* எ.பி.க - 14 *
10,000 ஹிட்ஸ்களைத் தாண்டி விட்டது எனது வலைப்பூவின் விசிட்டர்ஸ் கவுன்டர்ஸ். மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் ஓய்வு நேரத்தை சில நிமிடங்கள் எனது வலைப்பூவிற்கு விஜயம் செய்வதற்காக பயன்படுத்தியமைக்கும், என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் உங்கள் கருத்துக்களை சொன்னதற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!. உங்கள் ஆதரவுதான் எனது வலைப்பூவிற்கு பச்சையம். எனவே வலைப்பூவின் சுவாசத்திற்கு தினமும் பச்சையம் கொடுங்கள். நன்றி!.
இதுவரை எனக்கு பிடித்த கவிதைகளில் நிறைய வகைகளை வெளியிட்டுள்ளேன். விலங்குகளை பற்றின கவிதை எதுவும் வெளியிடவில்லை. எழுதுவதும் மிக அரிது. யாராவது எழுதியிருப்பார்களா என்று அதனைப் பற்றி தேடிய போது இந்தக் கவிதை படிக்க நேர்ந்தது. ஒரு ஐந்தறிவு ஜீவன் படும் பாட்டை அது நம்மிடம் சொல்வது போல் எழுதிய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.
இதுவரை எனக்கு பிடித்த கவிதைகளில் நிறைய வகைகளை வெளியிட்டுள்ளேன். விலங்குகளை பற்றின கவிதை எதுவும் வெளியிடவில்லை. எழுதுவதும் மிக அரிது. யாராவது எழுதியிருப்பார்களா என்று அதனைப் பற்றி தேடிய போது இந்தக் கவிதை படிக்க நேர்ந்தது. ஒரு ஐந்தறிவு ஜீவன் படும் பாட்டை அது நம்மிடம் சொல்வது போல் எழுதிய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.
* ஆடு *
பசும்புல் வெளியில்
பாதம் ஊன்றி
துள்ளிய நாட்கள்
முடிந்துவிட்டன
காந்திக்கு பால்சுரந்த
கருணைக்கு பரிசு
கழுத்தில் இறங்கிய
கத்தி வெட்டு
காற்றில் கலந்தது
கடைசி மூச்சு
காத்தவராயன்
கடவுளே சாட்சி
இனியென் பிணத்தை
ஈய்க்கள் மொய்க்கும்
ஆடைத் தோலுரித்து
அம்மணமாகும்
சமையலறைக் காற்றிலென்
சதையின் வாடையில்
உலர்ந்த நாக்குகள்
உமிழ்நீர் சுரக்கும்
வயிற்றுச் சுடுகாட்டின்
அமிலத் தீயில்
என்னுடல் துண்டுகள்
எரிந்து மலமாகும்
எருவாகிப் பின்பு
செடிவேர் பற்றி
கிளைகளில் அசையும்
பூக்களில் சிரிப்பேன்
விரல்கொய்த பெண்ணின்
கூந்தலில் அமர்ந்து
நாசிகள் உணர
வாசனை அனுப்புவேன்
ஆயினும்-
உரித்த என் தோல்
சாவுப் பறையில்
இறப்பின் துக்கத்தை
என்றும் ஒலிக்கும்.
பாதம் ஊன்றி
துள்ளிய நாட்கள்
முடிந்துவிட்டன
காந்திக்கு பால்சுரந்த
கருணைக்கு பரிசு
கழுத்தில் இறங்கிய
கத்தி வெட்டு
காற்றில் கலந்தது
கடைசி மூச்சு
காத்தவராயன்
கடவுளே சாட்சி
இனியென் பிணத்தை
ஈய்க்கள் மொய்க்கும்
ஆடைத் தோலுரித்து
அம்மணமாகும்
சமையலறைக் காற்றிலென்
சதையின் வாடையில்
உலர்ந்த நாக்குகள்
உமிழ்நீர் சுரக்கும்
வயிற்றுச் சுடுகாட்டின்
அமிலத் தீயில்
என்னுடல் துண்டுகள்
எரிந்து மலமாகும்
எருவாகிப் பின்பு
செடிவேர் பற்றி
கிளைகளில் அசையும்
பூக்களில் சிரிப்பேன்
விரல்கொய்த பெண்ணின்
கூந்தலில் அமர்ந்து
நாசிகள் உணர
வாசனை அனுப்புவேன்
ஆயினும்-
உரித்த என் தோல்
சாவுப் பறையில்
இறப்பின் துக்கத்தை
என்றும் ஒலிக்கும்.
நன்றி - அண்ணாமலை
*****************************************************
9 comments:
வாழ்த்துக்கள்...
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துகிறது...
வித்தியாசமான சிந்தனையில் கவிதை சிலாய்க்கிறது...
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...
ஆடு படும் பாடு பாட்டாக.
கவிதை நல்லா இருக்கு நண்பரே..
////எருவாகிப் பின்பு
செடிவேர் பற்றி
கிளைகளில் அசையும்
பூக்களில் சிரிப்பேன்///
அழகு
இறந்த பின்னரும் தன் உடல் சாம்பல் எருவாகி
அதனால் பூக்கள் சிரிக்கச் செய்வேன் என்பது
நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய தத்துவம்....
அருமை அருமை.
ஆயிரம் ஹிட்சுக்கு வாழ்த்துகள். SEP 4 சென்னை பதிவர் சந்திப்பிற்கு தங்களை அழைக்கிறோம். மேலும் விவரம் அறிய goundamanifans.blogspot.com
ஆயினும்-
உரித்த என் தோல்
சாவுப் பறையில்
இறப்பின் துக்கத்தை
என்றும் ஒலிக்கும்.//பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...
மிருகத்தின் உணர்ச்சியை உணர்த்தும் வரிகள் அருமை.
10000 ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள் குணா..
ஆடு எழுதிய கவிதை அருமை...
பகிர்வுக்கு நன்றி.
கவிதை படித்தேன் ! பகிர்ந்தமைக்கு நன்றிகள் குணா !!
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...