Wednesday, May 18, 2011

தெரிஞ்சுக்கோங்க...



         ******பெட்ரோல் - சில தகவல்கள்******



வலை தளம் தொடங்கிய சில நாட்களிலேயே 1000 ஹிட்ஸ்-க்கு மேல் கொடுத்து என்னை ஊக்குவித்த அனைத்து இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி..!

என் வலைதளத்தை தனது இனிய கவிதையின் மூலம் அறிமுகம் செய்த நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி..!(நெஜமாவேஅவ்ளோ தூரம் புடிச்சுருக்கா என்னோட வலை தளம்?! ஒரே கல்லில் ரெண்டு மாங்காயா? ..ம்...கலக்கறீங்க சௌந்தர்).
அவரோட பதிவை பார்க்க இதனை க்ளிக்கவும் (Click)...

 வேலை பளு காரணமாக கொஞ்சம் லேட்டாக பதிவை பதிகின்றேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்..

இக்கரையும்...அக்கரையும்...அப்டீன்னு தலைப்பை வச்சிட்டு தலைப்புக் கேத்த விசயம் எதுவுமே சொல்லவேயில்லை என்ற மனசாட்சியின் உறுத்தலில் இன்று தலைப்புக்கேத்த விசயத்த பதிவு செய்கின்றேன்...



இன்னிக்கு மட்டுமல்ல....ரொம்ப நாளாவே..இந்திய தேச மக்கள் பேசிக்கொண்டிருக்கும் விசயம் பெட்ரோல் விலையேற்றம்.சென்ற வாரம் வெள்ளியன்று மீண்டும் 5.00 ருபாய் ஏற்றி விட்டனர்.

இது சம்பந்தமாக பிரபல நாளிதழ்களில் வந்த செய்திகள் இவை.

"பொதுத்துறை நிறுவனங்களான இந்திய ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 90 டாலராக அதிகரித்துள்ளது எனவே பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெட்ரோல் விலை நிர்ணய அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களை சார்ந்த்துள்ளதால் விலை உயர்ந்ததில் அரசுக்கு எந்த எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரணப் முகர்ஜி தெரிவித்துள்ளார்."

 பொதுத்துறை நிறுவனங்களின் நிகர லாப மதிப்பை அதிகரிப்பதற்காக மக்களின் மேல் சுமையை வைப்பது எந்த விதத்தில் நியாயம்?.

சரி மேட்டருக்கு வாங்க..

பெட்ரோல் விலை ஒன்றும் அதிகமில்லை. அதன் விலையை விட அதிகமாக உள்ள வரிகள் தான் இந்த அளவு விலையேற்றத்திற்கு காரணம்.

1 லிட்டர் பெட்ரோலின் விலை தோராயமாக 58.90 ருபாய் என்று வைத்துக் கொண்டால் அதற்குள் ஒளிந்திருப்பவை:

    * Basic Price: Rs 28.93
    * Education Tax: Rs 0.43
    * Dealer commission: Rs 1.05
    * Excise duty: Rs 14.35
    * VAT: Rs 5.5
    * Petrol Custom: Rs 1.54
    * Crude Oil Custom duty: Rs 1.1
    * Transportation Charge: Rs 6.00
    * Total price: Rs 58.90

பெட்ரோல் விலையை விட அதனில் உள்ள வரிகள் தான் அதிகம். மத்திய அரசு இதனை குறைத்தால் நிச்சயம் விலைவாசி குறையும்.தற்போது ஒரு லிட்டருக்கு வழங்க படும் டீலர் கமிஷன் :

Commision : Rs. 1.20
Price Hike : Rs 3.50
Total : Rs. 4.70

சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு Supply செய்யப்படும் பெட்ரோலின் அளவு:

* ஒரு லோடு (பெட்ரோல் 4000.00 லி- யும், டீசல் 8000 லி).
* ஒரு லோடு சுமார் 2 முதல் 3 நாட்களுக்கு தகும்.

விலையேற்றம் அறிவித்ததும் டீலர்கள் முந்தைய விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கி ஸ்டாக்கில் வைத்துக் கொள்கின்றனர்.கேட்டால் பெட்ரோல் இல்லை என்று மக்களுக்கு சொல்லி விடுகின்றனர்.விலையேற்றம் அமுலுக்கு வந்தவுடன் புதிய விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர் (எப்டியெல்லாம் சம்பாதிக்கிறாங்க!!!).

உலகம் முழுக்க பெட்ரோல் விலை எப்படி இருக்கு? கொஞ்ச நாளைக்கு முன்னாடி  ஒரு சர்வேயில் சொல்லியிருக்காங்க:

இக்கரையும்...அக்கரையும்...:(இந்தியாவிலும்..மற்ற நாடுகளிலும்..)
  
       

தமிழ்நாட்டில்:
 
முப்பது வருடங்களுக்கும் மேலாக அத்துறையில் பணியாற்றி வரும் அமெரிக்க அன்பர் அளித்த சில டிப்ஸ்..(நான் படித்தது..)
  • பெட்ரோலியம் தொழிலில் தட்ப வெப்ப நிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது திரவ எரிபொருளின் அடர்த்தியை தீர்மானிக்கிறது. எரிபொருள் நிரப்பப்படும் ஒவ்வொரு லாரியும் தட்பவெப்பம் கட்டுப்படுத்தப்பட்டவை. வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் பல டாலர்கள் கையைக் கடிக்கும். ஆனால், காஸ் ஸ்டேஷன்கள் எனப்படும் பெட்ரோல் பங்க்குகள் அவ்வண்ணம் வெப்பநிலை அக்கறை கொண்டவை அல்ல.  அவை பெட்ரோலை நிலத்தடியில் சேமிப்பதால், உங்கள் வாகனங்களுக்கு அதிகாலையில் பெட்ரோல் நிரப்புவதே நல்லது. நிலம் குளிர்ந்திருக்கும் அவ்வேளையில் பெட்ரோலின் அடர்த்தி அதிகமாயிருக்கும். நீங்கள் நிரப்பும் ஒரு கேலன் பெட்ரோல் ஒரு கேலனாக இருப்பது அப்போது மட்டுமே. மதியம் அல்லது மாலையில் நீர்த்துப் போன எரிபொருளை நிரப்புவது, ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கின மாதிரிதான். அளவில் தில்லுமுல்லு இருக்கும்.
  • நீங்கள் எரிபொருள் நிரப்பப் போகிறபோது அங்கே ஒரு டாங்க்கர் லாரி பங்க்கின் நிலத்தடி சேமிப்புத் தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தால் வேறு இடம் பாருங்கள். வோட்காவும் சிக்கன் பிரியாணியும் கலந்தடித்த பின் கலங்கிப்போகும் வயிறு மாதிரியே நிலத்தடி சேமிப்புத்தொட்டியில் ஒரு பிரளயமே ஏற்பட்டு குப்பை கூளம் எல்லாம் மேலே எழும்பியிருக்கும். அவற்றை அவசியம் உங்கள் வாகனத்தில் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா ? 
  • காலி என்று சிவப்பு விளக்கு எரியும் வரை காத்திராமல் வாகனத்தில் பாதி டாங்க் தீர்ந்தவுடனே நிரப்பி விடுவது நல்லது. டாங்க்கில் காலியிடம் அதிகமாயிருந்தால் ஆவியாதல் விரைவாய் நடக்கும். நஷ்டம் நமக்கே. 
  • பொதுவாக பெட்ரோல்  பம்ப்புகளில் மெதுவாக, மிதமாக, வேகமாக என மூன்று விதமாய் நிரப்பும் வசதி இருக்கும். சீக்கிரம் வேலை முடிய வேகமாக நிரப்பும் வசதியையே நம்மில் பலரும் தேர்வு செய்கிறோம். இனிமேல் மெதுவாக நிரப்புங்கள். வேகமாய் பெட்ரோல் நிரப்பும்போது  நுரை அதிகம் ததும்பும். குழாயில் நுரை உருவாக்கும் வெற்றிடம் நீங்கள் நிரப்பி முடித்தபின் வாகனத்தின் டாங்க்கிலிருந்து ஓரளவு பெட்ரோலை திரும்ப உறிஞ்சிக் கொள்கிறது. 
*********************************************************************





12 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்ல அலசல் .பாராட்டுக்கள்.

குணசேகரன்... said...

நன்றி ராஜி..

A.R.ராஜகோபாலன் said...

தங்களின் சமூக உணர்வை
பலமாய் பிரதிபலிக்கும்
இரத்தின பதிவு
பாராட்டுக்களும் நன்றிகளும்

A.R.ராஜகோபாலன் said...

word verification ஐ எடுத்து விடுங்களேன்
கருத்துரைக்க கொஞ்சம் தடையாக உள்ளது

குணசேகரன்... said...

உங்க அன்புக்கு நன்றி திரு A.R RAJAGOPALAN.

Prabashkaran Welcomes said...

என்ன புள்ளி விவரம்... பயனுள்ள விவரங்கள் தொடருங்கள் இது போன்ற பதிவுகளை

நிரூபன் said...

பெற்றோலிய விலையேற்றம் பற்றிய தகவல், பெற்றோல் பற்றிய பகிர்வு அருமை சகோ.

தங்களின் முதல் இரண்டு பதிவுகளுக்கும் வந்தேன், பின்னூட்டம் போட முடியாது திரும்பி விட்டேன், உங்கள் பின்னூட்டப் பெட்டியில் உள்ள வேர்ட் வெரிபிக்கேசன் கோளாறு பண்ணிக் கொண்டு இருந்தது.
அதனை நீக்கியமைக்கு நன்றிகள். உங்களின் முதலில் இதனைப் படியுங்க பதிவிற்கு மீண்டும் என் கருத்துரையினைச் சேர்த்துள்ளேன்.

வலைப் பதிவிற்கு வருக வருக என்று உங்களை அன்போடு வரவேற்கிறேன். ஜமாயுங்க தோழா.

நிரூபன் said...

தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டுப் பட்டைகள் இணைக்கவில்லையா?

குணசேகரன்... said...

இத.. இதத்தான்.. எதிர்பார்த்தேன்.!. ரொம்ப நன்றி..நண்பர்களே..தமிழ் மணம் தமிலிஷ் ஓட்டுப் பட்டைகளை இணைப்பது பற்றி கொஞ்சம் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்..பதிவை படிப்பதற்கும்..Comment பண்றதுக்குமே உங்களுக்கு நேரம் செலவாகும்..உங்கள் பொன்னான நேரத்தை அதற்கு மேல் வீணாக்க என் மனம் விரும்பவில்லை..அதனால்தான் ஓட்டுப் பட்டைகளை இன்னமும் இணைக்கவில்லை...

குணசேகரன்... said...

தினமும் பதிவு செய்தும்..என்னோட தமிழ்மணம் Traffic Rank நாளுக்கு நாள் பின்னோக்கியே போகிறது.. காரணம் தெரிந்தால் எனக்கு விளக்கவும்..

Speed Master said...

முதலில் டெம்ளேட் டிசைன் ம்ற்றும் post layout மாற்றுங்கள்

Speed Master said...

இதை என் நண்பர்க்ளுக்கு அனுப்ப எடுதுக்கொள்கிறேன்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...