Tuesday, July 19, 2011

தெரிஞ்சுக்கோங்க - பப்பாளியின் பயன்கள்

           * பப்பாளியின் பயன்கள் *

 
ப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பப்பாளி தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புச் சத்து குறைகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.


சில பெண்களின் முகம் கரடு முரடாகத் தெரியும். இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு. பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள் இந்தக் கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

பப்பாளி குடல் புழுக்களுக்குண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வாய்வு, நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை  கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து. விலை மதிப்பு ஆப்பிளைக் காட்டிலும் பப்பாளியில் அதிக அளவிலான வைட்டமின் இருக்கிறது.

 இதிலுள்ள மருத்துவ குணங்களைக் காண்போமானால், மேலும் வியப்பும் உண்டாகும்.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூல நோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை(டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்று நோய் மற்றும் தோல் நோய்களை இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது.

பப்பாளி பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைஸ் சிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்று நோய் சிகிச்சையின் போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோயகளுக்கும் கூட உதவும்.

பப்பாளியின் பயன்களை மனதில் பதிய வைத்துக் கொள்ள சுருக்கமாக;

பல் சம்பந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும்,  ஆண்மைத் தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபகச் சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப் பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணையா புரியும் பப்பாளிப் பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும் அது அவர்களைத் தாக்காது.

பப்பாளிப் பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளிப் பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய்க் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.


***************************************************

2 comments:

vidivelli said...

aaka naana first,,,
nalla thakaval ellaam sollurinkal..
vaalththukkal,,


enna namma pakkam kaanala?

மகேந்திரன் said...

பப்பாளிப் பழம் பற்றி நிறையத் தகவல்கள்
அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...