* WiTricity *
WiTricity (Wireless Electricity) என்ற பெயரில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் (massachusetts) உள்ள நிறுவனம், கம்பில்லா மின்சாரத்தை வழங்கும் ஒரு காயில்(Coil) போன்ற ஒரு டிவைஸை(Device) கண்டுபிடித்திருக்கின்றனர்.
MIT -ல் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். அந்த கண்டுபிடிப்பின் காப்புரிமை(Copyrights)-யையும் வாங்கிவிட்டனர்.
அவர்கள் கண்டுபிடிப்பு இதுதான்.
மின்சாரத்தை ஒரு காயில்(Coil) வழியாக கடத்தும் போது, அந்த காயிலைச் சுற்றி எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்(Electro magnetic Field ) உருவாகிறது. அந்த எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்-ஐ இன்னொரு ரிசீவர்(Receiver) மூலம் பெற்று மின்சாரமாக மாற்றி சிறப்பான வகையில் தேவையான Frequency-ல் அனைத்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் கேபிள்கள் இல்லாமலே மின்சாரத்தை பெற முடியும்.
இதனை நமது வீட்டில் சீலிங்(Ceiling) -ல் பொருத்திக் கொண்டால் போதும், வீட்டிலிருக்கும் அனைத்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் கேபிள்கள் பொருத்தாமலே மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம்.
பேட்டரியை பயன்படுத்தும் செல்போன், லேப்டாப், எலக்ட்ரிக் கார்கள் அனைத்துக்கும் சுலபமான முறையில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இன்றைய உலகில் பாப்புலராக உள்ள L.C.D, LED T.v க்கும் இனி கேபிள்கள் இல்லாமல் சாதரணமாக சுவற்றில் மாட்டி வைத்துக் கொண்டு டி.வி பார்க்கலாம்.
இந்தக் கண்டுபிடிப்பில் எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்(Electro magnetic Field ) -ஐ பயன்படுத்தி மின்சாரத்தை பெறுவதால் 100% பாதுகாப்பு உள்ளது என்று கண்டுபிடிப்பாளர்கள் உறுதி கூறுகின்றனர்.
இதனைப் பற்றிய விளக்கத்தை கீழே வரும் விடியோவில் பாருங்கள்.
Ref : http://www.witricity.com/
***************************************************************
7 comments:
பகிர்வு அருமை. விரைவில் கால்பதிக்க பிரார்த்திப்போம். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ஆகா.. நாட்டில் மின்சாரம் ஒரு பிரச்சினையாய்
இருக்கின்ற இந்த தருணத்தில் இது நம்நாட்டிலும்
நடைமுறைக்கு வந்தால் உபயோகமாக இருககும்.
காத்திருப்போம்.
நன்றி...
அப்படியென்றால் இது நமக்கு பயன்படும்...
புதிய தகவல்..
புதிய தகவல் அறிந்து கொண்டேன். சீக்கிரதில் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும். நல்ல பகிர்வு நன்றி குணா.
நல்ல தகவல்
எத்தனை முயற்சிகளின் மத்தியில் பல கண்டுபிடிப்புக்கள். அனைத்தும் தேவையே. எதிலும் தீமை இருக்கும். ஆனாலும் அவசியமாகவும் படுகின்றது. எம்மை வந்தடையக் காலங்கள் எடுக்கும் என்று நம்புகின்றேன். தகவலைத் தேடித்தரும் உங்கள் பணிக்கு நன்றி
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...