*** இதுதான் வாழ்க்கையா?***
பிறப்பு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் சந்தோசத்தை தரும் விசயம். ஒரு குழந்தை பிறக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. ஆனால் இறப்பு என்ற விசயம் மிகவும் வருத்தத்தை தரக்கக்கூடியது. நாம் இரண்டையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உயிராலும்..உணர்வாலும் ஆன ஜடப் பொருள்தான் நாம். ஆதலால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். சிரிக்க நினைத்தால் சிரித்து விடு. அழ நினைத்தால் அழுது விடு. இந்த நிசப்தமான உண்மையை என் மனது திரும்ப திரும்ப சொல்லியது இன்று. காரணம் பத்திரிக்கையில் வந்த பரிதாப செய்தி.
நேற்றைய பத்திரிக்கையில் வந்த காஞ்சிபுரம் பஸ் விபத்து செய்தியை படத்துடன் பார்த்த பின்பு எனக்குள் ஒரு பெரிய சோக உணர்வு ஏற்ப்பட்டு விட்டது. யப்பா..எப்படிப்பட்ட கோர விபத்து!. பேணி வளர்த்த மனித உடல் வெறும் கரிக்கட்டையாய் கிடந்ததை பார்க்கும் போது மனது ரொம்ப வலிக்கிறது. இறந்த அத்தனை பேருக்கும் எத்தனை எதிர்கால கனவுகள் இருக்கும்.எத்தனை பொறுப்புகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும். இனி அவர்களின் கடமைகளை யார் நிறைவேற்றுவார்கள். இதுதான் வாழ்க்கையா?
அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் வாழ்க்கை. " நம் வாழ்க்கை பயணம் எப்போது முடிவடையும்?" என்ற விடையே தெரியாமல் வாழ்ந்த்து கொண்டிருக்கிறோம். எனவே இருக்கின்ற நிகழ்கால வாழ்க்கையை நல்லபடியாக அன்புடனும் , யார் மனதையும் புண்படுத்தாமல் வாழலாம்.
டிஸ்கி : வேறு ஒரு பதிவை எழுத நினைத்தேன். ஆனால் விபத்து செய்தியை படித்ததும் எனக்கு இதுதான் எழுத தோன்றியது.
5 comments:
முதலில் இந்த பதிவை எழுதிய உங்களுக்கு நன்றி .எந்தனை கோரம் .கடவுள் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான விதியையா எழுதினார் .ஏன் இப்படி கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவருக்கும் மனசாட்சி இல்லையா .வாழ்க்கை நம் கையில் இல்லை என்ற உண்மை புரிந்து கொண்டு நீங்கள் சொன்னது போல் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் போதும் .மீண்டும் கடவுளிடம் தான் கேட்க முடியும் இது போன்ற நிகழ்வுகள் இனி வேண்டாம் .அனைவரின் குடும்பத்திற்கும் நம் இரங்கலை தெரிவிப்போம்
கடவுள் இல்லை என்று என்னதான் வாதாடினாலும் வாழ்வு ஒரு புதிர்தான்.வாழ்வும் வாழும்போது வளமும் அதுபோல இறப்பும் எம் கையில் இல்லை !
//இருக்கின்ற நிகழ்கால வாழ்க்கையை நல்லபடியாக அன்புடனும் , யார் மனதையும் புண்படுத்தாமல் வாழலாம்.//
ஆம், அதுதான் சரி, அப்படியே செய்வோம்
இது போன்ற விபத்துக்களை படித்தாலே ஒரு வாரத்துக்கு மனதே கனத்து விடுகிறது. நம் மனம் முழுதும் இந்த செய்தியே ஆக்கிரமித்துவிடுகிறது. ஒருவரின் அலட்சியம் பலருடைய உயிரை பறித்துவிடுகிறதே.
எல்லோரின் விதியும் ஒரே நேரத்தில் முடியும்படியா கடவுள் எழுதினார். விடைதெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
அது சரிதான் வாழ்க்கை நம்ம கையில் இல்லைத்தான்....
சில கொடூர இறப்புக்களை பார்க்கும் போது பிறப்பு எதற்கு என்ற விரக்தி தோன்றும் .
இலங்கைப் போரின் கொடூரத்தால் இறந்து போன எங்கள் உறவுகளின் அந்த நினைவுகள் இன்றும் எம் இதயங்களை விட்டு அகலவில்லை...
இந்த சம்பவத்தை வாசிக்கும் போது அந்த நினைவுகள் வந்தன மனதில்...
பிடிச்சிருக்கு உங்கள் படைப்பு
அப்பிடியே நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...