* அன்னாவின் வெற்றி *
நேற்று ஜன் லோக்பால் மசோதாவை வலியுறித்தி போராடிய அன்னா ஹசாரேவின் மூன்று நிபந்தனைகளையும் பார்லியில் ஏற்றுக் கொண்டு, ஓட்டெடுப்பு விவாதத்திற்கு O.K சொன்ன மத்திய அரசு, அடுத்து என்ன செய்யப் போகிறது? மசோதா வருமா?வராதா? எது எப்படியோ இந்தப் போராடத்தின் மூலம் இளைய தலைமுறைகளின் நாட்டுப்பற்றும், ஊழலில்லாத இந்தியாவினை பார்க்கும் ஆவலும் நன்றாகத் தெரிகிறது.
அவர்கள் மட்டுமன்றி அனைத்து தர மக்களும்(மேல் மட்ட, நடுத்தர, ஏழை மக்களும்) கொடுத்த ஆதரவுதான் மத்திய அரசை மண்டியிட வைத்து விட்டது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கும் அன்னா ஹசாரேதான் இனி அடுத்த மகாத்மாவாக இருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. சென்ற முறை தெரிவிக்காத ஆதரவினை இந்த முறை நிறைய சினிமா நடிகர்கள், நடிகைகள் தெரிவித்திருந்தினர். மேலும் மீடியாவின் பங்குதான் இத்தனை மக்களுக்கும் அன்னாவின் போராட்டத்தை எடுத்துரைத்திருக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது. லோக்பால் மசோதா இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால் நம் நாடு எப்படி மாறும்?ஆவலாக உள்ளது? இது சம்பந்தமாக நிறைய நண்பர்கள் பகிர்ந்த விசயம் இது.
நம் நாட்டிற்கு பக்கத்திலிருக்கும் சிங்கப்பூரில் 1982-ல்தான் ஜன் லோக்பால் மசோதா இயற்றப்பட்டது. இயற்றிய சில வாரங்களில் மொத்தம் 142 அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒரே நாளில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். (ஆச்சர்யமாக இருக்கே!). இன்று இந்த சிங்கப்பூரில் 1% மக்கள் மட்டுமே ஏழைகளாக உள்ளனர். அரசும் வரிச்சுமையை மக்களின் மேல் திணிப்பதில்லை. அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம்+பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. மேலும் 8% மக்கள்தான் அங்கு படிப்பறிவில்லாமல் இருக்கின்றனர். 90% மக்களிடம் வெள்ளைப் பணம்தான் புழங்குகிறது(கருப்பு பணத்திற்கு எதிர்பதம்).
வேலையில்லாத திண்டாட்டம் 1% தான். நவீன மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் மக்களுக்கு கிடைக்கிறது. இத்தனையும் லோக்பால் மூலமாகத்தான் நடந்ததாக கூறப்படுகிறது. என்னைக் கேட்டால் லோக்பால் மட்டும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுயநலத்திற்காக ஊழல் செய்வதை நிறுத்தினால் போதும். உதாரணத்திற்கு ஒரு மருந்து வாங்கினால் அதற்குரிய பில்லை வாங்க வேண்டும்.இல்லையேல் அந்தப் பணம் கடைக்காரருக்கு கருப்புப் பணம்தான். பார்க்கலாம் இனிமேல் என்ன நடக்குமென்று?!
*******************************************
6 comments:
Nice write up... hope things will be as hoped by most...
ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுயநலத்திற்காக ஊழல் செய்வதை நிறுத்தினால் போதும். //
சுய ஒழுக்கம் வளர வேண்டும்!
பகிர்வுக்கு பாராட்டுக்கள்!
நம்பிக்கையூட்டும் நல்ல பதிவு
நல்லதற்கான தொடக்கமாக
இந்த வெற்றியைக் கொள்வோம்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிங்கப்பூர் அரசு பற்றிய தகவல் அருமை.
நம் நாட்டிலும் இது நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். அன்னாவின் வெற்றி ஒரு ஆரம்பம்தான் இது தொடர வேண்டும்..
கண்டிப்பாக நல்லது நடக்கும் என்று நம்புவோம். பகிர்வுக்கு நன்றி.
தரமான அருமையான பதிவு நண்பரே
வெற்றி தடையற்று தொடர்ந்து செல்லட்டும்.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...