* தவறு செய்தால்? தண்டனை .....!! *
படம்: ராஜிவ் காந்தி படுகொலை செய்த தனு(இடது முதல்)
செப்டம்பர்-9ந்தேதி தூக்கு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தூக்குதண்டனையை எதிர்த்து நிறைய அரசியல்வாதிகளும், ஈழத்து மக்களுக்கு ஆதரவு தருபவர்களும் பேரணியும் , ஆர்ப்பாட்டமும் செய்து வருகின்றனர். இதனைப் பற்றி எனது கருத்துக்கள்.
படம்: ராஜிவ் காந்தி படுகொலை
1991 மே 21 அன்றுதான் ராஜீவ் காந்தியை தனு என்கிற தேன்மொழி ராஜரத்தினம் மனித வெடிகுண்டு வடிவில் வந்து படுகொலை செய்த நாள். ஒரு பெண்ணுக்கு எப்படி இந்த துணிச்சல் வந்தது என்ற கேள்வி எனக்கு பல முறை வந்தது. படுகொலை தொடர்பான நிறைய விசயங்களைப் படித்த போது, தனுவின் தந்தை LTTE போராளி என்பது, LTTE இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் கூட அவரது திறமைக்காக மெடல் வாங்கியது, போன்ற விசயங்கள் தெரிய வந்தது. மேலும், தனுவின் சகோதரரை இந்தியா அனுப்பிய அமைதிப்படையினரால் கொல்லப் பட்டதும், அந்தப் படையினரால் தனு கற்பழிக்கப்பட்டு சின்ன பின்னமானதும் தெரிய நேர்ந்தது. அந்தக் கோபத்தில் தான் அவர் ஒரு மனித வெடிகுண்டாக மாறி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டதாக சில பத்திரிக்கை செய்திகள் சொல்லியிருந்தது.
படம்: தனியே கிடந்த தனுவின் தலை
இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் ஈழத்தில் போர்களின் போது நடந்த தாக்குதல்களின் வீடியோக்களைப் பார்க்கும் போது, ஈழத்து ஆண்களை ஆடையின்றி சிங்கள அரசு ராணுவத்தினர் பலவாறு கொடுமைப் படுத்தியது மனதை வருந்தச் செய்தது. மேலும் ஈழத்து பெண்களை எல்லாம் அவ்வீரர்கள் அனைவரும் கற்பழித்து துன்புறுத்தி கொல்வது, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பெண்களை துகிலுறுத்தி அந்த உடல்களைப் பற்றி அவர்கள் ஏளனமாக பேசுவதும் பார்த்த போது ஏன் இவ்வளவு வஞ்சம் இவர்கள் மனிதில் என்று கேட்க தோனியது.
மொத்தத்தில் ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்த்தியது ஒரு குற்றம்தான். அந்தக் குற்றத்தில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது ஒரு விதத்தில் நியாயமாகப் படுகிறது. ஏனெனில் அந்தப் படுகொலையை இவர்கள் நிகழ்த்திய போது, எத்தனை அப்பாவி மக்கள், சிறுமிகள் இறந்தனர். இன்று இந்த மூவருக்கும் வழங்கிய தண்டனையை எதிர்க்கும் நபர்கள், அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் அந்தச் சம்பவத்தில் இறந்திருந்தால் அவர்கள் மன நிலை இப்போது எப்படி இருக்கும். என்ன, குற்றம் செய்தவர்களுக்கு இவ்வளவு தாமதமாக தண்டனையை அறிவித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏளனமாகத்தான் பார்க்க முடிகிறது. நிச்சயம் சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும்.
படம்: நளினி
குற்றம் செய்ததாக சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, ஒரு பெண் என்பதாலும் , அவரது மகள் (தற்போது பாட்டியிடம் வசித்து வருகிறார்) எதிர்கால வாழ்க்கைக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைத்தது கொஞ்சம் ஏற்புடையதாக இருக்கிறது. ராஜிவ் கொலையாளிகளை தனது வீட்டில் தங்க வைத்ததனால்( அவரின் காதலன் தான் முருகன், பின்புதான் திருமணம் செய்து கொண்டனர்) அதாவது குற்றம் செயதவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்தினால், இத்தனை ஆண்டுகளாய் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். எப்பொது நளினியை விடுதலை செய்வார்கள் என்று தெரியவில்லை.
படம்: நளினியின் அம்மா மற்றும் நளினியின் மகள்
சிறையில் இருக்கும் நளினி தனக்கு சிறையில் நிகழும் கசப்பான அனுபவங்களை விளக்கி சிறை அதிகாரிக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அதனைப் படிக்கும் போது, சிறைக்குள் இருக்கும் மனிதர்களின் உரிமைகள் அனுமதிக்கப்படுகிறதா?இல்லை மறுக்கப் படுகிறதா? என்ற கேள்வி மனதுக்குள் எழுகிறது.
நளினியின் கடிதத்தைப் படித்துப் பாருங்கள்:
Link:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv0zSYGlJj9uWy1_V4EqR1CYYpshVk_v7gSEC9HMtdkYlcMsksndz7EcBxgT9rlhC1wieNmtJtl6lf7Q5kZ7w2PqcXRznXkCsAjsmpWup0AYDIHGsTsz38kOg7RQUo9G5t1vCwhBhpE0-t/s1600/Nalani-10001.jpg
(continue...)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6xEBlbvqwFQiX-ecsccdFIwYjEqIk_AMpeSCtEODrRt8ljnea5jgFvME9FPxQrzMe7qiMvdYDNbv0ipD_ZIB12f_pGg11skDhAqvE9cW9P8LmsMV9G1P80px9nXF4BSVqbLGT-9e3F6n4/s1600/Nalani-20001.jpg
(continue...)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcMQ8bMIGVvw5BbfzzDQySeaUnhfoqfIpY-501PkmsppFp9UXjlvn7I0SkMFR3k1qE_-oU_iHP9dX0JY9g2lUwrpj_r6QnTuAl2EaHngZVdBOGc7S-Sk-lFACgcg4gPcPn4OCvDuxm6MBi/s1600/Nalani-30001.jpg
#################################################
7 comments:
கனக்கவைக்கும் பகிர்வு.
தூக்கிலிருந்து நிரபராதிகள் காப்பாற்றப் படவேண்டும்.
குற்றம் சரிவர நிரூபிக்கப்படாதவர்களுக்கு தண்டனை தவறு!
எது நடந்தாலும் அது நல்லதாக நடந்தால் நன்று.
//அந்தக் குற்றத்தில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது ஒரு விதத்தில் நியாயமாகப் படுகிறது.//
மன்னிக்கவேண்டும் குணா. இந்தப்பதிவின் உட்கருத்திற்கு நான் முரண்படுகிறேன்.ராஜிவ்கொலை தொடர்பாக போதுமான தரவுகளைக் கண்டு படிக்க உங்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம். அல்லது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும்,ஒரு தமிழனாய் தமிழனாகிய உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என உணர்கிறேன்.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டணைக்குரியவர்கள் யார்? அல்லது யார்யாரெல்லாம் தண்டணைக்குரியவர்கள்? என்ற விவரங்களுக்கான தொடர்பை இங்கே http://www.youtube.com/watch?v=tVXZduKNgKA&NR=1 இணைத்திருக்கிறேன். விருப்பம் இருப்பின் நேரம் ஒரு பொருட்டல்ல. போய் பாருங்கள்.
// இன்று இந்த மூவருக்கும் வழங்கிய தண்டனையை எதிர்க்கும் நபர்கள், அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் அந்தச் சம்பவத்தில் இறந்திருந்தால் அவர்கள் மன நிலை இப்போது எப்படி இருக்கும்//
மேலும், உங்களுக்கு ஒன்றைத் தெளிவு படுத்தவிரும்புகிறேன். முறையாக பார்த்தால் ராஜிவ்காந்தி ஒரு இந்தியனாலேயே கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. அதை செய்ய தவறியதற்கு இந்தியனாய் நீங்களும், நானும் வெட்கப்பட வேண்டும். காரணம் , சம்மந்தமே இல்லாமல் இந்திய ராணுவத்தை ஈழத்திற்கு அனுப்பி 1500 இந்திய ராணுவ வீரர்களை பலி கொடுத்த பின்பு படையை மீட்டுக்கொண்டது. பலியான வீரர்களில் “உங்கள் சகோதரனோ, சகோதரியோ” இறந்திருந்தால் நீங்கள் கொண்டாடும் ராஜிவ்காந்தியின் முட்டாள் செயலை ஆதரித்திருப்பீர்களா?
இலங்கை அரசுக்கு நாம் உதவாமல் போனால் சீனா உதவக்கூடும். அப்படி நிகழ்ந்து விட்டால் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படும் என்ற அதிமேதாவித் தனத்தால் அனைத்து அட்டூழியங்களையும் செய்து விட்டு,
இதோ இன்று “இலங்கை-சீனா” கூட்டுச் சதியால் நம் இந்தியா சொல்லித் திரியும் இறை”யாண்மை”-க்கு காயடித்து விட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
எது எப்படி இருந்தாலும் கொலை கொலைதான். ஒரு மனிதனை அதுவும் ஒரு நாட்டின் தலவனைத் திட்டமிட்டுக் கொல்வதற்கு எப்படி தைரியம் வந்திருக்க வேண்டும். கொலை செய்யும் வெறி பிடித்தவர்களுக்குத் தான் இவ்வாறான எண்ணங்கள் தோன்றும். நாட்டுப்பிரச்சினை பிரச்சினை என்பதற்கெல்லாம் அடிப்படையில் பல கொலைகள் தானே நடந்திருக்கின்றன. உண்மையான குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு அதுவும் பெண்ணாக இருந்தாலும் தண்டிக்கப்படல் நியாயமே. சந்தேகம் என்ற பெயரில் எத்தனை அப்பாவிகள் சட்டரீதியற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எப்போதுதான் தீருமோ இந்த ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிப் பழி கூறிக் கொண்டிருக்கின்ற பொழுதுகள். மனிதன் மாமனிதனாக ஒற்றுமையாக வாழவே முடியாது போல் இருக்கின்றது.
விவாதிக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனைதான்...
தங்களின் கருத்துக்கு நான் வழிமொழிகிறேன்...
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...