Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers.
இணையத்தில் ஒரு படத்தைப் பார்த்தேன்.. பார்த்தவுடன் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பின்பு அதனை ஒரு மனிதனாக நினைத்துக் கொண்டு என் அனுபவத்தையும் சிந்தனையும் கலந்து எழுதியிருக்கிறேன்.
இணையத்தில் ஒரு படத்தைப் பார்த்தேன்.. பார்த்தவுடன் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பின்பு அதனை ஒரு மனிதனாக நினைத்துக் கொண்டு என் அனுபவத்தையும் சிந்தனையும் கலந்து எழுதியிருக்கிறேன்.
தன்னை நல்ல மனிதனாக சீர்படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு மனித மனத்தின் சிந்தனையை வரிகளாக மாற்றியிருக்கிறேன். (கிட்டதட்ட இது எனக்குள் இருக்கும் எண்ணங்கள்தான்.)
படித்துப் பாருங்க..
* சிலை *
வலிக்கத்தான் செய்கிறது..
என்னை நானே செதுக்கிக் கொள்வதற்கு..
கண்ணீர் கூட தெறித்து விழுகிறது
செதுக்கும் போது விழும்
சிறு கல் துகள்கள் போல...
என்ன செய்வது..
என்னைச் சிலையாக்கிக் கொள்ள
வேறு வழியுமில்லை..
வேறு நாதியுமில்லை..
எங்கெங்கும் மனித சிலைகள்
ஆணாகவும் பெண்ணாகவும்,
வெவ்வேறு உருவத்தில்
வெவ்வேறு குணத்தில்,
உலவிக் கொண்டிருக்கிறது...
எனக்கான உருவத்தையும்
குணத்தையும்
அமைத்துத் தருபவர் யார்?
தேடினேன்..
கிடைக்கவில்லை.
கல்லாக பிறந்த என்னை
கற் சிலையாக மாற்றிக் கொள்ள
ஆசைப்பட்டேன்..
சரியான வழிமுறையும்,
அதற்கேற்ற சிந்தனையும்
யாரேனும் சொல்வார்களா?
என்றெல்லாம் கேட்டும் பார்த்தேன்...
யாரும் எனக்காக வரவில்லை..
வருத்தப்பட்டேன்..
என்னை வடிப்பதற்கு
எவரும் இல்லையென்று
வாடவும் செய்தேன்..
யார் செய்த புண்ணியமோ..
எனக்கும் கிடைத்தது,
உளியும்(மொழியும்), சுத்தியலும்(புத்தகமும்)...
என்னை நானே செதுக்கிக் கொள்வதற்கு..
கண்ணீர் கூட தெறித்து விழுகிறது
செதுக்கும் போது விழும்
சிறு கல் துகள்கள் போல...
என்ன செய்வது..
என்னைச் சிலையாக்கிக் கொள்ள
வேறு வழியுமில்லை..
வேறு நாதியுமில்லை..
எங்கெங்கும் மனித சிலைகள்
ஆணாகவும் பெண்ணாகவும்,
வெவ்வேறு உருவத்தில்
வெவ்வேறு குணத்தில்,
உலவிக் கொண்டிருக்கிறது...
எனக்கான உருவத்தையும்
குணத்தையும்
அமைத்துத் தருபவர் யார்?
தேடினேன்..
கிடைக்கவில்லை.
கல்லாக பிறந்த என்னை
கற் சிலையாக மாற்றிக் கொள்ள
ஆசைப்பட்டேன்..
சரியான வழிமுறையும்,
அதற்கேற்ற சிந்தனையும்
யாரேனும் சொல்வார்களா?
என்றெல்லாம் கேட்டும் பார்த்தேன்...
யாரும் எனக்காக வரவில்லை..
வருத்தப்பட்டேன்..
என்னை வடிப்பதற்கு
எவரும் இல்லையென்று
வாடவும் செய்தேன்..
யார் செய்த புண்ணியமோ..
எனக்கும் கிடைத்தது,
உளியும்(மொழியும்), சுத்தியலும்(புத்தகமும்)...
என்னை நானே
செதுக்கிக் கொண்டேன்..
வலிக்கத்தான் செய்தது...
ஏனெனில்
துள்ளி ஓடும் மனதை
என் அறிவுக் காவலன்
அவ்வப்போது தடுத்து விடுகிறான்...
செதுக்கிக் கொண்டேன்..
வலிக்கத்தான் செய்தது...
ஏனெனில்
துள்ளி ஓடும் மனதை
என் அறிவுக் காவலன்
அவ்வப்போது தடுத்து விடுகிறான்...
சில நேரம் சண்டை கூட
போடுகிறான்..
கேட்டால்...
என்னை சீர்படுத்துவதாக சொல்கிறான்..
போடுகிறான்..
கேட்டால்...
என்னை சீர்படுத்துவதாக சொல்கிறான்..
உண்மைதான்...
இப்போது
எனக்கும் உருவம் கிடைத்து விட்டது..
இப்போது
எனக்கும் உருவம் கிடைத்து விட்டது..
கல்தானே என்று நினைத்த
மனித மனங்கள்
இப்போது
என்னை கவிதை என்று
உவமை சொல்கிறது.
எதிர்பார்க்காதீர்கள்...
கல்லாக இருக்கும்
உங்களை சிலையாக வடிக்க
யாரேனும் வருவார்களா?
என்றெல்லாம் நினைத்துக் கொண்டு
காத்திருக்காதீர்கள்..
உளியும், சுத்தியலும் இருந்தால் போதும்
நம்மை நாமே
சீர்படித்துக் கொள்ளலாம்..
சிலையாக
மாற்றவும் செய்யலாம்.
யோசியுங்கள்..
இனிமேலும் சிற்பியைத்
தேடுவதை விட்டு விட்டு
உளியையும் , சுத்தியலையும்
தேடலாமே..!.
மனித மனங்கள்
இப்போது
என்னை கவிதை என்று
உவமை சொல்கிறது.
எதிர்பார்க்காதீர்கள்...
கல்லாக இருக்கும்
உங்களை சிலையாக வடிக்க
யாரேனும் வருவார்களா?
என்றெல்லாம் நினைத்துக் கொண்டு
காத்திருக்காதீர்கள்..
உளியும், சுத்தியலும் இருந்தால் போதும்
நம்மை நாமே
சீர்படித்துக் கொள்ளலாம்..
சிலையாக
மாற்றவும் செய்யலாம்.
யோசியுங்கள்..
இனிமேலும் சிற்பியைத்
தேடுவதை விட்டு விட்டு
உளியையும் , சுத்தியலையும்
தேடலாமே..!.
****************************************************
12 comments:
அருமை அருமை
தன்னைத்தான் பார்த்து ரசித்துக் கொள்பவன்
சராசரியாகத்தான் இருப்பான்
தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளத் தெரிந்தவனே
சாதனையாளனாக இருப்பான்
படங்களும் பதிவும் மிக மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
படமும் அதற்கேற்ற கவிதையும்.தன்னைத்தான் ஒவ்வொருவரும் செதுக்கிக் கொண்டாலே போதும்.வாழ்வு சிறக்கும் !
தன்னைத் தானே செதுக்க நினைக்கும் மனிதனே, உலகில் தலைசிறந்து விளங்குவான். எனவே தான் நாள் ஒரு தடவை நாம் இன்று என்ன செய்தோம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். தரமான தேவையான கவிதை வாழ்த்துகள்
மாப்ள நச்சுன்னு சொல்லி இருக்கய்யா!
// /இனிமேலும் சிற்பியைத்
தேடுவதை விட்டு விட்டு
உளியையும் , சுத்தியலையும்
தேடலாமே..!./// பிரமாதம் குணா.
உளியும்(மொழியும்), சுத்தியலும்(புத்தகமும்)...//
தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் வல்லமை பெற்ற சிற்பிக்கு வாழ்த்துக்கள்.
புத்தி புகட்டும் கவிதை படங்களும் அருமை
அருமை குணா. நிச்சயமாய் நம்மை நாமேதான் செதுக்கிக்கொள்ளவேண்டும். கலக்கறீங்க போங்க....
கலக்கல் ...கவிதை ...
இன்னும் செதுக்குங்கள் ...
நாங்களும் வளர்வோம்
வாழ்த்துக்கள்
/வருத்தப்பட்டேன்..
என்னை வடிப்பதற்கு
எவரும் இல்லையென்று
வாடவும் செய்தேன்../
!!!சகோ...அற்புதமான சிந்தனை...
படத்தைப்பார்த்து அப்பிடியே கொட்டியிருக்கு போல...
நல்ல கற்பனை,,
அதனூடாக வெளிப்படும் கருத்துக்கள்,,,அருமை...
ரொம்ப நல்லாயிருக்கு..
வேறும் ஏதும் படங்களைத்தேடிப்பாருங்க கவிதை வழியும் ....
வாழ்த்துக்கள்,,,
அருமையான கருத்துகள்..
அதெப்படிப்பா தொடர்ந்து இத்தனை ஆக்கங்கள்
தர்றீங்க ?
என்னாலே முடியலே..
( வடிவேலு ப்ளோவில் படிக்கவும் )
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
சிற்பிகளெல்லாம் சிற்பத்தை மட்டுமே செதுக்குவதில்லை...
சிந்தையின் வழி சிறப்பானதைத் தேடும் உங்கள் வாழ்வு சீர்மிகும்...
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...