Saturday, August 20, 2011

மற்றவை - மூன்று விசயங்கள்.

                    * மூன்று விசயங்கள் *

இந்தியா ஏழை நாடா?

" இந்தியா ஒரு ஏழை நாடு என்று யார் சொன்னது?. உங்களுக்கு தெரியுமா? எத்தனை இந்தியர்கள் எங்கள் சுவிஸ் பேங்கில் மில்லியன் டாலர் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர் என்று? இனிமேல் இந்தியா ஒரு ஏழை நாடு என்று சொல்லாதீர்கள்". 
 
இந்த வார்த்தைகள் சுவிஸ் பேங்கில் பணி புரியும் ஒரு அதிகாரி சொன்னது. அவர் சொன்னதும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  இருப்பினும் இன்னும் இந்தியர்கள் ஏழைகளாக இருக்க என்ன காரணம். யோசித்துப் பார்த்தால் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
 
" முதலாளிகள் எல்லாம் நாளுக்கு நாள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு லாபம் ஈட்டினாலும் , பெரும்பான்மை முதலாளிகள் அதில் சிறிதும் கூட தொழிலாளிகளுக்கு தருவதில்லை. ஏன் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கூட யோசித்து, கடைசியில் சிறிதளவே அதிகப்படுத்திக் கொடுக்கின்றனர். அந்தப் பணமும் இன்றைய விலைவாசி ஏற்றத்தினால் தேவைகளுக்கே செலவாகிவிடுகிறது.  விலைவாசிக்கேற்ற சம்பளம் இல்லாததால்தான் இன்னமும் நடுத்தர மக்களும், அதற்கு கீழே உள்ள மக்களும் பொருளாதார ரீதியாக முன்னேற முடியவில்லை."


ஏழ்மையைப் பற்றிய ஒரு குறும் படம்

ரண்டு ஏழைச் சிறுவர்களின் தன்னம்பிக்கையில் அவர்களின் வாழ்வு மேம்படுவதை மிக அழகான திரைக்கதையில் "ரோட் சைட் அம்பானிஸ்" என்ற  குறும்படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள்;

அந்த இரண்டு சிறுவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு.
 
எனது கருத்து:

அந்தக் கிரிக்கெட் காட்சிகளை இயக்குனர் இன்னும் யோசித்து எடுத்திருக்கலாம்.  மற்றபடி பார்க்கத்தகுந்த படம்தான்.



அம்மா செய்வது சரியா?

மிழக முதல்வர் அம்மா அவர்கள், கலைஞர் ஆட்சியில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை டெல்லியில் உள்ள Aim மருத்துவமனை போன்று
சிறப்பான வகையில் நவீன மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை பற்றிய எனது கேள்விகள்.

இடப்பற்றாக்குறை காரணமாகத்தான் புதிய தலைமை செயலகத்தை கலைஞர் கட்டினார். இப்போது பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக் குறை இல்லையா? அதற்கு அம்மா என்ன செய்யப் போகிறார்? மக்கள் வரிப்பணத்தில் இவரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டிடம் கட்டுவாரா?

இப்போது அழகாகக் காட்சியளிக்கும் புதிய தலைமை செயலகம் மருத்துவமனையாக மாற்றியதும், மெயிண்டெனஸில்  எப்படி இருக்கப் போகிறது. அரசு மருத்துவமனைப் போல் மாறிவிடுமா? அப்படி மாறினால் கலைஞரின் மனம் என்ன யோசிக்கும்?

சென்ற முறை அம்மா ஆட்சியில், காலில் விழும் கலாச்சாரத்தை தமிழக மந்திரிகளுக்கு பழக்கப் படுத்தியவர், இப்போது அந்தப் பழக்கத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. மேலும் சென்ற கலைஞர் ஆட்சியில் இருந்த பவர் கட் இப்போது நிறைய ஊர்களில் குறைந்திருக்கிறது. இதனையும் பாராட்டத்தான் வேண்டும். இருப்பினும் இந்தச் தலைமை செயலகம் விசயத்தில்  அம்மா ஏன் இப்படிச் செய்கிறார்? இன்னும் என்னென்ன செய்வார்?பார்க்கலாம்..

********************************************************

6 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நம் நாட்டில் டெபாசிட் செய்திருந்தால் நாமெல்லாம் ஏழையாக வேண்டிய அவசியம் இல்லை. சுவிஸ்சில் டெபாசிட் செய்தால்???

RAMA RAVI (RAMVI) said...

// விலைவாசிக்கேற்ற சம்பளம் இல்லாததால்தான் இன்னமும் நடுத்தர மக்களும், அதற்கு கீழே உள்ள மக்களும் பொருளாதார ரீதியாக முன்னேற முடியவில்லை."//

முற்றிலும் சரி.

ஏழ்மையை பற்றிய குறும் படம் அருமை.அந்த குழந்தைகள் மாதிரி எவ்வளவோ குழந்தைகள் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிரார்கள்.முடிவில் அந்த சிறுவன் படிப்பை தொடருவதாக காட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

கவி அழகன் said...

குறும்படம் அருமை நண்பா

மகேந்திரன் said...

ஏழ்மையை பற்றிய அருமையான பதிவு
குறும்படம் நல்லா இருந்துச்சு நண்பரே.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை நண்பா..
விரிவான பின்னூட்டம் இல்லை...

N.H. Narasimma Prasad said...

குறும்படம் சூப்பர். என் மனதில் ஒரு டன் தன்னம்பிக்கையை இந்த குறும்படம் விதைத்திருக்கிறது.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...