Sunday, August 14, 2011

மற்றவை - இதயம் கவர்ந்தவை

          * இதயம் கவர்ந்தவை *
மிழ் சினிமாவின் வரலாறைப் பற்றி நிறைய பேர் நிறைய விசயங்களைச் சொல்லிருக்கின்றனர். டி.ஆர்.மகாலிங்கம் காலத்திய படங்களில் எல்லாம் பாடல்கள் அதிகம் இருக்கும். கதாநாயகன், கதாநாயகியை நினைக்கும் போது ஒரு பாட்டு வரும்.அப்புறம் அவளைப் பார்க்கச் செல்லும் போது ஒரு பாட்டு வரும்.பார்த்த பின் இருவருக்கும் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு வரும். இது அப்போதைய டிரெண்ட். காலம் மாற மாற படத்தின் நீளமும், பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இப்போதெல்லாம் ஆறு பாடல்கள் ஒரு படத்தில் காட்டினாலே நம்மை அறியாமல் படத்தின் மீது ஒரு சலிப்பு வந்து விடுகிறது. ஆடியோ ரிலீஸுக்காக மட்டும் ஆறு பாடல்களை வெளியிட்டு, படத்தில் ஒரு சிலவற்றை கட் பண்ணி விடுகின்றனர்.

இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படங்களில் கிடைக்கும் ஆனந்தம், எண்டெர்டெயின்மெயிண்ட் இப்போதெல்லாம் வெறும் இருபது நிமிடங்களில் வரும் சார்ட் ஃபில்ம் எனப்படும் குறும்படங்களில் கிடைத்துவிடுகிறது. ஃபேஸ்புக்கை ஓப்பன் பண்ணினால் ஒரு நாளுக்கு அட்லீஸ்ட் ஒரு குறும் படமாவது நமது நண்பர்கள் மூலம் பகிர்ந்து கொண்டு, காணும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் எனக்கும் நிறைய படங்கள் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 சில படங்கள் மொக்கையாக இருக்கும். சில அட போட வைக்கும். சில பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும். காதல் பற்றிய குறும் படங்கள் காணும் போது நிறைய தடவை படத்தோடு லயித்திருக்கிறேன். படத்தை எடுப்பவர்கள் இளைஞர்கள் அல்லது இளைஞிகளாக இருப்பதால் காதல் பற்றிய குறும் படங்கள், ரசிக்கும் வகையில் அமைகிறது என்று நான் நினைக்கிறேன்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அனுப்பிய "மாலை நேரம்" இந்த குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இதுவும் ஒரு காதல் கதைதான். இந்தப் படத்தில் வரும் ஹீரோ , ஹீரோயின் இருவரும் அவ்வளவு இயல்பாக நடித்திருகின்றனர். இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்தது படத்தின் ஹீரோயின். குட்டிப் பெண் தான். ஆனால் நடிப்பில் சுட்டிப் பெண். நீங்களும் பாருங்கள். அவசரகதியில் பார்க்க வேண்டாம். ஓய்வு நேரத்தில் நிதானமாக பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.


#####################################################

கிரெடிட் கார்டு என்ற ஒரு டாபிக்கை வைத்துக் கொண்டு எடுத்திருக்கும் "தேய் மச்சி தேய்" இந்த குறும்படம் டாக்குமெண்டரி போல இல்லாமல், சிறப்பான மேக்கிங்கால் ரசிக்கும் படி எடுத்திருக்கிறார்கள். இதுவும் உங்கள் பார்வைக்கு.



*****************************************************

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சென்னை பித்தன் said...

நல்ல குறும் படங்களின் அறிமுகத்துக்கு நன்றி!நிச்சயம் பார்க்கிறேன்!

மகேந்திரன் said...

அருமையான காணொளிகள்.

RAMA RAVI (RAMVI) said...

இரண்டுமே அருமையாக இருக்கு.அதிலும் கிரெடிட் கார்ட் படம் சிறப்பாக இருக்கு.

N.H. Narasimma Prasad said...

குறும்படப் பதிவு சூப்பர்.

கவி அழகன் said...

அருமை வாழ்த்துக்கள்

kowsy said...

முதலாவது ஆர்ப்பாட்டம் இல்லாது அற்புதமாக அமைந்த கதை. இணர்டாவது ஆழ்ந்த கருத்தை வெளிப்படுத்தும் கதை. குணா அவர்களே! ஓய்ந்து இருக்கும் வேளையில் அருமையான விடயங்களைத் தந்து மனதுக்கு சாந்தியளிக்கின்றீர்கள். திரைப்படம் பார்ப்பதற்கு அவ்வளவு நேரம் கிடைப்பதில்லை. ஆனாலும் உங்கள் ரிப்ஸ் களைப் பயன்படுத்தி முயற்சிக்கின்றேன். நன்றி

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...