Wednesday, July 06, 2011

கேள்வி - பதில் : 6


1. கேள்வி : தரை மட்டத்தைவிட, மலை மேல் செல்லச் செல்ல நாம் சூரியனுக்கும் இன்னும் பக்கமாகத் தானே செல்கிறோம்? அப்படியானால் வெயிலும் சூடும்  அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்? மாறாக மலைப் பிரதேசங்கள் குளிர்ச்சியாக உள்ளனவே, ஏன்? உதாரணம் (ஊட்டி, கொடைக்கானல்)
[சுரேஷ் கிரிம்-ஜப்பான்., பனிஷா-சென்னை]





பதில்: கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வெப்பம் குறைவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சூரியனிலிருந்து வரும் கதிர்கள் பூமியின்
வாயுவெளியைச் சென்று வரும்போது அதிலுள்ள கதிரியக்க கதிர்கள் (எக்ஸ்ரே, புற ஊதாக் கதிர்கள் போன்றவை) பெரும்பாலும் வாயு மண்டலத்தில் உள்வாங்கிக் கொள்ளப்படுகின்றன. ஆனால் வெப்பக் கதிர்கள் (heat rays) மட்டும் காற்றை ஊடுருவி அப்படியே பூமியை வந்தடைந்து விடுகிறது. அப்படி வெப்பக் கதிர்கள் காற்று வெளியைத் தாண்டி பூமியை அடையும்போது, பூமிதான் அந்த வெப்பக் கதிர்களை உள்வாங்கிக் கொள்கிறது. அதனால் பூமி சற்று சூடாகிறது. பூமி சூடாவதால் பூமியை ஒட்டியுள்ள காற்று சூடாகிறது. இந்த சூடான காற்று மேலெழும்புகிறது. சூடான பூமியிலிருந்து வரும் வெப்பம், மேலெழும்பும் சூடான காற்றிலுள்ள வெப்பம் இவை இரண்டும் சேர்ந்து தரைமட்டத்தில் காணப்படுகிறது. அதனாதான் தரைப்பகுதியில் நாம் வெப்பத்தை அதிகமாக உணருகிறோம்.

சூடான காற்று மேலே எழும்பி ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும்போது குளிர்ந்த காற்றுப் படலத்தைச் சந்திக்கிறது. பின்பு அதனுடன் கலந்து, அந்த சூடான காற்று குளிர்ந்து போகிறது. எனவேதான் கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வெப்பம் மிகவும் குறைவாக உள்ளது. நமக்கும் குளிர்ச்சியாக உள்ளது.
2. கேள்வி : டெலிபதிக்கும்(Telepathy), கோ-இன்சிடன்ஸ்(Co-incidence) என்ன வித்தியாசம்?
[கனியமுதன்- கரூர்]

 


பதில் : டெலிபதி என்பது, E.S.P(Extra Sensory Perception)-ன் ஒரு வகை. பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி (Telepathy) எனப்படுகிறது. உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். அல்லது போன் வரலாம். பெரும்பாலும் காதலர்களுக்கு அடிக்கடி இப்படி நிகழ்வதுண்டு. காதலி காதலனைப் பற்றி நினைத்து, ஃபோன் பண்ணலாம் என்று நினைப்பார். சில நொடிகளில் அந்தக் காதலரிடமிருந்து அவருக்கு ஃபோன் வரும். காதலிக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  "நான் இப்பதான் உனக்கு ஃபோன் பண்ணனும்-னு நெனச்ச, அதுக்குள்ள நீயே ஃபோன் பண்ணிட்ட " என்று சந்தோசத்துடன் காதலி தன் காதலனிடம் சொல்வாள். டெலிபதிதான் இதற்கு காரணம்.

கோ-இன்சிடன்ஸ்(Co-incidence) என்பது ஒரே நிகழ்வு இரண்டு வெவ்வேறு இடங்களில் நடப்பது. உதாரணத்திற்கு, முதல் கேள்வியை நண்பர் சுரேஷ் கிரிம் (ஜப்பானிலிருந்து) என்னிடம் கேட்டார். அதே கேள்வியை அதே நாளில் வார்த்தைகள் மாறாமல் நண்பி பநிஷா (சென்னையிலிருந்து) கேட்டார். நண்பி பநிஷா கேட்டதும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இதுதான் கோ-இன்சிடன்ஸ்.

3. கேள்வி : கணவன் , மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?
[குட்டி- கோயம்பத்தூர்]




பதில் : 
ஒரு குட்டிக் கதை..
ஆதிசங்கரருடைய பெற்றோர் நீண்டகாலமாகப் பிள்ளை இல்லையே என்று விரதம் இருந்தார்கள் . ஒரு நாள் இரவு, இருவரும் தூங்கிக்கொண்டு இருந்த போது, ஒரே சமயத்தில் இருவர் கனவிலும் இறைவன் தோன்றி , " நீண்ட நாள் வாழும் மோசமான பிள்ளை உனக்கு வேண்டுமா.... கொஞ்சநாள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா ?" என்று கேட்டார் .

அதற்கு கணவன் " அதெப்படி நான் மட்டும் முடிவு செய்ய முடியும். இருங்கள் என் மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன் " என்றார். பின்பு மனைவியை எழுப்பி நடந்ததை சொன்னார். மனைவியும் அதே கேள்வியை கடவுள் தன்னிடமும் கேட்டதாகச் சொன்னார். 

அதற்கு கணவன் "நீ அவருக்கு என்ன பதில் சொன்னாய்?" என்று ஆவலுடன் கேட்க, அதற்கு மனைவி சொல்கிறார் " அதெப்படி நான் மட்டும் முடிவு செய்ய முடியும். எனது கணவரை கேட்டு அப்புறம் சொல்கிறேன் என்று கடவுளிடம் சொல்லிவிட்டேன்."

அவர்களுக்குத் தான் ஆதி சங்கரர் பிறந்தார். கணவன் , மனைவி உறவு இப்படி இருந்தால் வாழ்க்கை ரம்மியமாக இருக்கும்.

4. கேள்வி : கரப்பான் பூச்சியைக் கண்டாலே பெண்கள் பயப்படுகின்றனர். ஏன்?
 [ரமேஷ்- திருப்பூர்]


 பதில் :  அது பயமில்லை. அருவருப்புதான் என்று நினைக்கிறேன்.
ஒரு ஆச்சர்யமான உண்மை. தோன்றியது முதல் இன்னமும் பரிணாம வளர்ச்சி இல்லாமல் நம்முடன் வாழ்ந்து வரும் ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி மட்டுமே.

5. கேள்வி : கடி ஜோக் .ப்ளீஸ்?
[மதுவந்தி- ஈரோடு]


பதில் :

நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....

*************************************************************

12 comments:

sure said...

At first i wish to thankyou for giving explanations to all my questions sofar.But today there was one more co-incidence. after reading your post and came to know that even பநிஷா have asked the same question i was surprised. At once my next question was to ask you How this was possible and continued to read the remaining post and i got the answer for my next question also.... yes that was co-incidence.Good work keep it up....Expecting lots from you.......
-Grimm

vidhya said...

very very nice,your posting. waiting for your next posing for all.

Ashok said...

Guna,

For the Ist question, ur answer is wrong.
just check the science and let us know true..


எப்படி Grimm,
திறந்த புத்தகமா இருக்க ...

உன்ன ஏமாத்த இவருக்கு எப்படி மனசு வந்துச்சு .........

குணசேகரன்... said...

அசோக் சார்.உங்களோட கருத்துக்கு மிக்க
நன்றி. உங்களோட இந்த நேர்மை எனக்கு
பிடிச்சிருக்கு. அந்த கேள்விக்கு அந்த பதில்
போதும் என்று நினைதேன் .நீங்கள் இன்னும் நிறைய விளக்கத்தை எதிர்பார்திருக்கிரீர்கள் நிச்சயம் உங்களுக்கு
விரிவான விளக்கத்தை தருகிறேன்.
பதில் தவறு என்று சொன்னது பற்றி
கொஞ்சம் யோசியுங்கள். பௌதீகத்தில்
இது சம்பந்தமாக ஒரு பெரிய விளக்கம்
இருக்கிறது.அத்தனையும்
விரைவில் ஒரு பதிலாகத் தருகிறேன் .
போதுமா அசோக் சார்..!

சமுத்ரா said...

நல்ல விளக்கங்கள்...உங்கள் பதில்கள் தொடரட்டும்..

ஹேமா said...

தெளிவான பதில்கள் !

கவி அழகன் said...

அருமையான கேள்வி பதில் கலக்குது

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான பகுதி..

அதிலும் கணவன் மனைவி பகுதி சிறப்போ சிறப்பு..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு..

RAMA RAVI (RAMVI) said...

குணா பதில்கள் மிகவும் அருமையகவும் புரியும்படியும் இருக்கிறது.எனக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேள்வி கேட்கலமா???

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள கேள்விகள்
சிறப்பான பதில்கள்
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...