Thursday, July 28, 2011

மற்றவை - முத்துக்கள் மூன்று

ஜெர்மனியில் வசிக்கும் சந்திரகெளரி(http://kowsy2010.blogspot.com) முத்தான மூன்று விசயங்களை எழுதும் தொடர் பதிவு என்னை எழுத அழைத்திருக்கிறார். அவர் விடுத்த அழைப்பினை ஏற்று இந்த தொடர் பதிவை எழுதுகிறேன். வலைப்பதிவு உலகத்தில் இந்த மாதிரியான தொடர் பதிவு விசயங்கள் ஆச்சர்யமாக உள்ளது. இது மாதிரியான தொடர்பதிவு , வலைப்பூ நட்புகளைப் பலப்படுத்தும் பாலங்கள்  என்று நினைக்கிறேன்.

முத்துக்கள் மூன்று:

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

1. நட்பு
2. புத்தகங்கள் படிப்பது.
3. நல்ல சினிமா

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

1. குடிப்பழக்கம், புகைபிடித்தல்
2. மிகவும் சத்தமான இடம்
3. ஏமாற்றுதல்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

1. ஏமாற்றுவதற்கு பயம் அதிகம். ஏன்னா முற்பகல் செயின் பிற்பகல் விளையும்.
2. உடல்நலக்குறைவு.(மருத்துவ மனைக்கு போகாமல் இருக்க முடியாதே அதனால் )
3. அதிகப்படியான ஆடம்பர செலவு(ஆடாத ஆட்டமெல்லாம்..)

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

1. பெண்ணின் மனது
2. ஷேர் மார்க்கெட்
3. நல்ல மனிதர்கள் வாழ்க்கையின் வறுமை

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1. என்னுடைய செல்போன்.
2. நோட்பேட்
3. கம்யூட்டர் அல்லது லேப்டாப்

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

1. குழந்தைகளின் மழலை பேச்சை கேட்டால் மனம் விட்டு சிரிப்பேன்.
2. தொலைக்காட்சியில் வரும் நகைசுவை காட்சிகள்.
3. அரசியல் நிலவரம். குறிப்பாக நாட்டிற்கு நல்லது செய்வதாக சொல்லும் அவர்களது பேட்டிகள்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு  இருக்கும் மூன்று காரியங்கள்?

1. கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு பதிலை பல புத்தகங்களில் தேடிக் கொண்டிருக்கிறேன். எனது கட்டுரையை முடிக்க வேண்டுமே?
2. ஒரு குறும் படம் எடுப்பது பற்றி யோசித்து வருகிறேன்.
3. பல்வேறு டெக்னாலஜியின் புதுமைகளை பற்றி படித்து வருகிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

1. ஒரு நாவல் எழுத வேண்டும்.
2. உலக நாடுகளுக்கு சுற்று பயணம். பயணக் கட்டுரை எழுத ஆசை.
3. கடமைகளை முடித்துவிட்டு ஆன்மீகத் தேடல்.என்னதான் இருக்குன்னு பார்ப்போமே..!

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?

    மேலே குறிப்பிட்டுள்ள மூன்றும்..

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

 1. மிக சத்தமாக வைக்கப்படும் தொலைக்காட்சி (அ) வானொலி (அ) டேப் ரிக்கார்டர்.
 2. தம்பட்டம் அடித்துக் கொள்வது
 3. வம்பு பேசுவது

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

 1. Time Management
 2. French அல்லது Spanish
 3. மரபுக் கவிதைகளின் இலக்கணத்தை

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

 1. மீன் வறுவல்
 2. பிரியாணி
 3. சிக்கன் 65 (அ) காஷ்மீரி நான்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

 1. “விழிகளில் ஒரு வானவில்” என தொடங்கும் தெய்வத் திருமகள் பாடல்
 2. " கடவுள் தந்த அழகிய வாழ்வு " என்ற மாயாவி பட பாடல்.
 3. " அன்பென்ற மழையிலே " என்ற மின்சாரக் கனவு பட பாடல்.

14) பிடித்த மூன்று படங்கள்?

  1. ஆங்கிலம்--Persuit of Happiness
  2. ஹிந்தி ---   ரங் தே பஸந்தி.
  3. தமிழ்--- நிறைய இருக்கிறது,எழுதுவதற்க்கு இடம் போதாது. latest தெய்வத் திருமகள்

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

  1. பணம்
  2. புத்தகங்கள் படிப்பது
  3. சந்தோஷம்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

 1. ஜீ - http://umajee.blogspot.com (வானம் தாண்டிய சிறகுகள்..)

 2. சத்ரியன் - http://manavili.blogspot.com (மனவிழி)

 3. கயல்விழி - http://kayalvizhi-enkavithaigal.blogspot.com (என் க"விதை"கள்)


உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பாருங்க:

Ticket Restaurant Coupon வைத்திருப்பவரா நீங்கள்? இந்த மாத கூப்பன் வைத்திருக்கிறீர்களா? அதில் ஒரு ஆச்சர்யமான விசயம் உள்ளது. அதன் முன் பகுதியை பாருங்கள். அதில் "Celebrating 1 year of Edenred and 50 years of Leadership" என்ற வாசகம் எழுதியிருக்கும். அதன் பின்பகுதியைப் பார்த்தால்
கீழே உள்ள படத்தைப் போன்று இருக்கும்.

Ticket Restaurant Gift voucher:


Ticket Restaurant Meal voucher:

கட்டத்திற்குள் இருக்கும் அந்த 8 digits நம்பரை கீழே தரப்பட்டுள்ள வெப் சைட்டிற்குள் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள My E Day code என்ற Text Box-ல்
டைப் செய்து உங்களது மற்ற விவரங்களையும் டெப் செய்து submit பண்ணுங்கள். சில நொடிகளில் உங்களது அதிர்ஷ்டம் தெரிந்து விடும். மிக்சி, ஃபிலிப்ஸ் ஹோம் தியேட்டர், பென் டிரை இன்னமும் சில கிப்ட் தருகிறார்கள். எனது நண்பர் செந்தில்-க்கு பென் டிரைவ் கிடைத்திருக்கிறது. நானும் ஃபார்ம் சப்மிட் செய்தேன். ஆனால் எனக்கு அதிர்ஷ்டமில்லை. மறக்காமல் இதனை முயற்சி செய்து பாருங்கள். ஒரு வேளை அதிர்ஷ்டமிருப்பின் ஹோம் தியேட்டர் கூட உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அரிய வாய்ப்பு ஜூலை 31,2011 வரை மட்டுமே.

*************************************************

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

முத்தான மூன்றுக்குப் பாராட்டுக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

முத்துக்கள் மூன்றுக்கு முத்தான பதில்கள்.வாழ்த்துக்கள் குணா.

test said...

அருமையாகச் சொல்லியிருக்கீங்க பாஸ்!

நம்மள வேற தொடரச்சொல்லிட்டீங்களா....விரைவில் எழுத முயற்சிக்கிறேன்!

நிரூபன் said...

வணக்கம் சகோ, வித்தியாசமான முறையில், முத்தான மூன்று விடயங்களாக, உங்கள் ரசனையினை வெவ்வேறு தலைப்பின் கீழ் பதிவிட்டிருக்கிறீங்க. ரசித்தேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் முத்துக்கள்...
தங்களின் பிரிதிபலிப்பாய்...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

2. " கடவுள் தந்த அழகிய வாழ்வு " என்ற மாயாவி பட பாடல்.
//////

அந்தப்படலைப்பற்றி இன்னும் தெரிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

1. ஒரு நாவல் எழுத வேண்டும்.
2. உலக நாடுகளுக்கு சுற்று பயணம். பயணக் கட்டுரை எழுத ஆசை./////



இந்த ஆசைகள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்...

தமிழ் உதயம் said...

அருமையான முத்துகள்.

A.R.ராஜகோபாலன் said...

அருமையான பதில்கள்
அசத்தலான விவரங்கள்
அமர்க்களம் நண்பா

கவி அழகன் said...

அழகான மூன்று விடைகள்

மகேந்திரன் said...

மூன்று மூன்றாய் முத்துக்கள்
ஒளிவிடுகின்றன

அருமை.

வேலு எழிலரசன் said...

முத்துக்கள் மூன்று அருமை ..nice..

கயல்விழி said...

முத்துகள் மூன்று அருமை சகோ :)
அழைப்புக்கு நன்றி :) கூடிய விரைவில் எழுதுகிறேன் :)

kowsy said...

முதலில் என் அழைப்பிற்குச் செவிசாய்த்து பதிவிட்டமைக்கு மிக்கநன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சிறப்பான பதிவுகள் வந்து விழுந்திருக்கின்றன. புரியாத விஷயங்களில் பெண்ணின் மனது என்று சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியென்றால், ஆண்களின் மனதைப் புரிந்துகொள்வீர்களா? அப்படியென்றால், அந்தக்கலையை எனக்கு ஒருதடவை சொல்லித்தாருங்கள். நீங்கள் தற்போது செய்துகொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைய வேண்டும். ஆனால், கடவுளை எங்கே தேடியும் கண்டுகொள்ளப் போவதில்லை. அதனை உங்களுக்குள்ளே தேடிப்பாருங்கள். கண்டு கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளும் தேடல்களும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

முத்துக்கள் மூன்று தொடர் முடிச்சுக்களாக விழுவது பிடித்திருக்கிறது. தொடருங்கள் .....

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...