Saturday, August 20, 2011

மற்றவை - விமர்சனம் : Final Destination 5

       * விமர்சனம் : Final Destination  5 *

Director: Steven Quale

Cast: Nicholas D'Agosto, Emma Bell, Miles Fisher



தற்கு முன் வெளி வந்த Final Destination 1,2,3 & 4 அனைத்து பார்ட்களையும் நான் பார்த்திருக்கிறேன். சில காட்சிகளைக் கண்டு மிரண்டிருக்கிறேன். இந்த 5-ம் பார்ட்டைப் பார்த்து முன்னை விட மிரண்டு விட்டேன்(நிறைய காட்சிகளில்). காரணம் இந்தப் பார்ட்  3D -ல் வெளி வந்திருக்கிறது(+ஆங்கில சப்-டைட்டில்).


நான் பார்த்தது 3D-ஆங்கிலத்தில். நாவலூர் AGS-ல் பார்த்தேன். தியேட்டரின் கட்டமைப்பு அருமையாக உள்ளது. A.C. இருந்தும் குளிர்ச்சியாக இல்லை. குளிர்ச்சி குறைவாகவே இருந்தது. சத்யம், சங்கம் போன்ற தியேட்டரில் இருக்கும் A.C.-ல் உடல் சில்லித்து விடும். AGS நிர்வாகம் சரி செய்வார்களா? அடுத்த முறை  பார்க்கலாம். சரி படத்திற்குப் போவோம்.

படத்தின் கதை:


முந்தைய பார்ட்களில் வந்த கதை போலத்தான் இதிலும். இந்த பார்ட்டில் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் மற்றும் அவர்களின் கேர்ள் பிரண்டுகளுக்கும் மரணம் எப்படி நிகழ்கிறது என்பதை மிரள வைக்கும் விஷுவல் ட்ரீட் - ஐ 3D-ல் காட்டியிருக்கிறார்கள்.


படத்தின் முதல் காட்சியில் நண்பர்களும், கேர்ள் பிரண்டுகளும் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள். ஒரு மிக உயரமான பாலத்தின் மீது பயணம் செய்து கொண்டிருக்கும் போது, நண்பர்களில் ஒருவன் பாலம் இடிந்து விழுந்து ஒவ்வொருவராக இறப்பது போல் கனவு காண்கிறான். அதனால் எச்சரிக்கை செய்து , பஸ்ஸிலிருந்து இறங்கச் செய்து தன் சகாக்களை காப்பாற்றி விடுகிறான். அதற்கப்புறம் கனவில் கண்ட விபத்தில் வரிசையாக இறந்தவர்களுக்கு எல்லாம், அதே வரிசை முறையில் ஒவ்வொரு நபர்களுக்கும் மரணம் ஏற்படுகிறது. மரணத்திற்கு முன்னரே ஒருவர் வந்து கெட்டது நடக்கப் போகிறது என்று எச்சரிக்கை கூட செய்கிறார். முதல் இரண்டு மரணம் நிகழ்ந்த பின்னர் மற்றவர்களுக்கு " அடுத்தது நான் தான் என்ற " மரண பயம் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் அடுத்து தனக்கு நிகழும் மரணத்தை  மற்றவர்க்கு ஏற்படுத்தி விட்டால் தான் உயிர் வாழலாம் என்ற எண்ணம் ஒருவனுக்கு ஏற்படுகிறது. அதனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சக நண்பனை கொல்ல முயற்சி செய்கிறான் .இறுதியில் அனைவரும் இறந்து விடுகின்றனர்.


இந்தப் படத்தில் ஜிம்னாஸ்டிக், அக்குப்பஞ்சர், ஜன்னலில் இருந்து விழுதல், மெஷின் ஷாப் விபத்து, LASIK சர்ஜரி ஸ்டாண்ட் மற்றும் நெருப்பு+,விமானம் வெடித்தல் போன்ற முறைகளில் ஒவ்வொருவருக்கும் மரணம் நிகழ்கிறது.


படத்தின் முதல் காட்சியில்(15 நிமிடங்கள்) வரும் அந்த மிக மிக உயர்ந்த பாலத்தில் நடக்கும் காட்சிகள் நிச்சயம் மிரள வைக்கும். அதுவும் 3D-ல் பார்த்த போது அப்பப்பா அவ்வளவு அமர்க்களமான விஷுவல் ட்ரீட். அதற்கப்புறம்  ஜிம்னாஸ்டிக் மூலம் நிகழும் மரணம்.  அதற்கப்புறம் வரும் LASIK சர்ஜரி ஸ்டாண்ட் , மெஷின் ஷாப் விபத்து மற்றும் கடைசி காட்சி இவையனைத்தும் நிச்சயம் மிரள வைக்கும். அருமையான காட்சியமைப்பு.

படம் பார்ப்பவர் நிச்சயம் பயப்படும் இடங்கள் கம்பிகள் வந்து ஒருவனின் உடலைக் கிழித்து வெளிவரும் காட்சி, ஒருத்தியின் கண் தெறித்து விழும் காட்சி. திடீரென்று நம் கண்ணை நோக்கி கூர்மையான கம்பிகள் , கத்திகள் வந்து விழும்.  கண்ணாடியைக் கழட்டிப் அனைவரின் ரியாக்ஸன்சைப் பார்க்கும் போது கொஞ்சம் காமெடியாக இருந்தது. இந்தப் படத்தின் முழு திரில்லரை அனுபவிக்கவேண்டுமானால் அவசியம் 3D-ல்தான் பார்க்க வேண்டும். படம் முடியும் போது முந்தைய பார்ட்களின் சில காட்சிகளையும் 3D-ல் காட்டுகின்றனர்.

இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.

* Final Destination  5 - Fantastic thriller *


****************************************************

10 comments:

மாலதி said...

படங்களை பார்க்கும் போதே அப்பப்பா உங்களின் சிறப்பான விமர் சனங்களுக்கு பாராட்டுகள்

கோகுல் said...

3-d யிலா அப்பா நிச்சயம் மிரட்சிதான்!

மகேந்திரன் said...

அழகான விமர்சனம்
படிக்கும்போதே பார்க்கத் தோணுது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகாக விமர்சனம் செய்கிறீர்கள். பாராட்டுக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

முதல் படத்தை பார்த்து அதிர்ந்து போய் அடுத்த படங்களை நான் பார்க்கவே இல்லை.

உங்க விமர்சனம் படிப்பதர்க்கு மிக நன்றாக இருக்கு.
எனக்கு படம் பார்க்கும் தைரியம் வருமா என்று தெரியவில்லை.

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பதிவிலேயே
இந்த மிரட்டுமிரட்டிப் போகிறீர்கள்
அவசியம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

அழகா சொல்லி இருக்கீங்க நன்றி!

N.H. Narasimma Prasad said...

பொதுவாகவே நான் இந்த மாதிரி த்ரில்லர் படங்களை பார்க்க மாட்டேன். மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை.

Sawai Singh Rajpurohit said...

आपको "सुगना फाऊंडेशन मेघलासिया"की तरफ से भारत के सबसे बड़े गौरक्षक भगवान श्री कृष्ण के जनमाष्टमी के पावन अवसर पर बहुत बहुत बधाई स्वीकार करें लेकिन इसके साथ ही आज प्रण करें कि गौ माता की रक्षा करेएंगे और गौ माता की ह्त्या का विरोध करेएंगे!

मेरा उदेसीय सिर्फ इतना है की

गौ माता की ह्त्या बंद हो और कुछ नहीं !

आपके सहयोग एवं स्नेह का सदैव आभरी हूँ

आपका सवाई सिंह राजपुरोहित
आपको "सुगना फाऊंडेशन मेघलासिया"की तरफ से भारत के सबसे बड़े गौरक्षक भगवान श्री कृष्ण के जनमाष्टमी के पावन अवसर पर बहुत बहुत बधाई स्वीकार करें लेकिन इसके साथ ही आज प्रण करें कि गौ माता की रक्षा करेएंगे और गौ माता की ह्त्या का विरोध करेएंगे!

मेरा उदेसीय सिर्फ इतना है की

गौ माता की ह्त्या बंद हो और कुछ नहीं !

आपके सहयोग एवं स्नेह का सदैव आभरी हूँ

आपका सवाई सिंह राजपुरोहित

सबकी मनोकामना पूर्ण हो .. जन्माष्टमी की आपको भी बहुत बहुत शुभकामनायें

सबकी मनोकामना पूर्ण हो .. जन्माष्टमी की आपको भी बहुत बहुत शुभकामनायें

Unknown said...

கேள்வி பதில் அருமை!

தேவைய‍ன பதிவு தொடருங்கள்
வாழ்த்துக்கள்!

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...