Thursday, May 26, 2011

தெரிஞ்சுக்கோங்க-நிலவு

நிலா!!!. இத பார்க்கும் போது (நடிகை நிலா இல்லீங்க..அசல் நிலா...) ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க் வரும். மொட்டை மாடியில் மல்லாக்க படுத்துக் கொண்டு முழு நிலவை அன்னாந்து பார்க்கும் போது வெகு தொலைவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களுக்கு இடையே ஒய்யாரமாய் வீற்றிருக்கும் நிலாவைப் பார்க்கும் போது, காதலனுக்கு தன் காதலி ஆயிரக்கணக்கான ஃபிகர்களுக்கு இடையே ஜம்மென்று நின்று கொண்டிருப்பதைப் போல நினைக்கத் தோணும்.அந்த அழகான நிலாவைப் பற்றி நான் படித்தவற்றை இங்கு கொடுத்துள்ளேன். இதையும் தெரிஞ்சுக்கோங்க...


 

நிலவு தோன்றி சுமார் 5 பில்லியன் ஆண்டுகள்  ஆகின்றன. " தியா " என்ற ஒரு கிரகம், பூமியின் மீது மோதியதால் உருவானதாக அறிவியல் சொல்கிறது.

கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.

தியா என்பது செவ்வாய் கிரகம் அளவு பெரிய கிரகம்.அது பூமியின் மேல் விழுந்தபோது லட்சகணக்கான அணுகுண்டுகள் வெடித்ததற்கு ஒப்பான விளைவுகள் ஏற்பட்டன. பூமியே பிளந்தது. அந்த சூட்டில் தியாவின் மேற்பரப்பு துண்டு,துண்டாக சிதறி பாறையாக,கல்லாக,மண்ணாக விண்வெளியில் தூக்கி வீசப்பட்டன.

தியாவையும், பூமியையும் மாங்கனியாக கற்பனை செய்து கொள்ளுங்கள் மாங்கனிக்கு நடுவே கொட்டை, மேற்புரம் கெட்டியான பழம்,அதை மூடும் தோல்..அதே மாதிரிதான் பூமிக்கும், தியாவுக்கும் நடுவே இரும்பு கோர்.அதை சுற்றி பாறை போன்று இறுகிய மேன்டில், மேற்புரம்  ஜுஸ் போல இளகிய திரவ நிலையில் இரும்பு.அதற்கு மேற்புரம் மீண்டும் பாறை.அதற்கு மேலே நாம்.

இப்படி இரு மாங்கனிகள் ஒன்றின் மேல் ஒன்று பலத்த வேகத்துடன் மோத தியா மாங்கனியின் மேற்புரம் முழுக்க விண்வெளியில் தூக்கி வீசப்பட்டது.பூமியும் பிளந்தது.தியாவின்நடுவே இருந்த இரும்பு கோர் பூமியின் உள்ளே இழுக்கபட்டது.அது பூமியை துளைத்து கொண்டு உள்ளே போய் பூமிக்கு நடுவே இருந்த இரும்பு கோருடன் கலந்துவிட்டது.

அதபின் தூக்கி வீசப்பட்ட துகள்களில் சில பகுதிகள் பூமியால் ஈர்க்கபட்டு
விழுந்தன.தியா பூமியில் விழுந்ததால் உண்டான குழி  இதனாலும் பிளேட்
டெக்டானிக்ஸாலும் மூடபட்டது.சொல்லபோனால் அதன்பின் பலமில்லியன் வருடங்களுக்கு பூமியின் மேற்புரம் உருகிய இரும்பாகவும், பாறையாகவும் திரவ வடிவில் இருந்தது,இறுகியது,மாறியது.தியாவின் சில பகுதிகள் புவியீர்ப்பு வெளிக்கு வெளியே சென்றாலும் பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுபட்டு பூமியை சுற்றி வர துவங்கின.தற்போது சனிகிரகத்துக்கு ஒரு வளையம் இருப்பது போல பூமிக்கும் வளையம் உண்டானது.நாளடைவில் அந்த வளையத்தில் இருக்கும் பாறைகள் ஒன்றை ஒன்று ஈர்த்து கொண்டு சுழற்சி வேகத்தில் நிலவாக மாறின.

பிளேட் டெக்டானிக்ஸ் கண்டங்களையே நகர்த்தும் சக்தி வாய்ந்தது. இந்தியா முன்பு ஆபிரிக்காவின் மடகாஸ்கருடன் ஒட்டிகொண்டு இருந்தது.தென்அமெரிக்காவும், ஆபிரிக்காவும் மறுபுறம் ஒட்டிகொண்டு இருந்தன.பிளேட் டெக்டானிக்ஸ் விளைவால் இந்தியா ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியிலிருந்து மெலே தூக்கி வீசப்பட்டு ஆசியாவின் மேல் வந்து மோதியது.அந்த மோதலின் விளைவாக இந்தியாவின் விளிம்பும்,
ஆசியாவின் விளிம்பும் மேலே உயர்ந்து இமயமலை ஆகின.

பூமியோடு மோதிய தியா பூமியால் உள்ளிழுக்கபட்டு பூமியின் பரப்பளவை மேலும் அதிகரித்தது.தியாவின் இரும்பு கோர்(Core)-யை (அடி) பூமி உள்ளிழுத்து தன் மையத்தில் தக்க வைத்து கொண்டது.

தியாவும், பூமியும் மோதியதை காட்டும் கம்ப்யூட்டர் சிமுலேஷன் வீடியோ இது.

                                

                             


 **********************************************************

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

Geetha6 said...

wav!! super...

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...