Sunday, August 21, 2011

கேள்வி - பதில் : 8

                     * கேள்வி - பதில் : 8 *

1. கேள்வி : நாம் குடிக்கும் கோக், பெப்சி, ஸ்லைஸ் மற்றும் இதர கூல் டிரிங்ஸ் எல்லாம் வெவ்வேறு கலரில் இருக்கின்றன. அது போன்ற கூல் டிரிங்ஸ்-ஐ குடித்தாலும் யூரின் கலர் மட்டும் கலர்லெஸ்(Colourless) ஆக இருக்கிறதே? என்ன காரணம்?
[சுரேஷ் கிரிம்,ஜப்பான்]


பதில் :
சுரேஷ் , நீங்க சொல்றது மாதிரி யூரின் கலர் கலர்லெஸ் கிடையாது. அதற்கு நிறைய கலர் இருக்கிறது. பொதுவாக யூரின்-க்கு ஒயிட், ரெட், ஆரஞ்சு, ப்ளாக், கிரீன், ப்ளூ , க்ரே, பிரவுன் அல்லது கோக் கலர் உண்டு. யூரினுக்கு கலர் கொடுப்பவை " யூரோக்ரோம், யூரோஎரித்ரின் மற்றும் யூரோபிலின் " என்னும் பிக்மெண்ட்ஸ் தான். இத்தனை கலர்களில் யூரின் தோன்றுவதன் காரணம் நாம் அருந்தும் திரவ, திட வகை உணவுகளாலும், சிறு நீரகத்தின் வேலையாளும். எடுத்துக்காட்டாக நிறைய தண்ணீர் குடித்தால் , வெளி வரும் யூரின் கலர் ஒயிட். ஏதாவது மெடிகேஷன் எடுத்திருந்தாலோ அல்லது தண்ணீர் குறைவாக குடித்தாலோ வெளி வரும் யூரின் கலர் லைட் ஆரஞ்சு. இது நார்மல் கலர்தான். இந்தக் கலரில் வெளி வந்தால் உடல் நிலை நார்மலாக இருப்பதாக அர்த்தம். வேறு கலரில் இருந்தால் நிச்சயம் உடலிலோ அல்லது சிறுநீரகத்திலோ ஏதாவது கோளாறு இருக்கும். அவசியம் டாக்டரைப் பார்க்க வேண்டும்.

2. முதன் முதலில் சேலையை நெய்து உருவாக்கியவர் யார்? சரித்திரம் பார்த்துக் கூறவும்?
[மதுவந்தி, ஈரோடு]


பதில் : 4500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகத்தில்தான் முக்கியமான இரண்டு விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் பருத்தி,கரும்பு.  மேலும் இன்று உலகமெங்கும் எல்லாரும் டிரஸ் அணிந்து கொண்டு ஸ்வீட் சாப்பிடுவதற்கு இந்தியர்கள்தான் காரணம். மொகஞ்சதாரோ பெண்கள் எடுத்த எடுப்பில் பருத்தியால் ஆன ' மினி ஸ்கர்ட்' டே தயாரித்து அணிந்து கொண்டார்கள். பிறகுதான் சேலை வந்தது..!

3. கேள்வி : மனிதன் தன் மூளையை அதிக பட்சம் 10% தான் உபயோகிக்கிறானாமே?! அப்படியா?
[அறிவழகன்,கரூர்]

 


பதில் : அப்படியும் சொல்ல முடியாது. எல்லா பகுதியிலும் கொஞ்சம் கொஞ்சம் உபயோகிக்கிறோம் என்பதுதான் உண்மை!. காமம்,மத, ஜாதி வெறியெல்லாம் கிளம்பும்போது மட்டும் மூளையின் எல்லாப் பகுதிகளும் வேலை செய்வது நின்று போய், ஆழத்தில் Limbic ஏரியாவில் இருக்கும் Reptile என்ற பகுதி மட்டும் வேலை செய்யும்..!

4. கேள்வி : பைபிளின் கூற்றுப்படி, ஆதாம்-ஏவாளுக்குப் பின் அவர்களது குழந்தைகள் நிச்சயமாக சகோதர, சகோதரிகளாக இருப்பர். அப்படி இருக்கையில் புதிய தலைமுறைகள் எப்படி இவ்வுலகில் தோன்றியிருக்கும்?தயவு செய்து பதிலளிக்கவும்?
[ரமேஷ், கோவை]



பதில் :  அப்படிப் பார்த்தால் ஆதாமின் விலா எலும்பிலிருந்து உருவான ஏவாள் , ஆதாமின் மகள் என்று சொல்லலாமா?! 'சகோதர சகோதரிகளெல்லாம், மனிதப் பரிணாம வளர்ச்சியில் ரொம்பப் பிற்பாடு வந்த உறவு முறைகள்!

5. கேள்வி : ஓவரா சீன் போடறதுன்னா என்ன? கதையாக சொல்லுங்க.
[கீதா, கோவை]

 

பதில் :
ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்  நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு  இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு  நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான்,  குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் திருடன் ஓடிவிட்டான். சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. " கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கே "- ன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான். இதனால நான் சொல்றது என்னன்னா, ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான் செய்யனும். ஓவரா சீன்  போட்டா இப்படித்தான்.


********************************************************

9 comments:

vidivelli said...

ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான் செய்யனும். ஓவரா சீன் போட்டா இப்படித்தான்./

சகோ நல்ல கேள்வியும் தகுந்த பதில்களும்...
கடைசி கதை..
நல்ல கதையுடன் விளக்கியிருக்கிறீங்க..
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

N.H. Narasimma Prasad said...

கடைசி கேள்விக்கான பதில் சூப்பர்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான கேள்விகள்....

விரிவான மற்றும் வில்லங்கம் இல்லாத பதில்கள்...

Anonymous said...

//ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான் செய்யனும். ஓவரா சீன் போட்டா இப்படித்தான்.//

Valid Point.

Yaathoramani.blogspot.com said...

அருமையான கேள்விகள்
அழகான தெளிவான பதில்கள்
சேலை மூளை சிறு நீர் மற்றும்
சீன்போடுதல் குறித்த பதிலகள்
மிகவும் கவர்ந்தன
தொடர்ந்து வருகிறோம்
தொடர வேண்டுகிறோம்

Unknown said...

GOOD ANSWERS BRO

மாணவன் said...

வித்தியாசமான கேள்விகள் மூலம் தெரியாத விசயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே!

மகேந்திரன் said...

கேள்விபதில்கள்
பயனுள்ளதாக இருக்கிறது நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.

kowsy said...

அனைத்துத் தகவலுக்கும் நன்றி. எனக்குள்ளும் ஆதாம் ஏவாள் பற்றிய கேள்வி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...