Friday, July 08, 2011

எ.பி.க - 8

Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers.
 
முதன் முதலில் வலைப்பதிவு ஆரம்பிக்க நினைக்கும் போது, ஆதரவு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தோடுதான் ஆரம்பித்தேன். " இருக்கின்ற வேலைப் பளுவில் இந்த ப்ளாக்-ஐ படிக்க எல்லோருக்கும் நேரம் கிடைக்குமா? ", என்றெல்லாம் கூட  நினைத்தேன்.

ஆனால் எனது ப்ளாக்-ஐ தினமும் படித்து எனது எழுத்துக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில்,  ஒவ்வொரு டாபிக் பற்றி எழுதும் போது, " என்ன தலைப்பு வைக்கலாம் " என்று கொஞ்சம் யோசிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் எனது நண்பர்களே நிறைய தலைப்புகளை சொல்கின்றனர். " இதப்பத்தியும் உங்க ப்ளாக்குல எழுதுங்க.., " என்று சில விசயங்களை அன்புடன் என்னிடம் சொல்லுகின்றனர்.

என்னுடன் பணிபுரியும் எனது சக நண்பர்களான முத்துகிருஷ்னன், செந்தில், சுரேஷ் கிரிம் , அசோக், நாகராஜ், ஹரி அனைவரும் அவ்வப்போது சில விசயங்களை சொல்லியும், இ-மெயில் அனுப்பியும் ப்ளாக்கில் எழுத ஆர்வமூட்டுகின்றனர். அவர்களின் அன்புக்கு இதயங்கனிந்த நன்றி.

இந்த வலைப்பதிவின் மூலம் சில ஆச்சர்யமான விசயங்களும் எனக்கு நடக்கின்றன. நான் யார் என்று கூட அறியாமல் என்னுடன் நட்பு கொண்டு, எனது ஒவ்வொரு பதிவிற்கும் தத்தம் கருத்துக்களை சொல்லி என்ன செம்மைபடுத்தி வருகின்ற அத்துனை வலைப்பதிவு நண்பர்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றி.

இன்றைய பதிவு தலைப்பு எ.பி.க ( எனக்குப் பிடித்த கவிதை)

இதுவரை புத்தகங்களிருந்தும், பத்திரிக்கையிலிருந்தும் நான் படித்து, ரசித்த கவிதைகளை எ.பி.க என்ற தலைப்பில் வெளியிடுவது வழக்கம். இன்று எனது தோழியான பனிஷா அவர்கள் மிகவும் ரசித்த ஒரு கவிதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் அந்தக் கவிதையை வாசித்த விதமும் , கவிதையின் வார்த்தைகளும் என்னை மிகவும் ரசிக்க வைத்தன. அந்தக் கவிதை இதுதான்.

கவிதையின் கரு.

ஒரு இளைஞன் , ஒரு பெண்ணின் மீது தீராத காதல் கொள்கிறான். அவளிடம் ஒரு நாள் தன் காதலை எடுத்துச் சொல்லியவுடன், அந்தப் பெண் அந்தக் காதலை நிராகரித்து விடுகிறாள். அவனால் அவளை பற்றிய நினைவுகளை சாகடிக்க முடியவில்லை. உருக்கத்துடன்  ஒரு கவிதையை எழுதுகிறான்.
இதுதான் அவன் எழுதின கவிதை..

அப்பப்பா.!..ஒவ்வொரு வரிகளிலும் அவனின் உண்மைக் காதலையும், அவளால் நிராகரிக்கப் பட்ட காயத்தையும் படிக்கின்ற நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

தோழி பனிஷா., அருமையான இந்தக் கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி !.

                       * நீயின்றி நானில்லை *

தாமரை இலைத் தண்ணீராய்
அவள் மனதில் நான்.,
கிணற்று நீர் பாசியாய்
என் மனதில் அவள்.

என்னவளே..!
உன்னால் ஏற்பட்ட மனக்காயம்
தழும்புகளாய் என் இதயத்தில்.
இன்னமும்
தழுவிக் கொண்டிருக்கிறது..

உன்னுடைய ஒவ்வொரு
புறக்கணிப்பிலும்
என் இதயத் தளும்புகள்
மீண்டும் மீண்டும் காயங்களாகும்.

மழைத்துளிகளின் தொடர்தாக்குதலுக்கு
அஞ்சாத பயிர் போல
பொழுதும் வளர்கிறது
உன்னைப் பார்க்கும்
என் ஆவல்.

என் ஜீவ ஆற்றின் ரத்த நாளங்கள்
எல்லாம் சீறிப் பாய்கிறது
உன் நினைவுகள்.

என் மூச்சுக் காற்று
முட்டி மோதி திணறும்
அந்த முகடுகளிலெல்லாம்
என் சுவாசத்திற்கு சுகமூட்டும்
மூலிகைத் தென்றல் நீ..!
என்னை விலகச் சொல்கிறாயே.

வானத்திலிருந்து நீலம்
வழித்தா எடுக்க முடியும்..?
இதயத்தில் இருக்கும்
உன் நினைவை
பிரித்தெடுக்கவா முடியும்..?

அசையாத காற்று , அலையாத கடல்
ஓடாத நதி, பூவாத மலர்,
கூவாத குயில்..,
இவையெல்லாம்
சாத்தியமென்றால்
நீயில்லாத நானும்
சாத்தியம்தான்..

*****************************************************

18 comments:

இராஜராஜேஸ்வரி said...

என் ஜீவ ஆற்றின் ரத்த நாளங்கள்
எல்லாம் சீறிப் பாய்கிறது
உன் நினைவுகள்.//

அருமையான கவிதையும் பொருத்தமான படமுமாக கவிதை மனக்காயத்தின் வலியை வலிமையாய் காட்டுகிறது.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

குணசேகரன்! உங்க டெம்ப்ளேட் படிக்க ரொம்ப சிரமமா இருக்கு. அதனாலேயே அடிக்கடி வர முடியலை. பின்னணி அடர் நிறமாய் இருந்தால் எழுத்துக்களை மென்மையான வண்ணத்துக்கு மாற்றுங்கள்.

அதே போல் தேவையான கேஜெட் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

வானவில்லுக்குத்தான் ஏழு நிறம் தேவை.

நீங்கள் மாற்றிய பின் வருகிறேன்.

தனிமரம் said...

அழகான கவிதை இயற்கை இல்லாத வாழ்வு சாத்தியம் இல்லாது போல் நீ இல்லாத நானும் சாத்தியம் முடிவு சிறப்பானது வாழ்த்துக்கள் உங்கள் தோழிக்கு நல்ல கவிதையை உங்கள் மூலம் எங்களுக்கு தந்ததற்கு.

Anonymous said...

///தாமரை இலைத் தண்ணீராய்
அவள் மனதில் நான்.,
கிணற்று நீர் பாசியாய்
என் மனதில் அவள்.///என்னே உவமை ஆரம்பமே அசத்தல் ...

Anonymous said...

///மழைத்துளிகளின் தொடர்தாக்குதலுக்கு
அஞ்சாத பயிர் போல
பொழுதும் வளர்கிறது
உன்னைப் பார்க்கும்
என் ஆவல்.// அருமை அருமை ஒப்பீடுகள் அருமை வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்

vidivelli said...

நல்ல கவிதை ...
உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள்...


சகோ/உதாரணத்திற்கு தமிழ்மணத்தில் எமது பதிவு வரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்ற முறையை விளக்கமாக அடுத்த பதிவைத்தாங்களன்.....

A.R.ராஜகோபாலன் said...

///மழைத்துளிகளின் தொடர்தாக்குதலுக்கு
அஞ்சாத பயிர் போல
பொழுதும் வளர்கிறது
உன்னைப் பார்க்கும்
என் ஆவல்.///

எ பி கவில் எ பி வரிகள்
நல்ல பகிர்வு சகோ

சென்னை பித்தன் said...

நல்ல கவிதை!நல்ல பகிர்வு!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//அசையாத காற்று , அலையாத கடல்
ஓடாத நதி, பூவாத மலர்,
கூவாத குயில்..,
இவையெல்லாம்
சாத்தியமென்றால்
நீயில்லாத நானும்
சாத்தியம்தான்..//


அருமை அருமை..

இந்த வார்த்தைகள் போதும்.
அவன் அவளை எவ்வளவு நேசித்திருக்கிறான் என்பது
புரிகிறது..

ம்ம்..

test said...

அருமையான கவிதைதான்!

Angel said...

//அசையாத காற்று , அலையாத கடல்
ஓடாத நதி, பூவாத மலர்,
கூவாத குயில்..,
இவையெல்லாம்
சாத்தியமென்றால்
நீயில்லாத நானும்
சாத்தியம்தான்..//இந்த வரிகள் அருமை குணசேகர் .
thanks for sharing .

நிரூபன் said...

வணக்கம் சகோ, வலைப் பதிவு மீதான உங்களின் ஆர்வம் பற்றிய விளக்கம் அருமை. அத்தோடு, உங்களுக்குப் பிடித்த கவிதையினைம் பகிர்ந்திருக்கிறீங்க. ரசித்தேன்.

DREAMER said...

வணக்கம் குணசேகரன்,
உங்கள் வலைப்பக்கத்திற்கு இது எனது முதல் விசிட். கருத்துக்களும், கவிதைகளும் கொண்டு செல்லும் நடையும் அருமை..! இப்போதைக்கு இந்த பதிவு மட்டுமே படிக்க முடிந்தது. உங்களது முந்தைய பதிவுகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்.

-
DREAMER

கவி அழகன் said...

ஒவ்வொரு வரிகளும் ஆழமான வேதனைகளை சொல்லிநிக்கின்றன
பாவிக்க பட்ட சொற்களும் மிக கடுமையானதாக இருக்கிறது அவளின் உணர்வை போல

எல் கே said...

சுந்தர் ஜி சொல்வது சரிதான். தேவை இல்லாத அலங்கார விட்ஜெட்களை நீக்குங்கள்...

RAMA RAVI (RAMVI) said...

குணா நான் உங்கள் கேள்வி-பதில் பகுதியில் கேட்கவிரும்பும் கேள்விகள்:
1.what is the difference between black hole and a warm hole?
2.How do people earn by launching websites and social networking sites?

மகேந்திரன் said...

உவமைகளும் உவமானங்களும்
அளவாய் ஒளிர்கின்றது கவிதையில்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...