Sunday, July 03, 2011

தெரிஞ்சுக்கோங்க - காதல் கடிதங்கள்

** காதல் கடிதங்கள் **

ன்றைய இணைய உலகத்தின் நவீன டெக்னாலஜியால் பெரிய இழப்பைச் சந்தித்த துறை தபால் துறைதான்.

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் , தினமும் மதிய நேர உணவுக்கு ஹாஸ்டலுக்கு வரும் போது, எனது ரூமுக்கு ஒரு முறை விஜயம் செய்வேன்.
அப்போதெல்லாம், ரூமின் கதவைத் திறக்கும் போது இள நீல கலரில் இன்லாண்ட் லெட்டர் தென் படும் போதெல்லாம் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் வரும். பட்  மிகவும் அரிதாகத்தான் அந்த சந்தோசம் எனக்கு கிடைத்தது. எனது நண்பர்களிடமிருந்து அல்லது உறவினர்களிடமிருந்துதான் அந்த சந்தோசம் எனது ரூமுக்கு வந்தடையும். என்னுடன் படித்த சிலருக்கு வாரத்தில் மூன்று முறையாவது லெட்டர் வரும். லவ் பண்றாங்களோ? என்ற சந்தேகம் எனக்கு வரும். கூடவே கொஞ்சம் பொறாமையும் வரும்.

சரி இப்ப எப்படி...

இன்றிருக்கும் இணைய உலகில் E-Mail கலாச்சாரமும், செல்போன் கலாச்சாரமும் நமக்கு நிறைய நன்மைகளைத் தந்து கொண்டிருக்கிறது. நொடிக்குள் நாம் அனுப்பும் தகவல், பெறுபவர்க்கு கிடைத்து விடுவதால் பெரிதாய் சந்தோசம் கிடைப்பதில்லை.

காதல் எவரையும் ஆட்டிப் படைக்கும் என்று படித்திருக்கிறேன். இந்தப் பிரபலங்களின் கடிதத்தை படிக்கும் போது இவர்களையும் காதல் எப்படி ஆட்டுவித்திருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது.. நீங்களும் படித்துப் பாருங்களேன்..

(தமிழில் யாராவது கடிதம் எழுதியிருப்பார்களா என்று தேடிப் பார்த்தேன். கிடைக்கவே  இல்லை. very Sorry. பட் இங்கிலீஸ்ல எழுதினதை தமிழில் வெளியிட்டுள்ளேன். நான் மொழி பெயர்க்கவில்லை.)

நெப்போலியன் தன் காதலி யோசபினுக்கு எழுதிய காதல் கடிதம் :அன்பே!

நேற்று போர்க்களத்தில் கடுமையான வேலை, கொஞ்சம் கூட ஓய்வில்லை.உணவோ, உறக்கமோ இன்றி ஓரு வாரமாக இருந்தும், நான் சுறுசுறுப்பாக வேலை செய்வது கண்டு எங்கள் குழுவினர் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

அது என்னால் எப்படி சாத்தியப்படுகிறது என்று எல்லோரும் திகைத்தனர். என்ன?..உனக்கு ஏதாவது புரிகிறதா? நீ எழுதும் கடிதங்கள் என் சட்டைப் 
 பையிலேயே இருப்பது வழக்கம் சோர்வு ஏற்படும் போது நான் உன் கடிதங்களை எடுத்துப் படிப்பேன்.

அவ்வளவுதான் சோர்வு பறந்துவிடும் புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும்
அப்புறம் பசியாவது தாகமாவது! ஒரு விஷயம் என் துயரங்களைக் கண்டு நீ மனதை அலட்டிக் கொள்ளக்கூடாது.

துன்பம் என் நண்பன் அதை நான் வெறுக்கமாட்டேன். உலகத்தில் அபார சாதனைகளைச் சாதிப்பதற்காகவே பிறந்த எனக்குத் துன்பம்தான் தூய நண்பன். இன்பம் என் விரோதி. அது என்னைச் சோம்பேறியாக்கி விடும் அதை நான் வெறுக்கின்றேன் இரவில் அதிக நேரம் கண் விழிக்காதே, உடம்பை ஜாக்கிரதையாக கவனித்துக்கொள்.

அன்புள்ள

நெப்போலியன்
====================================================


காதலி ஃபானி பிரானுக்கு (Fanny brawne)ஆங்கிலக் கவிஞர் ஜான்கீட்ஸின்
(john keats) கடிதம்:

என் இனிய காதலியே!

உலகத்தில் எந்தப் பொருளுக்கும் உனது காதல் கடிதத்திற்க்கு உள்ள சக்தி கிடையாது என்றே நினைக்கிறேன். எனது நெஞ்சிலே உனது வடிவம்தான் நிரம்பி நிற்கிறது உனது அதரங்களிலே நான் சுவைப்பது காதல். உனது நடையழகிலே நான் சொக்கி நிற்கிறேன்.


உன் காதல் கடித்தில் மின்னுகின்ற உன் அழகிய கையெழுத்தையே ஆர்வத்துடன் முத்தமிட்டேன், இன்புற்றேன். அதை தேனாகவே கருதிச் சுவைத்தேன். நாம் தனியாக ஒரு நாளை இனிய இன்ப அதிர்ச்சியில் செலவழிப்போம்.

நீ எனக்கு ஓராயிரம் முத்தம் வழங்கி இருக்கின்றாய், இன்னும் ஒரு முத்தம் தரமாட்டாயா? நீ உனது காதல் கரங்களில் என்னை அணைத்துக்  கொள்ளாவிட்டால், என் தலையில் இடி விழுந்து நான் சிதறிப்போவதே நலம்!

====================================================
கால் மார்க்ஸ் எழுதிய காதல் கடிதம்:


சில வரிகள்...

கெஐட் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டேன். இப்படி ஒரு பதவியில் அமர்ந்து நிர்வாகம் செய்வதே எனக்குப் பிடிக்காத விஷயம். இப்படி ஒரு பிடிக்காத விஷயத்தில் நான் ஈடுபட்டதற்குக் காரணம் நீ தான். என் பிரிவு உன்னை எவ்வளவு தூரம் வாட்டுகிறதென்று எனக்குத் தெரியும்.

வாழ்கை நடத்துவதற்கு ஏற்ற பொருளாதாரச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் உன்னை மணப்பதென்பது என் தீர்மானம். என்பது உனக்குத் தெரியும். உன்னை மணக்க வேண்டும் என்ற நினைவு பலமாக உந்தியதால் தான் கெஐட் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். என் பொருட்டு பல இன்னல்களை அனுபவிக்கின்றாய் எனக் கேள்விப் பட்டேன். வருத்தப்படவில்லை, மகிழ்ச்சி அடைந்தேன். இதுதான் உண்மை வாழ்க்கை. பிறர் பரிகாசம் செய்கிறார்களே என்று அஞ்சாதே, உன் மனதை உறுதிப்படுத்திக் கொள்.

உன் நினைவில் இருக்கும்

காரல் மார்க்ஸ்

====================================================
டால்ஸ்டாப் தன் காதலிக்கு:

 
சில வரிகள்...

சோன்யா!

கடந்ந மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் நான் பேசிவிட வேண்டும் என்று தீர்மானிக்கின்றேன்,நான் ஏன் அதைப் பேசவில்லை; என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்பவற்றையெல்லாம் சிந்திக்கின்றேன்.

இந்தக் கடிதத்தை என்னிடமே வைத்துக்கொண்டு, மறு முறையும் எனக்கு பேசத் துணிவில்லை எனில் இதைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றேன். உண்மையாக்க கூறு நீ எனது மனைவியாக விரும்புகிறாயா? உனது பதில் நெஞ்சின் ஆழத்திலிருந்து வரவேண்டும். தீர்க்கமாக சிந்தித்து விடை கொடு. உன்னை நான் நேசிக்கும் அளவுக்கு நான் கணவன் என்ற முறையில் உன்னால் நேசிக்கப்படாவிட்டால், அது மிகவும் கொடியது.

====================================================

மாக்ஸிம் கார்க்கியின் காதல் கடிதம்:

 
சில வரிகள்...

அன்புள்ள ஓல்கா!

உனக்கு கடிதம் எழுதவேண்டும் என்ற ஆசை என் மனத்தில் எழும்போது கூடவே கொஞ்சம் வேதனையும் எழுகிறது, உனக்குப் படிக்கத் தெரியாது. என் அன்புக் கடிதத்தைப்புரிந்து கொள்ள நீ வேறுயாருடைய உதவியாவது நாடவேண்டும் இந்தத் தடங்கலின் காரணமாக என் இதய உணர்ச்சிகளை அடக்கிக் கடிதம் எழுதவேண்டியிருக்கிறது உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள அழகுமாதிரி கல்வியும் இருக்கக்கூடாதா, என்று என் மனம் ஏங்குகிறது.ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னிடம் கல்வி இருக்கிறது,உன்னிடம் அழகு இருக்கிறது இரண்டும் ஒன்று சேர்ந்தால் அதுவே ஓர் ஒப்பற்ற சக்தியாகத் திகழும். உன் நீலநிறக் கண்களில் வீசும் இன்ப ஒளி கல்வியை விட உயர்ந்த்து என்பது என் கருத்து.

அன்புள்ள

கார்க்கி

 
[இவற்றில் எனக்கு பிடித்தது நெப்போலியனின் காதல் கடிதம்.]**************************************************************

10 comments:

ரியாஸ் அஹமது said...

அருமையான பதிவு .....அனைவரின் காதிலில் உள்ள நேர்மை பிடித்து இருக்கு ...இனி தொடர்ந்து வருகிறேன் நண்பா

இராஜராஜேஸ்வரி said...

அழகான பகிர்வு. பாராட்டுக்கள்.

ஹேமா said...

வித்தியாசமான பதிவு.அவரவர் தங்கள் மனநிலைக்கேற்றபடி தங்கள் அன்பையும் பிரிவையும் சொல்லியிருக்கிறார்கள்.காதல் யாருக்கும் எந்தக்காலத்திலும் மனத் துணிவைத் தந்திருக்கிறது !

RAMVI said...

நெப்போலியனின் வீரக்காதல்,ஜான்கீட்ஸின் கவிதை காதல்,கால் மாக்ஸின் பொருளதார காதல்,டால்ஸ்டாயின் தத்துவக்காதல்,மாக்ஸிம் கார்கியின் இலக்கிய காதல்..
பிரமாதமான பதிவு..வாழ்த்துக்கள் குணா..

விக்கியுலகம் said...

Thanks maapla!

நாய்க்குட்டி மனசு said...

இள நீல கலரில் இன்லாண்ட் லெட்டர் தென் படும் போதெல்லாம் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் வரும். //
இன்றைய இளைய தலைமுறை இழந்து வரும் மிகப் பெரிய சந்தோஷம் இது

aadhi said...

வணக்கம்
தலைவா
எப்படி
உங்களுக்கு
இப்படி எல்லாம்
தோணுது
....
சிறப்பான படைப்பு


Ungal Rasigan

Karthik said...

Hi Guna....

where is your First love letter... i am eager to see...

-- Karthik

சமுத்ரா said...

அருமையான பதிவு ..

Unknown said...

super love story

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...