Sunday, July 10, 2011

மற்றவை - இதமோ இதம்

Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers.

னது எண்ணங்களையெல்லாம் எழுத்துக்களாக்கி ஒவ்வொரு பதிவையும் தினமும் வெளியிடுகிறேன். அந்த பதிவுகளை எல்லாம் படித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும்/நண்பிகளுக்கும் ஒரு சின்ன கோரிக்கை..

எனது பொன்னான நேரத்தை  செலவிட்டு ஒவ்வொரு பதிவையும் தருகிறேன். அதனால் எனது வலைதளத்திற்கு வந்து, பதிவைப் படித்து அப்புறம் நேரமிருப்பின் உங்களால் முடிந்தால் கருத்துரையுங்கள். படித்துவிட்டு கருத்துரைத்தால் கொஞ்சம் சந்தோசப்படுவேன். இல்லையெனில் படித்தாலே போதும்.  பதிவையே படிக்காமல் வெறும் கமெண்ட் போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை(உங்களுக்கும், எனக்கும்). அதனால்தான் " ஓய்வு நேரத்தில் படிச்சா போதுங்க " என்று எனது நியூஸ்லெட்டரில் எழுதி உங்களுக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.

சரி..விசயத்துக்கு வருவோம்..

மிழ் இசையுலகில் நம்ம இசைஞானி இளையராஜா எட்டிய எல்லையை இன்னும் தற்போதைய இசையமைப்பாளர்கள் எட்டவில்லை. 1980 - 1992  களில் அவர் ராஜ்யம்தான் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். 1992-ல் தான் A.R.ரகுமான் அறிமுகம்.

இளையராஜா இசையில் வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இரவு நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனம் கொஞ்சம் லயிக்கும். வாணி ஜெயராம்-க்கு நிச்சயம் இது ஒரு மாஸ்டர் பீஸ் பாடல்தான்.



என்னைக் கவர்ந்த ஒரு ஹிந்தி பாடல். இது கிஷோர்குமார், ஆஷா போன்ஸ்லே பாடியது. நீங்களும் பாருங்கள். இனிய இரவு நேரத்தில் கேட்பதற்கு உகந்தது.


மனம் பரபரப்பாக இருக்கிறதா?டென்ஷனா? கோபமா? மன அழுத்தமா? அந்த நேரத்தில் கீழே வரும் இசையை ஹெட் செட்டின்(Head set) மூலம் கண்ணை மூடி கேட்டுப் பாருங்கள். நிச்சயம் மனம் லேசாகும். நான் கேட்டேன். மனம் லேசானதை உணர்ந்தேன்.


டவுன்லோடு செய்யவதற்கும் லிங்க் கொடுத்துள்ளேன்., நீங்களும் பயனடைய..
நண்பர்களுடன் பிக்னிக் செல்ல போகிறீர்களா? போகும் போது கீழே வரும் இந்தப் பாட்டையும் உங்கள் சி.டி யில் பதித்துக் கொண்டு போங்க. என்ஜாய்(enjoy) பண்ணலாம். அவ்வளவு அம்சமான பாட்டு மால்குடி சுபா பாடியது.

பெண்களும் கேட்கலாம்.

சும்மா Play பண்ணுங்க...



 Link:

http://66.151.148.5/files/33832903_DFgxC_46ad/Kayaduthu--Aparichithan.mp3

*******************************************************

10 comments:

Unknown said...

நண்பா நட்புடன் என் கருத்து ஒரு நல்ல கலைஞன் என்றும் ஜீவித்து இருப்பார்கள்...இளைய ராஜாவின் கொடி இன்றும் பறந்து கொண்டுதான் இருக்கிறது...ரஹ்மானின் கொடி வேறு திசையில் ..பாடல் கேட்டுவிட்டு மீண்டும் கருத்திடுகிறேன்

Unknown said...

முதல் பாடல் - அமிர்தம்
இரண்டாம் பாடல் -அருமை அந்த நடிகை யார் அழகு ம்ம்
.....
சுபா பாடல் பரவாயில்லை

Sivakumar said...

ஹல்லோ குணா. நீங்களும் நம்ம ஊருதானா. ரோஜா மூலம் ரஹ்மான் கலக்கிய நாள் முதல் நான் அவருடைய ரசிகன் ஆனேன். ஹீ இஸ் தெ பெஸ்ட்

vidivelli said...

சகோ/எனக்கும் பிடித்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர்..
நானும் ரசித்தேன் உங்க பதிவை ,பாட்டை!!!


மனம் பரபரப்பாக இருக்கிறதா?டென்ஷனா? கோபமா? மன அழுத்தமா? அந்த நேரத்தில் கீழே வரும் இசையை ஹெட் செட்டின்(Head set) மூலம் கண்ணை மூடி கேட்டுப் பாருங்கள். நிச்சயம் மனம் லேசாகும். நான் கேட்டேன். மனம் லேசானதை உணர்ந்தேன்.


இதையும் கேட்டேன் இருதடவை ...
நீங்க சொன்னது போலவே கொஞ்சம் அப்படித்தான் இருந்திச்சு...
இப்ப டென்சன் இல்லாததாலோ தெரியேல்ல....
ஆனால் நல்ல music,,,,,


பதிவிற்கு வாழ்த்துக்கள்..

vidhya said...

nice keep it up

குணசேகரன்... said...

நண்பரே ரியாஸ் அஹமது, அந்த ஹீரோயின்
பெயர் ஷர்மிளா தாகூர்.

செங்கோவி said...

ஆஹா..எனக்குப் பிடித்த இளையராஜாவின் பாடல்களில் ஒன்று அது..பகிர்வுக்கு நன்றி குணா.

Anonymous said...

நல்ல பகிர்வு ,இளையராஜா - என்றும் வற்றாத நதி

கடம்பவன குயில் said...

எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் நம் மனதை லேசாக்கும் சக்தி சில மெலடி சாங்ஸ்க்கு உண்டு. நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் நானும் கேட்டேன். எக்ஸலன்ட். லோடாகத்தான் கொஞ்சம் நேரம் ஆச்சு. இப்போ நான் கீழே கொடுத்துள்ள லிங்க் கூட அப்படிப்பட்ட பாடல்தான். அமைதியான சூழலில் கேட்டுப்பாருங்கள். லேசா லேசா பாட்டை எப்போ கேட்டாலும் மனது லேசாயிடும்.அதுவும் இந்த ஸ்லைட்ஸ் கூடத்தான் பார்க்கணும். சில பாடல்களுக்கு முவியில் வருகிற காட்சிகளைவிட கிரீட்டிங் கார்டு காட்சிகள் வரிகள் அந்த பாட்டுக்கு மேலும் மெருகூட்டுகிறது இல்லையா?

http://www.youtube.com/watch?v=boPIQNVOprM

ஹேமா said...

பழைய பாடல் வரிசையில் மிகவும் பிடித்தமான பாடல் ஒன்று தந்திருக்கிறீர்கள் குணா.நன்றி.வாணியம்மா பாடியதென்று நினைக்கிறேன் !

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...