*******மரிக்கொழுந்து*******
ஆத்தோரம் போறவளே ...
அத்த மக ரத்தினமே !...
மச்சானை பாரேண்டி...
மாந்தோப்பில் நானிருக்கேன் ...
சேலை கட்டி நீ வந்தால் ...
சிலிர்க்குதடி என் மனசு..!..
சேதி ஒன்னு வச்சிருக்கேன் ...
சீக்கிரமே வந்திடடி...
மல்லி பூ கமகமக்க ...
மரிக்கொழுந்தே நீ வரும் போது...
மத்தியான வேளையிலும் ....
மச்சான் மனம் குளிருதடி...
கண்ணுறங்கும் நேரத்திலும் ...
கண்ணசர முடியலடி ...
உண்ணும் வேளையிலும் ...
உணவுண்ண தோணலியே ...
மழைக்கு கூட ஒதுங்கலையே...
பள்ளிகூட வாசப்பக்கம். ..
கண்மணியே நீ இப்ப...
கவி பாட வச்சுட்டியே...
பயமேதும் வேணாம்டி ...
பண்பாட்டில் வளர்ந்தவன்டி...
உன்கூட வாழ்வேன்டி...
என் உசிரு உள்ளவரை...
*************************************************************
6 comments:
மனதை பரிகொடுத்தேன்..
தங்கள் கவிதைக்கு..
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் சௌந்தர் அவர்களே..
இவர்களுக்கு ஏற்ற பாடல் ,நல்லதொரு தேன்கிண்ணம்
வாழ்த்துக்கள் உங்களின் களம்
மிக நன்றாய் நிறைய ..............
nice one dude! congrats...
Guna Bro sema
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...