Monday, July 18, 2011

தெரிஞ்சுக்கோங்க - அணிகலன்


ரு கட்டுரையை எழுத நினைத்தேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நேற்றும், இன்றும் என்னால் பதிவு எழுத முடியவில்லை. மன்னிக்கவும். அதனால் நான் இணையத்தில் படிச்ச ஒரு விசயத்த இன்னிக்கு வெளியிட்டிருக்கிறேன். அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய விசயம்தான்.

அரைநாண் கொடி அணிவது ஏன்?

உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்கொடி உதவுகிறது.
 
மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது

மெட்டி அணிவது ஏன்?

 

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்.

கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு அணிவது ஏன்?


கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம். பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. சில விவாகரமான விஷயங்கள் "இலை மறை கனியாக" இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.

மூக்குத்தி அணிவது ஏன்?

 


மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
 
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
 
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
 
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

மோதிரம் அணிவது ஏன்?

 


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதயநோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

நன்றி - ஆன்மிகம், Sasithara Sarma (Swiss)
 

********************************************************

9 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் நண்பரே,

எங்கே 2 - 3 நாட்களாக சிவயசிவ - பக்கம் காணோம் என கேட்கவே வந்தேன்..

உடல்நலமின்மை அறிந்தேன்..
இப்போது எப்படி இருக்கிறது ?

நலமே நாடுகிறோம்.


அப்புறம் நீங்களெல்லாம் துவக்கி வைத்த நட்புச் சங்கிலியில் இணைந்திருக்கிறேன்.

வருகை தாருங்கள்..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகான விளக்கங்கள்...
கண்டிப்பாக நமது கலாச்சாரத்திற்க்கு அத்தனைக்கும் அர்த்தம் உண்டு..

Angel said...

அருமையான பகிர்வுக்கு நன்றி.மூக்குத்தியில் இத்தனை விஷயம் அடங்கியிருக்கிறதா !!!..Thanks for sharing .take care .

கடம்பவன குயில் said...

நம் இந்திய கலாச்சாரத்தில் எதற்கும் விஞ்ஞானபுர்வமான ஆதாரம் உண்டு. அது நம் மக்களின் அஞ்ஞானத்தால் தெரியாமலேயே போய்விடுகிறது. திரும்ப திரும்ப எடுத்துச்சொல்லி இளையதலைமுறைகளுக்கு புரியவைப்பதே நாம் செய்ய வேண்டிய கடமை.

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

நாளும் கண்களில் படுகிற பொருட்கள்தான்
ஆயினும் நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் எல்லாம்
தெரியாத தகவல்களே
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

kowsy said...

http://kowsy2010.blogspot.com/p/blog-page_5504.html

அறியவேண்டியதும் புரியவேண்டியதுமான பதிவு. மிகச்சிறப்பானது. முடியுமானால் என்னுடைய இந்த லிங்கிற்குப் போய்ப் பாருங்கள் மேலும் இதுபோன்ற பதிவுகளை வாசிக்கலாம்.

vidivelli said...

arumaiyaana piriyosanamaana pathivu sako/
vaalththukkal..

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...