*** ரசனை ***
முன்பெல்லாம்,
கடற்கரை மணலில்,
நுரையோடு வரும்
அலைகள் என் பாதத்தை வருடி விட்டு
செல்லும் போது,
மனது ரசிக்கும்.
இன்னொருமுறை என் பாதத்தை வருட
வருவாயா? என
ஏங்கும்.
கடற்கரை மணலில்,
நுரையோடு வரும்
அலைகள் என் பாதத்தை வருடி விட்டு
செல்லும் போது,
மனது ரசிக்கும்.
இன்னொருமுறை என் பாதத்தை வருட
வருவாயா? என
ஏங்கும்.
அப்படி ரசித்த அலையை,
உன் கை விரல்களைப் பிடித்து,
கடற்கரை மணலில் நடக்கும் போது,
பாதத்தின் நினைப்பை எப்படி மறந்தேன்?
பல முறை என் பாதத்தை
அலை வருடிச் சென்று, எனக்கு நினைவூட்டியும்,
என்மனம் உன் விரல்களைப்
பிடித்துக் கொள்ளத்தான் நினைக்கிறதே?
காதல் எதனையும் மாற்றும்.
அறிந்திருக்கிறேன்.
ஆனால்,
ரசனையையும் மாற்றுமோ?
உண்மைதான்.
இப்போதுதான் புரிந்தது,
காதல் எதனையும் மாற்றும்.
ரசனையையும் மாற்றும்.
இன்னமும் என் பாதத்தை
அலை வருடிச் செல்கிறது,
ஆனால் ரசிக்க முடியவில்லை.
காரணம்,
என் கரத்தைப் பிடித்த உன் விரல்கள்
இன்று,
இன்னொருவனின் கரத்திற்க்குள்.
மௌனமாக இருந்த என் மனதிடம்,
அருகில் வந்த,
அலை சொன்னது..,
யார் உன்னை கை விட்டாலும்,
நான் உன்னை வருடிக் கொண்டுதான் இருப்பேன்,
அழுகின்ற குழந்தையை வருடும் தாய் போல.
*************************************************************
13 comments:
அலை சொன்னது..,
யார் உன்னை கை விட்டாலும்,
நான் உன்னை வருடிக் கொண்டுதான் இருப்பேன்,
அழுகின்ற குழந்தையை வருடும் தாய் போல.
அலை தொட்ட பாதம்
கவலை தொட்ட மனம்
வலியின் வெறுமையை
வலிமையாய் சொன்ன விதம்
அருமை குணா
வாழ்வு சில இடங்களில் ஆணி கொண்டு அறைந்தபடிதான்.சிலுவைகள் சுமப்பாதலும் ஒரு சுகம் !
//காதல் எதனையும் மாற்றும்.
ரசனையையும் மாற்றும்.//
உண்மைதான்.அழகிய வரிகள்
அலை சொன்னது..,
யார் உன்னை கை விட்டாலும்,
நான் உன்னை வருடிக் கொண்டுதான் இருப்பேன்,
அழுகின்ற குழந்தையை வருடும் தாய் போல.
Nice..
கடைசி முன்று வரிகள்
ரசனைக்கும் பொருந்துகிறது
தாயின் சிறப்பையும் சொல்லிப்போகிறது
நல்ல ரசனையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//அலை சொன்னது..,
யார் உன்னை கை விட்டாலும்,
நான் உன்னை வருடிக் கொண்டுதான் இருப்பேன்,
அழுகின்ற குழந்தையை வருடும் தாய் போல.//தொடர வாழ்த்துக்கள்
இயற்கை நம்மிடம் காட்டும் அன்பைக்கூட சக மனிதர் காட்டுவதில்லை..ஆனாலும் நாம் இயற்கையை மதிப்பதில்லை என்ற ஒரு கோணத்தையும் தருகிறது கவிதை. அருமை.
என்ன சார் லவ் பண்ணுறீங்களா? இல்லை பண்ணினீங்களா?
மௌனமாக இருந்த என் மனதிடம்,
அருகில் வந்த,
அலை சொன்னது..,
யார் உன்னை கை விட்டாலும்,
நான் உன்னை வருடிக் கொண்டுதான் இருப்பேன்,
அழுகின்ற குழந்தையை வருடும் தாய் போல.
very very pretty............
i like this poem...............
can you come my said????????????
காதல் எதனையும் மாற்றும்.
ரசனையையும் மாற்றும்.//
நல்ல ரசனை...அருமை..
சூப்பர் கவிதை.
அவள் கிடக்கிறாள் நான் இருக்கிறேன் உன்னை எப்போதும் தழுவ என்கிறது கடல் அலைகள்.
ஆனால் அவளைத் தழுவத்தானே நம் மனம் அலை பாய்கிறது!
அதுதான் காதலுக்கும் ரசனைக்கும் உள்ள ஸ்பெஷாலிடியே.
அதெல்லாம் அந்தக் கடல் அலைகளுக்குத் தெரியாது.
யாரை வேண்டுமானாலும் தழுவிக்கொள்ளும், நீங்கள் சொல்லும் அவளைப்போலவே.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை... காதல் போனால் மற்றொருக் காதல்
காதல் எதனையும் மாற்றும்.
அறிந்திருக்கிறேன்.
ஆனால்,
ரசனையையும் மாற்றுமோ?//
உலகையே மாற்று காதல் ரசனையை மாற்றாதா என்ன...
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...