Thursday, July 07, 2011

மற்றவை - நாட்டு நடப்பு


*  தயா நிதிக்கு ஆப்பு *



நேற்றிலிருந்து தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் விசயம் தயாநிதி மாறன் ராஜினாமா செய்ததுதான். 2G  விவகாரம் எரிமலை போல் வெடித்ததும் தி.மு.க வில் உள்ள ஒவ்வொரு தலையும் திஹாருக்கு போகுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. பதவி கிடைத்ததும் அந்த அதிகாரத்தைப் பயன் படுத்தி பொருளாதார ரீதியாக தனது செல்வாக்கையும், தனது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் இப்படி தன் நெருங்கிய வட்டத்தினரின் செல்வாக்கையும் வளர்த்து விடுவது அரசியல் துறையில் மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் நடக்கிறது. ஆனால் மீடியாவால் அதிகம் கவனிக்கப் படுவது அரசியல் துறையும் , சினிமாத் துறையும் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.  அரசியல் துறையில் கொஞ்சம் அதிகமாக அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. அதிக வருமானம் கிடைக்கிறது. இதர துறைகளிலும் இந்த அதிகார துஷ்பிரயோகம் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்களெல்லாம் தனது சொந்த காசைப் போட்டு வியாபாரம் செய்கின்றனர். அதனால் அவர்கள் செய்யும் அதிகாரத்திற்கு ஒரு நியாயம் இருக்கிறது.(எங்கு நடந்தாலும் அது தவறுதான்) அரசியல்வாதிகள் தனது வருமானத்தை உயர்த்துவதற்காக  மக்களின் பணத்தை ஏதோ தன் பணம் போல எடுத்துக் கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து, மற்றவரின் வளர்ச்சியை தடுத்து தனது  ராஜ்ஜியத்தை நிலை நாட்டுகின்றனர். சன் நெட்வொர்க் நிறுவனமும்  இதற்கு விதி விலக்கல்ல.

மத்தியில் தயாநிதி மாறன் தொலை தொடர்பு துறையை வைத்துக் கொண்டு தனது அதிகாரத்தை சன் நெட்வொர்க்கின் இமாலய வளர்ச்சிக்கு பயன் படுத்திக் கொண்டார். மத்திய அமைச்சர் பதவிக்காக 600 கோடி ருபாயை லஞ்சமாக கொடுத்த விசயம் இப்போது வெட்ட வெளிச்சமாயுள்ளது. விரைவில் அவருக்கும் திஹாரில் ஒரு அறை ரிசர்வ் செய்யப் படலாம்.

எனது கேள்வி இதுதான். காங்கிரஸ் மேலிடம் இப்படி தி.மு.க தலைகளையல்லாம் உருட்ட ஆரம்பித்து இருக்கிறதே என்னமோ அவர்கள் எல்லாம் எந்த தவறையும் செய்யாதது போல. அவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் தங்கள் ஊழல்களையும் , அதிகார துஷ்பிரயோகங்களையும் மூடி மறைத்துக் கொண்டு , மக்களின் நன் மதிப்பை பெற இப்படி செய்கின்றனரா? மீடியாக்களும், சுப்ரீம் கோர்ட்டும் 2G பற்றின விசயத்தை இந்த அளவிற்கு
பூதாகரமாக மாற்றியதால்தான் அவர்களும் நல்லவர்கள் போல் இன்று விசாரனை செய்து, குற்றம் செய்தவர்களை திஹாருக்கு அனுப்பி வைக்கின்றனர். 
 ஒரு விசயம் சொல்ல நினைக்கிறேன்.
 
கடுமையான தண்டனை கொடுக்காமல் வெறும் விசாரணை மட்டும் செய்தால் ஒரு பிரயோஜம் இல்லை. 

பார்க்கலாம் என்னதான் நடக்குமென்று...

2G விவகாரத்தில் சோனியாவுக்கும் பங்கு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இது பற்றி சுப்பிரமணியன் சாமி பிரதமருக்கு எழுதிய கடிதமே சாட்சி.


Swamy's explosive letter to PM

25/11/2010 15:18:05

November 24, 2010.
Dr. Manmohan Singh,
Prime Minister of India,
South Block,
New Delhi.

Dear Prime Minister,



You may by now have realized that the 2G Spectrum scandal is not only
bad for the country in the dimension of corruption, but now it emerges
that there is a national security dimension too. The RAW, IB, CBI, ED
all have enough material which they may have placed before you
regarding the dubious aspects of the principal player in this scam.

According to my information, two sisters, Anushka and Nadia, of Ms
Sonia Gandhi had received sixty percent of the kickbacks in this deal
i.e. Rs.18,000 crores each. The frequent travel of Sonia Gandhi and
her immediate family to Malaysia, Hongkong, Dubai and parts of Europe
including London requires to be probed under the law. What requires
your special attention is the mode of the travel, not by commercial
airliners, but by jets provided by the corporate sector which itself
is illegal under the DGCA Rules. I find that often Ms. Sonia Gandhi
and family have traveled to Dubai and then travelled onwards on
private jets provided by dubious Arab business interests to Europe. It
is not clear on what passport they have travelled. In Dubai, they were
felicitated by agencies of countries which are hostile to India
including that of Pakistan.

You can no more not take a stand when evil is permeating in the
country in the form of terrorism, religious conversion and demographic
infiltration. The ill-gotten money in billions of dollars equivalent,
the money laundering and Participatory Notes have all undermined our
national integrity. The time is come for you to take a stand.

I am familiar with the information and data with our intelligent
agencies. I also know that you can seek co-operation of other
countries especially the United States in pooling information
especially from inter Intelligence interaction that take place
regularly. I hope therefore you will rise to the need of the hour and
take effective steps to set right the sorry state of affairs in the
country caused by overtly and covertly resident foreigners. In this
connection I would like to meet you at the earliest. My Secretary will
be in touch with your Secretariat to fix a time.

Yours sincerely,

(Sd SUBRAMANIAN SWAMY )

நேற்று தயாநிதி மாறன் ராஜினாமா செய்ததும், அந்த செய்தி தினமலரில் வெளியானததை தொடர்ந்து ஒரு இந்திய குடிமகன் அமனுல்லா என்பவர் துபாயிலிருந்து ஒரு கமெண்ட் எழுதியிருந்தார். படித்துப் பார்த்தேன். நிறைய விசயங்கள் சொல்லியிருந்தார். இந்தியாவை விட்டு வேலைக்காக வெளி நாடு செல்பவர்களுக்கும் இந்திய நாட்டில் நடக்கின்ற விசயங்களை தினமும் பார்த்து வருவது அவர்களுக்கு தாய் நாட்டின் மேல் உள்ள அக்கறையை காட்டுகிறது. உள்ளுரில் இருக்கும் நம்மை விட அவர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டுகின்றனர். அங்கிருக்கும் வசதிகள், அரசியலமைப்பு முறைகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிவதால் எல்லா வளமும் இருக்கும் தன் சொந்த நாடு இன்னமும் உருப்படாமல் போவதுற்கு காரணமான இந்நாள் அரசியல்வாதிகளை கடிந்து கொள்வது ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த வாசகரின் கமெண்டை படித்து பாருங்கள்.

Amanullah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-07-08 00:34:37 IST

" தன்னால் வளர்ந்து சாம்ராஜ்யத்தை கட்டியவர்கள், தன் சொந்த மகனை ரவுடி என்று தொலைக்காட்சியில் செய்தி போட்டதை மறக்கக் கூடிய அளவுக்கு கருணாநிதி என்ன பெருந்தன்மை படைத்தவரா ? நிச்சயமாக இல்லை. சகோதரர்களைப் பார்த்து கருணாநிதி பயந்தார் என்பதுதான் உண்மை. சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்டவுடன், தயாநிதி மாறனை மந்திரி பதவியை விட்டு ராஜினாமா செய்ய உத்தரவிட, கட்சியின் செயற்குழுவை கூட்டி முடிவெடுத்த கருணாநிதி, குடும்பம் ஒன்று சேர்கையில் வசதியாக செயற்குழுவை கூட்ட மறந்து விட்டார்.“இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எழுந்த கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்“ என்று முற்றுப் புள்ளி வைத்தார். இந்த சகோதரர்கள் திமுக தொண்டர்களின் உழைப்பால் பிடித்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பகாசுர வளர்ச்சி கண்டவர்கள் என்பது தானே வரலாறு. அழகிரி, அதிரடி அரசியல் செய்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றால், சகோதரர்கள், அழகிரி செய்வதைப் போல பத்து பங்கு செய்தாலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். சகோதரர்களைப் போல திமுக ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருமே இல்லை. 

2006ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தமிழகம் முழுக்க கேபிள் தொழிலை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் சகோதரர்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பலத்தை பிரயோகித்து, ஹாத்வே நிறுவனத்தை சென்னை நகரத்தை விட்டே துரத்தினர். தமிழகம் முழுக்கவும், கேபிள் தொழில், சகோதரர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. 2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது. விஜய் டிவியில் முன்பு, ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விஜய் டிவிக்கு செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியை பறித்தார் தயாநிதி மாறன். அப்போது பறிக்கப் பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை. இது மட்டுமல்லாமல், அப்போது ஓரளவு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக்காட்சியை செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற்காரணம், தயாநிதி மாறனே… எப்படிப் பட்ட அதிகார துஷ்பிரயோகம் பாருங்கள். தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானதே ஒரு சுவையான கதை. அவரின் தந்தை முரசொலி மாறன் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, உலக வர்த்தக மைய மாநாட்டில் ஏழை நாடுகள் தொடர்பான நீண்ட உரையை ஆற்றி, இந்தியாவை பெருமைப் படுத்தினார். சென்டிமென்ட்டலாகவாவது, அந்தத் துறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் … தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று, அத்துறையை கைப்பற்றினர். அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன், சன் டிவியின் தலைமை நிர்வாகியாக இருந்தார் தயாநிதி மாறன். 

தயாநிதி மாறன் தரப்பில் சொல்லப் படும் ஒரு முக்கிய தியரி, டிவி சேனல்கள் தொடர்பாக தகவல் ஒளிபரப்புத் துறைதான் அனுமதி வழங்க வேண்டும், என்பது. ஆனால், தகவல் ஒளிபரப்புத் துறை ஒரு போஸ்ட் ஆபீஸ்தான். ஒரு தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நடத்துவதற்கு ஸ்பெக்ட்ரம் தான் அடிப்படை. அந்த ஸ்பெக்ட்ரத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை. இதை வைத்துத் தான், சன் டிவிக்கு போட்டியாக, உள்ள சேனல்களை வளர விடாமல் செய்தனர். ஒரு உதாரணத்தைக் கூற வேண்டுமானால், ஜெயா தொலைக்காட்சி, 24 மணி நேர செய்தி சேனல் தொடங்குவதற்காக விண்ணப்பித்தது. இதற்காக ஜெயா தொலைக்காட்சி புதிய ஸ்பெக்ட்ரம் கேட்கவில்லை. ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சிக்காக ஒதுக்கிய ஸ்பெக்ட்ரத்தை மேலும் வலுவாக பயன்படுத்தவே அனுமதி கேட்டது. மே 2004ல் சமர்ப்பிக்கப் பட்ட ஜெயா டிவியின் விண்ணப்பம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாநிதி மாறனால் கிடப்பில் போடப்பட்டது. ஜெயா டிவி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ஜெயா டிவி போலவே, கைரளி டிவியும் செய்தித் தொலைக் காட்சி தொடர்வதற்காக கொடுத்த விண்ணப்பம், ஒரு சில நாட்களில் பரிசீலனை செய்யப் பட்டு ஒதுக்கப் பட்ட விவசாரமும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப் பட்டது. தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு டாடா ஸ்கை தொடர்பானது. டாடா நேரடியாக வீட்டுக்கே தொலைக்காட்சி சேவையை வழங்கும் டாடா ஸ்கை என்ற ஒளிபரப்பை துவக்க உத்தேசித்தது. இதற்கான அனுமதியை வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம். டாடா ஸ்கை தொடங்க அனுமதி வழங்குவதை தொடர்ந்து தாமதித்தார் தயாநிதி மாறன். தயாநிதி மந்திரியாக இருந்த சமயத்தில், தொலைத் தொடர்புத் துறை புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அது என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, செல்பேசியிலேயே நேரடியாக தொலைக்காட்சியை பார்க்கும் வாய்ப்பு உருவானதால், செல்பேசிக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரத்தையும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப் படும் அலைவரிசையையும் இணைக்கும் வகையில் (Convergence) வழி வகை செய்யும் ஒரு சட்டம் உருவாகிறது. 

இது போன்ற சட்டம், உருவாக்கும் அமைச்சகத்தின் அமைச்சர் தம்பி தயாநிதி மாறன். அந்த அமைச்சகம் உருவாக்கும் சட்டத்தின் விளைவுகள் என்ன என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல புதிய பிசினசை தொடங்குவது அண்ணன் கலாநிதி மாறன். எப்படி இருக்கிறது ? நீண்டதொலைவு அழைப்புகளுக்கான கட்டணம் 100 கோடி ரூபாயாக இருந்த போது, அந்த கட்டணத்தை 2.5 கோடியாக குறைத்தவர் தயாநிதி. இது எந்த நேரத்தில் என்றால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீண்ட தூர அழைப்பு வசதியை வழங்குவதற்கு போட்டி போடத் தொடங்கிய நேரத்தில் இவ்வாறு கட்டணங்களை குறைத்தார். வெளிநாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்களையும் குறைத்தார். இந்த தொழில் தொடங்குவதற்காக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் நீக்கினார். அதோடு, ஒரே கம்பிவட இணைப்பு மூலமாக, இணைய இணைப்பு, தொலைபேசியில் பேசும் வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் வழிவகை செய்தார். இந்த வசதிகளை உருவாக்கிய நோக்கமே, எஸ்சிவி மூலமாக, இதே வசதியை சன் நெட்வொர்க் வழங்க வேண்டும் என்பதற்காவே….. தம்பி வழங்குகிறார்… அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார். இதற்காக நாம் வாக்களித்து இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறோம். 84 எப்எம் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்த சகோதரர்கள் 67 லைசென்சுகளை பெற்றார்கள். இப்போது உள்ள சட்டத்தின் கீழ் 46 லைசென்சுளைத் தான் வைத்துக் கொள்ள முடியும் என்பதால், மீதம் உள்ள லைசென்சுகளை விற்று விடுவார்கள். தம்பி தருகிறார், அண்ணன் பெறுகிறார். டாடா, அம்பானி, பிர்லா, பஜாஜ், போன்ற அத்தனை பெரிய நிறுவனங்களும், அரசாங்க விதிகளை வளைத்து, லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கின்றன என்றாலும், இது போல இவர்களே அரசாங்கமாகவும், இவர்களே தொழில் அதிபர்களாகவும், இவர்களே லைசென்சுகளை கொடுத்தும், இவர்களே, அதைப் பெற்றுக் கொள்வதும், இந்தியாவிலேயே முதல் முறை என்றால் அது மிகையாகாது. குடும்பம் பிரிவதற்கு முன்பு கூட, கட்சியை கைப்பற்றும் முயற்சியில் சகோதரகள் ஈடுபட்டே வந்தார்கள். கருணாநிதியோடு உரையாடிய ஒரு சமயத்தில், கலாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு பொலிரோ ஜீப் வாங்கித் தர உத்தேசித்துள்ளதாக கருணாநிதியிடம் கூறிய போது தான், கருணாநிதி உஷாரானார். பிரிவு காலத்தின் போது, சகோதரர்கள் சார்பாக, தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்த வைரமுத்துவிடம், கருணாநிதி முரசொலி மாறன் தன் கண்ணின் மணிபோன்றவர் என்றும், ஒரு நாளும், தன்னுடைய நாற்காலிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார். 

சகோதரர்கள் சந்தித்த முதல் நெருக்கடி, கலைஞர் டிவியின் தொடக்கம். கலைஞர் டிவி தொடங்கப் பட்ட போது, அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், கலைஞர்கள் என ஒரே நாளில் கலைஞர் டிவிக்கு மாறினார்கள். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், ஊழியர்களுக்கு கப்பித் தனமாக குறைந்த சம்பளமே சன் டிவியில் வழங்கப் படும் என்பது. கலைஞர் டிவியில் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்றவுடன், பெரும்பாலான கலைஞர்கள் கிளம்பி விட்டார்கள். இந்தத் துணிச்சல் வந்ததற்கு காரணம், கருணாநிதி முதல்வர் என்பதைத் தவிர வேறு என்ன ? டுமாரோ நெவர் டைஸ் என்று ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் வரும். அந்தப் படத்தில் வரும் வில்லனுக்கு தொழிலே மீடியா அத்தனையையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது. அது எதற்காக என்றால், நாளை இந்த உலகம் என்ன படிக்க வேண்டும், எது செய்தியாக வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறுவார். ஏறக்குறைய அந்த வில்லன் போன்றவர்கள் தான் இந்த சகோதரர்கள். சமீபத்திய உதாரணம், அன்னா ஹசாரேவின் பட்டினிப் போராட்டம். அன்னா ஹசாரே பட்டினிப் போராட்டத்தை தொடங்கியதிலிருந்து, தேசிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இந்த செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அதையொட்டி, நாட்டில் உள்ள படித்த வர்க்கம் அனைத்தும் கிளர்ந்தெழுந்ததும் நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஆனால் சன் டிவி, இது போன்ற ஒரு சம்பவமே நடக்காதது போல, வடிவேலுவின் பேச்சை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது என்றால், எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள். நாடே பற்றிக் கொண்டு எறியும், ஒரு செய்தியை, அந்தச் செய்தி தேர்தலை பாதிக்கும் என்பதால், வெளியிடாமல் இருப்பது எத்தனை பெரிய துரோகம் ? அயோக்கியத்தனம் ? சகோதரர்களின் மிகப் பெரிய பலமே, எஸ்சிவி தான். இந்த எஸ்சிவியின் கொட்டத்தை அடக்கினால், இவர்களின் ஏகபோகம் தானாக முடிவுக்கு வரும். இன்று சென்னையில் என்டிடிவி இந்து, பாலிமர், போன்ற பல்வேறு தொலைக்காட்சிகள் ஒழுங்காக தெரியாமல் இருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், சகோதரர்கள் தான். 

வருடத்துக்கு இவர்களுக்கு ஐந்து கோடி கட்டினால் மட்டுமே, சம்பந்தப் பட்ட சேனல்கள் ப்ரைம் பாண்டில் வைக்கப் படும். இல்லயென்றால், சுத்தமாக தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள். நான்கு வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு, இன்று திடீரென கருணாநிதி குடும்பத்தை உறித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கும் விகடன் குழுமத்திலும், கணிசமான பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பது பரவலாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலவும் செய்தி. திமுக குடும்பத்தைப் பற்றி இத்தனை செய்திகள் வெளியிட்டாலும், விகடன் குழுமம், சகோதரர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், கவனமாக மவுனம் சாதிப்பது, இந்தத் தகவலை உறுதிப் படுத்துகிறது. கருணாநிதி ஆட்சி வீழ்த்தப் பட வேண்டியதன் அவசியம், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் மட்டுமல்ல….. சகோதரர்கள் என்ற ஆக்டோபஸ், தமிழகத்தை கபளீகரம் செய்யாமல் இருப்பதற்காகவுமே….. "

*******************************************







7 comments:

தமிழ் உதயம் said...

அருமையாக எழுதி இருந்த துபாய் நண்பருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றிகள்.அருமையாக எழுதி இருந்த துபாய் நண்பருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றிகள்.

சக்தி கல்வி மையம் said...

sweet edu kondaadu..

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பழிவாங்கும் படலமோ அல்லது விதியின் வலிமையோ தவறுக்கு என்றுமே தண்டனை இருக்கிறது..

மாலதி said...

இந்த அரசியல் வாதிகள் என்ன எண்ணுகிறார்கள் என்றால் ஆட்சியை பிட்டித்துவிட்டால் எல்லாமே நமக்குதான் என என்னிவிடுகிரர்கள் நல்லது செய்யவேண்டும் என எண்ணுவதில்லை . இங்கு இருக்கும் பொதுவிட வெளிநாடுகளுக்கு போன பின்னர்தான் நம் நாட்டின் மீது ஈடுபாடுவரும் பாராட்டிமகிழ்வோம்

இராஜராஜேஸ்வரி said...

விரிவான அலசலுக்குப் பாராட்டுக்கள்.

!? கோவை சாட்டை ?! said...

தப்பு செய்தவன் ( உப்பு தின்னவன் ) தண்ணி குடிப்பான்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...