Sunday, July 17, 2011

எ.பி.க - 9

Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers. 


ன்னை மிகவும் யோசிக்க வைத்த கவிதை இது. சதை ஒன்றுதான். நிறம் தான் வேறு, கருப்பாகவும்; சிவப்பாகவும் இருக்கிறது. கருப்பும், சிவப்பும் இரண்டுமென இந்த உலகத்தில் உலவும் போது, இந்த மானிடம் சிவப்பான சதையை மட்டும் ஏன் தேடிப் போகிறது. கருத்த சதையைக் கண்டாலே ஏன் புறந்தள்ளுகிறது. உளவியலுக்கும் இதில் ஏதேனும் சம்பந்தம் உண்டா?. பதில் இன்னமும் தெரியவில்லை. ஒரு கருத்த சதை கொண்ட பெண்ணின் உணர்வுகள் இந்தக் கவிதையில் ஆதங்கமாக வெளிப்படுகிறது. கவிதை எழுதியவருக்கு என் வணக்கங்கள்! பாராட்டுக்கள்!


* கருத்த பெண் *


 
வெளுத்ததோல் போர்த்திய
பெண்மைகளை துரத்தி துரத்தி
உனக்கு வசியமாக்குகிறாய்...

கூந்தலின் நிறம் போர்த்திய
பாவப் பெண்மைகளை
ஓரப்பார்வை காட்டவும்
தயங்கி நிற்கிறாய்...

காதலியை தேர்ந்தேடுப்பதிலும்
மனைவியை அமைத்துக்கொள்வதிலும்
கருமையை புறம் தள்ளுகிறாய்...

உன்னை பெற்றதாயும்
நீ பெற்ற மகளும்
எம்நிறம்மென்றால் என்செய்வாய்?

பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்று தன்மைவேறு
ஆழ்நிலத்தில் புதைந்திருக்கும்
கருத்த கல்லில் தான்
வைரம் ஒழிந்திருக்கும்...

வெண்மை உடலுக்குள்
உணர்வையும் உணர்ச்சியையும்
தேடி அலைகிறாய்...

அவைகள் எமக்குள்ளும்
இருப்பதை மறந்துவிடுகிறாய்..
என்னவனே ...
பெண்மையின்
குணங்களை நேசி.,
வண்ணங்களை அல்ல.


நன்றி - செய்தாலி கிறுக்கல்.

*********************************************************

10 comments:

மகேந்திரன் said...

வண்ணங்களில் வெண்மை
பார்ப்பவரே!
நீவீர் இருந்த கருவின் நிறம் தெரியுமா??
உன் தாய் வயிற்றில் கருவாகும்போதும்
நீவீர் வண்ணம் தான் பார்ப்பீரோ??
கருத்தவரெல்லாம்
பாவியுமல்ல
வெளுத்தவர் எல்லாம்
புன்னியருமஅல்லர்.

வண்ணத்தை பார்ப்பதைவிட்டு
உள்ளத்தை பார்ப்பீரா???

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெளித்தோற்றம் கருப்பாய் இருந்தாலும், உள்ளம் வெல்லமாக இனிக்க வேண்டும். அது தான் முக்கியம். இதெல்லாம் சொன்னால் புரியாதுங்க; உணர்ந்தால் தான் தெரியும்.

இராஜராஜேஸ்வரி said...

பெண்மையின்
குணங்களை நேசி.,
வண்ணங்களை அல்ல.//

Nice..

vidhya said...

very nice poem,

RAMA RAVI (RAMVI) said...

//பெண்மையின்
குணங்களை நேசி.,
வண்ணங்களை அல்ல.//
மிகவும் அழகான வரிகள்.
நல்ல கவிதை, பகிர்வுக்கு நன்றி குணா..

Unknown said...

அவைகள் எமக்குள்ளும்
இருப்பதை மறந்துவிடுகிறாய்..
என்னவனே ...
பெண்மையின்
குணங்களை நேசி.,
வண்ணங்களை அல்ல.//
உங்கள் தேடல் எனக்கு பிடித்திருக்கு நண்பா

Anandh said...

ரசிக்க மற்றும் யோசிக்க வேண்டிய கவிதை..பதிவுக்கு நன்றிகள் பல !!

sarujan said...

நல்ல கவிதை

மாய உலகம் said...

வண்ணங்களில் அல்ல அவரவர் எண்ணங்களில் இருக்கிறது...

செய்தாலி said...

எம் அவரிகள்
உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...