Saturday, July 23, 2011

மற்றவை - நிகழ்வுகள்

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பதிவுகள் எழுத முடியவில்லை. இப்போது ஓ.கே. இனி பதிவுகள் தினமும் எழுதப்படும். எனது உடல் நிலையை விசாரித்த அனைத்து இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி...!

சமீபத்தில் நிகழ்ந்து வரும்  பரபரப்பான விசயங்கள் இவைதான்..

தமிழகத்தில் குழந்தைகள் மாயம்:
Eg. படங்கள்

மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 250க்கும் மேற்பட்டோர் மாயமாவதாக காவல் துறைக்கு தகவல்கள் வந்திருக்கிறது. குழந்தைகளைக் கடத்துபர்களுக்கு அனாதை ஆசிரமங்கள் தான் முதல் குறியாக உள்ளது. அப்புறம் அரசு மருத்துவமனைகள். அதற்கப்புறம் தெருக்களில் விளையாடும் குழந்தைகள். சென்னை, மதுரை, பாண்டிச்சேரி போன்ற மாவட்டங்களில் குழந்தை கடத்தல் அதிகமாக நடைபெறுவதாக காவல்துறையினர் சொல்கின்றனர்.
 

சிறுவர்களை கடத்தி வெளிமாநிலத்தின் கம்பெனிகளுக்கு கொத்தடிமைகளாக அனுப்பப்படுவது அதிகரித்துள்ளதாம். அதனால் புரோக்கர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் வரை கமிஷன் கிடைக்கிறது என்ற விவரம் கிடைத்துள்ளது.
எனவே பெற்றோர்களே இந்த விசயத்தில் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருங்கள்.
மேலும் போலி காப்பக அமைப்புகளை உருவாக்கியும் நூதன முறையில் குழந்தைக்கடத்தல்  நடைபெறுகிறது. சமீபத்தில் மெரினா பீச்சில், கூட்டம் அதிகமாகக் காணப்படும் மாலை நேரத்தில் ஒரு சிறுமி காணாமல் போய், பிறகு போலிசார் மீட்ட சம்பவம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? பெண்களுக்கும் இந்தக் கடத்தலில் பங்கு இருக்கிறது. எனவே பயணம் செய்யும் போது, முன் பின் அறிமுகமில்லாத பெண்களிடம் உங்கள் குழந்தைகளை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

IRCTC இணையதளம்  ஹேக்(Hack) செய்யப்பட்டு விட்டது:

த்தனை நாளாக காலை 8 மணிக்கு கூட IRCTC-ல் தட்கல் டிக்கெட் புக் பண்ண இயலாமல் போனதன் காரணம் சமீபத்தில்தான் கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் IRCTC வெப் சைட்டை ஒரு சாப்ட்வேர் மூலம் ஹேக்(Hack) செய்து அதன் சர்வீசை மற்றவர்கள் பெறுவதை சில நேரங்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பின் அனைத்து இ-டிக்கெட்டுகளையும் புக் பண்ணி, வேலை முடிந்த பிறகுதான் மற்றவர்களுக்கு இணையதளத்தை ஆக்செஸ்(access) பண்ண வழி செய்திருக்கிறார்கள். அப்படி புக் பண்ணிய அந்த டிக்கெட்  ஒவ்வொன்றையும் அதிக விலைக்கு விற்று நூதன முறையில் பணம் சம்பாதித்த சப்-ஏஜண்ட் சூரஜ் ஹரிபிரசாத் யாதவ் என்பவனை அவனது லாப்டாப் மற்றும் மொபைல்போன் உடன் கையும் களவுமாக பிடித்திருக்கின்றனர்.

ஒருவேளை Internet Banking மூலம் பணம் Transaction செய்வதையும் ஹேக் செய்வாங்களோ? பயமாகத்தான் இருக்கிறது.

எண்ணைய் சப்ளைக்கு ஆப்பு- ஈரான் எச்சரிக்கை:

 
ரான் நாட்டில் இருந்து அதிக கச்சா எண்ணைய் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது. ஒவ்வொரு மாதமும் ஈரானில் இருந்து 1 கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணைய் இந்தியா பெறுகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா எண்ணைய் தேவையில் 12 சதவீதத்தை ஈரான்தான் பூர்த்தி செய்கிறது.

இந்த கச்சா எண்ணைய்க்காக ஈரானுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய கடன் 5 பில்லியன் டாலர் ( ரூ.22,500 கோடி ). இந்தக் கடனை அடைக்காமல் இழுத்தடிப்பதால் கடுப்பான ஈரான், இனி இந்தியாவுக்கு எண்ணெய் கிடையாது என அறிவித்துள்ளது.


 
ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தத் தொகை வந்தாகவேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆகஸ்டிலிருந்து எண்ணெய் சப்ளை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

பெட்ரோலின் உண்மையான விலையைக் காட்டிலும் அதன் மீது அரசு விதித்துள்ள வரி இரண்டு மடங்கு அதிகம். அந்த வரியையும் மக்களாகிய நாம்தான் கொடுத்து வருகிறோம். இதனைப் பற்றி விளக்கமாக பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் பெட்ரோல் - சில தகவல்கள்
அந்த வரியோடு கூடிய ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் நாம் கொடுக்கும் அனைத்துப் பணமும் எங்குதான் போகிறது? ஒரு வேளை ஈரான் எண்ணெய் சப்ளை நிறுத்தினால், அதை காரணம் காட்டியும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் ஆகஸ்ட் மாதம் என்ன நடக்கிறதென்று?

ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி; கலைஞர் குடும்பத்திற்குள் பூசல் ஆரம்பம்:

 
சிறையில் இருக்கும் கனிமொழியைச் சந்தித்த அழகிரி அவருக்கு ஆறுதல் சொன்ன போது, சட்டப் பிரிவு 164-ன் கீழ், 2G-பணம் கலைஞர் டி.விக்கு கைமாறிய விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு என்று வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி வலியுறித்தியுள்ளார். இந்த விசயம் ஸ்டாலின் காதுக்கு எட்டியதும் தந்தை கலைஞரிடம் அழகிரியின் செயலை கோபத்தோடு முறையிற்றிருக்கிறார். "என்னை உள்ளே அனுப்பி விட்டு, கட்சியைக் கைப்பற்ற மூத்த பிள்ளை திட்டமிடுகிறாரோ?" என்று கலைஞரிடமும், தயாளு அம்மாளிடமும் சொல்லியிருக்கிறார். 2G-பணம் கலைஞர் டி.விக்கு கைமாறிய விவகாரத்தில் பாவ்லாவை 2 முறை சந்தித்து, பரிவர்த்தனை மேற்கொண்டது ஸ்டாலின்தான். அதனால்தான் அவர் பயப்படுகிறார்.

என்னைப் பொறுத்தவரை நிர்வாகத்திறமையில் சிறப்பாக பணியாற்றும் வல்லமை அனுபவசாலியான ஸ்டாலினுக்குத் தான் உண்டு என்று நினைக்கிறேன். அழகிரிக்கு நிர்வாக விசயத்தில் அனுபவம் ரொம்ப ரொம்பக் கம்மி.

எது எப்படியோ, அளவின்றி ஆட்டம் போட்ட கலைஞர் குடும்பத்தில் இப்போது பூசல் ஆரம்பமாகியிருக்கிறது. அமைதியாக நாட்களைக் கழிக்கும் வயதில்,  நாற்காலி ஆசையால் கிடைத்த வெகுமதிகளை கலைஞர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.


********************************************************

11 comments:

R.Gopi said...

தலீவா....

ஜூப்பரா எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சு இருக்கீங்க....

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அட இத்தனை குழந்தைகள் காணாமல் போகிறார்களா ?

குழந்தைகள் பாதுகாப்பு - னு ஒரு அமைப்பு இருக்காமே ?

http://sivaayasivaa.blogspot.com/

vidhya said...

your post very information, and real
thanks
keep it up
All the best,

இராஜராஜேஸ்வரி said...

ஒருவேளை Internet Banking மூலம் பணம் Transaction செய்வதையும் ஹேக் செய்வாங்களோ? பயமாகத்தான் இருக்கிறது.

கவி அழகன் said...

அருமையான பதிவு தோழரே

# கவிதை வீதி # சௌந்தர் said...

இவ்வளவு தகவல்கள் ஒரே இடத்தில்...

நிறைய விஷயங்களை தெரிந்துக் கொ்ணடேன்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை சரிசெய்யுங்க குணா...

நிகழ்வுகள் said...

///என்னைப் பொறுத்தவரை நிர்வாகத்திறமையில் சிறப்பாக பணியாற்றும் வல்லமை அனுபவசாலியான ஸ்டாலினுக்குத் தான் உண்டு என்று நினைக்கிறேன். அழகிரிக்கு நிர்வாக விசயத்தில் அனுபவம் ரொம்ப ரொம்பக் கம்மி.
//கரெக்டு ...

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் குணசேகரன்
கடந்த ஒரு வாரமாக உங்களை பார்க்கமுடியவில்லையே?
உடல்நிலையை பார்த்துக்கொள்ளவும்.
இன்றைய பதிவைப்பார்த்தேன் .
அனைத்து செய்திகளும் ஒரேயிடத்தில்.......
ஆச்சர்யம் தான்.
கச்சா எண்ணையை வாங்கி மக்களுக்கு விற்ற பின்னர்
கிடைத்த கருவூலத்தை எங்கே வைத்திருக்கிறார்கள்????
எல்லாம் காலியா போயுடுச்சா??
வாங்கியதெல்லாம் கடன்
அப்போ விற்றதேல்லாம் ஏன்னா ஆச்சு???
என்னவோ போங்க பா...........

RAMVI said...

இந்த ஹேகிங்கு பயந்தே இவ்வளவு நாட்களாக ஆன்லயன் பாங்கிங் உபயோக படுத்தாமல் இருந்தேன்.3 மாதங்களுக்கு முன் தான் அதை உபயோக படுத்த ஆரம்பித்து இருக்கேன்,முக்கியமாக irctcக்கு தான் உபயோக படுத்துகிறேன். உங்க பதிவை பார்த்ததும் பயமாக இருக்கிறது.
தகவல்களை அருமையாக திரட்டி கொடுத்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
உங்க உடல் நிலை ந்ன்றாக தேறிவிட்டதா?

மாய உலகம் said...

தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு நண்பரே

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...