Thursday, August 04, 2011

கேள்வி - பதில் : 7

            * கேள்வி - பதில் :  7 *

1. கேள்வி : மரணம் என்றாலே மனதிற்குள் ஒரு நடுக்கம் வந்து விடுகிறது. அப்படி இருக்கும் போது நாட்டிற்காக எல்லையில் காவல் காக்கும் இராணுவ வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
[சுரேஷ் கிரிம்,ஜப்பான்]


பதில் :
நம்மைப் போல் மரணம் பற்றிய பயம் நிச்சயம் இராணுவ வீரர்களுக்கு இருக்காது. பயிற்சியின் போதே மரணத்தைப் பற்றிய பயத்தையும் போக்கி விடுவதாக கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்களெல்லாம்  "தில்"லானவர்கள். ஒரு வேளை, அவர்கள் சண்டையில் இறந்தால் அரசு அவர்களின் குடும்பங்களைக் கவனித்துக் கொள்ளும். அதனால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள். மேலும் மரணம் பற்றிய பயம் இருந்தால் அவன் சிறந்த போர் வீரனாக இருக்க முடியாது.

2. கேள்வி : B.C. -  Before Christ; A.D.- After Death. இது பள்ளியில் நான் படித்தது. ஆனால், A.D. என்றால் டிக்ஷ்னரியில் Anno Domini என்று போட்டிருக்கிறது, அதன் அர்த்தம் என்ன?
[பென்னி அருள்சிங், கரூர்]

 
பதில் : B.C. அர்த்தம் சரி. Anno Domini என்றால் After Death அல்ல. 'இயேசு நாதர் அவதரித்த ஆண்டிலிருந்து' (In the year of our Lord) என்று அர்த்தம்.

3. கேள்வி : நம் அனைவருக்கும் ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு விசயமும் கற்றுக் கொடுக்கப் படுகிறது. அப்படியிருக்கையில் கற்றுக் கொடுக்காமலே டீன்-ஏஜ் பருவத்தில் காதல் உணர்வு எப்படி வருகிறது?
[சுரேஷ் கிரிம்,ஜப்பான்]

 
பதில் : யார் சொன்னது, காதல் பற்றி கற்றுக் கொடுக்கப் படவில்லையென்று. நாம் சிறு வயது முதலே டி.வி, சினிமா பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். காதல் கதை இல்லாத சினிமாவும், சீரியலும் உண்டா?.டீன்-ஏஜ் பருவத்திற்கு முன்னர், டி.வி அல்லது காதல் சம்பந்தமான காட்சிகள் வந்தால் அக்கறை இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்போம். ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் உணர்வு தருகிற ஹார்மோன்ஸ் "ஆண்ட்ரோஜனும், டெஸ்ட்ரோஜனும்",  அளவிற்கதிகமாக வளர்வது டீன்-ஏஜ்-ல் தான். அந்த பருவத்தில், அதுதான் காதல் பற்றிய காட்சிகள் டி.வி அல்லது சினிமாவில் வரும் போது நம் மனதை ஈர்க்க  வைக்கிறது. மேலும் இந்த சமூகமும் காதல் பற்றி நிறைய சொல்லித் தருகிறது.

4. ' சில்மிஷம் ' - சைவமா? அசைவமா?
 [ரமேஷ், கோவை]
 
 
பதில் :  காதலியிடம் என்றால் மட்டும் சைவம்!

5. கேள்வி : சாதாரண மனிதர்களுக்கும், உண்மையான ஞானிகளுக்கும் என்ன வித்தியாசம்?
[மதுவந்தி, ஈரோடு]
 

பதில் :
ஒரு குட்டிக் கதை! ஜப்பானில் வாழ்ந்த ஒரு தூய்மையான ஜென் ஞானி ஹக்கூயின், அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அதே ஊரில் வசித்த அழகிய பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். பெற்றோர் எவ்வளவு மிரட்டியும் யார் அதற்குக் காரணம் என்று சொல்ல மறுத்த அவள், கடைசியில்  தயக்கத்துடன் 'ஹக்கூயின்' என்றாள். ஊர்மக்கள் திரண்டு போய் அந்த ஞானியை ஏசி விசாரித்த போது, 'அப்படியா?' என்றார் அந்தத் துறவி மென்மையாக. குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உறவினர்கள் அதை எடுத்து அவரிடம் வந்து, 'இந்தக் குழந்தையை நீங்கள்தான் வளர்க்க வேண்டும்!' என்றனர். 'அப்படியா?' என்று புன்னகையுடன் கேட்டு, அந்தக் குழந்தையை ஹக்கூயின் ஓராண்டு காலம் ஒரு தாயைப் போல கண்ணுங்கருத்துமாக வளர்த்தார். அந்த ஓராண்டில் ஊரே அவரை ஒதுக்கி வைத்தது. 
 
இது கண்டு குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மனம் வருந்தி, பெற்றொரிடம் 'நான் தப்பு செய்து விட்டேன். என் குழந்தைக்குத் தந்தை, காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன்!' என்றாள்.

ஊர்மக்கள் ஓடிச்சென்று ஹக்கூயினிடம் மன்னிப்புக் கேட்டார்கள். 'தவறு செய்து விட்டோம். குழந்தையைத் திருப்பித் தந்து விடுங்கள்' என்றார்கள். 'அப்படியா?' என்று அதே மென்மையான புன்னகையுடன் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார் ஹக்கூயின்.

சாதாரண மனிதனால் ஹக்கூயினைப் போல் இருக்க முடியுமா?அதுதான் வித்தியாசம்.

***********************************************7 comments:

சத்ரியன் said...

//ஒரு வேளை, அவர்கள் சண்டையில் இறந்தால் அரசு அவர்களின் குடும்பங்களைக் கவனித்துக் கொள்ளும்.//

நெசமாவா பாஸ்?

என்னமோ போங்க.

vidivelli said...

சகோ/நலமா,லப்ரொப் சுகமாயிருக்கா?haha..

மரணம் என்றாலே மனதிற்குள் ஒரு நடுக்கம் வந்து விடுகிறது. அப்படி இருக்கும் போது நாட்டிற்காக எல்லையில் காவல் காக்கும் இராணுவ வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்?


ஆமா தமிழீழ விடுதலைப்போராளிகளிற்கு இறந்தால் எந்தவித கொடுப்பனவும் இல்லை.ஆனால் நெஞ்சில் குண்டேந்தி உடலையே சிதைக்கிறார்களே .
இது எப்படி முடியும்.அதுதான் நாட்டின் பற்றால் ஏற்பட்ட துணிவு,தன்மானம்.அவர்கள் யாருமே சாகப்போறேன் என்று பயந்ததில்லை.சாதிக்கத்தான் துடிப்பார்கள்...
அத்தனை கேள்விகளும் பதில்களும் அருமை.நல்ல விளக்கங்களும் சகோ///
அன்புடன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அருமையான கேள்வி பதில்கள்
விறுவிறுப்பாய், தேவையான கேள்விகளும்
அதற்கேற்ற தகுந்த பதில்களும் அருமை.

கவி அழகன் said...

சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

vidivelli said...

HAPPY FRIENDSHIP DAY

புலவர் சா இராமாநுசம் said...

கேள்வியும் அருமை பதிலும் அருமை
நல்ல பயன் தரும் பதிவு!
வாழ்த்துக்கள்!
என் வலைப் பக்கம் வரலாமே

புலவர் சா இராமாநுசம்

RAMVI said...

பதில்கள் மிகவும் நன்றாக இருக்கு குணா.
அதுவும் அந்த ஹக்கூயின் கதை அருமையாக இருக்கு.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...