******வாழ்த்துக்கள் ******
நினைத்த மாதிரியே "அம்மா" ஆட்சிக்கு வந்து விட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு ஒன்று நிகழ்ந்திருக்கிறது . அதுதான் இந்த தேர்தலின் Highlights. விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி 29 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. வெறும் 22 -ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. விஜயகாந்த் கட்சி தி.மு.க-வை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தே.மு.தி.க விற்கு ஒரு நல்ல Energy Tonic.
விஜயகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த தேர்தலில் ஆளுங்கட்சிகள் பெரும் பாடு பட்டு பணம் பட்டுவாடா செய்ததை அனைவரும் அறிவர். அப்படி கொடுத்தும் தாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க வில்லை. இதன் மூலம், பணம் கொடுத்தால் கொடுத்தவர்களுக்குத்தான் மக்கள் ஒட்டு போடுவார்கள் என்ற எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது.
இனி வரும் காலத்தில் , தமிழக மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளான மின் பற்றாக்குறை , விலைவாசி உயர்வு போன்றவை தீரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அம்மா இனி என்ன செய்ய போகிறார் .
பொறுத்திருந்து பார்ப்போம்.!!!
இவர்களுக்கு ஏற்ற சில பாடல்கள்:
அம்மா - வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...அதை வாங்கி தந்த
பெருமை எல்லாம் உன்னைச்(ராசா, கனிமொழி ,கலைஞர்)
சேரும்.
விஜயகாந்த் - சிங்கமொன்று புறப்பட்டதே ...
கலைஞர் - ஒன்னுமே புரியல., உலகத்துல.,என்னமோ நடக்குது..,மர்மமா
இருக்குது(2G கேஸ்,தேர்தல் முடிவு ).
ராசா- சோதனை தீர வில்லை...சொல்லி அழ யாரும் இல்ல ...
ஸ்டாலின் - உன்னை (C.M பதவி) நினைச்சேன் பாட்டு படிச்சேன் ..
வடிவேலு- அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...
கனிமொழி - டாடி..டாடி. ..ஒ மை டாடி. ...
அழகிரி - அண்ணன் என்ன தம்பி என்ன...சொந்தமென்ன...
தயாநிதி மாறன் - எங்களுக்கும் காலம் வரும்...
மக்கள் - ஆடிய ஆட்டமென்ன ....
******************************************
6 comments:
மக்கள் - ஆடிய ஆட்டமென்ன ....//
Nice comments.
comments-க்கு நன்றி...தோழி..
//இனி வரும் காலத்தில் , தமிழக மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளான மின் பற்றாக்குறை , விலைவாசி உயர்வு போன்றவை தீரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அம்மா இனி என்ன செய்ய போகிறார்//
ஆம் பொறுத்திருந்து பார்ப்போம்
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே..!
பாடல்கள் மூலம் ஒவ்வொருவர் நிலை குறித்தும்
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
சிறப்பாக இருக்கிறது
அதிலும் குறிப்பாக மக்களுக்கென
சொல்லியிருக்கும் பாடல் மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
என் பதிவுக்கு தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நூறாவது தொடர்பவராக தங்களை
இணைத்துக் கொண்டமைக்கு நன்றி
மிக்க நன்றி ரமணி..
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...