***இழந்த நட்பு திரும்ப வருமா? ***
என் இனிய சினேகிதிக்கு ஒரு கடிதம் ..,
க்ளாஸ்-ல (Class) எத்தனையோ பசங்க இருக்கும் போது, என்னை மட்டும் உனது நண்பனாய் தேர்ந்தெடுத்து, என்னுடன் நட்பு கொண்டு, பாசம் கொண்டு, நான் இழந்த தாயின் அன்பை திரும்ப எனக்கு கொடுத்த எனது தோழி, நீயும் நானும், காலத்தின் வேகத்தில் அவரவர் வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எந்தக் கடையின் பெயர்ப்பலகையில் உனது பெயரைக் கண்டாலும், உன் பெயரை யார் உச்சரித்தாலும் இன்னமும் உனது உருவம் தான் கண் முன் வருகிறது. ஒரு நாள் உனது பிறந்த நாள் பரிசாக நான் எழுதிக் கொடுத்த கவிதையைப் படித்து, நீ வடித்தக் கண்ணீர் சொன்னது உன் அளவறியா அன்பை. திரும்ப அந்த கல்லூரி காலத்து, நட்பு கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு இன்னமும் மனதில் இருக்கிறது. உனக்கு எழுதிக் கொடுத்த கவிதையை இந்தப் பதிவில் வெளியிடுகிறேன் (சில வரிகளை எடுத்து விட்டு). இப்போது, உன் முகவரிகூட எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு சூழலில் இந்த பதிவை நீ படிக்க நேரலாம். அப்போதும் நிச்சயம் நீ நினைப்பாய் நம் கல்லூரி காலத்து நட்பின் மேன்மையை.
அந்தக் கவிதைப் பாடல்,
அன்பும் நீ ! அறிவும் நீ !
அழகான பெண்ணும் நீ !
குறும்பும் நீ ! குழந்தையும் நீ !
குணத்தில் கோபுரமும் நீ !
அன்னம் நீ ! அன்னையும் நீ !
அழியாத செல்வமும் நீ !
சிரிப்பும் நீ ! சிந்தனையும் நீ ! - என்னைச்
சீர்திருத்தும் சிற்பியும் நீ !
பண்பும் நீ ! பாசமும் நீ !
பயமில்லா பதியும் நீ !
கனிவும் நீ ! கண்டிப்பும் நீ !
கலையாத கனவும் நீ !
இன்பம் நீ ! இனிப்பும் நீ !
இன்னிசையின் சங்கீதமும் நீ !
நதியும் நீ ! நட்பும் நீ !
நம்பிக்கையைத் தருபவளும் நீ !
பெருமை நீ ! பேறும் நீ ! - உன்னைப்
பெற்றவளின் புண்ணியமும் நீ!
சாதனையும் நீ ! சரித்திரமும் நீ !
சண்டை போடாத சகோதரியும் நீ !
கருத்தும் நீ ! கவிதையும் நீ !
கலங்கரையின் விளக்கும் நீ !
திங்கள் நீ ! மங்கலமும் நீ !
திகட்டாத அன்பைத் தருபவளும் நீயே !
********************************************************
9 comments:
உங்களுடைய பிரியமான தோழி ரொம்ப ரொம்ப அன்பானவங்கன்னு தெரியுது. நீங்க ரொம்ப மிஸ்பண்றீங்க என்பதும் உங்க கவிதையிலேயே தெரிகிறது.
உங்கள் தோழியை விரைவில் நீங்கள் சந்திக்க வாழ்த்துக்கள்.
திருமணத்திற்கு பின் யாரையும் சுலபமாய் கம்யுனிகேட் பண்ண முடியறதில்லை. பெண்களுக்கு கான்டாக்ட் நம்பரிலிருந்து அட்ரஸ் வரை மாறுகிறதா? சுலபமா தொடர்புகொள்ள முடிவதில்லை. எப்பவாவது பார்க்க நேர்ந்தால் முதலில் கண்ணீர்தான் எட்டிப்பார்க்கும்.அப்புறம்தான் பழங்கதை எல்லாம் . இல்லையா?
நான் உங்க ஏரியா பக்கம் வருவதில்லை என்று கூறியிருந்தீர்கள். நீங்க புது பதிவு போடுவது எனக்கு தெரிவதில்லை என்பதே உண்மை.
ஐயையோ எப்படி அருமைத்தோழியை இழந்தீங்கள்
மீண்டும் உங்கள் தோழியுடன் இணைந்திட வாழ்த்துக்கள்
vazhga valamudan
கருத்தும் நீ ! கவிதையும் நீ !
கலங்கரையின் விளக்கும் நீ !
திங்கள் நீ ! மங்கலமும் நீ !
திகட்டாத அன்பைத் தருபவளும் நீயே !
கருத்துள்ள அருமையான கவிதை தோழியை மீட்டுக்கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
இப்படிப்பட்ட இனிய நட்பு எப்படித் தவறிப்போனது.தேடுங்கள்.கிடைப்பார் !
பெண்களால் திருமணம் செய்த பின்பு நட்பு தொடறமுடியவில்லை..
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...