Saturday, May 21, 2011

எ.பி.க - 2

                  *** எனக்கு பிடித்த கவிதை - 2 ***

 

                    "  அலைகள்
                        பூக்கள்
                        குழந்தை
                        நண்பர்கள்
                       கவிதையும்கூட
                       அவ்வப்போது
                       அலுத்துப்போகிறது "

கனிமொழி எழுதிய கவிதை...

அழகாக எழுதியிருக்கிறார்..
அவரின்  இன்னொரு கவிதை..:



                 ***அப்பா சொன்னாரென...***

                  "  அப்பா சொன்னாரென
                     பள்ளிக்கு சென்றேன்
                     தலை சீவினேன்
                     சில நண்பர்களைத் தவிர்த்தேன்
                     சட்டை போட்டுக்கொண்டேன்
                     பல் துலக்கினேன் வழிபட்டேன்
                     கல்யாணம் கட்டிகொண்டேன்
                     காத்திருக்கிறேன்
                     என் முறை வருமென்று... "

1995-ல் கனிமொழி எழுதிய இந்தக் கவிதையை 

2007-ல் இப்படி முடித்தார்.

                 "   மாநிலங்கவையில் நுழைந்தேன்.. "

2011-ல் காலம் முடிவை மாற்றியது.

                 "  திஹாருக்குள் நுழைந்தேன்..."


கனிமொழி எழுதியவை:

கருவறை வாசனை,
அகத்திணை
பார்வைகள்
கருகும் மருதாணி

எங்கேனும் கிடைத்தால், கவிதை விரும்பிகள் ஒருமுறை படித்துப் பாருங்கள்
நிச்சயம் அலுக்காது..

டிஸ்கி :
 
அரசியலறிவு அவருக்கு ஊட்டப்படாமல் இருந்திருந்தால்
தமிழ் உலகிற்கு ஒரு அருமையான பெண் கவிஞர் கிடைத்திருப்பார்..

**********************************************************

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

2011-ல் காலம் முடிவை மாற்றியது.
***அப்பா சொன்னாரென...***


" திஹாருக்குள் நுழைந்தேன்..."//
அருமையான பெண் கவிஞர்.. பாவம்...

நிரூபன் said...

கனி மொழியின் வரிகளைக் காலத்திற்கேற்ற மாதிரி, மாற்றியிருக்கிறீர்கள்.


அரசியலறிவு அவருக்கு ஊட்டப்படாமல் இருந்திருந்தால்
தமிழ் உலகிற்கு ஒரு அருமையான பெண் கவிஞர் கிடைத்திருப்பார்..//

இது மட்டும் நிஜம். அவரது கவிதைகளே இதற்குச் சான்று.

Geetha6 said...

super!

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...