Sunday, July 03, 2011

எ.பி.க - 6

கொஞ்சம் பர்சனல் வேலை இருப்பதால், நாளைக்கான பதிவை இன்றே வெளியிடுகிறேன்.

ஒரு குழந்தையின் மனம் இப்படியெல்லாம் பேச நினைக்கிறது. படித்தபின் எனக்கு ரொம்ப பிடித்துப் போயிற்று.

                                                  * இயலாமை *


 அவளை பார்க்கும்போது
சொல்ல நினைக்கிறேன்...
அவள் சிரிக்கும்போது
சொல்ல நினைக்கிறேன்...
அவள் என்னை முத்தமிடும்போது
சொல்ல நினைக்கிறேன்...
ஆனால் சொல்ல
முடியவில்லை!!!
கடவுளே...
எனக்கு சீக்கிரம்
பேசும் சக்தியை கொடு...
அவளை ''அம்மா"
என்றழைக்க...

நன்றி - அறிவொளி

தெருவில் சில நேரம் இந்தக் காட்சியை நாம் ஒவ்வொருவரும் பார்க்க நேரலாம். ஒரு சின்னஞ் சிறிய கயிற்றில் குட்டிப் பெண் நடக்கும் போது , நம் மனம் அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று பயக்கும். ஆனால் அவளுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. இன்றைக்கு எவ்வளவு வசூலாகும் என்பதுதான் கவலையாக இருக்கும். அவளைப் பற்றிய ஒரு கவிதை. எனக்கும் பிடித்தது.
 
                                               * பாசபிணைப்பு *


பாசெமெனும் கயிறுகளால்
பிணைக்கப்பட்ட உறவுகளை
வேஷமிட்டு கயிற்று மேல்
வெளிப்படுத்தும் வேதாந்தி

ஆட்டுவிக்கும் பரம்பொருளை
அவ்வப்போது அறிவதுபோல்
காட்டிநிற்கும் இவள் சிரிப்பு
கவலைகளின் மறுபதிப்பு


நன்றி - யுகபாரதி************************************************************

18 comments:

vidhya said...

very nice your poem. keep it up.picture very nice.

சி.பி.செந்தில்குமார் said...

என்னது பர்சனல் வேலையா? அப்போ நாளை மறுநாள் கில்மா பதிவா? ஹா ஹா

ஹேமா said...

நல்ல கவிதைகள் தேடி எடுத்திருக்கிறீர்கள் குணா !

இராஜராஜேஸ்வரி said...

ஆட்டுவிக்கும் பரம்பொருளை
அவ்வப்போது அறிவதுபோல்
காட்டிநிற்கும் இவள் சிரிப்பு
கவலைகளின் மறுபதிப்பு///

அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான பகிர்வு நன்றி

மாலதி said...

//எனக்கு சீக்கிரம்
பேசும் சக்தியை கொடு...
அவளை ''அம்மா"
என்றழைக்க...//
அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

koodal bala said...

அம்மா கவிதை ........சான்சே இல்லை .....அருமையான பகிர்வு !

Harikrishna said...

Nice Poem By Mr. Aarivoli

Harikrishna said...

Guna my suggestion, Instead of putting Film star images, please put some nice thoughts of Vivekanada / Ramakrishna etc with Photos, or else put some good God images.

We like your blog very much, consider my request.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கவிதைப் பகிர்வுகள் அருமை..குணா

vidivelli said...

சகோ அம்மா கவிதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு,,,,,,,,,,
அற்புதம்....
உங்கள் பகிர்விற்கு நன்றியுடன்,வாழ்த்துக்களும்..


நண்பா இக்கரைக்கு வாறனானே......அக்கரையையும் இடையிடை எட்டி பாருங்க........

குணசேகரன்... said...

Dear Harikrishna , i agreed,and i will do as per your request.thanks for your comments.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

இணைந்தோம்..
இணையுங்கள்..
இணைவோம்..

சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

உங்கள் முகப்பின் படங்களை பார்த்ததும் தோணியது,

அவன் பெரிய ஆளுப்பா..
படம் காட்றாம்பா - னு சொல்வாங்களே
அதானா ? இது ?

சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//அவள் என்னை முத்தமிடும்போது
சொல்ல நினைக்கிறேன்...
ஆனால் சொல்ல
முடியவில்லை!!!//

பார்றா..
இந்த லெவலுக்கும் போயுமா சொல்லமுடியலே ?
ஒரே டாவா இருக்கேனு நினைச்சிக்கிட்டே படிச்சா..

சூப்பர் திருப்பம்..

அவள் அம்மா..
நான் குழந்தை..

வெரிகுட் வெரிகுட்..
அருமையான சிந்தனை..

வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முதல் கவிதை சூப்பர்ப் செலக்சன்..... பகிர்வுக்கு நன்றி!

மகேந்திரன் said...

கவிதைகளின் தொகுப்பு
அருமையாக இருக்கிறது
இன்று முதல் உங்கள் பதிவுகளின் வாசகன்

அன்பன்
மகேந்திரன்

http://www.ilavenirkaalam.blogspot.com/

RAMVI said...

மிகவும் அழகான கவிதைகளை தேடி எடுத்து பகிர்ந்துள்ளீர்கள் குணா.. நன்றி..

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...