உங்கள் ப்ளாக்-கின் எல்லா கேட்டகரி(category) பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நேரம் இல்லாததால ஒரு சில பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. நிச்சயம் நாளைக்குள்ள படிச்சுருவேன்.

நீங்க எழுதினதுல எனக்குப் ரொம்பவும் பிடிச்ச பதிவுகள்:

" தெரிஞ்சுக்கோங்க " என்ற தலைப்பில் நீங்க எழுதிய அனைத்து பதிவுகளும் நல்லதொரு தகவல் களஞ்சியம்.
" மினரல் வாட்டர் பாட்டில் " பற்றி உங்கள் பதிவைப் படித்ததும்தான் " இவ்ளோ விசயம் இருக்கா இந்த பாட்டில்ல?!" -னு நினைக்கத் தோனிச்சு.
இந்தியாவில் அச்சீவ்(achieve) பண்ணியவங்களோட RISUG கண்டுபிடிப்பு,  வாசக்டமி, காப்பர் டி பற்றிய தகவல்களும் பயனுள்ளதாக இருந்தது.

கேள்வி-பதில் பகுதி ஒரு மசாலா மிக்ஸ் போல இருந்தது. அனைத்து விதமான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் நல்லாயிருக்கு.

அப்புறம், " எனது படைப்புகள் " என்ற தலைப்பில நீங்க எழுதிய அனைத்து கவிதைகளும் மிக மிக அருமை. மோஸ்ட் ஆப் யங்ஸ்டர்ஸ், காதல் கவிதைகளைத்தான் விரும்பி எழுதுவார்கள். நீங்கள் காதல் பற்றியும் எழுதுகிறீர்கள், சமூக அவலங்களையும் எழுதுகிறீர்கள். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதைகள்  "ரசனை " மற்றும்  " கருவறை " என்ற தலைப்பில் எழுதினது. நல்ல கிரியேட்டிவிட்டி உங்களுக்கு இருக்கிறது. படிப்பவர்க்கு ஆர்வம் தூண்டும் விதத்தில் கற்பனையோடு, கொஞ்சம் காமெடி கலந்தும் எழுதறீங்க. இன்னும் நிறைய எழுதுங்க. இன்னும் நிறைய கதை எழுதுங்க. தொடர்கதை கூட நீங்க எழுதலாமே? ட்ரை பண்ணுங்க.
நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கு. கண்டிப்பா நிறைய அச்சீவ் பண்ணுவீங்க. என்னோட ஹார்ட்டியஸ்ட் விஷ்ஸஷ் (Heartiest Wishes)." 

" என்னோட பதிவைப் படிச்சதற்கு ரொம்ப தேங்கஸ்-ங்க.. இன்னும் நிறைய எழுதறேன்.. மறக்காம படிச்சுட்டு சொல்லுங்க..."

"  ஷ்யூர்...சரி ரொம்ப நேரம் பேசிட்டேன். நெக்ஸ்ட் டைம் மறுபடியும் பேசறேன்."

டொக்...

இந்த மாதிரியான வாசகர்களின் வார்த்தைகள் தான் ஒரு எழுத்தாளனுக்கு தேவை.. அதுதான் இன்னும் நிறைய எழுதுவதற்கு ஒரு எனர்ஜி டானிக் ஆக இருக்கும். அதே சமயம் விமர்சனமும் செய்யவேண்டும் (ஹரிஸ் மாதிரி..!). அப்போதுதான் சாதாரண எழுத்தாளன் சாதிக்கின்ற எழுத்தாளனாக உருவாக முடியும். என்னைப் பொருத்த வரை நான் இன்னமும் சாதாரண எழுத்தாளன் தான். நிச்சயம் ஒரு நாள் சாதிக்கின்ற எழுத்தாளனாவேன்.
(எல்லாம் நீங்க, அதாங்க வாசகர்கள், நண்பர்கள், நண்பிகள் இருக்கிற தைரியத்துலதான் சொல்றேங்க...உங்கள நம்பித்தான் இந்த வலைப்பூ இருக்குங்க..மறந்துடாதீங்க மக்களே!! அதனால கொஞ்சம் மனசு வச்சு அப்பப்ப கமெண்ட் குடுங்க...)

******************************************************

7 comments:

A.R.ராஜகோபாலன் said...

வந்துட்டேன் நண்பா
உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு
போன்ல எல்லாம் வாழ்த்து சொல்லுறாங்க
மொதல்ல போட்டோவை மாத்துங்க
ஹி ஹி ஹி ...................

இனிமேல் பதிவுகளை குறைத்து உங்களைப் போன்ற நல்ல பதிவர்களின் பதிவினை படிக்கப் போகிறேன்
நன்றி

ஹேமா said...

எழுத்துக்கள் நிறைவாய் இருந்தால் நிச்சயம் வாசித்த நிறைவோடு பாராட்டும் கிடைக்கும்.வாழ்த்துகள் குணா !

சி.பி.செந்தில்குமார் said...

லவ்வபிள் கலெக்‌ஷன்ஸ்

Ramani said...

உலகின் சிறந்த கடிதங்களைத் தேர்ந்தெடுத்து
அவர்கள் கையெழுத்துடன் புகைப்படங்களுடன்
மிக அழகாக மொழி பெயர்த்துக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

RAMVI said...

/// என்னைப் பொருத்த வரை நான் இன்னமும் சாதாரண எழுத்தாளன் தான். நிச்சயம் ஒரு நாள் சாதிக்கின்ற எழுத்தாளனாவேன்.////
உங்கள் ஆசை விறைவில் நிறைவேற வழ்த்துக்கள் குணா...

செம்மலர் செல்வன் said...

பாஸ்,நானும் காலேஜ் படிக்கும்போது வீட்டில இருந்து,நண்பர்கள் கிட்ட இருந்த லெட்டர் வராதான்னு பார்த்துகிட்டே இருப்பேன். இப்போ அதெல்லாம் போச்சு.

உங்க ப்ளாக் கலர்புல்லா இருக்கு.

Muthamil said...

Nice ! Cngrts & keep rock Zen Guna !!

Rgds,
Muthamizh

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...