* புத்தரின் வாசகம் *
சென்ற வருடம் ஊரெங்கும் சுவாமி நித்யானந்தாவின் லீலைகளைப் தமிழகமும், அண்டை மாநிலங்களும் கிழி கிழியென்று கிழித்தன. பல வகையில் நித்யானந்தாவின் செயலுக்கு கண்டனங்கள் வந்தன. ஜாமினில் வெளி வந்த நித்து, இப்போது அப்படி ஒரு தவறே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டு, அதை மறைக்கும் வகையில் சில சித்து பித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நக்கீரனில் தங்க பாண்டியன் என்பவர் இது போன்ற சாமியார்கள் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார். நான் எழுத நினைத்த விசயங்களை அவர் அந்தக் கட்டுரையிலேயே எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை உங்கள் பார்வைக்கு.
" நம்மவர்களுக்கு எதைக்கண்டாலும் ஒரு மயக்கம் தான். ஒரு நடிகர் நல்லவர் வேடத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராகவே இருப்பார் என்று மயக்கம் கொள்வது. ஒருவர் ஏதோ ஒரு துறையில் திறமையானவராக இருந்தால், அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நன்றாகத் தெரியும் என மயக்கம் கொள்வது, ஒரு கிரிக்கெட் வீரரை, நாட்டின் சகலப்பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய சூப்பர்மேன் போல பார்த்து மயங்குவது என மயக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சுவாமி நித்யானந்தா அதுபோல் மயக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். எழுத்தாளர்கள், நடிகர்கள், மெத்தப்படித்தவர்கள், அதிகாரிகள் என எல்லா சூப்பர்மேன்களும் சுவாமி நித்துவின் கால்களில் விழுந்துள்ளனர். அது மட்டுமா? கட்டுக்கட்டாக பணமும் செக்-புக்கில் கையெழுத்துப் போட்டும் கொடுத்துள்ளனர். பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன், கதைகளைப் பார்த்துக் கொண்டும் அது பற்றி பேசிக்கொண்டும் இருந்தவர்கள் தானே இவர்கள். பிறகேன் விழிப்படையவில்லை?
மயக்கங்கள் இரண்டு விதத்தில் பிடித்துக் கொள்கின்றன. ஒன்று ஆராயாமல் நம்புவது, மற்றொன்று தான் நம்புவதைத் தவிர மற்றது எல்லாம் தவறு என நினைப்பது, ஆகவே ஒவ்வொருவரும் தான் அனுபவப்படும் வரை சிந்திப்பதில்லை.
தங்களின் அறிவு, வயது பற்றிய எந்த நினைப்புமின்றி, நித்யானந்தா என்ற 30 வயது இளைஞனிடம் விழுந்து சரணாகதி அடைந்ததை எண்ணி யாரும் வெட்கப்படவில்லை. சுவாமி நித்யானந்தா ஆன்மீகப் புத்தகங்களை அதிகமாகப் படித்து அதை எளிமையாக கதை கதையாகச் சொல்வதில் தனித்திறமை பெற்றவர் அவ்வளவுதான். ஆனால் அவரை ஏதோ அவதாரமாகவும் சகலஜாலங்களும் செய்யக்கூடிய சக்திபடைத்தவர் என்றும் இன்னும் ஒருபடி மேலே போய் அவரைக் கடவுள் என்றே எண்ணினர்.
காவி, விபூதி, கொஞ்சம் மதத் தத்துவ தத்துப்பித்துகள் தெரிந்தால் போதும் ஆயிரக்கணக்கில் இளிச்சவாயர்கள் கிடைப்பார்கள் என்பது எல்லா ஆனந்தாக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதுதான் தனது செயலை நியாயப்படுத்தி நடிகையுடன் ஆத்மபரிசோதனை செய்ததாகச் சொல்லும் தைரியத்தை நித்யானந்தாவுக்குக் கொடுக்கிறது. ஆத்ம பரிசோதனை செய்ததை ஏன் வீடியோ வெளியான பின் சொல்கிறார். அதை அவரே சி.டி போட்டு பக்தர்களுக்கு காட்டவேண்டியது தானே. அந்த ஆத்மபரிசோதனையை படம் பிடித்து வெளியிட்ட சீடர் ஏன் இன்னும் தலைமறைவாக ஓடிக்கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் யாருக்கும் இன்னும் எழாது என நம்புகிறார் சுவாமி நித்து. அவரது சீட கோடிகளோ கோடிகளோடு வரிசையில் நிற்கின்றனர்.
சுவாமி நித்து, நடிகையை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் அவர் மனசாட்சிக்காவது அஞ்சுபவர் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாமியார் அடுத்தடுத்து சித்துவேலைகளில் இறங்குகிறார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் மனிதன் கூட இல்லை. பிறகெப்படி மாமனிதன் ஆவது? உண்மையச் சொன்னா அவர் ஒரு நித்திய ஃபிராடு.
அவர் மட்டுமில்லை அவரைப் போல் பலர் ஆடம்பரம், படோபடம், வெளிநாடுகளில் கணக்கிலடங்கா சொத்துக்கள், அடியாட்கள் சகிதம் வலம் வருவதை அருவருப்பாக நினைப்பதில்லை. நாம் தான் இவர்களிடம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறிகொடுத்துவிட்டு அசடு வழிந்து நிற்கிறோம். "
“ யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும்..,
நானே சொன்னாலும்..,
உனது புத்திக்கும் பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே ” – புத்தர்.
டிஸ்கி : ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் நிறைய படித்ததனால் எனக்கு ஆன்மீகத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. கல்லூரியில் படிக்கும் போது கொஞ்சம் அதன் மீது பற்றாகவும் இருந்தேன். அதனால் வாழ்வியல் சம்பந்தமான ஆன்மீக சொற்பொழிவு எங்கேனும் நடைபெற்றால் அங்கு சென்று, அதனைக் கேட்க முயற்சிப்பேன். அப்படித்தான் சென்ற வருடம், நித்யானந்தாவின் சொற்பொழிவு சென்னையில் பச்சையப்பா கல்லூரி திடலில் நடைபெற்ற போது நானும் சென்று சொற்பொழிவைக் கேட்டேன். இதற்கு முன் விஜய் டிவியில் நித்யானந்தாவின் சொற்பொழிவைப் பார்த்திருக்கிறேன். ஆனந்தவிகடனில் வெளியான கதவை திற..காற்று வரட்டும் ஆன்மீகத் தொடரை தொடர்ச்சியாகப் படித்தும் வந்தேன். முதன்முதலில் நித்யானந்தாவின் சொற்பொழிவில் கலந்து கொண்டதும் அப்போதுதான். (அதுதான் முதலும், கடைசியும் கூட). சொற்பொழிவு எனக்குப் பிடித்துப் போனதன் விளைவாக அவரின் விளக்கத்தில் வெளியிட்ட அருணாச்சலேஸ்வரர் பற்றிய இரண்டு வீடியோ சி.டி.க்களையும் நான் வாங்கிக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து நடிகை ரஞ்சிதாவுடனான அவரின் நிகழ்வுகளை சன் தொலைக்காட்சியில் நான் பார்த்த போது கொஞ்சம் வெட்கித்தலைகுனிந்தேன் (சுவாமி நித்யாவின் இரண்டு சி.டி வேறு வாங்கித் தொலைத்துவிட்டேன்). அதற்கப்புறம் அந்த இரண்டையும் நான்காக உடைத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேன்(என்ன செய்வது. வீட்டில் ஒரே கிண்டல்). இப்போது கொஞ்சம் சுதாரித்து விட்டேன்.
மேற்கண்ட புத்தரின் வாசகங்களைத்தான் இப்போது ஒவ்வொரு முறையும் நான் நினைத்துக் கொள்கிறேன்.
நித்யானந்தாவின் லேட்டஸ்ட் பேட்டியை', நம் இளைஞர்கள் அழகாக எடிட்டிங் செய்து சிறப்பான காமெடி ஷோவாக மாற்றியிருக்கிறார்கள். ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்கு இதை வெளியிட்டிருக்கிறேன். அட்டகாச காமெடி. நிச்சயம் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும்ங்க..!
***********************************************
13 comments:
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும்..,
நானே சொன்னாலும்..,
உனது புத்திக்கும் பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே ” – புத்தர். \\
அவர் அப்பவே சொல்லிட்டார் நமக்கு இப்பத்தான் உறைக்குது.
ஒரே ஒரு விஷ்யம்யா....டேய் கைய புடிச்சி இழுத்தியா....!
நித்தம் நித்யானந்தா புகழ் ஓங்குக..
எல்லாம் மாயையின் சூழ்ச்சி என்று நித்தி சொல்லாத வரைக்கும் சந்தோசம் சகோ.
நல்ல வேளை, இறைவனின் உபதேசம் காரணமாகத் தான் இப்படியான நிலமை என்று நித்தி சொல்லவில்லை. எல்லாரையும் நன்றாக ஏமாற்றுகிறார்கள் சகோ.
இத்தனை நடந்தும் நமது நிருபர்கள் அத்தனை பேரும் அங்கு சென்று வந்திருகிறார்களே ...? இன்னும் நித்தியானந்தாவை ஏன் நாம் மதிக்க வேண்டும் ?
ஹி ஹி ஹி
நித்தி வீடியோ வெளியனா வாரத்தில் நான் ட்ரெயினில் பயணித்து கொண்டு இருதேன்
...அப்போது இந்தா மகானின் ????? டாலருடன் ஒரு பணியாளை பார்த்து என் பயணி ஒருவர் இன்னுமா இவரை நீ நம்புறே என கேட்டார் ?
அதற்கு கிடைத்த பதில் எனக்கு நிறைய உதவி செய்து இருக்கார் நன்றி மறக்க கூடாது என்று சொன்னார் ..
நித்தி மகானா இல்லை இந்த நன்றியுள்ள மனிதனா ?
///சுவாமி நித்து, நடிகையை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் அவர் மனசாட்சிக்காவது அஞ்சுபவர் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாமியார் அடுத்தடுத்து சித்துவேலைகளில் இறங்குகிறார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் மனிதன் கூட இல்லை. பிறகெப்படி மாமனிதன் ஆவது? உண்மையச் சொன்னா அவர் ஒரு நித்திய ஃபிராடு.///
குற்ற உணர்வு கூட இல்லாத மனிதனை அருவருப்பான விலங்கு என விளங்கிகொள்வோம்
இது விழிப்புணர்வு பதிவு ...நன்றி நண்பா
அருமை.
பட்டு தெளிவதே அனுபவம்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். இதில் நித்தியானந்தருடைய பிழையை விட அவரைத் தலையில் வைத்துக் கொண்டு திரிந்த மடையர்களே தவறுசெய்தவர்கள். எப்போதுதான் நமது மக்களுக்கு புத்தி தெளியப்போகின்றதோ? ஆதிவாசியிடமிருந்து இன்றுவரை மனிதன் வளர்ச்சிப் பாதையில் சென்றதற்கு யார் காரணம். மனிதனின் முயற்சியும் விடாமுயற்சியுமே. அவர் செய்தார் இவர் செய்தார் என்று சாத்திரம் பார்த்தல் நேர்த்திவைத்தல் கண்டகண்ட சாமிகளின் பின் செல்லுதல். இதுவெல்லாம் தேவையா? ஐரோப்பிய தொலைக்காட்சியில் ஒருவர் யேசுநாதர் போல் தண்ணீரின் மேலே நடந்து காட்டினார். இதுபோல் பல. இதற்குத்தான் நான் வாயைத் திறப்பதில்லை. திறந்தால் அடக்கமுடியாமல் அறியாமைகளையெல்லாம் சாடத் தொடங்கிவிடுவேன் குணா என்னைச் சீண்டிவிட்டீர்கள். உங்கள் தேடல் சிறப்பு.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...