Wednesday, September 28, 2011

தெரிஞ்சுக்கோங்க - Someone Watches

சில நாட்களாக பதிவு எழுதாததால் "ஏன் பதிவு எழுதவில்லை?" என்று நிறைய நண்பர்கள்  கேட்க ஆரம்பித்து விட்டனர். ஒரு கணம்  யோசித்துப் பார்த்தேன். பர்சனல் வேலைகள் இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் பதிவுகள் எழுதலாம் என்று முடிவெடுத்து விட்டேன். காரணம் , பதிவுகளை தினமும் தவறாமல் படித்து வரும் நண்பர்களின் எதிர்பார்ப்பை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். So எனது அடுத்த பதிவு இப்போது வெளியிட்டுள்ளேன்.

மிக மிக முக்கியமான விசயம்:

சென்னை, மும்பை மற்றும் இதர மெட்ரோசிட்டிகளில் இருக்கும் ஷாப்பிங் மால்கள், டெக்ஸ்டைல் ஷோரூம்கள் சிலவற்றில், பாத்ரூம்களிலும், டிரையல் ரூம்களிலும் (முக்கியமாக பெண்களின் பாத் ரூம்கள், டிரையல் ரூம்கள்) ஹிட்டன் கேமரா(Hidden Camera) மற்றும் டூ-வே கண்ணாடி (Two way Mirror) போன்ற ஹை-ஃபை எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை, யாரும் எளிதில் கண்டு பிடிக்காத வண்ணம் பொருத்தி வைத்திருக்கின்றனர். தனது சிற்றின்ப வேட்கையை தீர்த்துக் கொள்வதற்காக நிறுவனத்தின் உரிமையாளர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களைச் செய்து வருவதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

ஷாப்பர்ஸ் ஸ்டாப், பிக் பஜார் மற்றும் சென்னை-அண்ணாநகரில் போஸ்ட் ஆபிஸுக்கு அருகில் கிரவுண்ட் ப்ளோரில் இருக்கும் ஒரு பெண்களுக்கான  டெக்ஸ்டைல் ஷோரும் போன்றவற்றில் டிரையல் ரூம்களில் ஹிட்டன் கேமரா இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.எனவே அனைத்து நண்பர்களும் நண்பிகளும் இந்த விசயத்தில் கொஞ்சம் விழிப்போடு இருங்கள்.

ஹிட்டன் கேமரா(Hidden Camera) இருப்பதை கண்டறியும் முறை:
டிரையல் ரூமுக்கு உள்ளே செல்லும் முன் உங்களது செல்ஃபோனின் மூலம் ஒரு அவுட் கோயிங் கால்(Outgoing Call) செய்து நெட்வொர்க் பிரச்சனையின்றி இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். பின் டிரையல் ரூமுக்கு உள்ளே சென்று மீண்டும் அதே மாதிரி ஒரு அவுட் கோயிங் கால்(Outgoing Call) செய்து பாருங்கள்.
நெட்வொர்க் பிரச்சனையின்றி இருந்தால் அங்கு எந்த கேமராவும் பொருத்தி வைக்க வில்லை என்று அர்த்தம். அவுட் கோயிங் கால் செல்லாமல் நெட்வொர்க் பிரச்சனை இருந்தால் நிச்சயம் அங்கு ஹிட்டன் கேமராவைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். எனவே டிரையல் ரூமில் உடைமாற்றும் போது முதலில் இச்சோதனையை செய்து கொள்ளுங்கள்.

டூ-வே கண்ணாடி (Two way Mirror) இருப்பதை கண்டறியும் முறை:
பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கண்ணாடி ஒன்-வே மிரர் என்ற அழைக்கப்படுகிறது. ஆனால் டூ-வே கண்ணாடி என்பது, பிம்பத்தை கண்ணாடியின் இரு புறமும் வெளிப்படுத்தக்கூடியது. சாதாரணக் கண்ணாடியின் பின்புறத்தில் சில்வர் கோட்டிங் இருக்கும். ஆனால் டூ-வே கண்ணாடியில் சில்வர் கோட்டிங் மேற்புறத்தில் இருக்கும். அதனைக் கண்டறியும் முறை.

                                           ஒன்-வே கண்ணாடியின் பிம்பம்

படத்தில் இருப்பது போன்று நமது விரல் நகத்தின் நுனியை கண்ணாடியை தொடும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நகத்தின் நுனியும்,
கண்ணாடியில் வெளிப்படும் பிம்பத்திற்கும் இடையில் சிறிது இடைவெளி இருந்தால் அந்தக் கண்ணாடி ஒன்-வே கண்ணாடி. அவ்வாறு இடைவெளி
இல்லாமல் இருந்தால் நிச்சயம் அந்தக் கண்ணாடி டூ-வே கண்ணாடிதான். கண்ணாடியின் மறுபுறம் உங்களை நிச்சயம் யாரோ கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த விசயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள்.

இதனைப் பற்றிய மேலும் நிறைய தகவல்கள் இணையத்தில் உள்ளன. ஆவலிருப்பின் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.

#######################################################

தங்க நகைகளின் சேதாரம்:

இன்றைய நவீன முறை நகை தயாரிப்பில், கிட்டத்தட்ட 1% கீழ் சேதாரத்தைக் கொண்டு வரும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. நகைத் தயாரிப்பில், தங்கத் தூள்களைச் சேகரிக்கும் இயந்திரங்களை நகைத் தயாரிப்பு நிறுவனங்கள் வைத்து இருக்கின்றன.ஆனால் ஒரு நகைக்குக் 9% முதல் 45% வரை தங்கள் விருப்பம் போல் சேதாரம் வசூலிக்கின்றன நகைக் கடைகள். இப்படி முறையற்ற வகையில்தான் இன்னமும் வணிகம் நடக்கிறது.
மேலும் தங்க நகைகளை நியாயமான விலைக்கு வாங்கும் அமைப்புகள் இங்கு இல்லை. நீங்கள் "ஹால்மார்க்" முத்திரை குத்தப்பட்ட நகைகளை வைத்து இருக்கலாம்.ஆனால், அவற்றை இன்றைய மதிப்புக்கு அப்படியே விற்பது சாத்தியமே இல்லாதது. அதே போல "ஹால் மார்க்" முத்திரை குத்தப்பட்ட நகைகளாகவே இருப்பினும், ஒரு கடையில் வாங்கப்பட்ட நகையை இன்னொரு கடையில் மாற்றும் போது, 3% முதல் 8% வரை சேதாரம் கழிக்கும் அடாவடியான போக்கு இங்கு இருக்கிறது. அரசாங்கத்தால் ஏன் இதற்கு இன்னமும் தடை விதிக்கப்படவில்லை. வங்கிகள் தங்க நகைகளை வாங்கும் சேவையை கொண்டு வந்தால் தங்க முதலீட்டில் சிறிது மாற்றம் வரும்.நன்றி - விகடன்.

*********************************************************

Sunday, September 25, 2011

கொஞ்சம் ரெஸ்ட்சில பர்சனல் வேலைகள் காரணமாக தொடர்ச்சியாக பதிவுகள் எழுத இயலவில்லை. சில வாரங்களுக்குப் கழித்து, மீண்டும்  பதிவுகள் தினமும்
எழுதுகிறேன்.அது வரை நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..நன்றி!!#########################################################

Thursday, September 22, 2011

கேள்வி-பதில் : 9

1.கேள்வி: சாப்பிடுவதற்கு கை அல்லது ஸ்பூன் போன்றவை இருக்க, இந்த சீனா, ஜப்பான்காரர்களுக்கு மட்டும் ஸ்டிரா போன்ற இரு குச்சிகளால் சாப்பிடும் விசித்திர வழக்கம் எப்படி வந்தது?
[அறிவு,கரூர்]


பதில்:
உலகம் முழுவதும், லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன் மனிதன் கையைப் பயன்படுத்தியேதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இறைச்சியை வெட்டியெடுத்துச் சாப்பிட ஸ்பூன், முள் கரண்டி போன்ற உபகரணங்கள் கற்காலத்திலேயே ஒரு மாதிரி கண்டுபிடிக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்! அப்போதே சீனர்களும் ஜப்பானியர்களும் மரத்தால் ஆன முள் கரண்டியும் ஸ்பூனும் உபயோகித்தார்கள். ஏனோ அது சுருங்கி, பிற்பாடு இரு குச்சிகளாக மாறி விட்டன! இது இன்றைய, நேற்றைய பழக்கமல்ல! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஷார்ங்க் பரம்பரை சீனாவின் வடமேற்குப் பகுதியை ஆண்ட போது, இரு குச்சிகள்(Chop Sticks) பரவலாக பழக்கத்தில் இருந்தன. கி.மு. 1300-ம் ஆண்டைச் சேர்ந்த சில "சாப்ஸ்டிக்ஸ்"களை சீனத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.குழந்தையிலிருந்தே பழகினால் எதுவும் சுலபம்! எவ்வளவு அலட்சியமாக நாம் ரசம்,பாயாசத்தை வாழையிலையிலிருந்து கையால் வழித்தெடுத்து சாப்பிடுகிறோம்! அதுவே ஓர் அமெரிக்கரை அப்படிச் சாப்பிடச் சொல்லுங்கள். திணறி, தவித்துப் போய்விடுவர்.


2.கேள்வி: ஜப்பானில் நாட்டு மக்கள் மட்டும் நூறு வருஷங்களுக்கு மேல் வாழ்வதற்கு காரணம் என்ன?
[மது, ஈரோடு]


பதில்:
ஜப்பானில், எல்லா இடங்களிலும் அப்படியில்லை. அங்குள்ள சில தீவுகளில் வசிக்கும் மக்களிடையே மட்டும் '100வயது மனிதர்கள்" நிறைய உண்டு. 450 சதுர மைல் பரப்புள்ள ஒகினவா என்கிற தீவில் மட்டும் 600க்கும் மேற்பட்ட 100வயது மக்கள் உண்டு!.
காரணம், அவர்களுடைய 'டயட்' தான். மொஷுகு என்னும் கடல்பாசி, டோஃபு, ஷோயா, ஷையிகுவாஸா என்னும் ஒருவித ஆரஞ்சுப் பழம் போன்றவை அடங்கிய 'டயட்'. கடல்பாசி உணவு வயதாவதைத் தடுக்கும் என்றும், அவாமோரி என்கிற அவர்களுடைய லோக்கல் மதுவில், தோலை இளமையாக வைத்திருக்கும் கெமிக்கல்கள் இருப்பதாகவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். 1 வருஷம் 'ஒகினாவா'வில் தங்கினால் இளமையோடு திரும்பலாம். நம்மூர் நடிக-நடிகையர் கவனிக்க.

3.மொகலாயச் சக்கரவர்த்தி ஜகாங்கீர் பற்றி சில விசயங்கள் சொல்லவும்.
[செந்தில்,வெள்ளகோவில்]

பதில்:
ஜகாங்கீருக்கு 20 மனைவிகளும், 300க்கும் மேற்பட்ட அழகிகள் அடங்கிய அந்தப்புரமும் உண்டு! பாதுஷா, "ஓபியம்" போதைக்கு அடிமையானவர். எதிரிகளுக்கென்று விதவிதமான சித்ரவதைகளை நுணுக்கமாகக் கண்டுபிடித்த சாடிஸ்ட் அவர். தன் மகன் குஸ்ரூவையே குரூரமாகச் சித்ரவதை செய்து கொன்றவர்.

4.கேள்வி:பெண்ணின் உண்மையான அழகு எங்கு இருக்கிறது?
[சுரேஸ், கோவை]


பதில்: ஆணின் மூளையில்தான்


5.கேள்வி: ஒரு ஜோக், ப்ளீஸ்.

பதில்:
டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.

*****************************************************

Friday, September 16, 2011

மற்றவை - விமர்சனம்: எங்கேயும் எப்போதும்

         * எங்கேயும் எப்போதும் -  விமர்சனம் *

மிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் பேசப்படுகின்ற இயக்குனர் A.R.முருகதாஸ், ஹாலிவுட் நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் உடன் இணைந்து தயாரித்த முதல் படம். படத்தின் கதை இதுதான்.

சராசரி பெண்ணான அமுதா(அனன்யா) ஒரு இண்டர்வியு அட்டெண்ட் பண்ணுவதற்காக முதன் முதலில் சென்னைக்கு வரும் திருச்சி வாசி பெண். சென்னை வந்திறங்கியதும் தன் அக்காவின் வீட்டிற்குச் செல்வதற்காக அக்காவிற்கு போன் பண்ண, அக்காவால் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை. இண்டர்வியு நடக்கும் கம்பெனிக்கு செல்ல வழி தெரியாத அமுதாவிற்கு, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் கௌதம்(சர்வானந்த்) உதவி செய்கிறார். அமுதாவின் வெகுளித்தனமும், கௌதமின் அனுசரித்துப் போகும் பாங்கும் ஒரு வித ஈர்ப்பை இருவருக்குள்ளும் நிகழ்த்துகிறது. பின்பு இண்டர்வியு முடிந்து, அமுதா அவரது ஊருக்குச் சென்று விடுகிறார். கௌதம் பற்றிய நினைப்பு மெல்ல காதலாக மாற அவரைப் பார்க்க அமுதா ஒரு தனியார் டிராவல்ஸ் பஸ்ஸில் திரும்ப சென்னைக்கு  பயணமாகிறார். அதே போல் சென்னையில் இருக்கும் கௌதமிற்கும் அமுதாவின் மீதான காதலில் அவரைப் பார்க்க திருச்சிக்கு ஒரு S.E.T.C பேருந்தில் பயணமாகிறார்.


டிப்ளமோ படித்து விட்டு திருச்சியில் ஒரு ஒர்க் ஸாப்பில் மெக்கானிக்காக கதிரேசன்(ஜெய்) வேலை செய்கிறார்.அநியாயத்துக்கு நல்லவர். அவருக்கு எதிர் வீட்டில் வசிக்கும் மணி மேகலை(அஞ்சலி) மீது ஒரு கண். எதிர் வீட்டில் வசிக்கும் மணிமேகலை ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக வேலை பார்க்கிறார். டாமினேட் செய்யும் பேர்வழி இவர். வயதில் ஜெய்-யை விட நான்கு மாதம் மூத்தவர். அநியாயத்துக்கு கதிரேசனை டாமினேட் செய்கிறார். அவரை காதலிக்கவும் செய்கிறார். திருமணம் செய்து கொள்வதற்காக ஜெய்-யின் தாயாரைப் பார்க்க இருவரும், அனன்யா செல்லும் அதே பஸ்ஸில் பயணம் செய்கின்றனர். வழியில் சந்தர்ப்ப வசத்தால் சர்வா பயணிக்கும் பஸ்ஸும், ஜெய், அஞ்சலி, அனன்யா பயணிக்கும் பஸ்ஸும் பயங்கரமாக மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகிறது.

இறுதியில் சர்வா, அனன்யா காதல் என்னவாயிற்று? அஞ்சலியும், ஜெய்யும் அம்மாவைப் பார்த்தார்களா? அவர்களின் திருமணம் நடந்ததா? என்பதற்கான
பதிலை வெண் திரையில் காண்க!.
யதார்த்தமும், கொஞ்சம் வெகுளித்தனமும் கொண்ட பெண்ணாக அனன்யா நடித்திருக்கிறார். அவருக்கும் சர்வாவிற்கும் நடக்கும் சம்பவங்கள் தமிழ் சினிமாவிற்கு புதுசு. ரொம்ப யதார்த்தம். இருவரும் ரசிக்க வைக்கின்றனர். புதுமுகம் சர்வா, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞனாக வருகிறார். கேரக்டருக்கு மிக நல்ல பொருத்தம். அனன்யா செய்யும் செயல்களைக் கண்டு அனுசரித்துப் போகும் காட்சிகள் நிச்சயம் பெண்களுக்குப் பிடிக்கும். அருமையான கேரக்டர் தேர்வு. க்ளைமாக்சில் அனன்யாவைப் பார்த்து அவர் அழும் காட்சியில் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம்.


ஜெய்-அஞ்சலி ஜோடியும் இவர்களுக்கு சளைத்தவர்களல்ல. மிக பாந்தமான அடக்கமான இளைஞனாக வரும் ஜெய்யின் நடிப்பு பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். அஞ்சலியைக் காதலிப்பதற்காக ஒவ்வொரு முறை அஞ்சலியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அதன்படி அவர் நடந்து கொள்ளும் காட்சிகள் மிக்க அழகு. சுப்ரமணிக்கு அப்புறம் ஜெய்-க்கு ஒரு நல்ல கேரக்டர்.

அங்காடித் தெருவில் கலக்கிய அஞ்சலி இதிலும் அம்சமாக நடித்திருக்கிறார். எல்லோரையும் டாமினேட் செய்யும் கேரக்டர் கன கச்சிதம். அதிலும் ஜெய்யை அவர் ஆளும் ஒவ்வொரு சீனும் காமெடி கலந்த ரொமாண்டிக் Flick. இறுதிக் காட்சியில் அஞ்சலியின் தேர்ந்த நடிப்பு நன்றாகத் தெரிகிறது.
படத்தில் இருவரின் கதைகளுக்கு இடையே ஒரு கல்லூரி ஜோடிக்கும் பஸ்சில் ஒரு மெல்லிய ஈர்ப்பு வருகிறது. அந்தக் காட்சிகளும் ரசிக்கும்படியாகவும், யதார்த்தமாகவும் இருக்கிறது.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விசயம் கதைதான். அன்றாடம் நடக்கும் ஒரு சம்பவத்தைக் கொண்டு , எக்ஸெலண்டான திரைக்கதையில், பார்ப்பவர்களை படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். தொய்வில்லாத, தெளிவான திரைக்கதை, கதையோடு ஒட்டிய மெல்லிய நகைச்சுவைகள், அதனுடன் மெல்ல அரும்பும் காதல் உணர்வு அனைத்தையும் இயக்குனர் அழகாக காண்பித்திருக்கிறார். நிச்சயம் இயக்குனருக்கு இந்தப் படம் ஒரு வெற்றி மகுடம். சர்வா தனது ஆபிஸ் கேப்-ல் அனன்யாவுடன் செல்வது போல் ஒரு காட்சி வருகிறது. அந்த பஸ் ஆபிஸ் கேப் போலத் தெரியவில்லை. டூரிஸ்ட் பஸ் போல இருக்கிறது. இயக்குனர் கொஞ்சம் கவனித்து இருக்கலாம்.

புதுமுக இசையமைப்பாளர் C.சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். கோவிந்தா..மாசமா...சொட்ட சொட்ட போன்ற பாடல்களை இனி
அனைத்து டி.வி. சேனல்களிலும் சிலவாரங்களுக்கு அடிக்கடி பார்க்கலாம். காட்சியமைப்பும் அருமை. ஜெய்-அஞ்சலி வரும் காட்சிகளிலும், சர்வா- அனன்யா வரும் காட்சிகளிலும் பிண்ணனி இசையில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் ஒளிப்பதிவு. முக்கால்வாசிப்படமும் ஏதோவொரு பயணத்தில்தான் நடக்கிறது. அத்தனைகாட்சிகளிலும் ஒளிப்பதிவு அம்சம்.  சக மனிதர்கள் போல சர்வா, அனன்யா, ஜெய், அஞ்சலி அனைவரையும் மிகையில்லாத மேக்கப்பில் காட்டியததற்காக ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டலாம். படத்தைப் பார்க்கும் ஆடியன்ஸ் அனைவரும் தானும் படத்துடன் பயணம் செல்வது போலத் தோன்றுவதை உணரலாம்.

இப்படி ஒரு நல்ல படத்தைத் தயாரித்த A.R.முருகதாஸ்-ஐ நிச்சயம் பாராட்டலாம். படம் எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது,  ஒரு நல்ல படைப்பைத் தந்ததன் மூலம் தான் ஒரு வெற்றிப் படத் தயாரிப்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார்.

எங்கேயும் எப்போதும் - யதார்த்தமான படம். அனைவருக்கும் ஒரு பாடம்.

***************************************************Wednesday, September 14, 2011

தெரிஞ்சுக்கோங்க - ஆட்டோமேட்டிக் பிரேக்

* புதிய டெக்னாலஜி - ஆட்டோமேட்டிக் பிரேக் *

 லகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள், காயமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. வேகமாக காரில் செல்லும்போது திடீரென யாராவது குறுக்கே வந்துவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது... ஆனால், கார் மட்டும் ஓடி மோதி விபத்தை ஏற்படுத்திவிடும். சிலர், பரபரப்பில் பிரேக்குக்கு பதில் ஆக்ஸிலேட்டரை மிதித்துவிடுவார்கள். சில நேரங்களில் பிரேக் பெயிலியர் ஆகிவிடும். ‘நான் எவ்வளவோ பிரேக்கை அழுத்தினேன். ஆனா, வண்டி நிக்கலையே’ என்று நொந்துகொள்பவர்களும் உண்டு.

விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய டெக்னாலஜி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி, காரின் குறுக்கே யாராவது வந்தால் பிரேக்கை அழுத்த வேண்டி இருக்காது. கார் தானாகவே நின்று விடும். இந்த புதிய டெக்னாலஜி யை தனது எஸ்60, வி60,  எக்ஸ்சி60 ஆகிய கார்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்வீடனை  சேர்ந்த வால்வோ நிறுவனம்.
 
வால்வோ நிறுவன ஆராய்ச்சியாளர்களின் சாதனை கண்டுபிடிப்பு இது. இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்ததாவது: விபத்து மற்றும் உயிர் பலியை தடுக்கும் வகையில் கார்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள கேமரா மற்றும் சென்சார் கருவி, கார் வேகமாக சென்று கொண்டிருந்தாலும் குறுக்கீடு ஏதாவது வந்தால் தானாகவே இன்ஜினை ஆப் செய்துவிடும். ரேடார்களின் துணையோடு இது சாத்தியமாகும். ரேடார் சமிக்ஞைகளை பெற்றதும் சென்சார் மூலம் காரில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பி ஓட்டுனரை எச்சரிக்கும். காரும் தானாக நின்றுவிடும்.

இந்த செயல்பாடு இரவு மற்றும் வானிலை பாதிக்கப்படும் நேரங்களில் செயல்படாது. வாகனங்களில் எத்தகைய முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டாலும் டிரைவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கு. இந்த வீடியோவைப் பார்க்கும் போது..*****************************************************Monday, September 12, 2011

மற்றவை - உங்கள் பார்வைக்கு

                * உங்கள் பார்வைக்கு *

கடந்த 5 நாட்களாக எனது லேப்டாப்பில் வைரஸும் மால்வேரும் நுழைந்து கொண்டு ஒரு வேலையும் செய்ய அனுமதிக்கவில்லை. ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் செய்து OS ரீ-இன்ஸ்டால் செய்து பார்த்தேன். அதன் பின்னரும் ஒரு சில பிரச்சனைகள் வந்தது.  ஒரு வழியாக எல்லாத்தையும் சரி செய்து இன்றுதான் எனது ப்ளாக்கிற்கு பதிவு எழுதுகிறேன்.

லைப்ல நிறைய சேட்டைகள் அனைவரும் அவரவர் பள்ளிப்பருவத்தில் , கல்லூரிப் பருவத்தில் செய்வது வழக்கம். இங்கு நான் வெளியிட்டிருக்கும்
படங்களும்(அத்தனையும் உண்மையான படங்கள்) சேட்டைகள் சம்பந்தமானதுதான். இதனைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பு வரும் என்று நினைக்கிறேன். பார்த்துட்டுச் சொல்லுங்க..(this is different)************************************************

Wednesday, September 07, 2011

மற்றவை- ஸென் கதைகள்

         *  ஸென் கதைகள் *

பொதுவாக ஸென் கதைகள்  நீதி நியாயம் சொல்கிற கதைகள் அல்ல. கேட்டுவிட்டு மறந்து விடுகின்ற விடுகதைகள் அல்ல. ஆழ்ந்த தத்துவம் உள்ள அடக்கமான திருக்குறள் வடிவான கதைகள். இரண்டு வரியில் பெரிய தத்துவத்தை திருக்குறள் சொல்லவில்லையா. அதே போல ஒரு சிறுகதையை சொல்லி வாழ்வின் தத்துவத்தை, பிரமாண்டத்தை ஸென், க்வான் என்படும் இந்தக் கதைகள் முயற்சி செய்கின்றன.உதாரணத்திற்கு ஒன்று. 

அது ஒரு மிகப் பெரிய மடாலயம். அதில் பல சீடர்களோடு ஒரு தலைமை துறவி இருந்தார். ஒவ்வொரு சீடராக ஞானம் பெற்று, குருவிடம் விடை பெற்று வெளியேறினார்கள். ஒரு சீடர் மட்டும் வெளியே போக அனுமதிக்கப்படவில்லை.அடுத்த வருடம் போகலாம், அடுத்த வருடம் போகலாம் என்று பல வருடங்கள் அந்த சீடனை இருக்க வைத்துவிட்டார்கள். அந்த சீடன் மனம் நொந்தான். ஒரு வருடத்தில் சின்ன பையன்கள் எல்லாம் வெளியேறி விடுகிறபோது, பண்ணிரண்டு வருடம் வேலை செய்தும் என்னை வெளியேற்றவில்லையே என்ன காரணம் என்று யோசித்தான். கோபமானான். நேரே குருவிடம் போனான்.
‘நான் நன்றாக பெருக்குகிறேன், நன்றாக வேலை செய்கிறேன், சுத்தமாக தோட்ட வேலை செய்கிறேன். உங்கள் துணிகளை எல்லாம் துவைக்கிறேன். சமையல் பாத்திரங்கள் எல்லாம் சுத்தம் செய்து வைக்கிறேன். அவ்வப்போது சமையலும் செய்து வைக்கிறேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறேன். இவ்வாறெல்லாம் பணி செய்வதால் என்னை வெளியே அனுப்பாமல் நீங்களே எப்பொழுதும் என்னை வேலைக்காரனாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் வேலைக்காரனாக இருப்பதற்கு இங்கு வரவில்லை. இங்கு வந்தது ஸென் தெரிவதற்கு எனக்கு எப்பொழுது ஞானம் வரும். எப்பொழுது வெளியே அனுப்புவீர்கள். அவர்கள் எல்லாம் ஞானிகளா, நான் இல்லையா’ என்று உரத்த குரலில் கத்தினான்.

அவன் பேசத் துவங்கும் போதே குரு கெட்டிலில் உள்ள தேநீரை கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தான். தொடர்ந்து குருவும் தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் இடையறாது கத்திக் கொண்டிருந்தான். குருவும் இடையறாது தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தார். தேநீர் கோப்பையில் வழிந்து, போப்பையிலிருந்து தட்டில் விழுந்து, தட்டிலிருந்து மேஜையில் விழுந்து, மேஜையிலிருந்து தரையில் விழுந்து மொத்த தேநீரும் கொட்டும் வரை குரு அசையவில்லை. தேநீர் மொத்தமும் கீழே வழிந்து ஓடியது. அந்த தேநீர் குவளையை டக்கென்று ஒரு சத்ததோடு அவர் மேஜையில் வைத்தார். அந்த சீடன் விழித்துக்கொண்டான். அவன் முகம் மலர்ந்தது. ‘எனக்கு ஞானம் வந்து விட்டது’ என்று சொன்னான். குரு அவனை வணங்கி ‘போய் வா’ என்று விடை கொடுத்தார்.

என்ன புரிகிறது. உள்ளுக்குள்ளே பொதிந்து வைத்துக் கொண்டிருந்து, இடையறாது மனம் பேசிக் கொண்டிருந்தால். மனம் பேசுவதை வாய் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. உள்ளே இருப்பது மொத்தமும் வெளியே கொட்டி விடப்பட்டால், அப்பொழுது டக்கென்ற காலி ஓசை கேட்கும். உள்ளே காலியாக இருக்கிறது என்று எவனுக்கு தெரிகிறதோ அவனே ஞானி. இது போல பல கதைகள் இருக்கிறது.

இன்னொரு கதை.

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் பெரிய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒருவனுக்கு கிடைத்தது. அவன் அந்த தோட்டத்தை துப்புரவாக பெருக்கி, குப்பைகளை எல்லாம் ஒரு குழியிலே போட்டு வைத்திருந்தான். பசும்புற்களை வெட்டினான். செடிகளை சரியான இடத்திலே வைத்தான். தொலைவே நின்று பார்த்தான். தோட்டம் சுத்தமாக இருந்தது. வந்து குருவிடம் தோட்டம் சுத்தம் செய்து விட்டேன் என்று சொன்னான். ‘இல்லை. அங்கே பார்’ என்று சுட்டிக் காட்ட, அங்கே சில இலைகள் விழுந்து கிடந்தன. உடனே ஓடிப் போய் அந்த பழுத்த இலைகளையெல்லாம் அகற்றினான். மறுபடியும் குருவிடம் வந்து தோட்டம் சுத்தமாகி விட்டது என்று சொன்னான்.

அவர் இடது புறம் பார்த்து ‘இங்கே பார்’ என்று சொன்னார். அங்கே ஓடிப் போய் ஒரே ஒரு சுள்ளியை அப்புறப்படுத்தினான். இந்த குருவுக்கு ‘கழுகு கண் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்’ என்று அலுத்துக்கொண்டான். மறுபடியும் குருவிடம் ஓடி வந்து சுத்தம் செய்து விட்டேன் என்று கூறினான். குரு எட்டிப் பார்த்துவிட்டு ‘இல்லை. தோட்டம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னார். ‘ஒரு குப்பைகூட இல்லையே. சுத்தமாக இருக்கிறதே’ என்று கேட்டான். ‘இல்லை. தோட்டம் நன்றாக இல்லை’ என்று சொன்னார். அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாய். நீ பைத்தியக்காரனா, நான் பைத்தியக்காரனா. இவ்வளவு சுத்தம் செய்திருக்கிறேன் வேண்டுமென்றாலும் தோட்டம் நன்றாக இல்லை என்று சொல்கிறாயே’ என்று சொல்ல, குரு மறுபடியும் ‘ஆமாம். தோட்டம் நனறாக இல்லை’ என்று சொன்னார். ‘போடா’ என்று அவரைக் கண்டபடி ஏசி விட்டு குருவை விட்டுப் போனான். ‘நீயே சுத்தம் செய்துகொள்’ என்று சொன்னான்.

குரு கீழே இறங்கினார். சீடன் வியப்போடு பார்த்தான். குரு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழே போய் அதை உலுக்கினார். பனித்துளிகளும், இலைகளும் விழுந்தன. இன்னொரு முறையும் உலுக்கினார். இன்னும் இலைகளும், பூக்களும் விழுந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன.குரு தன்னிடத்திற்கு வந்தார். எட்டிப்பார்த்தார். ‘இப்பொழுது தோட்டம் நன்றாக இருக்கிறது’ என்றார். சிஷ்யன் திகைத்தான். மறுபடி பார்த்தான். ‘எனக்கு புரியவில்லையே’ என்று பணிவோடு கேட்டான். ‘ஒரு தோட்டம் இலைகளோடும், பூக்களோடும், பிஞ்சுகளோடும், காய்களோடும் இருப்பதே இயல்பு. மிகச் சுத்தமாக இருப்பது ஒரு தோட்டத்தின் இயல்பல்ல. இயல்பாக இரு என்று சொன்னார். சிஷ்யன் தலைக்குனிந்து இயல்பாக இருப்பதற்கு அன்றிலிருந்து முயற்சி செய்தான்.

**************************************************

Tuesday, September 06, 2011

மற்றவை - அரிய படங்கள்

                       * அரிய படங்கள் *


மிழகத்தின் ஒரு சில நகரங்களின் அரிய பழைய படங்களை ஒரு இணைய தளத்தில் நான் கண்டேன். அதனை உங்களிடம் பகிர்கிறேன்.
                                     
1895-ல் திருச்சிராப்பள்ளி Tiruchirapalli                  Ghats near the S. end of the bridge [Tiruchchirappalli]


Part of the Palace in the fort [Tiruchchirappalli]

Street view - Rock in the distance [Tiruchchirappalli]

Perspective view from the south-west, including raths, etc., Jambukesvaraswami Temple [Jambukeshvara Temple], Tiruvanaikoil [Srirangam], Trichinopoly District

 


1890-களில் திருச்சிராப்பள்ளி Thiruchirapally


1869-ல் திருக்கழுங்குன்றம் Thirukazhikundram1869-ல் தஞ்சாவூர் Tanjore1869-ல் தஞ்சாவூர் Tanjore


1868-ல் தஞ்சைTanjore

1858-ல் தஞ்சை Tanjore


 1784-ல் இராமநாதபுரம் Ramanadapuram1797-ல் மதுரை Madurai


1798-ல் மதுரை Madurai

1860-ல் மதுரை Madurai


*************************************************

Monday, September 05, 2011

தெரிஞ்சுக்கோங்க - கண்ணாடியின் வரலாறு

                          * கண்ணாடியின் வரலாறு *


ணிணியும், தகவல் தொழில்நுட்பமும் இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவியல் திசை வழியை மாற்றி அமைத்தன. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் உலக மக்களின் சிந்தனைப் போக்கினை மாற்றியமைத்தது மட்டுமில்லாமல் மிகப்பெரிய கலாச்சார அதிர்வினையும் ஏற்படுத்தியது. அதைப்போல பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீனப்படுத்தப்பட்ட மின்சாரமும் கண்ணாடியின் பயன்பாட்டு தொழில் நுட்பமும் மனித சமூகத்தின் அன்றாட வாழ்க்கை முறையை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. மிக முக்கியமாக கண்ணாடியின் பயன்பாடு அரண்மனை மற்றும் தேவாலயங்களில் இருந்து சாமான்யனுக்கு வந்து சேர இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலானது.

முகம் திருத்திக் கொள்ளவும், முடி நறுக்கிக் கொள்ளவும், உடை அணிந்து கொள்ளவுமான கண்ணாடியின் பயன்பாடுகள் புழக்கத்திற்கு வந்திருக்காவிட்டால் நம் புறத்தோற்றம் பிற மனிதர்களின் பார்வையை சார்ந்தே அமைந்திருக்கும். அதைப்போல நம் உள் அவயங்களின் தோற்றம், பலம், பலவீனம் ஆகியவை கண்ணாடியின் பிரதிபலிப்புகளின் மூலமாகவே மருத்துவர்களுக்குச் சுலபமாக அறிய முடிந்துள்ளது. இதுவரையிலான மருத்துவக் கண்டுபிடிப்புகளில் தனி மனிதனின் அகத்திற்கும், புறத்திற்கும் ஒருங்கே பயனளித்தது கண்ணாடியே ஆகும். இத்தகைய கண்ணாடியின் தோற்றமும் வளர்ச்சியும் கிறிஸ்து பிறப்பதற்கு சற்று முன்பிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக மெல்ல, மெல்ல விறுவிறுப்பான மாற்றங்களுடன் விரிந்து பரந்துள்ளது.
 

 
வழுவழுப்பும், மின்னும் திறனும் கொண்ட ஒரு எளிய வேதியியல் கலவைதான் கண்ணாடி ஆகும். மணலை மூலப்பொருளாக கொண்ட ஒளியை ஊடுருவச் செய்யவும், பிம்பங்களை பிரதிபலிக்கச் செய்யவும் ஆற்றல் கொண்ட கண்ணாடியின் குணங்கள் ஐரோப்பியாவிலிருந்து மெல்ல, மெல்ல உலகெங்கும் பரவியது. எல்லாக் கண்டுபிடிப்புகளையும் போல கண்ணாடியும் மகாராஜாக்களிடமிருந்தும் தேவாலயங்களிலிருந்தும் மக்களைச் சென்றடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது.

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருந்த கற்காலத்தில் தெளிந்த நீர், பளபளப்பான பாறை, குளிர்ந்து போன எரிமலைக் குழம்புகள் மற்றும் எரிகற்கள், மின்னல் உருவாகும்பொழுது பாறைகளில் உண்டான பளபளப்பு ஆகியவற்றின் மூலம் தன் பிம்பத்தைத் தானே பார்த்து பயந்திருக்கின்றான்.

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் சுவாரஸ்யமான, அத்தியாவசியமான பொருள் கண்ணாடியாகும். இக்கண்ணாடியின் கண்டுபிடிப்பு கி.மு. 5000-வது ஆண்டு சிரியா தேசத்து கடற்கரையில் மிகவும் தற்செயலாக நிகழ்ந்தது. கட்டிடங்களைக் கட்டுவதற்குரிய பாறைக் கற்களை விற்பதற்காக வந்த வணிகர்கள் சமைப்பதற்காக இரண்டு கற்களை அடுப்பு போல மணலில் வைத்து அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து தீ மூட்டினர். பின் நீண்ட நேரம் அதைக் கவனிக்காமல் விட்டதால் கற்கள் மிகவும் சூடாகி மணலில் வழிந்து, கலந்து ஒளி ஊடுருவாத ஒரு பளபளப்பான பொருள் உண்டானது. ரோம் தேசத்தின் வரலாற்றாசிரியர் பிலினி (கி.பி.23-79) இந்த நிகழ்வினைத்தான் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆரம்பமாக குறிப்பிடுகின்றார். 

 

இந்த நிகழ்வில் மணலில் கலந்துள்ள சிலிக்கான் டை ஆக்ஸைடுடன் பாறையிலிருந்து வெளி வந்த வெப்பம் மிகுந்த நைட்ரேட் கலந்து உருகி குளிர்ந்தவுடன் பளபளப்பான திரவம் (கண்ணாடி) உருவானது. அதற்குப்பின் கி.மு. 3500 வரை கண்ணாடி பீங்கான் பாத்திரங்களின் வெளிப்புறத்தில் பளபளப்புக்காக சிறு சிறு துகள்களாக ஒட்டப்பட்டது. இக்காலகட்டத்தில் கால்சியம் கலந்த இரும்புத் தாது அதிகளவில் உள்ள மணல் துகள்கள் கொதிகலனில் சூடேற்றப்பட்டு அதனுடன் சோடா எனப்படும் சலவை உப்பைக் கலந்து வண்ணமாக்கி கண்ணாடித் துகள்களை உருவாக்கினர்.

அதற்குப்பின் கி.மு. 1500ஆம் ஆண்டில் எகிப்திய கலைஞர்கள் கெட்டியான மணல் அச்சுகளை செய்து அவற்றை உருகிய கண்ணாடி திரவத்தில் மூழ்க வைத்து அச்சைச் சுழற்றி அச்சுகளின் வடிவத்தில் கண்ணாடி பாத்திரங்களை உருவாக்க ஆரம்பித்தனர். ஒருவேளை அச்சில் கண்ணாடி திரவம் சரியாக, ஒழுங்கான வடிவத்தில் ஒட்டாமல் இருந்தால் அவற்றை பளபளப்பான கல் பாளத்தில் உருட்டி அழகுபடுத்தினர். இந்த எளிய தொழில் நுட்பம் மெசபடோமியா, அலெக்ஸாண்டிரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது.
 

ஏறத்தாழ ஆயிரம் வருடங்கள் எந்தவகையான மாற்றமும் இன்றி இதே முறையே நீடித்தது. முதலாம் நூற்றாண்டுவாக்கில் சிரியா நாட்டில் தோன்றிய ஊதுகுழல் தொழில்நுட்பம் கண்ணாடியின் பயன்பாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு நீண்ட இரும்புக் குழாயின் கீழ்ப்பகுதியை திரவ நிலையிலிருக்கும் கண்ணாடியின் மேற்பரப்பில் வைத்து மேலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக, விட்டு விட்டு ஊதும் பொழுது சூடான திரவம் நகர்ந்து சென்று ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட அச்சில் நுழைந்து குளிர்ந்து விதம் விதமான வடிவங்களை அடைகின்றது.

இத்தொழில்நுட்பத்தில் உருவான கண்ணாடிப் பொருட்கள், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ரோம் நகரில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இம்முறையை அடிப்படையாகக் கொண்ட திறன்களை வளர்க்க அமெரிக்காவில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்குப் பரவி ஒரு கலையாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றது. நம் கற்பனைக்கேற்றார் போல் வீட்டிருந்தபடியே வெவ்வேறு வடிவங்களை உருவாக்கும் இக்கலை “மாடர்னிஸம்” என்ற பெயரில் ஓவியம், சிற்பம், நிழற்படங்கள் ஆகியவற்றின் வரிசையில் தனித்து இன்று வரை நடைபோடுகின்றது.

அடிப்படையில் கால்சியமும் இரும்பும் அதிகமாக கலந்த மணல் குறைந்தபட்சம் 1700 சென்டிகிரேடுக்கு மேல் சூடாக்கப்படும் போது பளபளப்பான திரவம் உண்டாவதை ஏறக்குறைய கண்ணாடியாக சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் வரை பாவித்து வந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டு வாக்கில் சோடியம் கார்பனேட் எனப்படும் சலவைசோடாவையும் கால்சியம் கார்பனேட் எனப்படும் சுண்ணாம்புக் கலவையையும் மணலோடு சேர்த்து உருக்கும் இரசாயண முறையை கண்டுபிடித்ததும் கண்ணாடியின் உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. சோடா என்னும் சலவை உப்பைச் சேர்த்து செய்யப்பட்டதால் சோடாக் கண்ணாடி என்று இன்று வரை அழைக்கப்படுகின்றது.

மிகவும் கெட்டியானதாகவும், ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாகவும், எளிதில் விரும்பிய வடிவம் அமைக்கக் கூடியதாகவும் சோடா கண்ணாடி விளங்கியதால் அதன் உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. முதலாம் நூற்றாண்டில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரும்புத் தாதுக்களை உருக்கும் உலை அல்லது சூளை சோடா கண்ணாடியின் உற்பத்தியை எளிமையாக்கியது. 
 

அதற்குப்பின் மேற்கூறிய சோடா கண்ணாடி கலவையுடன் மக்னீசியம் ஆக்ஸைடு சேர்க்கப்பட்டு முற்றிலும் ஒளி ஊடுருவி செல்லக் கூடிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. கண்ணாடி ஜன்னல்கள் அச்சில் வார்ப்பிக்கப்பட்டு ரோம் நகரின் மிக முக்கிய இல்லங்களில் பயன்படுத்தப்பட்டது. ஊதுகுழல் முறையில் செய்யப்பட்ட மெல்லிய கண்ணாடி அலங்கார பொருட்களும், கண்ணாடி ஜன்னல்களும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை உலகெங்கும் சென்ற கண்ணாடி தொழில்நுட்ப கலைஞர்களின் மூலமாக பரவியது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை மணல், சலவை சோடா, சுண்ணாம்புக்கல் மற்றும் மக்னீசியம் ஆக்ஸைடு ஆகிய கலவைகளோடு மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த கண்ணாடி தொழில்நுட்பம் மூலப்பொருட்கள் சரிவர கிடைக்காததால் திணற ஆரம்பித்தது. மரங்களை எரிப்பதால் கிடைக்கும் “பொட்டாஷ்” என்னும் மூலப்பொருள் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்பட ஆரம்பித்ததும் சோடா கண்ணாடியின் உபயோகம் குறைந்து விட்டது.

கி.பி. பதினோறாம் நூற்றாண்டில் ஜெர்மன் தொழில்நுட்ப நிபுணர்களால் புதுவகையில் உருவாக்கப்பட்ட கண்ணாடி தகடுகள் தயாரிப்பு முறை வெனிஸ் நகர நிபுணர்களால் மேம்படுத்தப்பட்டது. உருகிய கண்ணாடி திரவத்தை நீண்ட கண்ணாடிக் குழலின் மூலமாக தொடர் காற்றழுத்தத்தைச் செலுத்தி மேலிருந்து கீழாக இழுத்து வந்து 45செ.மீ. அகலமும் 3மீ நீளமும் கொண்ட கண்ணாடித் தகடுகள் உருவாக்கப்பட்டன. இந்த முறையில் ஆரம்பமும் முடிவும் சற்று சுருண்டு இருக்கும் என்பதால் இரண்டு முனைகளிலும் சிறிதளவு வெட்டிச் சமமான சீரான கண்ணாடி தகடுகள் உருவாக்கப்பட்டன. இவ்வகைத் தடிமன் குறைந்த கண்ணாடித் தகடுகள் சர்ச்சுகள் மற்றும் பிரபுக்கள் அரண்மனைகளில் வெவ்வேறு வடிவங்களில் குறைக்கப்பட்டு ஜன்னல்களாக பயன்படுத்தப்பட்டன.

கண்ணாடி தொழில்நுட்பத்தில் வெனிஸ் நகர மக்கள் மிகவும் சிறந்து விளங்கினர். அந்நகரத்தில் மட்டும் சுமார் 8000க்கும் மேற்பட்ட கண்ணாடி தொழில் சார்ந்த நிபுணர்கள் இருந்தனராம். அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு வெளிநாட்டுக் கண்ணாடி பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டிருந்தது.

அதற்குப்பின் பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தின் ஜார்ஜ் ராவென்ஸ்கராப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்ட காரீயம் கலந்த கிரிஸ்டல்கள் தயாரிக்கப்பட்டது. கிரிஸ்டல் கண்ணாடிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் கண்ணாடியின் உபயோகம் பல்வேறு துறைகளுக்கு பயன்பட ஆரம்பித்தது. குவார்ட்ஸ் மணலில் பொட்டாசியத்துக்கு பதில் காரீய ஆக்ஸைடுகள் பயன்படுத்தப் பட்டதால் கடினமாக்கப்பட்டு, இயந்திரங்களின் உதவியால் வெட்டவும், செதுக்கவும், அறுக்கவும் முடிந்தது. மேலும் இவ்வகை கண்ணாடிகள் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவின. ஒளியைப் பெறவும் ஒளியை இழுத்துக் கொள்ளவும் மட்டுமே பயன்பட்டு வந்த கண்ணாடி ஒளியை திசை மாற்றும் திறன் கொண்டதாக அறியப்பட்டது.

பதினாறாம் நூற்றாண்டின் முடிவில் முகம் பார்க்கும் கண்ணாடிகளின் தயாரிப்பு உச்ச கட்ட தொழில் நுட்பத்தைப் பெற்றது. உருகிய கண்ணாடி திரவம் உருளைகளின் வழியே செலுத்தப்பட்டு இரண்டு அல்லது மூன்று செ.மீ அளவிலான கண்ணாடித் தகடுகளாக உருவாக்கப்பட்டது. பின் அவை இன்னொரு மேசையில் வைக்கப்பட்டது. மெல்லிய குறு மணலால் உருவாக்கப்பட்ட கிரைண்டர்களின் உதவியால் கண்ணாடியின் மேல் பகுதி பளபளப்பாக்கப்பட்டது. எளிதில் உருகக்கூடிய பூச்சுகளின் உதவியால் ஒரு பக்கம் மறைக்கப்பட்டு ஒளி எதிரொலிக்கும் திறன் மேம்படுத்தப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியில் பிரெபிரிக் சீமென்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட உயர் வெப்ப எரிகலன்கள் குறைந்த நேரத்தில் அதிகபட்ச கண்ணாடித் திரவங்களை தயாரிக்கப் பயன்பட்டது. அதற்குப்பின் மெல்ல மெல்ல கண்ணாடித் தயாரிப்பு முறை முற்றிலும் இயந்திர மயமாக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஓவென்ஸ் என்பவர் கண்டுபிடித்த தானியங்கிக் கண்ணாடிப் பாட்டில்கள் தயாரிக்கும் இயந்திரம் வெற்றியடைந்து ஐரோப்பா முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.

குடுவைக்குள் இருக்கும் பொருள் எளிதில் தெரியும்படியாகவும் எடை குறைவாகவும் இருந்ததால் கண்ணாடிக் குடுவைகள் வெற்றியடைந்தன. மருந்துப் பொருட்கள், இரசாயணங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை நிரப்பி எளிதாக எடுத்துச் செல்லவும், விலை குறைவாகவும் இருந்ததால் தயாரிப்பு நிறுவனங்களும், பொதுமக்களும் கண்ணாடிக் குடுவைகளுக்கு மிகுந்த ஆதரவை அளித்தனர்.
 

இதே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலங்களில் கண்ணாடித் தகடுகளின் உற்பத்தியும் நவீனமயமாக்கப்பட்டது. உருகிய நிலையில் உள்ள கண்ணாடி திரவம் மேலிருந்து கீழே இரண்டு உருளைகளின் வழியாக வெளியேற்றப்பட்டு சமஅளவு தடிமனான பளபளப்பான தகடுகள் உருவாக்கப்பட்டன. இவ்வகைக் கண்ணாடித் தகடுகளை மெல்லிய எடை குறைந்த செல்லுலாஸ்ட் பொருட்களுக்கு இடையில் வைத்து அழுத்தி லேமினேட்டட் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன.

இவ்வகைக் கண்ணாடிகள் உறுதியாகவும் ஒளி ஊடுறுவும் தன்மை கொண்டவையாகவும், எடை குறைந்தவையாகவும் விளங்கின. லேமினேட்டட் கண்ணாடித் தயாரிப்பு முறையைக் கண்டறிந்த பிரெஞ்ச் விஞ்ஞானி “பெனடிக்ட்ஸ்” என்பவர் கண்டுபிடித்த கண்ணாடிகள் வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.

ஆசிய நாடுகளைப் பொறுத்த அளவில் கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே மேற்கு ஆசிய நாடுகளில் கண்ணாடித் தொழில்நுட்பம் பிறந்து வளர ஆரம்பித்திருந்தது. சிந்துவெளி நாகரீக காலத்திலே இருந்து நமக்கு மத்திய, மேற்கு ஆசிய நாடுகளில் வணிக தொடர்பு இருந்திருப்பதை வரலாற்று நூல்களில் நாம் காண்கின்றோம். உடைகள், வாசனை திரவியங்கள், திரைச்சீலைகள், அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யவும் அவற்றின் தொழில் நுட்பங்களை அறிந்து நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் மிகவும் ஆர்வமுடன் இருந்து வந்துள்ளோம். ஆனால் கண்ணாடித் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்து இங்கேயே தயாரிக்கும் முயற்சியை இந்தியர்கள் ஆர்வமுடன் தொடங்காததை மிகவும் ஆச்சர்யத்துடன் வரலாற்று ஆய்வாளர்கள் கவனிக்கின்றனர்.

கண்ணாடிக் குடுவைகள் இரசாயண ஆய்வுகளுக்கு மிகவும் பொருத்தமுடையவை என்பது நாம் அறிந்ததே. இரசாயண மாற்றம் நடக்கும் முறைகளையும், அளவையும் காலத்தையும் கண்ணாடி குடுவைகள் மூலம் நேரடியாக நாம் கவனிக்க முடியும். ஆனால் மருத்துவ இரசாயணம் மற்றும் தொழிற்சாலை இரசாயணம் ஆகியவற்றில் பாரம்பரிய அறிவும் முன்னோடியான சிந்தனையும் கொண்ட நம் முன்னோர்கள் களிமண்ணால் செய்து சுடப்பட்ட குடுவைகளையே பயன்படுத்தி வந்துள்ளனர். உலக நாடுகளின் ஏனைய பகுதிகளில் கண்ணாடியை ஏற்றுக்கொண்ட அளவிற்கு நம் இந்தியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உலோகத்திற்கும், மண் குடுவைக்கும் கொடுத்த சமூக அந்தஸ்தை நம் முன்னோர்கள் கண்ணாடிப் பொருட்களுக்கு கொடுக்கவில்லை.

இந்தியாவின் அனைத்து வரலாற்று ஆய்வாளர்களாலும் ஒத்துக் கொள்ளப்பட்ட மொகஞ்சதாரோ-ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளில் கண்ணாடி போன்ற பொருட்களின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டதே அன்றி முழுமையான வடிவில் ‘கண்ணாடி’ பொருட்கள் காணக் கிடைக்கவில்லை. ஆனால் நம் நாட்டின் பழமையான மொழியான சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்ட “சதபத பிரம்மனா” என்ற வேத நூலில் கண்ணாடியை “கக்கா” என்று குறிப்பிடுகின்றனர்.

ஹரப்பா மற்றும் கங்கைச் சமவெளி நாகரிக மக்கள் கண்ணாடித் துகள்கள் பொருத்தப்பட்ட பீங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து கைவளையல்கள், காது வளையங்கள், மூக்குத்திகள் ஆகியவற்றுக்கு கண்ணாடி குமிழ்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். முழுமையான கண்ணாடி மூலப் பொருட்களில் செய்யப்பட்ட “கண்ணாடி தொழில்நுட்பம்” நம் நாட்டின் பிரத்யேக கலையாக ஐந்தாம் நூற்றாண்டில்தான் வளர்ந்து வந்தது.

பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் இரும்பு தாதுக்கள் கலந்த வண்ணமயமான கண்ணாடிகள் ஹஸ்தினாபுரம், தக்ஷசீலம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. ரோமானியர்களால் தயாரிக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்களும், தரை மொசைக்குகளும் மௌரியப் பேரரசரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அரிக்கமேடு, மஸ்கி, பிரம்மகிரி ஆகிய இடங்களிலும் வடஇந்தியாவில் அஹிசத்திரம், மஹேஸ்வர், நாசிக், பிரகாஷ், தேர், கௌந்தியாபுரம், உஜ்ஜைனி, நாலந்தா ஆகிய இடங்களிலும் கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் பொழுது கண்ணாடியில் வண்ணமாக்கும் நுட்பத்தையும் மற்றும் கண்ணாடி திரவத்தில் காப்பர், அலுமினியம், காரீயம் ஆகிய தனிமங்களைக் கலக்கும் வித்தையையும் இந்தியர்கள் அறிந்திருந்தனர் என தெரிய வருகின்றது.

தமிழ்நாட்டின் அரிக்கமேடு என்ற இடத்தில் தோண்டப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கி.பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் புழங்கிய கிரேக்க ரோமானிய கண்ணாடிப் பாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் வட இந்தியாவில் மொகலாய மன்னர்களின் காலத்தில் பாரசீக வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடிகள், உணவுப் பண்டங்களை மூடி வைக்கும் மூடிகள், எச்சில் துப்பும் பாத்திரங்கள் ஆகியவை புழக்கத்தில் இருந்து வந்துள்ளன.

அதைப்போல உததிரப்பிரதேசத்தின் அனோமா நதிக்கரையோரம் அமைந்துள்ள கோப்பியா நகரில் மிகப்பெரிய கண்ணாடி பாளங்கள் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) கண்டுபிடிக்கப்பட்டதை உற்று நோக்கும் பொழுது அங்கு மிகப்பெரிய கண்ணாடித் தொழிற்சாலை அமைந்திருக்கலாம் எனத் தெரிய வருகின்றது. நமது இந்தியர்கள் இன்றுவரை கண்ணாடியை ஒருவகை ஆடம்பரமான அழகுப் பொருளாக மட்டுமே அங்கீகரித்துள்ளனர். இன்றும் இந்தியாவின் கிராமப் பகுதிகளில் கண்ணாடி குடுவைகளில் பானம் அருந்துவதை கௌரவக் குறைச்சலாகவே கருதி வருகின்றனர். இவ்வகையான மனத்தடைதான் நம் இந்தியர்கள் கண்ணாடித் தொழில்நுட்பத்தை தாமதமாக ஏற்றுக் கொண்டதற்கான காரணமாகக் கொள்ளலாம். மருத்துவம், இரசாயணம், அறுவை சிகிச்சை, கணிதம், கட்டிடக்கலை, ஆகியவற்றில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தோற்றுவித்த நாம் கண்ணாடித் தொழிலில் கவனம் செலுத்தி மாற்றங்களை ஏற்படுத்தாதற்கு காரணம் நம் பாரம்பரிய பண்பாடும் கலாச்சாரமுமே ஆகும்.

இந்தியாவில் நடந்த எத்தனையோ ஆகழ்வாராய்ச்சிகளில் நம் பாண்டிச்சேரிக்கு தெற்கே கிழக்கு கடற்கரையில் 1930 மற்றும் 1940 களில் தோண்டியெடுக்கப்பட்டவை முற்றிலும் கண்ணாடி மற்றும் கற்களால் ஆன பொருட்கள் ஆகும். 16ஆம் நூற்றாண்டு வரை அரிக்கமேடு என்னும் கடற்கரைப்பகுதி இந்தியாவின் மிக முக்கியத் துறைமுகமாக ரோமானியர்களுக்கு பயன்பட்டது. பிரெஞ்ச் தேசத்தின் மிக முக்கிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆர்.இ.எம்.வீலர் மற்றும் ஜே.எம்.காசல் ஆகியோரால் இவை கண்டுபிடிக்கப்பட்டது.

பாண்டிச்சேரி மியூசியத்தில் உள்ள செராமிக் பொருட்களின் தொன்மையைக் கண்டு வியந்த பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தின் விமலா மெக்லி அவர்கள் அங்கே இருந்த கண்ணாடி மற்றும் கற்களால் ஆன பாசி மணிகள், குமிழ்கள் மற்றும் ஆபரணங்களைக் கண்டு வியந்து பக்கத்தில் உள்ள அரிக்கமேடு பகுதியை தேசிய தொல்பொருள் தலமாக மாற்றக் கோரினார். 1992 முதல் 1997 வரை பாண்டிச்சேரி மியூசியத்துடன் இணைந்து அரிக்கமேடு அகழ்வாராய்சி முடிவுகளை பெக்லி அவர்கள் புத்தகமாக வெளியிட்டார்.

அரிக்கமேடு பகுதி ரோமானியர்கள் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பிருந்தே கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து சிறந்த கடற்கரை நகரமாய் இருந்துள்ளது. நீண்ட கண்ணாடி குழாயிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட சிறுசிறு கண்ணாடித் துண்டுகள் இந்நகரத்தில் ரோம் நகரில் இருந்து வந்திறங்கிய கண்ணாடித் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் அரிக்கமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இத்தொழில்நுட்பத்தைப் பழகி தாங்களே சொந்தமாக கண்ணாடிப் பாசிகளையும், ஆபரணங்களையும் அழகுப் பொருட்களையும் தயாரித்துள்ளனர்.

அரிக்கமேடு பகுதியில் கண்ணாடித் தொழில்நுட்பத்தை கற்றிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கு சென்று கண்ணாடிப் பொருட்களை அங்கேயே தயாரித்து விற்பனை செய்துள்ளனர். அரிக்கமேடு பகுதியில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி மணிகள் மாணிக்கக் கற்கள் என்ற பெயரில் இந்தியா முழுக்க விற்பனை செய்யப்பட்டுள்ளது. கற்களால் ஆன மிகவும் நுட்பமான சிறிய, பெரிய அளவிலான கலைப் பொருட்களை செய்வதில் மிகவும் திறன் பெற்றிருந்த இந்தியர்கள் கண்ணாடிப் பொருட்களைச் செய்வதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்த ரோமானியர்களே அரிக்கமேடு பகுதியினரின் திறமையைக் கண்டு வியந்து அவற்றை வாங்கிப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
 

பதினாறாம் நூற்றாண்டில் அரிக்கமேடு பகுதி ஏறத்தாழ அழிந்து விட்டது எனலாம். அங்கிருந்த ஒரு பகுதி மீனவர்களும் விவசாயிகளும் சற்றி தள்ளி உள்ள விராம்பட்டினம் கடற்கரைக் கிராமத்திற்கும் இன்னொரு பகுதி கண்ணாடி தொழிநுட்பம் தெரிந்தவர்கள் ஆந்திராவில் ரேணுகுண்டாவிற்கு அருகில் உள்ள பாப்பநாயுடு பேட்டைக்குப் புலம் பெயர்ந்தனர். மேலும் கற்சிற்பங்கள் செய்ய தெரிந்த கலைஞர்கள் தமிழ்நாட்டின் வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். தமிழ்நாட்டின் அரிக்கமேடு பகுதியில் வாழ்ந்தவர்களின் வாரிசுகள் மீனவர்களாக விராம்பட்டினத்தில் இன்றும் உள்ளனர். அதைப்போல பாப்பநாயுடு பேட்டையில் கண்ணாடித் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறு தொழிற்சாலைகளும் சென்ற நூற்றாண்டு வரை இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

கி.பி. இரண்டாம் நூ}ற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தடைந்த கண்ணாடித் தொழில்நுட்பம் பொது மக்கள் மத்தியிலும், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றது. தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளலாரின் பக்தி இயக்கம் கண்ணாடியின் பிரதிபலித்த ஜோதியின் வடிவத்தை கடவுள் உருவமாய் கண்டது.

நன்றி - -எஸ். எஸ்.பொன்முடி.

****************************************************************