Monday, June 27, 2011

மற்றவை - பாரதி கண்ட புதுமைப்பெண் யார்?இவர்களா?

பாரதி கண்ட புதுமைப்பெண் யார்?இவர்களா?

ன் நண்பர் அனுப்பிய இந்த படங்களைப் பார்த்தவுடன் எனக்குள் ஏராளமான கேள்விகள். உங்களிடம் பகிர்கிறேன்.

 
 

 

"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" என்ற வரிகளை பள்ளியில் பாடப்புத்தகத்தில் படித்த போது, நம் நாட்டில் பெண்ணடிமைத் தனம் எவ்வளவு தூரம் அவர்களை அடக்கி வைத்திருந்தது என்று நினைத்ததுண்டு.
காலப்போக்கில் ஆண்களின் மனம் , பெண்களையும் ஓரளவு தனக்கு சமமாக நினைத்து, அவர்களுக்கும் கல்வியறிவு தேவை என்று எண்ணி, பள்ளிக்குச் செல்ல அனுமதித்தது. அடுப்பங்கரை வாசத்திலும், படுக்கையறை சாபத்திலும் வாழ்க்கையை ஓட்டிய பெண்கள், படிக்க ஆரம்பித்ததும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அரசியல் சட்டங்களும், பெண்கள் சுதந்திரம், சொத்துரிமை, பெண் கொடுமை தடுப்புச் சட்டம்  போன்றவற்றை அளித்து பெண்களின் வளர்ச்சி என்னும் வாழ்க்கை வெளிச்சத்திற்கு திரியுடன் எண்ணையும் ஊற்றி வளர்த்தது.இத்தனை வருடங்களில் நம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பாராட்டும் அளவில் உள்ளது. " கல்வியறிவு " , நிறைய விசயங்களை  குறிப்பாக நாகரீகம், பண்பு, சுய முன்னேற்றம், சுய மரியாதை, பொருளாதர முன்னேற்றம் போன்றவற்றை  ஆணுக்கும், பெண்ணுக்கும் சரி சமமாக வழங்கியுள்ளது.

அதே சமயத்தில் அந்தக் " கல்வியறிவு " , பொறாமை, தலைக்கனம், நாகரீகமே இல்லாத ஒரு நாகரீகம் போன்றவற்றை சமூகத்திற்கு  அறிமுகப்படுத்தியுள்ளது.என்னதான் ஆண்கள் தவறு செய்தாலும், அதை விட்டு விலகும் தந்திரமும், தைரியமும் உடையவர்கள். கல்வி, கலை, தொழில் நுட்பம் என அனைத்து வித அறிவிலும் சிறப்பாக சாதிக்கும் பெண்களுக்கு, ஆண்களைப் போல், தவறிலிருந்து தப்பிக்கும் தந்திரமும் , தைரியமும் இன்னமும் பெறவில்லை. தவறு செய்து அதன் பின் வருந்தும் வழக்கம் தான் அவர்களிடம் இப்போது உள்ளது. அதுதான் பெண்களின் இயல்பு கூட. 


இந்தப் படங்களை எல்லாம் நான் பார்க்கும் போது சில கேள்விகளை பெண்களிடத்தில் வைக்கிறேன்.

நீங்கள் ஆண்களுக்கு நிகராக சாதிக்கிறீர்கள். சம்பாதிக்கிறீர்கள். அதற்காக ஆண்கள் செய்யும் இது போன்ற விசயங்களையெல்லாம் செய்ய என்ன காரணம்?

ஒரு பந்தாவுக்கா? தன்னை ஒரு மேல் மட்ட நாகரீகம் கொண்டவள் என மற்றவர்களுக்கு பகிங்கிரப்படுத்தவா? ஆண்களுக்கு,  தான் ஒன்றும்
சளைத்தவளல்ல என்று வெளிப்படுத்தவா?


இந்த அளவிற்கு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?

ஆண்கள் புகை பிடிப்பதும் , மது அருந்துவதும் சமூகத்தில் மிகப் பெரிய விசயமாக, மிகப்பெரிய தவறாக கருதப் படுவதில்லை (பட் தப்புத்தான்
 தப்புத்தான்.) ஏனென்றால ஆண்கள் செய்யும் பழக்கங்கள் அனைத்தும் யுகம் யுகமாக நடக்கும் நார்மல் விசயம்தான். ஆனால் நீங்கள் செய்யும் இத்தகைய செயல்கள்,  உங்களுக்கு அப் நார்மலாகத் தெரியவில்லையா?


நீங்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் உங்கள் பெற்றோருக்கு தெரியுமா? (நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை).

ஒன்று மட்டும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அளவிற்கு உங்களுக்கு கிடைத்த சுதந்திரம், உங்கள் பாட்டியோ, தாயோ நிச்சயம் பெற்றிருக்க முடியாது. அவர்கள்தான் பெண் குலத்திற்கு ஒரு பெருமை அளித்தவர்கள்.  ஏனெனில் அந்தக் கஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டு நல்லபடியாக குடும்பத்தை மேன்மைக்கு கொண்டு வந்தவர்கள். அப்படிப்பட்ட  பெண் குலத்திற்கு, நீங்கள் பெருமையையா இப்போது கொடுத்து வருகிறீர்கள்? மன சாட்சி இருந்தால் அதனிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

உங்களைப் பார்த்து மற்ற பெண்களும் இந்தக் கொடுமைகளை எல்லாம் கற்றுக் கொண்டால் அடுத்த தலைமுறைக்கு ஒழுக்கம் கற்பிப்பது யார்? தாயைத் விட தந்தையால் முடியுமா? ஆண்களே ஒத்துக் கொண்ட விசயம், தாய் இன்றி, தந்தையால் குழந்தையை வளர்க்க முடியாது. காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள் பெண் இனமே.


இத்தனை கேள்விகளை கேட்க எனக்குத் தகுதியிருக்கிறதா? பெண்களை வெறுப்பவனா? என்று கூட இந்தக் கட்டுரையை படிக்கும் நண்பிகள், சகோதரிகள் நினைக்கலாம்.

நான் பெண்களை வெறுப்பவன் தான். பெண் குலத்திற்கு பெருமை தரும் விசயங்களை செய்யாமல், புகை பிடித்தும், குடித்தும், சமூகத்தில் பெண்களின் மீது ஒரு இழிவான எண்ணத்தை ஏற்படுத்தி வரும் இது போன்ற பெண்களை
வெறுப்பவன் தான்.

மேற்கண்ட படங்கள் எல்லாம் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் எடுக்கப்பட்டவை.

கை நிறைய சம்பளம் தரும் ஐ.டி. துறைகளில் பணி புரியும் சில பெண்களிடம்தான் இது போன்ற சகிக்க முடியாத வெளி நாட்டு பழக்கங்கள்
பெருகி வருகிறது.
நல்ல வேளை. தமிழ் நாட்டில் உள்ள பெண்கள் இந்தளவிற்கு இறங்குவதில்லை.(அப்படிப்பட்ட குமரிகள் யாராவது இருக்காங்களா?). அதற்கு காரணம், நம் தமிழ் நாட்டுப் பெற்றோர்கள் பெண்களை   நன்றாகவே வளர்த்தியுள்ளனர். ஆனால் தமிழ் நாட்டுப் பெண்களும் ஒரு விசயத்தில் போதை கொண்டு ஆழ்ந்து உள்ளனர்.அந்த மாநிலத்தில் வாழும் பெண்கள் அப்படி என்றால், இங்கு இருக்கும் பெண்கள் செய்யும் ஒரே விசயம். செல்ஃபோன் பேசுவது தான். அந்தப் பெண்களுக்கு புகையும், மதுவும் தான் போதையை தருகிறது. நம் பெண்களுக்கு செல்ஃபோனில் அந்த போதை கிடைக்கிறது. அத கம்பேர் செய்யும் போது, செல்ஃபோன் ஓக்கே.


 எனெனில், சினிமா, செல்போன் தவிர, வேற எதுவும் தமிழ் குமரி பெண்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் இல்லீங்க. அத நானும் ஒத்துக்கறேன்.

மேலும், இன்றைய தலைமுறை பெண்களை பாராட்டத்தான் வேண்டும்.
அப்பாவிடமோ அல்லது சகோதரனிடமோ பணம் வாங்கி தன் தேவையான பொருட்களை வாங்கி வாழ்க்கையை ஓட்டிய பெண்கள், இன்று தன் அப்பாவுக்கு பணம் தரும் அளவிற்கு சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். பெற்றவர்களும் தன் மகள் சம்பாதித்து கொடுப்பதால் மகளை அதிகமாக கட்டுப்படுத்துவது இல்லை. இது ஒரு இயலாமைதான். கட்டுப்படுத்தினாலும், இந்த தலைமுறை பெண்கள் அவர்களுக்கு கட்டுப்படுவதில்லை. காரணம் கல்வியறிவு. அதன் வெகுமதியாய் கிடைத்த வேலை+கை நிறைய சம்பாத்யம்.


 


"சாதிப்பதிலும், சம்பாதிப்பதிலும் பெண்கள், ஆண்களை பின்னுக்குத் தள்ளும் காலம் நிச்சயம் வர இருக்கிறது. ஆனால் ஒழுக்கமின்றி வாழ்வதிலும், ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி, நீங்கள் முன்னுக்கு வந்து விடாதீர்கள். பூமி தாங்காது."

டிஸ்கி :
இந்தக் கட்டுரை முதலில் கண்ட படங்களைப் பார்த்த பின்பு, ஆதங்கப்பட்டு, என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன். இது அனைத்துப் பெண்களையும் குறித்து எழுதவில்லை. படத்தில் உள்ள வகை பெண்களைக் குறித்து மட்டும்தான் எழுதியிருக்கிறேன். தயவு செய்து இந்த பதிவைப் படிக்கும் பெண்கள் சாபம் ஏதும் விட்டு விடாதீர்கள். புண்ணியமாப் போகும்.ஆணா இருந்தாலும் சரி. பெண்ணா இருந்தாலும் சரி., நம்ம தலைமுறை நல்லா இருக்கனும்ங்க. அப்பதான் அடுத்த தலைமுறை நம்மைப் பார்த்து வளரும். அதுதான் என்னோட விருப்பமும்.

**********************************************************************

7 comments:

G.M Balasubramaniam said...

உங்கள் சமூக அக்கரை பாராட்டத்தக்கது. நீங்கள் வகைப் படுத்தும் பெண்கள் தமிழ் நாட்டிலும் உண்டு. ஆனால் இவ்வளவு பகிரங்கமாக இல்லை சம உரிமை என்று நினைத்து தவறான போக்கை கடை பிடிக்கிறார்கள்.ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு. ?
ஆந்திராவில் பெண்கள் சுருட்டு குடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். பட்டம் பெற்றவர்களல்ல.பாமர மக்கள். சாராயமும் குடிப்பார்கள். என்ன? படித்தவர்கள்
ஸ்டைலாக செய்கிறார்கள்

விக்கியுலகம் said...

மாப்ள தமிழ் நாட்டுல சிகார் அடிக்கும் நண்பிகள் எனக்கு உண்டு.......தெரியும்ல சிகார் ஒன்னு பத்து சிகரட்டுக்கு சமம்னு ஹிஹி!

RAMVI said...

குணா பெண்ணுரிமை என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ள பெண்கள் இப்படி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்...

RAMVI said...

குணா என்னுடைய “எங்க ஊர்” பதிவை தொடர உங்களை அழைத்து இருக்கிறேன்......தொடருங்கள்....நன்றி..

angelin said...

//ஆணா இருந்தாலும் சரி. பெண்ணா இருந்தாலும் சரி., நம்ம தலைமுறை நல்லா இருக்கனும்ங்க. அப்பதான் அடுத்த தலைமுறை நம்மைப் பார்த்து வளரும். அதுதான் என்னோட விருப்பமும்.//

அருமையா எழுதிருகீங்க குணா.

பத்மநாபன் said...

விழிப்புணர்வு பதிவு குணா..

சுதந்திரம் எனும் பெயரில் தவறான போதனைகள் தான் காரணம்...

ரொம்ப குறைந்த சதவீதத்தினர்தான் இம்மாதிரி தவறான வழியில் செல்கிறார்கள்... ஆனால் சமுதாயத்தில் இதன் தாக்கம் அதிகம்...

யோஹன்னா யாழினி said...

//தயவு செய்து இந்த பதிவைப் படிக்கும் பெண்கள் சாபம் ஏதும் விட்டு விடாதீர்கள். புண்ணியமாப் போகும்.//

hahahaha...

சம உரிமைன்னா சும்மாவா..
இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...