* விமர்சனம் - மங்காத்தா *
அசல்-ன் தோல்விக்குப் பிறகு வந்திருக்கும் அஜித்-ன் படம். 50வது படம் வேறு. எனவே நிறைய எதிர்பார்ப்புக்கள் மங்காத்தா மீது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா?தொடர்ந்து படியுங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
கிரிக்கெட் சூதாட்டம்தான் படத்தின் மூலக் கரு. காவல்துறை அதிகாரியான அஜித் வில்லனின் அடியாளைக் காப்பாற்றுவதற்காக போலிஸை சுட்டு கொன்று விடுவதால் 6 மாதம் சஸ்பெண்டில் இருக்கிறார். இந்நிலையில் IPL கிரிக்கெட் சூதாட்டத்திற்காக வில்லனிடத்தில் மொத்தப் பணமும் (சுமார் 500 கோடி) வந்து சேருகிறது. அந்தப் பணத்தை வில்லன் ஒரு இடத்தில் பதுக்கி வைக்க முயற்சிகள் செய்கிறார். இந்நிலையில் வில்லனிடம் வேலை செய்யும் ஒருவன் தன் எஸ்.ஐ நண்பன் மற்றும் பார் நடத்தும் நண்பன் மூவரும் சேர்ந்து அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க நினைக்கின்றனர். ஐ.ஐ.டி.யில் படித்தவரான பிரேம்ஜி அமரனும் இந்த மூவரின் கூட்டணியில் சேர்ந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அஜித்-க்கு இந்தக் கொள்ளைத்திட்டம் பிரேம்ஜி மூலம் தெரியவருகிறது, அதன் பின் அவர்களின் ஒவ்வொரு மூவ் மெண்ட்ஸையும் அவர்களுக்குத் தெரியாமல் கண்டுபிடிக்கிறார்.அவர்கள் திட்டத்தை செயல்படுத்தும் நேரத்தில் திடீரென நுழைந்து தனக்கும் பங்கு வேண்டும் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்கும் காவல் அதிகாரியான அர்ஜுனுக்கும் இந்த 500 கோடி விசயம் தெரியவர, கூட்டத்தை பணத்துடன் பிடிக்க முயற்சிகள் செய்கிறார்.அஜித் டீம் போட்ட திட்டத்தின்படி பணத்தைக் கடத்துகின்றனர்.கடத்திய 500 கோடி பணத்தை ஒரு இடத்தில் பதுக்கி வைக்கின்றனர் .அப்புறம் ஆளாளுக்கு, டீமிலிருக்கும் நண்பர்களை போட்டுத்தள்ளிவிட்டு தனியாக அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள நினைக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க வில்லனிடம் வேலை செய்பவன் வில்லனிடம் மாட்டிக் கொள்கிறான்.அவன் மூலம் பணத்தை மீட்க வில்லன் கூட்டம் மற்றவர்களைத் தேடுகிறது. அர்ஜுனும் தனது டீமோடு தேடிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் பதுக்கி வைத்திருக்கும் பணம் காணாமல் போகிறது. அதை யார் எடுத்தார்கள் என்று கண்டுபிடித்து அவர்களைத் தேடி அஜித் செல்கிறார். கடைசியில் அந்தப் பணம் கிடைத்ததா? அர்ஜுன் அவர்களைப் பிடித்தாரா?வில்லன கூட்டம் அவர்களைக் கண்டுபிடித்து என்ன செய்தது என்பதை வண்ணத்திரையில் காண்க!
அஜித் நடிப்பு:
படத்தில் நல்லவர்கள் என்றால் த்ரிஸாவும், அஞ்சலியும் தான். மற்றபடி அனைவரும் கெட்டவர்கள். இதில் அஜித் ரொம்பக் கெட்டவராக வருகிறார். அவரது மேனரிஷமும்,கேஷுவலான கெட்டப்பும் மிக மிக அருமை. தொப்பை கொஞ்சம் தெரிகிறது. மற்றபடி பணத்தாசை பிடித்த கெட்ட மனிதனை கண்முன் நிறுத்துகிறார். படத்தில் ஹீரோயிசமே தெரியவில்லை. இருப்பினும் அஜித் வரும் காட்சிகளில் நடிப்பில் அவர் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விடுகிறார். அதிலும் இடைவேளைக்கு பிற்பாதியில் அஜித்-ன் நடிப்பு அம்சமாக உள்ளது.
அர்ஜுனுக்கு இதில் நல்ல கேரக்டர்தான். படத்தின் பின்பாதியில் தான் அவருக்கு நிறைய காட்சிகள். க்ளைமாக்ஸில் அஜித்-க்கும் அர்ஜுனுக்கும் நடக்கும் சண்டை காட்சி நன்றாக உள்ளது.
த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்று நான்கு பேர் இருக்கின்றனர்.நால்வருக்கும் ஒவ்வொரு பாடல் காட்சிகள் உள்ளது. நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.மற்றபடி ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர். ஒரு பாடல் காட்சியில் லட்சுமிராய் கொஞ்சம் கவர்ச்சியாகத் தெரிகிறார்.
வில்லனாக வரும் ஜெயப்ராகாஷ் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறுகிறது.
வெங்கட் பிரபுவின் சென்னை-28 டீம் இதிலும் நடித்திருக்கின்றனர்(ஜெய்-யை தவிர). சென்னை-28, சரோஜாவில் காமெடியில் கலக்கிய பிரேம்ஜிக்கு இந்தப் படத்தில் காமெடி மிஸ்ஸிங். அதையும் படத்தில் ஒரு கேரக்டர் "நீ பண்ற காமெடிமொக்கையாக இருக்குது" என்று சொல்வதுபோல் அமைத்திருக்கிறார் இயக்குனர்.
இசை - பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட். மச்சி ஒப்பன் த பாட்டில் காட்சியமைப்பு நன்றாக இருக்கிறது. அஜித் வரும் காட்சிகளில் ஸ்பெசல் BGM தீம் அருமை. இடவேளைக்கு பின் படத்தின் விறு விறுப்புக்கு ஏற்ப BGM இருக்கிறது.
இயக்கம்- இயக்குனர் வெங்கட் பிரபுவின் படங்களில் காமெடி ஸ்பெசலாக இருக்கும் . இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகள் தவிர ஏனைய காட்சிகளில் காமெடிக்கு பஞ்சம். படத்தின் முற்பாதி திரைக்கதையில் விறு விறுப்பு இல்லை. தேவையில்லாத பாடல் காட்சி வேறு வருகிறது. காமெடியும் இல்லை. எனவே முற்பாதியில் வரும் காட்சிகள் சிலவற்றை வெட்டினால் நல்லது. ஆனால் முதல் பாதியில் இல்லாத விறு விறுப்பை பின் பாதியில் சரி கட்டியிருக்கிறார். இடவேளைக்கு அப்புறம் திரைக்கதை விறு விறுப்பு + வேகம் கலந்து அமைத்திருக்கிறார். வித்தியாசமான அஜித்-ஐ இந்தப் படத்தில் காட்டியதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.
மங்காத்தா - கமர்ஷியல் மசாலா ஆட்டம்.
******************************************************
3 comments:
அப்ப தல தன் ஐம்பதாவது படத்துல ஜெய்ச்சிட்டாருன்னு சொல்லுங்க.
Compare to 1st half, 2nd half was ok
நல்ல சுவையான விமர்சனம்.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...