Wednesday, August 10, 2011

தெரிஞ்சுக்கோங்க - போதி தர்மரும் 'ஏழாம் அறிவு' சூர்யாவும்


சூர்யாவின் முப்பரிமாண நடிப்பில் விரைவில் வெளி வரும் 'ஏழாம் அறிவு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் போதி தர்மர் என்ற யோகியின் கதாபாத்திரம். அந்த போதி தர்மர் கதாபாத்திரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காஞ்சிபுரத்தில் பிறந்த ஒரு தமிழனுடைய வரலாற்றைச் சொல்கிறது. அவரின் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போமா..

போதி தருமன் - 1887ஆம் ஆண்டு யோஷிடோஷி என்ற கலைஞரால் வரையப்பட்ட ஒரு படம்


காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மன் IV-க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்(பௌத்தவர்மப் பல்லவன்).  கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:

1. நந்திவர்மன் I
2. குமாரவிஷ்ணு II
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே  பல்லவ மன்னன் கந்தவர்மன் IV, மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார் . இவர் காஞ்சியில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர். சிறுவன் போதியின்  அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை  நியமிக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார்.  இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம்  கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.

அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த  ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான  போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட  வேண்டுகிறார். அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.


போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.

அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.


போதி தர்மர் வாழ்ந்த இடத்தை சீனாவில் "ஷாஓலின் கோயில்" என்று இன்றைக்கும் வணங்கி வருகிறார்கள்.  அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை  குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர். இந்த ஆதாரத்துடன் ஏழாம் அறிவு படத்தை மிரட்டலாக எடுத்திருக்கின்றனர்.

குங்ஃபு கலையை சீனாவிற்கு அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்ற விசயம் நிச்சயம் பெருமையான விசயம்.  போதி தர்மர் வளர்த்த கலையை இன்றும் சீனாவில் தலைமுறை தலைமுறையாக கற்று வருகின்றனர்.

இந்த பதிவுடன் போதி தர்மர் கற்றுக் கொடுத்த குங்ஃபூ கலையின் முழு நீள டாக்குமெண்டரி வீடியோவை வெளியிட்டுள்ளேன். இதில் வரும் ஆக்சன் காட்சிகளைக் காணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

நம்ம சூர்யா வீடியோவில் வருவதைப் போல சண்டை போடுவாரா?. அப்ப படம் நிச்சயம் சூப்பராக இருக்கும். மேலும் எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் அதில் பர்பெக்ஷ்னாக நடிப்பவர் சூர்யா. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் அவரின் ஆக்சன் காட்சிகளைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறது. பார்க்கலாம் எப்படி நடித்திருக்கிறார் என்று.


***********************************************

14 comments:

vidhya said...

nice post and video

இராஜராஜேஸ்வரி said...

தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. //

பெருமை மிகு அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

குங்ஃபூ என்ற கலை இந்தியாவிலிருந்து அதுவும் காஞ்சியிலிருந்து சைனாவிர்க்கு கொண்டு செல்லப்பட்ட விவரத்தை அழகாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். பெருமையாக உள்ளது.நல்ல பகிர்வு குணா. நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வரலாற்று மனிதர் கதையை 7-ம் அறிவில் சூர்யா...

சுவாரஸ்யம் படம் வரட்டும் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
போதி தர்மர் என்ற யோகியின் கதாபாத்திரம்.
////////

இவரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்...


பகிர்வுக்கு மிக்க நன்றி..

Sivakumar said...

தன் படைப்புக்களை காப்புரிமை செய்யாமல் இந்திய கோட்டை விட்ட விஷயங்கள் பல. அத்தகு நிலைதான் போதி தர்மருக்கும். அவர் அருமை தெரியாமல் இத்தனை ஆண்டு காலம் இருந்துவிட்டனர்.

Unknown said...

பகிர்வுக்கு மிக்க நன்றி!

சத்ரியன் said...

குணா,

போதி தர்மரைப் பற்றிய அரிய தகவலைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி. ஏழாம் அறிவைப் பார்த்துவிடலாம்.

Yaathoramani.blogspot.com said...

இது பதிவு
வேறென்ன சொல்ல
வாழ்த்துக்கள்

Selmadmoi gir said...

பகிர்வுக்கு நன்றி

thaamarai said...

உண்மையிலேயே அருமை! தமிழன் சீனாவிற்கே முன்னோடியாக இருக்கிறான் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

மாணவன் said...

போதி தர்மரைப் பற்றிய அரிய தகவலைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி நண்பரே! இப்படிபட்ட ஒரு தமிழரை இத்தனை நாளும் மறந்திருந்தோம் என்பதுதான் வேதனையான விசயம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சீனாவிற்கு குங்ஃபூ கற்றுக் கொடுத்தவன் தமிழன் என்று இதுவரை நமக்குத் தெரியாமலே போய்விட்டதே? இப்போதாவது தெரிந்து கொண்டோம், நன்றி!

தென்காசி சுப்பிரமணியன் said...

here no one forgot Bodhidharma. During Bodhi's period TamilNadu was under Kalabhras rule. This age was Darkage of Tamilnadu. Then how Tamils can maintain a records about him? this page was written from kungumam essay and Tamil wikipedia.

In buddha kanchi one temple is there about bodhidharma. And lot of books about Bodhi was already written. From that books and my guess I wrote essay in tamil wiki. On that I told

1. நந்திவர்மன் I
2. குமாரவிஷ்ணு II
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

was only said as sons. No perfect proofs are there. That's just guess only. But it may be true.

So Tamils always remember anything.
REGARDS
TENKASI SUBRAMANIAN.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...