Tuesday, May 24, 2011

கேள்வி-பதில்

எனதருமை நண்பர்களே...நண்பிகளே...!
எனது வலைப் பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு மிக்க நன்றி.!
இன்று முதல் புதிதாய் ஒரு பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். கேள்வி-பதில் பகுதிதான் அது.

படித்து விட்டு கருத்து சொல்லுங்கள். நீங்கள் ஏதேனும் கேள்வி கேட்க நினைத்தால் பதிவிற்கு கீழே உள்ள Comments Box-ல் கேள்விகளை தமிழ் அல்லது English-ல post செய்யுங்கள்.
நிச்சயம் பதில் கிடைக்கும்.


1.கேள்வி:நான் முயற்சி செய்யும் அனைத்து விசயங்களும் தோல்வியிலேயே முடிகிறது?என்ன செய்வது?
 பதில்: அப்துல் கலாம் சொன்னது,

       "முடியாது என்று நாம் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ 
       செய்து கொண்டு இருக்கிறான்."
இதனை மனதில் நினைத்துக் கொண்டு அந்த யாரோ ஒருவன் நீங்களாக இருக்க திரும்ப முயற்சி செய்யுங்கள்.
2. கேள்வி:.ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் பெண் சட்டென்று அழுது விடுகிறாள்.ஆண் அழுவது இல்லை. என்ன காரணம்?
 
 
 பதில்: பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள். ஆனால் ஆண்கள் அறிவுபூர்வமானவர்கள். பிரச்சனை என்று ஒன்று வந்துவிட்டால் அதன் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும் என்று தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு அழ ஆரம்பித்து விடுவர் பெண்கள்.ஆண்கள் அப்படியல்ல...அந்தப் பிரச்சனையால் என்ன பாதகம், என்ன சாதகம்..அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து நடவடிக்கை எடுப்பார்கள்.மேலும் பெண்கள் பைசா பெறாத அற்ப விசயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து கவலைப்படுவார்கள்.ஆண்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். இது தவிர, சிறு வயதிலிருந்தே ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொல்லப்படுகின்ற புத்திமதிகள் வெவ்வேறானவை. வீட்டுப் பெரியவர்கள் ஒரு சிறுவனைப் பார்த்து "ஒரு ஆண்பிள்ளை அழக்கூடாது.ஒரு பெண்பிள்ளை மாதிரி அழறியே! உனக்கு வெட்கமாயில்லை?" என்று சொல்லி சொல்லியே வளர்க்கிறார்கள். அதேபோல் ஒரு சிறுமியைப் பார்த்து "பொட்டப்புள்ளையா லட்சணமா இரு.அடக்க ஒடுக்கமாய் இரு...ஆம்பிள்ளை மாதிரி நிமிர்ந்து நடக்காதே" என்றெல்லாம் சொல்லி அவளைக் கோழையாக்கி விடுகிறார்கள் பெண்ணுக்கு அவளுடைய கண்ணீர் ஆயுதம் என்றால் ஆணுக்கு அது ஒரு அவமானம்.
(விஞ்ஞானபூர்வமான உண்மை: அழுகையின்போது வெளிப்படும் கண்ணீர் ஒரு நல்ல கிருமி நாசினி).

3.கேள்வி: உடலில் உள்ள உறுப்புக்களை தானமாக கொடுப்பதற்கு எவ்வளவு நாட்கள்வரை பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
 
 
 பதில்: சிறுநீரகத்தை 72 மணி நேரம் வரையிலும், கல்லீரலை 18 மணி நேரம் வரையிலும், இதயத்தை 5 மணி நேரம் வரையிலும், கணையம் 20 மணி நேரம் வரையிலும் கார்னியா எனப்படும் கண் விழித்திரையை 10 நாட்கள் வரையிலும் தோல், எலும்பு,இதயத்தின் வால்வுகள் போன்றவற்றை 5 வருட காலம் வரையிலும் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்.

5. கேள்வி:விண்வெளி வீரர்கள் அணியும் உடையின் மதிப்பு எவ்வளவு?
 
 
  பதில்: 40 கோடி.
 
**************************************************************








1 comment:

Unknown said...

வரும் ஆனா வராது தலைப்புக்கேற்றவாறு சில வரிகள்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...