Wednesday, July 27, 2011

தெரிஞ்சுக்கோங்க - மனதைத் தொட்டவர்கள்


லவசம் என்றாலே கொஞ்சம் சிரிப்புடன் "அப்டியா..! என்ன? எது இலவசமா தர்றாங்க.? எங்க தர்றாங்க?" என்று அடுத்தடுத்த கேள்வி கேட்கின்ற இந்த காலத்தில், பி. விஷ்வநாதன் (B. Viswanathan, Founder of Azhaki.com,tamil editing software) என்பவர் எழுதிய ஒரு அனுபவக் கட்டுரையைப் படித்ததும் ஆச்சர்யப்பட்டேன்.

கீழே வரும் கட்டுரை அவரைப் பற்றியதுதான்.

நேற்றைய பதிவில் ஒரு கட்டுரையை வெளியிட்டு, அந்தக் கட்டுரையை எழுதியவரை இன்று சொல்வதாக எழுதியிருந்தேன். அதற்கும் பதில் இதுதான்.

ஆங்கிலத்தில் எழுதிய அவரின் கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறேன். படியுங்கள்.

நவம்பர் 2007, 13ந் தேதியன்று, இரவு 10 மணியளவில் எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. ஒரு இனிய மென்மையான குரல் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான Azhaki என்னும் தமிழ் மென்பொருளின்(Software) பெய்டு வெர்ஷனைப் (Paid version ) பற்றிய விவரங்களைக் கேட்டது. நானும் கட்டண விவரங்களை எடுத்துச் சொன்னேன். அப்போதைய கால கட்டத்தில் அழகி தமிழ் சாப்ட்வேரை ஃப்ரிவேராகவும்(Freeware) , பெய்டு வெர்ஷனாகவும் வெளியிட்டிருந்தோம். இப்போது முழுவதும் ஃப்ரீவேர்தான்.

அப்புறம் அவரிடம் பேமெண்ட் மோட்(Payment modes) கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங்க், கேஷ், காசோலை பற்றிய விவரங்களைச் சொன்னேன். அவர் கேஷாக தருவதாகச் சொன்னார். சரி, எனது ஆபிஸுக்கு வந்து பணம் செலுத்தி பின் சாப்ட்வேரை வாங்கிச் செல்லுங்கள். "எப்பொழுது வருகிறீர்கள்", என்று கேட்டேன். அதற்கு அவர் "என்னால் வர இயலாது, கொஞ்சம் பிஸி", என்றார்.

  " சரி  உங்கள் நண்பர்களை அனுப்பி பணம் கட்டச் சொல்லுங்கள்" என்றேன் நான். அதற்கு அவர் "நான் இருக்கும் இடம் ரெட் ஹில்ஸ், இங்கிருந்து உங்கள் அலுவலகம்(டி.நகர்) ரொம்ப தொலைவு. மேலும் அவ்வளவு தூரம் சென்று வர எனக்கு நண்பர்கள் இல்லை", என்றார்.

பின்னர் நான் "நல்லது. நேரமிருக்கும் போது, நீங்களே நேரில் வாங்க" என்று பதிலளித்தேன்.

அதற்கும் அவர் "என்னால் வர முடியாது, உடம்பு பிரச்சனை" என்று தன்னைப் பற்றின விவரங்களை எடுத்துரைத்தார்.

தான் பாரலஸிஸ் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அதனால் உடம்பில் நெஞ்சுக்கு கீழே உள்ள பகுதிகள் மரத்துப் போய் செயலிழந்துவிட்டதாகவும் கூறினார்.
 
அவரின் முழுவிவரத்தையும் கேட்ட பின்னர் என் இதயம் கனத்தது. சில விநாடிகளில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "உங்களுக்கு இந்த சாப்ட்வேரை நான் இலவசமாகத் தருகிறேன்", என்றேன். அதற்கு அவர் "இலவசமாகத் தருவதாக இருந்தால் எனக்கு வேண்டாம்.பணம் செலுத்தி நான் வாங்கிக் கொள்கிறேன்." என்று பதில் சொன்னார்.
 
அவரின் பதிலைக் கேட்டு, நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். உடம்பில் எந்தக் குறையும் இல்லாத மனிதர்கள் எல்லாம் என்னிடம் பார்கெய்ன்(Bargain) செய்து ஒரு பொருளை விலைக்கு வாங்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதனா? அவரைப் பற்றி மேலும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும், அவருடன் நட்பு கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமானது. அன்று முதல் அவருடன் நான் பழக ஆரம்பித்தேன்."

மேற்கண்ட கட்டுரையை அவர் தனது இணைய தளத்தில் எழுதியிருந்தார். அவரை இன்ஸ்பயர்(Inspire) செய்தவர் வெறும் 5ம் வகுப்பு படித்தவர்தான். ஆனால் எல்லா துறையைப் பற்றி விரிவாக விவாதிப்பார். குறிப்பாக மிகவும் கஷ்டமான துறையான "குவாண்டம் ஃபிசிக்ஸ்" (Quantum Physics) பற்றிகூட நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். அவர்தான் அந்தோனி முத்து என்பவர், செல்லமாக +Ve அந்தோனி என்று நண்பர்களால் அழைக்கப் படுபவர்.. ஒரே ஒரு இடது கையை வைத்துக் கொண்டு(இடது கை மட்டும் செயலிழக்கவில்லை) அவரே  வலைதளம் (Blogg) ஆரம்பித்து அனைவருக்கும் தன் எண்ணங்களையும் கதைகளையும் சொல்லி, தன்னம்பிக்கையை வளர்ப்பவர்.  நேற்று எழுதியக் கட்டுரை கூட அவர் எழுதியதுதான்.


அவரின் வலைதளம் பார்க்க இந்த லிங்கை க்ளிக்கவும்.

http://mindpower1983.blogspot.com/

http://positiveanthonytamil.blogspot.com/

அவரைப் பற்றிய விவரங்கள்

வீடியோ:
டிஸ்கி : 2010, ஆகஸ்டு மாதம் 23ந் தேதி அவரை இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டார். மிகவும் சிரமப்படுவர்களை இறைவன் ரொம்பவும் கஷ்டப்படுத்துவதில்லை  என்று எனக்கு எண்ணத் தோன்றியது.
.

*********************************************************4 comments:

vidivelli said...

இலவசம் என்றாலே கொஞ்சம் சிரிப்புடன் "அப்டியா..! என்ன? எது இலவசமா தர்றாங்க.? எங்க தர்றாங்க?

unmaithaan sako/
nalla pathivu..
idaiyil varuththamaayum irunthathu avarukku appadiyaana nilai enrathum..
pakirvukku valththukkal..

கவி அழகன் said...

நெஞ்சு கனக்கிறது வீடியோ பார்க்கையில்

மகேந்திரன் said...

காணொளி கண்டேன்
நெகிழ்ச்சியூட்டும் காணொளி.

ரியாஸ் அஹமது said...

ok tq goood post

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...