Sunday, July 10, 2011

தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date

                Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers.

ங்கள் வீட்ல பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா? இல்லைன்னா இந்த பதிவப் படிச்சு  தெரிஞ்சுக்கோங்க.காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன.  அதனால இனி உங்க வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ  அல்லது வாங்கும் போதோ முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்க. ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?
படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர்(alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது. இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின்(Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)


உதாரணத்திற்கு,

மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.
இந்தப் படத்தில் D-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2013-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

என் வீட்டில் இருக்கும் சிலிண்டரில் C-18 என்று எழுதப்பட்டிருக்கிறது .       
( அப்பாடா..! நிம்மதியாப் போச்சு..! )

டிஸ்கி:
என்னங்க...எங்க போறீங்க..கிச்சனுக்கா..பலே.பலே..இத...இததான் நான் எதிர்பார்த்தேன்..

குறிப்பு : ஹோட்டல் வைத்திருக்கும் முதலாளிகளும், சமையல் தொழிலாளர்களும் அவசியம் தெரிஞ்சுக்கனுங்க..

**********************************************************

13 comments:

sure said...

Nice.Usefull information.

vidhya said...

usefull information good

விக்கியுலகம் said...

thank you maapla!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அவசியமான + அருமையான தகவல்..

சமுதாய அக்கறைக்கு வாழ்த்துக்கள்.

இதோ கிளம்பிட்டேன்..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

A.R.ராஜகோபாலன் said...

மிகவும் அவசியமான தகவல்களை அற்புதமாய் தந்துள்ளீர்கள் குணா
நன்றி பகிர்ந்ததற்கு

கவி அழகன் said...

நல்லதா போச்சு பதிவ பாத்தது

மாலதி said...

அவசியமான அருமையான தகவல்..
நல்லதா போச்சு பதிவ பாத்தது

Ramani said...

15 வருஷமா கேஸ் பயன் படுத்துகிறோம்
உண்மையில் இந்த தகவல் தெரியாது
உடனடியாக சமயலறைப்போய் பார்த்தேன்
ஜனவரி 12 என இருந்தது மிக்க நன்றி

மகேந்திரன் said...

நண்பர் குணசேகரன்,

அருமையான தகவல்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.
பகிர்வுக்கு நன்றி.

angelin said...

பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

RAMVI said...

உங்க பதிவின் மூலம் ரொம்ப முக்கியமான தகவலை தெரிந்துக்கொண்டேன்.நன்றி குணா..

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

RAMVI said...

குணா, தங்களின் பதிவுகள் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...