1. கேள்வி: குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன்? பாழாய்போன இந்த உலகத்தில் வந்து பிறந்துவிட்டோமே என்பதாலாலா?
[சுரேஷ் கிரிம், ஜப்பான்]
பதில் : ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்கும். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றன. அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது.
அனில் அம்பானியின் மனைவிக்கு பிறக்கும் குழந்தை " பாழாய்போன இந்த உலகத்தில் வந்து பிறந்துவிட்டோமே?" என்று நினைக்குமா?!
2. கேள்வி: அடிமைக்கும்,கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
[ராஜன், கோவை]
பதில் : ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை...அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை...
3. கேள்வி: தாஜ் மஹால் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
[செந்தில், கரூர்]
பதில் : முகலாய மன்னர் ஷா ஜஹான் தன் மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டிய கல்லைறைதான் தாஜ்மஹால். 1632-ல் ஆரம்பிக்கப்பட்டு 1648-ல் முடிக்கப்பட்டது. 22 ஆயிரம் மனிதர்களின் உழைப்பில் உருவானது தாஜ்மாஹால். அக்காலத்தில் 3.20 கோடி செலவு செய்யப்பட்டு தாஜ்மாஹல் கட்டப்பட்டது தாஜ்மாஹாலின் சுவர் முழுவதும் திருக்குரான் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 2 லட்சம் வெளிநாட்டினர் தாஜ்மாஹாலை காண வருகின்றனர்.
4. கேள்வி:திரையரங்குகள் இல்லாத நாடு ஏதும் இருக்கா?
[அருள், பல்லடம்]
பதில் : இருக்கே..! பூட்டான்.
5. கேள்வி:ஒரு கடி ஜோக்.ப்ளீஸ்
[ஆனந்த், திருச்சி]
பதில் :
பையன்: உனக்கு வயசு என்ன ஆவுது?
கேர்ள்: ஆடி வந்தா 18.
பையன்: அப்ப நடந்து வந்தா?...???
***************************************************************
12 comments:
சுவாரசியமா பத்தும் பலதும் எழுதியுள்ளீர்கள் வாசிக்க அருமையா இருக்கு தொடருங்கள்
அனில் அம்பானியின் மனைவிக்கு பிறக்கும் குழந்தை " பாழாய்போன இந்த உலகத்தில் வந்து பிறந்துவிட்டோமே?" என்று நினைக்குமா?!//
Why??................
கேள்வி பதிலில், நகைச்சுவைகளோடு, பொது அறிவினையும் கலந்து தந்திருக்கிறீங்க. அருமையான பதிவு.
VERY NICE, YOUR WRITING IS VERY USEFUL.KEEP IT UP
நல்ல பதில்கள்
தொடருங்கள் ...
அன்புடன்
கருணா கார்த்திகேயன்
http://karunakarthikeyan.blogspot.com/
சட்படா மிக்சர்,சுவையாக இருக்கிறது!
நல்ல கேள்விபதில்கள்.
//கேள்வி: தாஜ் மஹால் பற்றி கொஞ்சம் சொல்லுங்க. //
இந்தகேள்விக்கு இப்படியும் ஒரு பதிலிருக்கு இங்குவந்து பாருங்க..
http://niroodai.blogspot.com/2011/06/blog-post_27.html மறைமுக அடையாளம்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் குணா..பதில்கள் 1&3 ம் தகவல் களஞ்சியம்.
படங்கள்.. நகைச்சுவை.. தகவல்.. எல்லாம் கலந்து..
நிச்சயம் உங்களுக்கு ‘புண்ணியமா போகும்’ பதிவுகள் தான்!
நல்ல பதில்கள்
தொடருங்கள் ...
Your blog is informative as well as interesting.
Keep it up.
-Suresh Grimm.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...