Wednesday, June 29, 2011

மற்றவை - First Kiss

**முதல் முத்தம் (First Kiss)**



து என்னங்க.. First Kiss?.. குழந்தையா இருக்கும் போது, எத்தனை பேருக்கு முத்தங்களை கொடுத்திருப்போம்...வாங்கியிருப்போம்..(ஆண்,பெண் பேதம் பார்க்காம). தினமும் அட் லீஸ்ட் ஒரு முத்தம் கூட கொடுக்காம இருக்க முடியாது. குழந்தையிடமிருந்து நிறைய முத்தம் வாங்கியது அல்லது கொடுத்தது யார்?அப்பாவா?அம்மாவா? என்று ஒரு பட்டிமன்றம் கூட வைக்கலாம். பட்டிமன்றத்தில் பேசுபவர் நிச்சயம் ஒரு திருமணமானவராக இருக்கவேண்டும். அப்பதான் நியாயமா பேசமுடியும்.




இப்படி பிறந்தது முதல்.. , நிறைய முத்தங்களை கொடுத்து, வாங்கியிருப்போம்.  அப்படின்னா First Kiss  அனுபவம் எப்போ கிடைச்சது என்று ஒரு கேள்வி கேட்டால்,  பெரும்பான்மையானவர்களின் பதில் "காதலிக்கும் போது தான் கிடைச்சது". இந்த பதில் எப்படி வந்தது?.

குழந்தையாக இருக்கும் போது கிடைத்த உம்மா first kiss  கிடையாதா? காரணம் என்ன? தெரிந்தவர்கள் சொல்லவும்.



என்னடா இன்னிக்கு கொஞ்சம் இப்படியொரு தலைப்புல பதிவு எழுதியிருக்க? என்று நண்பர்களும்/நண்பிகளும் யோசிக்கலாம்.

என் நண்பன் ஹரிஸ் அனுப்பிய  இந்தக் குறும் பட வீடியோவைப் பார்த்த பின் "அட இதப்பத்தி கொஞ்சம் எழுதலாமே?" என்று நினைத்து, பதிவை எழுதியுள்ளேன். இப்படியொரு வீடியோவை அனுப்பிய என் நண்பனுக்கு மனமார்ந்த நன்றி. (உன் மேல கொஞ்சம் வருத்தம். "ஏன் எப்போதுமே என் பதிவிற்கு நெகட்டிவ்வான கமெண்ட்ஸ் அனுப்பற?". பட் உன்னோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்குடா?)


 
கீழே உள்ள குறும் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்தது.

ஹீரோ - நம்ம மாதவன் மாதிரி இருக்கார். நடிப்பு அருமை. அதிலும் பார்க்கில்
                  கேர்ள்ஃபிரண்டுக்கு முத்தம் கொடுக்க முயலும் காட்சியில் நடிப்பு 
                 சூப்பர். (ஹீரோ, " நீங்க சினிமாவில் ட்ரை பண்ணுங்க. மாதவனுக்கு 
                 போட்டியா வரலாம்).
ஹீரோயின் - பார்க்- சீனில் வரும் பொண்ணு..நைஸ்..
                    ( நடிப்பிலும், சிரிப்பிலும்..ஹீரோவைப் பார்க்கும் பார்வையிலும்).
                   மத்த ஹீரோயின்ஸ் ஓகே ரகம்.

நீங்களும் பாருங்க..



ஒரு காட்சியில் கன்னடத்தில் பேசுகின்றனர் அதன் உரையாடல் இதுதான்

Girl: This part is very tough right? (repeats again)
Girl: What are you thinking?
Guy: Nothing. Girl: Hey, tell me.
Guy: Nothing.
Girl: Ok.
Guy: Wouldn't some one disturb us here?
Girl: No.
Guy: Suddenly parents giving a visit?
Girl: No.
Guy: No?
Guy: (smiles) Thanks.
Guy: Actually, I want to say something, but it's secret. Can I say it in your ear?
Girl: What secret here? Say it just like that.
Guy: It's a secret. It has to be told in your ear.
Girl: Hmmm, ok.
(Guy kisses) (continued)...

ஒரு கேள்வி :
அப்பா டக்கர்-னா என்ன?

பதில்(உண்மையான) : இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகால இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :).

நன்றி - அருண்மொழித்தேவன் (ரோமியோ)


*****************************************************************


5 comments:

sure said...

I had this question "what is அப்பா டக்கர்".
But did not get a satisfying answer so far.On reading your blog i understood the meaning.Lots expected.Keep going.
-Grimm

SidhuNeenu said...

ok nice

ம.தி.சுதா said...

2 தான் பார்த்தேன் மிகுதி அப்புறம் தான் அருமையாக உள்ளது நன்றி..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம்...

அப்பா டக்கர் குறித்த தகவல் அருமை..

http://sivaayasivaa.blogspot.com

thillu said...

I think the following could have been avoided:)

இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :).

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...