Saturday, July 23, 2011

தெரிஞ்சுக்கோங்க : எந்திர பறவை-Smart Bird

         * எந்திர பறவை-Smart Bird *

னிதனின் சிந்தனைக்கு எல்லையே இல்லை. இரண்டு கற்கள் மோதிக் கொண்ட போது அவனுக்குள் விளைந்த சிந்தனைதான் நெருப்பைக் கண்டுபிடிக்கச் செய்தது. அதற்கப்புறம் எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள் இதுவரை நிகழ்ந்திருக்கிறது. ரோபோடிக்ஸ்(Robotics) துறையில் நிகழும் கண்டுபிடிப்புகள் கூட மனிதனின் விஞ்ஞான அறிவுப் புலமையை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. இயற்கையான விசயங்களைக்கூட  தங்களின் சிந்தனையாலும், அறிவுப்புலமையாலும் எந்திர வடிவில் கொண்டுவருகின்றனர். தற்போது கூட ஒரு ஆச்சர்யப்படக்கூடிய சிறப்பானதொரு கண்டுபிடிப்பை ஃபெஸ்டோ (festo) என்னும் ஒரு ஆட்டோமேஷன்(Automation) சார்ந்த கார்ப்பரேட் நிறுவனம்(ஜெர்மனி) நிகழ்த்தியிருக்கிறது.மார்கஸ் ஃபிஸ்சர்(Markus Fischer) என்பவர் தலைமையில் கடல் பகுதிகளில் வாழும் சீகல்(seagull) பறவையை மாதிரியாகக் கொண்டு ஒரு எந்திர பறவையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் எடை வெறும் 450 கிராம்தான். கார்பன் ஃபைபரைக் பயன்படுத்தி அதன் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர். 
வடிவமைப்பில் எந்திர பறவைப் போலத் தோன்றினாலும் அது பறக்கும் போது, நிஜப் பறவை கூட சந்தேகப்படும் "இது நம் இனம்தானா?" என்று. அந்த அளவிற்கு அச்சு அசல் சீகல் பறவைப் போலவே பறக்கிறது அந்த எந்திரப் பறவை. அதன் பெயர்  "ஸ்மார்ட் பேர்ட்(Smart Bird)".

முந்தைய அரசர் காலத்தில் செய்திகளைச் கொண்டு செல்ல புறாவை தூதுவனாக பயன்படுத்தினார்கள். இனி எதிர்காலத்தில் இந்த எந்திரப் பறவையும் அப்படி மாறுமா? ஆனால் நிச்சயம் உளவு சம்பந்தமான விசயங்களுக்கு இது பயன்படும்.

எந்திரப் பறவையைப் பற்றிய விளக்கமான வீடியோவைப் கீழே பாருங்கள். அறிவியலறிஞர்கள் மத்தியில் எவ்வளவு அழகாகப் பறக்கிறது. பார்த்துவிட்டு நான் ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.


 
மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தைப் பாருங்கள்.

http://www.festo.com


**************************************************

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

எந்திரப் பறவையைப் பற்றிய விளக்கமான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தமிழ் உதயம் said...

நல்ல தகவல். நிறைவான தகவல்.

மகேந்திரன் said...

தொழில்நுட்ப அறிவியலின் இன்னொரு பரிமாணம்
வியப்பாக இருக்கிறது.

vidivelli said...

வியப்பான தகவலைத்தந்திருக்கிறீங்க சகோ..
வீடியோ இன்னும் வியக்க வைக்கிறது,,,
வாழ்த்துக்கள்..

கவி அழகன் said...

அழகாய் பறக்கும் அறிவியல் பறவை
வீடியோ பார்த்து ரசித்தேன்

ஸ்மார்ட் பேர்ட்

ரியாஸ் அஹமது said...

அருமையான வீடியோ நண்பா ...நல்ல தகவல் ..

ரியாஸ் அஹமது said...

உங்க தேடல் பிரமிக்க வைக்குது ...வாழ்த்துக்கள்
தொடருங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா, புதிய தகவல்.

Ramani said...

அரிதான தகவல்
அருமையான விடியோ பதிவை தந்து
பிரமிக்கவைத்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! said...

Wonderful post Guna. Thanks!

# கவிதை வீதி # சௌந்தர் said...

புதிய தகவல்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வந்தேன்.... கொஞ்சம் பிஸி பாஸ்....

சென்னை பித்தன் said...

காணொளி அருமை!ஆச்சரியப்படத்தான் வேண்டும்! பகிர்வுக்கு நன்றி குணா!

சந்திரகௌரி said...

அருமை. நான் அறிவியலை மிக்கமெச்சுவேன். உங்கள் பதிவு ஆர்வத்தைத் தந்திருக்கிறது. வாழ்த்துகள். முத்தான முடிச்சுப் பதிவுக்கு உங்களை அழைத்திக்கின்றேன். வந்து கலந்து கொள்ளுங்கள்

Anonymous said...

முந்தைய அரசர் காலத்தில் செய்திகளைச் கொண்டு செல்ல புறாவை தூதுவனாக பயன்படுத்தினார்கள். இனி எதிர்காலத்தில் இந்த எந்திரப் பறவையும் அப்படி மாறுமா? ஆனால் நிச்சயம் உளவு சம்பந்தமான விசயங்களுக்கு இது பயன்படும்.....
true....
http://www.kovaikkavi.wordpress.com

அம்பாளடியாள் said...

ஆகா அருமையான பகிர்வு .இனி உயிருள்ள
சுதந்திரப் பறவைகளைத் தொந்தரவு செய்யத்
தேவை இல்லை இவைகளையே பறக்க விடலாம் .
பொய்யாக சுதந்திரம்பெற்ற எம் தேசத்தில் பறக்க
உகந்த பொய்யான சுதந்திரப் பறவை.இது வாழத்
தகுந்த இடம் எம் தமிழ் ஈழமோ !........பகிர்வுக்கு நன்றி சகோ.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...